கற்ப அறையில் சிசுவின் படித்தர வளர்ச்சி (Human Embryonic Development)

Refer this Page to your friends

அபூ அரீஜ்

 

குர்ஆன் கூறும் கருவியல்:


Hamm, Leeuwenhoek  ஆகிய இரண்டு விஞ்ஞானிகளும் முதல் முதலாக மனித விந்தின் செல்களை 1677ல் கண்டுபிடிக்கின்றார்கள். ஆனால் ஆணின் விந்துத் துளியானது பெண்னின் கற்பறையில் செலுத்தப்பட்ட பின் அது வளர்ந்துதான் முழுமனிதனாகிறது எனும் தவறான எண்ணத்தைக் கொண்டிருந்தனர். அதற்குக் காரணம், விந்துத் துளியானது பெண்ணின் கற்பறையில் செலுத்தப்பட்ட பின் அது பெண்ணின் சினை முட்டையுன் கலந்து பின்னர்தான் படிப்படியாக வளர ஆரம்பிக்கின்றது எனும் அறிவியல் உண்மையை விஞ்ஞான உலகம் அறிந்திருக்கவில்லை.
ஆனால் விந்தின் செல்கள் கண்டுபிடிப்படுவதற்கு கிட்டத்தட்ட 1000 வருடங்களுக்கு முன்னரே முஹம்மது நபி (ஸல்) அவர்களால் எவ்வாறு சிசுவின் படித்தர வளர்ச்சியை துள்ளியமாக் கூற முடியும்? என Dr..கீத் மூர் கூறுவதை இங்கு நினைவு கூர்வது சிறந்ததாகும்.

In 1981, during the seventh Medical Conference in Dammam, Professor Keith Moor said: “ It has been a great pleasure for me to help clarify statements in the Qur’an about human development. It is clear to me that these statements must have come to Muhammad from God. Because almost all of this knowledge was not discovered until many centuries later. This proves to me that Mohammad must have been a messenger of God.”

(note: Aristotle, the founder of the science of embryology, realized that chick embryos developed in stages from his studies of hen’s eggs in the fourth century B.C., he did not give any details about these stages. As far as it is known from the history of embryology, little was known about the staging and classification of human embryos until the twentieth century.)


قال تعالى:[ولقد خلقنا الإنسان من سُلالة من طين * ثم جعلناه نطفة في قرار مكين * ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسون العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين]- 23:12-14
 

'களிமண்ணின் சத்திலிருந்து மனிதனைப் படைத்தோம். பின்னர் அவனைப் பாதுகாப்பான இடத்தில் விந்துத் துளியாக ஆக்கினோம். பின்னர் விந்துத் துளியை கருவுற்ற சினை முட்டையாக்கினோம். பின்னர் கருவுற்ற சினை முட்டையை சதைத் துண்டாக ஆக்கினோம். சதைத் துண்டை எழும்பாக ஆக்கி எழும்புக்கு இறைச்சியையும் அணிவித்தோம். பின்னர் அதை வேறு படைப்பாக ஆக்கினோம். அழகிய படைப்பாளியாகிய அல்லாஹ் பாக்கியசாலியாவான்.'- (23:12-14).

விந்துத் துளியானது, பெண்ணின் கற்பறையினுள் சென்று பலோப்பியன் குளாயிலே கற்பப் பையின் சூலகத்திலிருந்து வெளிவரும் முட்டையைக் காத்திருந்து அங்கு இரண்டும் சங்கமமாகி சினைப்படுகின்றன. பின்னர் கிட்டத்தட்ட 15 நாட்களில் (அலகா) எனும் அந்த சினை முட்டை தெரியக் கூடிய ஒன்றாக மாறுகின்றது. அதன் பின்னர் 28 வது நாட்களில் அந்த சிசுவானது (முத்கா) எனும் சதைத் துண்டாக ஆகின்றது. அதன் பின்னர்தான் தேவையான எலும்புகள் உருவாக ஆரம்பிக்கின்றன. பின்னர் அவ்வெலும்புகள் சதையால் போர்த்தப்பட்டு வளர ஆரம்பிக்கின்றன. இதனை தற்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஸுப்ஹானல்லாஹ், இந்த அறிவியல் உண்மையை 1400 வருடங்களுக்கு முன்னர் அல்குர்ஆன் கூறுகின்றது என்றால் நிச்சயமாக அது இறைவனின் கூற்றாகும் என்பதில் சந்தேகமில்லை.


 கருவறை சுருங்கி விரிதல்:

قال تعالى:[الله يعلم ما تحمل كل أنثى وما تغيض الأرحام وما تزداد]-الرعد/13:8

'ஒவ்வொரு பெண்ணும் (கருவறையில்) சுமப்பதையும், கருவறைகள் சுருங்குவதையும், விரிவடைவதையும் அல்லாஹ் அறிகிறான்'.- 13:8

திருக்குர்ஆனில் இந்த வசனம் மிகப்பெரும் அறிவியல் உண்மையைக் கூறும் வசனமாகும்.

பொதுவாக மனித உடலுக்கென சில தனித் தன்மைகள் உள்ளன. தனக்குள் அன்னியப் பொருள் எதனையும் அது ஏற்றுக் கொள்ளாது என்பது அவற்றுள் ஒன்றாகும். இதற்கு உதாரணமாக கண்களைக் குறிப்பிடலாம். கண்களில் ஏதேனும் தூசுகள் விழுந்து விட்டால் அதை எப்படியாவது வெளியேற்றவே முயற்சிக்கும்.

இது போலவே பெண்களின் கருவறைகளும் அமைந்துள்ளன. ஆயினும் கருவறை அன்னிய உயிரைத் தனக்குள் ஏற்றுக் கொள்கிறது. பல மாதங்கள் வளர்ந்து திடீரென அதை வெளியேற்ற முயற்சிக்கிறது. இவ்வாறு முயற்சிக்கும் போது கருவறை சுருங்கி விரிகின்றது. இதன் காரணமாகவே பிரசவ வேதனை ஏற்படுகிறது. இதனைத்தான் இவ்வசனம் கூறுகிறது.

'ஓவ்வொரு பொருளும் குறிப்பிட்ட கால நிர்ணயப்படியே அவனிடத்தில் உள்ளன' என்ற சொற்றொடர் முக்கியமாகக் கவணிக்கப்பட வேண்டியதாகும். இயற்கைக்கு மாறாக அன்னியப்
பொருளை ஏற்றுக் கொண்டிருந்த கருவறை ஒரு குறிப்பிட்ட நேரம் வந்ததும் வெளியேற்றுவதற்கு இன்றுவரை காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை.
அன்னியப் பொருளை கருவறை பல மாதங்களாக ஏற்றுக் கொண்டது எப்படி? என்ற கேள்விக்கும் இதுவரை விடையில்லை. இயற்கைக்கு மாறாக இறைவன் தனது வல்லமையினால் ஒரு காலக் கெடுவை நிர்ணயிக்கிறான். அந்த நிர்ணயத்தின்படியே நீண்ட காலம் அன்னியப் பொருளை கருவறை சுமந்து கொண்டிருக்கிறது. என இச்சொற்றொடர் விளக்குகின்றது.
 

 

தொடர்களின் அட்டவணை

Refer this Page to your friends