|
சிறுகதை |
| முதல் பரிசு: |
ரூபாய
5000/- |
| இரண்டாம் பரிசு: |
ரூபாய
3000/- |
| மூன்றாம் பரிசு: |
ரூபாய
2000/- |
| 10 ஆறுதல்
பரிசுகள் : |
ரூபாய
1000/ |
விதிகள்
1.இஸ்லாமிய விழுமியங்கள், கலாசாரம், சமூக ஒற்றுமை, மனிதநேயம், நாட்டுப்பற்று மேவும்
முஸ்லிம் வாழ்வியலை மையமாக வைத்து எழுதப்படும் சிறுகதைகளாக இருக்கவேண்டும்.
வரலாற்றுச் சிறுகதைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டா.
2. ஒரு அத்தியாயம் வெள்¨ளை முழுத்தாள் அளவில் (A-4) கையெழுத்தில் 4 - 6 பக்கம்
அச்சில் 4 பக்கங்களுக்கு மிகாமல் இருக்கவேண்டும்
3. அச்சில் அனுப்புவது நல்லது.
4. ஆக்கத்துடன் ஒரு ஜெராக்ஸ்
பிரதியும் அனுப்ப வேண்டும்.
|
கவிதை |
| முதல் பரிசு: |
ரூபாய
3000/- |
| இரண்டாம் பரிசு: |
ரூபாய
2000/- |
| மூன்றாம் பரிசு: |
ரூபாய
1000/- |
|
20 ஆறுதல்
பரிசுகள் : |
ரூபாய
500/ |
விதிகள்
1.இஸ்லாமிய விழுமியங்கள், கலாசாரம், சமூக ஒற்றுமை, மனிதநேயம், நாட்டுப்பற்று மேவும்
முஸ்லிம் வாழ்வியலை மையமாக வைத்து எழுதப்படும் கவிதைகளாக இருக்கவேண்டும். வரலாற்றுக்
கவிதைகளும் ஏற்கப்படும்
1. கவிதைகள் மரபுக் கவிதைகளாகவோ அல்லது புதுக்கவிதைகளாகவோ இருக்கலாம்.
2. அளவு 24 வரிகளுக்குள் இருக்க வேண்டும்
3. பிற மொழிச் சொற்கள் தவிர்க்கப்படவேண்டும்
4. ஆக்கத்துடன் ஒரு ஜெராக்ஸ் பிரதியும் அனுப்ப
வேண்டும்.
பொது விதிகள்
1.போட்டிகளில் பங்கு பெறுவோர் தனித்தாளில் தங்களது சரியான பெயர்/தகப்பனார்/கணவர்
பெயர்கள் /கல்வித்தகுதி/ முகவரி/ தொலைபேசி எண்கள்/ ஈமெயில் இவற்றுடன் ஆக்கம்
தங்களுக்குச் சொந்தமானதென்றும், தழுவலோ அல்லது மொழிபெயர்ப்போ அல்லவென்றும், போட்டி
விதிகளுக்குக் கட்டுப்படுவதாகவும் உறுதிமொழி அளித்து கையப்பமிட்டு அனுப்ப வேண்டும்
2. ஒரு பக்கம் மட்டுமே எழுத / டைப் செய்ய வேண்டும்
3. ஆக்கங்களை தபாலிலோ / கூரியர் சர்வீஸிலோ அனுபலாம். ஆக்கங்கள் கிடைத்த ஒரு
வாரத்துக்குள் பெற்றுக்கொண்டதற்கான தகவல் அனுப்பப்படும். அதன் பிறகு அது சம்பந்தமாக
அனைத்து கடித/ ஈமெயில்/ தொலைபேசித் தொடர்புகள் தவிர்க்கப்பட வேண்டும்.
4. நர்கிஸ் - மல்லாரி பதிப்பகம் நியமிக்கும் நீதிபதிகளின் தீர்ப்பே இறுதியானது.
5. ஆக்கங்கள் செப்டம்பர் மாதம் 30 -ம் தேதிக்குள் கிடைக்கவேண்டும்
6.ஆக்கங்களைத் திருப்பி அனுப்ப இயலாது. தபால் தலைகள் அனுப்ப வேண்டாம்.
7.பரிசு பெறும் சிறுகதைகள்/ கவிதைகள் நர்கிஸில் வெளிவரும்; அவற்றை நர்கிஸில்
வெளிவரும் வரை வேறு வகையில் பிரசுரிக்கக் கூடாது.
8.பரிசீலனை முடிந்த பிறகு நர்கிஸ் இதழில் முடிவு அறிவிக்கப்படும்; அதைத்தொடர்ந்து
பரிசுபெற்றவர்களுக்கும் பதிவுத் தபால் / கூரியர் சர்வீஸ் மூலம் தெரிவிக்கப்படும்.
அதனுடன் பரிசுத்தொகையும் காசோலை மூலம் அனுப்பிவைக்கப்படும்.
9.சிறுகதைகள்/ கவிதைகள் நர்கிஸ் முகவரிக்கு அனுப்பப் பட வேண்டும் ; கடித உறையின்மீது
சிறுகதை/ கவிதை என்று தெளிவாகக் குறிப்பிடவேண்டும்
10.ஒருவரே இரண்டு போட்டிகளிலும் கலந்து கொள்ளலாம்; ஒன்றுக்கு மேற்பட்ட ஆக்கங்களையும்
அனுப்பலாம்.
|
எம். அனீஸ் பாத்திமா
பதிப்பாளர்/நிர்வாக ஆசிரியை
நர்கிஸ்
திருச்சி -620001 |
டாக்டர் அ. சையத் இப்ராஹீம
(ஹிமானா சையத்)
கௌரவ ஆசிரியர் : நர்கிஸ்
நிறுவனர்:மல்லாரி பதிப்பகம்
சித்தார்கோட்டை-623513 |
|
54, MARIYAM NAGAR,
MALLIKAIPURAM
TRICHY -620001
-TAMILNADU
INDIA
|