வரதட்சணை ஒழிப்பில் முன்மாதிரி கிராமம்- வி.களத்தூர்

 

தொகுப்பு: கமால் பாஷா

நண்பர்களுக்கு இந்தப் பக்கத்தை அறிமுகப்படுத்த...


வரதட்சணை என்ற கொடி நோயை விரட்டி நாட்டிற்கே நல்ல முன் மாதிரியாகவும் பல ஊர்களுக்கும் முன்னோடியாக விளங்கி வருவது பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வி.களத்தூர் கிராமம்.

1999-லேயே வி.களத்தூரில் வரதட்சணை ஒழிப்புக்கான கருத்தாய்வு செய்யபட்பட்டு இதற்கான முன்வடிவை ஐமாஅத் ஒருங்கிணைந்த வி.களத்தூர் முஸ்லிம் பொதுமக்கள் கொண்டுவந்தனர். இது பலவிதமான பரீட்சார்த்த முறைகளை கண்டறிந்து சோதனைக் காலமாக இரண்டு வருடம் நடைமுறைப்படுத்திää பின் இறுதிகட்ட வடிவைக் கண்டது. இறுதிக் கட்டவடிவை ஒரு சட்ட நூலைப் போல் உண்டாக்கி அதை வி.களத்தூர் முஸ்லிம்கள் அனைவர்களுக்கும் விநியோகித்தனர். அதன் பிறகு வரதட்சணை எனும் கொடிய நோய் அல்லாஹ்வின் அருளால் வி.களத்தூரிலிருந்;து விரட்டியடிக்கப்பட்டு விட்டது.


திருமணத்தின்போதே வரதட்சணை வாங்கவோ கொடுக்கவோ இல்லை என்றும் இனியும் வாங்கவோ கொடுக்கவோ மாட்டோம்  என்றும் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு உறுதிமொழி வாங்கிவிடுகின்றனர்.


நிச்சயதார்த்த நிகழ்ச்சி; தேநீர் பிஸ்கட்டுடன் எளிமையான முறையில் நடைபெற முறைப்படுத்தப்பட்டுள்ளது. பெண் அழைப்பு, திருமணத்திற்கு பிறகான விருந்து போன்ற இன்னபிற ஆடம்பர செலவினங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


இப்போது அங்கே பெண் கொடுப்பதும் வாங்குவதும் எளிதாகிவிட்டது. இவ்வூரின் சமுதாய சீர்திருத்தத்தைக் கண்ட பெரம்பலூர் மாவட்டத்தின் பிற ஊர்களும் நடைமுறைப் படுத்திவருகின்றனர். அங்கும் வரதட்சனை ஒழிப்பு நூல் வெளியிடப்பட்டு பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்யப்படுகிறது என்பது வி.களத்தூர் ஐமாஅத் மற்றும் இளைஞர்களின் முயற்சிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.


இதுபற்றிய செய்தி
(2004) -ல் உலக வெற்றிமுரசிலும் செய்தி வெளியிட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

chittarkottai.com