துபை ஈமான் அமைப்பின் சார்பில் பிரபல மார்க்க அறிஞருக்கு வரவேற்பு நிகழ்ச்சி

துபை மான் அமைப்பின் சார்பில் கடந்த வெள்ளிக் கிழமை 02-12-2005 இஷாத் தொழுகைக்குப் பின்னர் தேரா லூத்தா ஜாமிஆ (குவைத்) மஸ்ஜிதில் இந்தியாவின் பிரபல மார்க்க அறிஞரும், பெங்களுர் ஜாமிஆ ஸபீலுர் ரஷாத் அரபிக்கல்லூரி முதல்வரும், அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் துணைத்தலைவரும், கர்நாடக மாநில ஷரீஅத் நீதிமன்ற தலைமை நீதிபதியுமான மவ்லானா மவ்லவீ ஹாபிஸ் முப்ஃதி ஏ. அஷ்ரப் அலி ஹஜரத் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த மான் அமைப்பின் தலைவரும், ETA அஸ்கான் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநருமான அல்ஹாஜ் சையத் எம் ஸலாஹுதீன் அவர்கள் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மார்க்க விஷயங்களில் ஏற்பட்டுவரும் முரண்பட்ட நிலைகளை முடிவுக்கு கொண்டுவர தங்களைப் போன்ற ஆலிம் பெருந்தகைகள் முன்முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற தனது அவாவினை வேண்டுகோளாக வைத்தார்.

மான் அமைப்பின் பொதுச்செயலாளர் அல்ஹாஜ் ஏ லியாகத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார். துபை மெளலானா ஹஜ் சர்விஸ் உரிமையாளர் மெளலவி அப்துல் காதிர் ரஷாதி சிறப்பு விருந்திரைப் பற்றிய அறிமுக உரை நிகழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து சிற்ப்பு விருந்தினர் மெளலவி அஷ்ரஃப் அலிக்கு மான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் சையத் எம் ஸலாஹுதீன் பொன்னாடை அணிவித்து கெளரவித்தார். பின்னர் முப்ஃதீ ஏ. அஷ்ரஃப் அலி ஏற்புரை நிகழ்த்தினார். அதில் ஈமானின் மகத்துவம் குறித்தும், நம்முடைய கடமைகள் குறித்தும் நினைவு கூர்ந்தார்.

மான் அமைப்பின் கல்விக்குழுச் செயலாளர் ஏ. முஹம்மது தாஹா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் புரவலர்கள் அல்ஹாஜ் சம்சுதீன் காக்கா, அல்ஹாஜ் ஹுஸைன் காக்கா, ஈமான் அமைப்பின் துணைத் தலைவர் அல்ஹாஜ் எம் அப்துல் ரஹ்மான், மதுக்கூர் ஹிதாயத்துல்லாஹ், முதுவை ஹிதாயத், ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகள் யஹ்யா ஹஜ்ரத், தாவூத் அலி ஹஜ்ரத் உள்ளிட்ட பலர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

தகவல்: முஸ்லிம் நியூஸ் ஏஜென்ஸி (எம். என் ஏ)