அல்குர்ஆன் பற்றிய கேள்வி பதில்

காஜா முயீனுத்தீன் 

நண்பர்களுக்கு இந்தப் பக்கத்தை அறிமுகப்படுத்த...

  1. நபிகளாருக்கு வழங்கப்பட்ட மிகச் சிறந்த அற்புதம் எது? அல்குர்ஆன்
  2. உலக எழுத்தாளர்களுக்கு சவால் விடும் நூல் எது? அல்குர்ஆன்
  3. பல நூற்றாண்டுகளாக திருத்தப்படாமல் இலக்கியம், விஞ்ஞானம் போன்றவற்றில் தலைசிறந்து விளங்கும் நூல் எது? அல்குர்ஆன்
  4. சூராக்கள் எனும் அத்தியாங்களின் எண்ணிக்கை எவ்வளவு? a114
  5. ஜுஸ் எனும் பாகங்களின் எண்ணிக்கை எவ்வளவு? a30
  6. மன்ஸில் எனும் பிரிவுகளின் எண்ணிக்கை எவ்வளவு ? a7
  7. ஆயத்துக்கள் எனும் வாக்கியங்களின் எண்ணிக்கை எவ்வளவு? a6236 (a6666 தவறு)
  8. மூன்றே ஆயத்துக்கள் கொண்ட சூராக்கள் யாவை? அஸ்ர்a(103), கவ்தர்a(108), நஸ்ர் (110)
  9. பிஸ்மில்லாஹிர் ரஹ்மான் எத்தணை முறை வருகின்றன? a114
  10. எத்தணை சூராக்கள் பிஸ்மில்லாஹ் கொண்டு ஆரம்பமாகின்றன? a113
  11. பிஸ்மில்லாஹ் கொண்டு ஆரம்பம் ஆகாத ஓரே சூரா எது? தஃபா(a9)
  12. எந்த ஒரு சூராவில் மட்டும் பிஸ்மில்லாஹ் இருமுறை வருகின்றது? நம்ல்(a27)
  13. மிகப் பெரிய சூரா எது? அல்பகரா(a2)
  14. மிகப் சிறிய சூரா எது? கவ்தர்(a108)
  15. மிகச் சிறந்த பாணமாக குறிப்பிடப்பட்டது எது? பால்
  16. மிகச் சிறந்த உணவாக குறிப்பிடப்பட்டது எது? தேன்
  17. ஹலாலான காரியத்தில் அல்லாஹ்வுக்கு பிடிக்காதது எது? தலாக்
  18. குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள மிகச் சிறந்த இரவு எது? லைலத்துல் கத்ர்
  19. குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள மிகப் பெரிய மிருகம் எது? யானை
  20. குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள மிகச் சிறிய உயிரனம் எது? எறும்பு
  21. குர்ஆனில் அத்தியாங்களின் தாய் (உம்முல் குர்ஆன்) எனக் கூறப்படுவது எது? பாத்திஹா (a1)
  22. எந்த சூராவின் பெயர் ஒரு அரபி எழுத்துடையது? ஸாத் (a38 ص), காஃப்(a50 ق)
  23. மக்கி சூராக்கள் எத்தணை? a86
  24. மதனி சூராக்கள் எத்தணை? a28
  25. எந்த ஒரு சூராவின் பெயர் நபிகளாரின் கோத்திரத்தின் பெயரைக் கொண்டுள்ளது? குறைஷ் (a106)
  26. தொழுகை பற்றி எத்தணை முறை வலியுறுத்தப்படுகிறது? a700
  27. ஜகாத் பற்றி எத்தணை முறை வலியுறுத்தப்படுகிறது? a150
  28. ஒரு உலோகத்தின் பெயரைக் கொண்டுள்ள சூரா எது? ஹதீத் (a57)
  29. புறம்பேசுவதைக் கண்டிக்கும் சூரா எது? ஹுமஸா(a104)
  30. முஅவிதைன் என்று கூறப்படும் சூராக்கள் யாவை? பலக்(a113) மற்றும் நாஸ்(a114)
  31. ஒரு சூராவின் பெயரிலுள்ள எழுத்துக்களை பின்புறமிருந்து (இடதிலிருந்து வலம்) படித்தாலும் அதே பெயரைக் கொண்டுள்ளது எது? (லைல்)-ل ي ل = ليل
  32. மக்கி சூராக்கள் எத்தணை வருடங்கள் அருளப்பட்டன? a13
  33. மதனி சூராக்கள் எத்தணை வருடங்கள் அருளப்பட்டன? a10
  34. 30 ஆம் ஜுஸ் எனும் பாகத்தில் எத்தணை சூராக்கள் உள்ளன? a37
  35. ஒரு மனிதனின் உடல் வருங்கால மக்களுக்கு எச்சரிக்கும் அத்தாட்சியாக பாதுகாப்பதாக அல்லாஹ் குறிப்பிடுவது யாரை? ஃபிர்அவ்ன்
  36. நபிமார்களின் பெயரால் உள்ள சூராக்கள் யாவை? யூனுஸ்(a10), ஹூத்(a11), யூசுஃப்(a12), இப்ராஹிம்(a14), முஹம்மத(a47). நூஹ்(a71).
  37. குர்ஆனை மனனம் செய்த முதல் பெண்மணி யார்? ஹஃப்ஸா பின்தி உமர் (ரலி)
  38. மக்காவை குர்ஆன் எவ்வாறு குறிப்பிடுகிறது? பக்கா மற்றும் பலதுல் அமீன்
  39. குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள பள்ளிவாசல்கள் யாவை? மஸ்ஜிதுல் ஹரம், மஸ்ஜிதுல் ஜிரார், மஸ்ஜிதுல் நபவி, மஸ்ஜிதுல் அக்ஸா, மஸ்ஜிதுல் கூபா.
  40. குர்ஆனில்  பெயர் கொண்டு குறிப்பிடப்பட்டுள்ள ஒரே பெண்மணி யார்? மர்யம் (அலை)
  41. அபூபக்கர் (ரலி) அவர்கள் குர்ஆனை முறைப்படி யாருடைய ஆலோசனையின்படி  தொகுத்தார்கள்? உமர் (ரலி)
  42. குர்ஆனின் காதிபே வஹி (வஹியை எழுதுபவர்கள்) யாவர்? அபூபக்கர் (ரலி), உஸ்மான் (ரலி), அலி (ரலி), ஜைத் பின் ஹாரித் (ரலி), அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
  43. குர்ஆனினின் மற்றப் பெயர்கள் யாவை? அல்ஃபுர்கான், அல்கிதாப், அ'திக்ர், அல்நூர் மற்றம் அல்ஹுதா
  44. நபிகளார் (ஸல்) அவர்களின் பெயர் குர்ஆனில் எத்தனை முறை குறிப்பிடப்பட்டுள்ளது? முஹம்மத் (ஸல்) a4 - முறை அஹ்மத் - a1 முறை
  45. முதல் வஹிக்கும் 2வது வஹிக்கும் இடைப்பட்ட காலங்கள் எவ்வளவு? சுமார் a2 வருடம் aa6 மாதங்கள்.
  46. தொழுகையில் கண்டிப்பாக ஓதவேண்டிய சூரா எது? பாத்திஹா (a1)
  47. நபிகளாரின் சச்சாவின் பெயரால் உள்ள சூரா எது? லஹப் (a111)
  48. குர்ஆனில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நபிகளாரின் தோழர் யார்? ஜைத் பின் ஹாரித் (ரலி)
  49. முதலில் இறக்கப்பட்ட சூரா எது? அலக் (a96)
  50. இறுதியாக இறக்கப்பட்ட சூரா எது? நஸ்ர் (a110)

குறிப்பு: அடைப்புக்குறியில் சூராவின் எண் குறிப்பிடப்பட்டுள்ளது. உதாரணம் அல்பகறாவின் எண்a:2

நண்பர்களுக்கு இந்தப் பக்கத்தை அறிமுகப்படுத்த...