நண்பர்களுக்கு இந்தப் பக்கத்தை அறிமுகப்படுத்த...

ஜமாஅத் நிர்வாகத்தினர்கள்

புகழ்பெற்ற சரித்திர நாயகர்களையும் வள்ளல் பெருமக்ளளையும் சாதனைச் சிற்பிகளையும் ஒருங்கே கொண்டு புகழ் பெற்ற மாவட்டம் நம் இராமநாதபுரம் மாவட்டம். இம்மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் ஒரு சிற்று}ர் தான் சித்தார்கோட்டை. இது சிற்றூராகக் காட்சி தந்தாலும் சாதனைகளில் ஒரு பேரூருக்கு நிகரானது. இஸ்லாமிய மார்க்க வல்லுனர்களையும் வள்ளல் பெருமக்களையும், அறிவார்ந்த எழுத்தாளர்களையும் சான்றோர் பலரையும் கொண்டிலங்கும் அழகிய ஊர் சித்தார்கோட்டை.
சித்தார்கோட்டை இராமநாதபுரத்திலிருந்து சாலை வழியாக 13 கி.மீ. ஆகும். இராமநாதபுரத்திற்கு வட கிழக்காவும் தேவிபட்டிணத்திற்கு தெற்கிலும் அமைந்துள்ளது. சித்தார்கோட்டை பஞ்யாத்தில் ஏழு கிராமங்கள் உள்ளன. வாழூர், பழனிவலசை, முடிவீரன்பட்டினம், குலசேகரக்கால், அம்மாரி, ஜமீன்தார்வலசை மற்றும் இலந்தைக் கூட்டம் இதில் அடங்கும்.
சித்தார்கோட்டை மற்றும் வாழூரில் பெரும்பகுதியானவர்கள் முஸ்லிம்கள். பெரும்பகுதியான மக்கள் வெளிநாடுகளில் தான் வியாபாரம் செய்து வருகின்றனர். பலர் மலேசியா மற்றும் சிங்கப்ப10ரில் குடியுரிமை பெற்றுள்ளனர்.

Click the image to see the enlarged view

 

சித்தார் கோட்டை'யது சிற்றூர் தான் ஆனாலும்
சீரிய முஸ்லிம்கள் செறிந்த ஊர்
முத்தார் முகம்மதுவின் மொழிவழியால் தொழுகை
முதலான மூவிரண்டு நெறிமுறையால்
சத்தான் இசுலாத்தின் சரியான வழி வந்தோர்
சக்காத்துக் கொடுப்பதற்கோ சலிக்க மாட்டார்
எத்தாலும் வாழலாம் என்றெண்ண மாட்டார்கள்
ஈகைக்கு எடுத்தக் காட்டவரே
 

சித்தார்கோட்டை

சித்தார்கோட்டை வாழ் முஸ்லிம்களின் ஓர் ஐக்கியம் தான் முஸ்லீம் தர்மபரிபாலன சபாவாகும். உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் முறையாக ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்த அமைப்பு தான் சித்தார்கோட்டை வாழ் முஸ்லிம்களின் தாய்ச் சபை. அணைவர்களும் இதன் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு வாழ்கின்றனர்.
முஸ்லிம் தர்ம பரிபாலன சபா என்ற குடையின் கீழ்


கடந்த 30 ஆண்டுகிளல் முகம்மதியா உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவியர் எண்ணிக்கை 1000ஐ தாண்டியுள்ளது. சாதி மத இன பேதமின்றி இப்பகுதி மக்கள் அனைவரும் கல்வி பெறும் மிகப் பெரிய கல்விக் கூடமாகவும், இராமநாதபுரம் மாவட்டத்தின் ஒரு மிகச் சிறந்த முன்மாதரிப் பள்ளியாகபும் இப்பள்ளி வளர்ச்சி பெற்றுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் பலமுறை எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில் 100 சதவீதம் வெற்றி பெற்றுள்ளது. ஒவ்வொரு பொதுத்தேர்விலும் இப்பள்ளி 96 சதவீதம் தேர்ச்சி விகிதத்திற்கு குறைந்ததே இல்லை. இது இப்பள்ளியின் மகத்தான சாதனையாகும். இச்சாதனைக்கு வித்திட்ட பள்ளி நிர்வாகத்தையும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியப் பெருமக்களையும் தமழ்நாடு அரசின் கல்வித்துறை பலமுறை பாராட்டிப் பெருமைப்படுத்தியுள்ளது.

இலக்கியத்தில் சித்தார்கோட்டை

தழிழ் இலக்கியத்திற்கு முஸ்லிம்கள் ஆற்றியுள்ள பணி மகத்தானது. தமிழ் இலக்கியத்தின் இருண்ட காலம் என்று அழைக்கப்படும் பதினாறாம் நு}ற்றாண்டில் தொடங்கி தமிழ் இலக்கியக் கொடியைத் து}க்கி நிறுத்திய பெருமை முஸ்லிம் புலவர்கiயே சாரும் என்பது வரலாற்று உண்மை. தமிழ் மொழியின் அத்தனை இலக்கியக் கூறுகளிலும் இரண்டாயிரத்துக்ககம் மேற்ப்ட்ட இலக்கியங்களை ஆக்கித் தந்தவர்கள் முஸ்லிமக்ள என்பது பட்டியலிபட்பட்டுள்ளது. தற்கால இலக்கியத்தின் அத்தனை பிரிவுகளிலும் முஸ்லிம்கள் பங்களிப்பு கணிசமானது. அவர்களை ஒதுக்கிவிட்டு தமிழ் இலக்கிய வரலாற்றை எழுத முடியாது எனும் அளவுக்கு அவர்களது பணி அமைந்துள்ளது. எங்க@ர்க்காரர்களும் அப்பணியில் சிறப்பாகப் பங்கேற்றுள்ளனர்.
கீழே தந்துள்ள பட்டடியல் எங்கள் ஊரையைச் சார்ந்தோர்களின் பங்களிப்பை விளக்குகிறது.

எண்


பெயர்
 

பங்களிப்பு

ஆக்கங்கள்

1

ஷாஹா என்ற மு.சீ.மு. ஷாஹுல் ஹமீது

சிறுகதை, நாவல், மொழிமாற்றம்

50 சிறுகதைகள், 4 நாவல்கள், 2 நூல்கள் - பத்திரிகாசிரியர்

2

எஸ் சீனி முகம்மது

சிறுகதை

10 சிறுகதைகள், சர்வதேச சிறுகதைப்போட்டியில் பரிசு வென்றவர்

3

கனீஸ் மல்ஹர் என்ற மல்ஹருல் ஹக்

கவிதை, சிறுகதை

500 கவிதைகள், 50 சிறுகதைகள் - நூல் - 1

4

ஹிமானா சையத் என்ற அ சையத் இப்ராஹிம்

சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதை

565 சிறுகதை, 9 நாவல்கள், 1000 கட்டுரைகள், 1000 கவிதைகள், 35 நூல்கள்

5

சி.அ. அபுதாஹிர்

கவிதை, ஆய்வு

பத்திரிகாசிரியர், ஆய்வுக்கட்டரைகள், 1 நூல், பன்மொழி அறிஞர்

6

எஸ். எச். ரபி என்ற முகம்மது ரபீக்

கவிதை, கட்டுரை

பல கவிதைகள், கட்டுரைகள்

7

ஜும்மாமணாளன் என்ற முகம்மது சாலிஹ்

கவிதை

பல கவிதைகள்

8

ஐனா மணாளன் என்ற அஹமது கபீர்

கவிதை

பல கவிதைகள

9

அஹ்மது ஜலாலுத்தீன்

கவிதை, கதை

கதை, கவிதைகள்

நண்பர்களுக்கு இந்தப் பக்கத்தை அறிமுகப்படுத்த...