|
ஹாஜிகளுக்கான கையேடு |
|
ஹஜ் - 1427
ஹிஜ்ரி (2006) |
இந்திய
பன்னாட்டுத் தூதரகம் (ஜித்தா)
|
நண்பர்களுக்கு இந்தப் பக்கத்தை அறிமுகப்படுத்த...
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அன்பார்ந்த ஹாஜிகளே!
ஹஜ்ரி 1427 ஆம் ஆண்டிற்கான ஹஜ் கிரிகைகளை நிறைவேற்ற
தாயகத்திலிருந்து வந்திருக்கும் ஹாஜிகளுக்கு எங்களின்
மகிழ்வான வாழ்த்தும், அல்லாஹ்வின் சாந்தியும், சமாதானமும்
உண்டாகட்டுமாக!
ஹாஜிகளாகிய உங்களில் சிலர் ஜித்தாவில் வருகை புரிந்து பின்
புனித நகரங்களாகிய மக்காவிற்கும், மதினாவிற்கும்
செல்லலாம். இன்னும் சிலர் நேரடியாக மதினாவிற்குச் சென்று
40 வேளை தொழுகைகளை மதினாவின் புனிதப் பள்ளியில்
முடித்துவிட்டு மக்காவிற்கு வரலாம்.
நம்முடைய இந்த புனித ஹஜ் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக
அல்லாஹ் ஆக்கி அருள்புரிவானாக!
ஹஜ் கிரிகைகளை இனிதே முடிக்க கீழே சில உபயோகமுள்ள
வரைமுறைகளும், குறிப்புக்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அதை
ஹாஜிகள் பலரும் படித்து அதன்படி ஹஜ் கிரிகைகளை
நிறைவேற்றிப் பயனடைய வேண்டுகிறோம்.
அ)
பொதுவான சில தகவல்கள்
- 1) அல்லாஹ்வின்
நல்லடியார்களாகிய நீங்கள், உங்கள் உள்ளங்களை தொழுகை,
குர்ஆன் ஓததல், தஸ்பீஹ் செய்தல் மற்றும் தவாஃப்
செய்தல் போன்ற பயனுள்ள
விஷயங்களில் உங்கள் நேரங்களை செலவிடுதல் வேண்டும்.
வீண் பேச்சுக்கள் மற்றும் செயல்களில் ஈடுபடுவதை
தவித்துக் கொள்ளவேண்டும்.
- 2) சுத்தமாக
இருத்தல் அவசியம்: சுத்தம் ஈமானின் ஓர் அங்கம்.
சுத்தமாக இருப்பது முஃமின்களுக்கு அழகு. உங்கள்
உடலையும், பயன்படுத்தும் பொருட்களையும்,
சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்தல் அவசியம்.
- 3) ஹஜ்
செய்வதற்கு உடல் உழைப்பு அதிகம் தேவை. உதாரணமாக
மக்காவிலும், மதினாவிலும் தங்கும் போது அதிகமாக
நடந்துசெல்லும் சூழ்நிலை ஏற்படும். ஹஜ் கிரிகைகளின்
காரணமாக ஹாஜிகளின் கூட்டம் அதிகமாக ஓரிடத்திலிருந்து
அடுத்த இடத்திற்கு சென்ற வண்ணம் இருக்கும். அதனால்
நீங்கள் பொறுமையுடனும், கட்டுக்கோப்புடனும் இருத்தல்
அவசியம்.
- 4)
அவசரப்படுதல் மற்றும் பிறர்மீது கோபப்படுதல் கூடாது.
- 5) ஹாஜிகளில்
பலர் வயதானவர்காகவும், அதிகம் கல்வியறிவு அற்றவராகவும்
இருக்கலாம், அதனால் இளம் ஹாஜிகள் மற்ற ஹாஜிகளுக்கு
உதவி செய்யும் வண்ணம் அவர்களுடன் பணிவாகவும்
நடந்துகொள்ள வேண்டும்.
- 6) காஃபாவில்
வழிதவறுதல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. அதனால்
பள்ளிக்குள் செல்லும் போது எந்த வாயில் எண் ஊடே உள்ளே
செல்கின்றோம். எல்லா வாயிலின் முகப்பிலும் எண்கள்
பொறிக்கப்பட்டிருக்கும். அதை கவனத்துடன் படித்துச்
செல்லவும்.
- 7) நீங்கள்
வழிதவறினால் அஜ்-ஜியாத் மக்கா ஹோட்டல் பக்கத்திலுள்ள
இந்திய ஹஜ் கமிட்டி அலுவலகத்தில் அணுகி அவர்களிடம்
உதவியை நாடலாம். இந்திய அரசாங்க வழிகாட்டிகளை
அல்-ஹிந்த் என்றும், பாரத் என்றும் பொறிக்கப்ட்ட
உடையுடன் அங்;கு இருப்பார்கள். அவர்களையும் நீங்கள்
அணுகி உங்கள் சரியான இடத்திற்கு வந்து சேரலாம்.
- 8) உங்கள்
முஅல்லிம் அடையாள அட்டையும், உங்கள் கையில்
அணிந்திருக்கும் அடையாளக் காப்பும் எக் காரணத்தைக்
கொண்டும் விட்டுச் செல்லக்கூடாது. இவை இரண்டும்
உங்களின் முக்கியமான அடையாளச் சின்னங்களாகும். எனவே
இவை இரண்டையும் எந்நேரத்திலும் நீங்கள் வைத்திருத்தல்
அவசியம்.
- 9) முஅல்லிமின்
அனுமதியில்லாமல் சட்டதிட்டத்தின்படி மக்கா மற்றும்
மதினா நகரங்களை விட்டு வேறு எந்த இடத்திற்கும் செல்வது
முற்றிலும் தவிர்க்க வேண்டும். இதை மீறினால் சவூதி
அரசாங்க காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு
சிரமங்களுக்குப் பின் தாயகத்திற்கு திருப்பி
அனுப்பப்படுவீர்கள்.
- 10) 2006 ஆம்
ஆண்டின் புனித ஹஜ் டிசம்பர் மாதத்தின் கடைசியிலும்
2007 ஆம் ஆண்டு ஜனவரி ஆரம்பத்திலும் வருகின்றது.
இவ்வாண்டின் ஹஜ்ஜுக்குரிய நாட்கள் குளிர் மாதங்களில்
வருவதால், அவை குளிர் மிகுந்தவையாக இருக்கும். அதனால்
அதற்குத் தகுந்தாற்போல் குளிர் தாங்கும் உடைகளையும்,
போர்வைகளையும் எடுத்து வருவதல் மிகவும் பயனுள்ளதாக
இருக்கும். மக்கா, மதீனா மற்றும் மினா போன்ற அனைத்து
இடங்களிலும் அதிநவீன குளிரூட்டிகள்
பொருத்தியிருப்பதால் இரவு நேரங்களில் குளிர் அதிகமாக
இருக்கும். எந்த இடங்களிலும் ஹீட்டர்கள் இருக்காது.
11) நீங்கள் மக்கா, மதீனா மற்றும் மினா போன்ற
இடங்களில் சாலைகளைக் கடந்து செல்லும் போது கவனமாகச்
செல்லுதல் அவசியம். ஏனென்றால் இங்கு தாயகத்தைப்
போலல்லாமல் சாலை விதிமுறைகள் மாற்றமாக இருக்கும். ஹஜ்
கடைமைகளை நிறைவேற்றாமல் வேறு எங்கும், எந்தக்
காரணத்தைக் கொண்டும் செல்லுதல் தவிர்க்க வேண்டும்.
ஆ) தங்குமிடம்
- 12) எல்லா
தங்குமிடங்களையும் இந்தியன் ஹஜ்-கமிட்டியானது
சவூதி அரேபிய அரசாங்கத்தின் விதிமுறைகளின் படி
எடுத்து அதை முறைப்படி எல்லா வசதிகளையும்
செய்துள்ளது.
-
13) இந்த வருடம்
மக்காவில் ஷீஷா என்ற புதிய வகை தங்குமிடங்களையும்
நவீன முறையில் அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த
வகையான தங்குமிடங்கள் மஹபஸுல் அல்-ஜின் என்கின்ற
இடத்தில் ஏற்படுத்தியிருக்கிறார்கள். இங்கிருந்து
24 மணிநேரமும் பஸ் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த வருடத்தைப் போல் இந்த வருடமும் அஜீஸியா
பகுதியிலிருந்தும் 24 மணிநேரமும் பஸ் வசதி
செய்யப்பட்டுள்ளது.
- 14) சில
சமயம் மக்காவில் இடம் பற்றாக்குறை காரணமாக நீங்கள்
பதிவு செய்தது போல் அறை கிடைக்காமல் இருந்தால்
கண்டிப்பாக அதற்கான வித்தியாசத் தொகை நீங்கள்
தாயகம் திரும்பியவுடன் ஹஜ் கமிட்டியை நாடி நீங்கள்
திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
- 15)
நீங்கள் தங்கியிருக்கும் இடங்கள் மற்றும் அறைகளின்
விபரங்கள் கணினி மூலமாக ஆன்-லைனில் பதிவு
செய்யப்பட்டுள்ளது. ஆகவே நீங்கள் தயவுசெய்து
உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களிலேயே தங்குதல்
இன்றியமையாததாகும். மற்ற ஹாஜிகளின் இ;டங்களின்
ஆக்கிரமித்துக் கொள்வது இஸ்லாமிய நெறிமுறைக்கு
மாற்றமானதாகும். எனவே இதை கண்டிப்பாக
தவிர்க்கவும்.
- 16) மக்கா
பகுதியானது மலைகள் நிறைந்த பகுதியென்பதால்
கட்டிடங்கள் சில மேடான பகுதிகளிலும், தாழ்வான
பகுதிகளிலும் அமைந்திருக்கலாம். எனினும் எல்லா
கட்டிடங்களிலும் லிஃப்ட் வசதி
செய்யப்பட்டிருக்கும். ஆகவே லிஃப்டை முறையாக
உபயோகப் படுத்தவேண்டும். அறியாதவர்களும் அதை
எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்பதை
அறிந்தவர்கள் சொல்லித்தரவேண்டும். உதாரணமாக எத்தகை
நபர்கள் ஒரு சமயத்தில் போகலாம். எந்த பட்டன்களை
எதற்கு உபயோகப்படுத்த வேண்டும் என்று கவனித்துக்
கொள்ளவேண்டும்.
- 17)
அனைத்து ஹாஜிகளும் அவர்கள் தங்கியிருக்கும்
இடத்திலுள்ள கழிவறைகளையும், சமையல் அறைகளையும்
பொதுவாக அனைவரும் உபயோகப்படுத்திக்
கொள்ளவேண்டும். உங்கள் பொறுமை பல பிரச்சினைகளுக்கு
முற்றுப்புள்ளி வைக்கும்.
- 18)
தண்ணீரை சிக்கனமாகச் செலவழிக்க வேண்டும். ஹஜ்
நேரத்தில் தண்ணீரைக் கொண்டுவருவது கடினம், அதனால்
தண்ணீரை மிகச் சிக்கனமாக உபயோகப்படுத்த வேண்டும்.
- 19) கேஸ்
அடுப்பை மிகுந்த கவனத்துடன் உபயோகப்படுத்த
வேண்டும். சமையலறையை விட்டு வெளியே வரும் போது
கேஸ் அடுப்பை கவனமாக மூடிவிட வேண்டும். இதை
மற்றுள்ளவர்களுக்கும் புரியவைக்க வேண்டும்.
- 20)
ஒவ்வொரு நாளும் கட்டிட நிர்வாகி பரிசோதிக்க
வரும்போது உங்கள் குறைகளை அவரிடமோ அல்லது கட்டிடக்
காவலாளியிடமோ தெரிவிக்கலாம். அல்லது அங்கு
வைத்திருக்கும் புகார் புத்தகத்திலும் உங்கள்
குறைகளை பதிவுசெய்யலாம். ஹஜ் அலுவலகத்தின்
வரைபடமும், தொலைபேசி எண்களும் கட்டிடத்தின்
கீழேயுள்ள அறையில் வைக்கப்பட்டிருக்கும்.
- 21)
தயவுசெய்து பார்வையாளர்களை அறைக்குள்
அனுமதிக்காதீர்கள். அவர்களை கட்டிடத்தின் வரவேற்பு
அறையிலேயே சந்தித்துப் பேசி மகிழ்வோடு
அனுப்புங்கள்.
இ)
ஹாஜிகளின் நலனுக்காக செய்யப்பட்டுள்ள உதவிகள்
- 22)
இந்திய அரசாங்கம் அதிகமான மருத்துவர்களையும்,
உதவி மருத்துவர்களையும் ஹாஜிகளின் நலனுக்காக
ஏற்பாடு செய்திருக்கின்றது. மக்கா மற்றும்
மதினாவில் முக்கியமான இடங்களில் உதவி மருத்துவ
முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மக்காவில் அதிக இடங்களிலும், மதினாவில்
முக்கியமான நான்கு இடங்களிலும் மருத்துவ
முகாம்கள் உள்ளன. அதுமட்டுமல்லாமல் மக்காவில்
அல்-ஜியாத் என்ற மருத்துவமனையில் 50
படுக்கையறைகளுடன் மருத்துவ வசதி
செய்யப்பட்டுள்ளது.
-
23) ஹாஜிகள்
அவரவர்கள் உடல்நலத்தை
கவனித்துக்கொள்ளவேண்டும். அதிகமாகத் தண்ணீர்
குடிக்க வேண்டும். அதிகமாக பழவகைகளை உண்ண
வேண்டும். பொதுவாக வரக்கூடிய நோய்கள் வயிற்று
வலி, மூக்கடைப்பு, இருமல், தசைபிடிப்பு,
மயக்கமடைதல் மற்றும் காய்ச்சல் போன்றவற்றிற்கு
சிறப்பு மருத்துவர்கள் இருப்பார்கள். ஒருவேளை
நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பெற்றால்
உங்களை அன்றாடம் கவனிப்பதற்கு இந்திய மற்றும்
சவூதிஅரேபிய மருத்துவர்கள் இருப்பார்கள்.
- 24)
அதிக மருத்துவ வசதி உங்களை வந்தடைய நடமாடும்
மருத்துவக் குழுக்கள் இருக்கின்றன.
வயதானவர்களையும், நோய்வாய்ப்பட்டவர்களையும்
அவர்கள் தங்கியிருக்கும் அறையிலேயே வந்து
மருத்துவம் செய்வார்கள்.
- 25) 75
வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பிரத்யேக
மருத்துவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஈ)
மக்கா பள்ளியில் (ஹரம் பகுதியில்) கடைபிடிக்க
வேண்டிய முக்கிய விதிமுறைகள்
26) முதலாவதாக மக்கா பள்ளியின் புனிதத் தன்மை
காப்பாற்றப்படவேண்டும். உணர்ச்சிகளைக்
கட்டுப்படுத்த வேண்டும். உங்களுக்குச்
சொந்தமில்லாத எந்தவிதமான பொருட்களையும்
எடுக்கக் கூடாது. ஏனென்றால் கண்காணிப்பு
போலீஸ் உங்களை தவறாக எண்ணக்கூடும்.
27) சவூதி அதிகாரிகளும், போலீஸ் அதிகாரிகளும்
மாறுவேடத்தில் எல்லா இடங்களிலும்
கண்காணித்துக் கொண்டிருப்பார்கள். ஒருவேளை
உங்களை போலீஸ் பிடித்தால் இந்தியன் ஹஜ்
அதிகாரிகளின் முன்னிலையில்தான் நீங்கள் பேச
வேண்டும்.
28) மக்கா பள்ளி மூன்று அடுக்குகளைக் கொண்டது.
உயரே செல்வதற்கு தானியங்கி படிகள்
(எக்ஸ்லேட்டர்) முறையாகப் பயன்படுத்தாவிட்டால்
கீழே விழுவதற்கு வழிவகுக்கும்.
29) உங்களுடைய காலணிகளை வைத்துக்கொள்வதற்கு
ஒரு பிளாஸ்டிக் பையை வைத்துக்கொள்ளுங்கள். ஒரு
தொழுகை விரிப்பையும் உங்களோடு வைத்துக்
கொள்ளவேண்டும். ஏனெனில் கூட்;டம் அதிகமானால்
திறந்தவெளியிலேயும் தொழுதுகொள்ள உங்களக்கு
ஏதுவாக இருக்கும்.
உ)
ஏமாற்றுக்காரர்கள், திருடர்கள் ஜாக்கிரதை
30) முன் பின் தொடர்பு இல்லாதவர்களோடு கவனமாக
இருக்க வேண்டும். அவர்களிடமிருந்து தேனீர்,
தின்பண்டங்கள் வாங்கி உட்கொள்ள வேண்டாம்.
உங்களுடைய பொருட்களை கவனமாகப்
பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
31) கூட்டமாக இருக்கும் இடங்களில்
விலையுயர்ந்த பொருட்களையும், தேவைக்கு அதிகமான
பணத்தையும் எடுத்துச் செல்லவேண்டாம்.
32) உங்கள் பொருட்களையும், பணத்தையும்
பாதுகாத்துக்கொள்வது உங்கள் கடமை. பத்திரமாக
இருக்கட்டும் என்று கருதி நீங்கள் எடுத்துச்
செல்வதினால் அதைத் தவற விடுவதுதான் அதிகமாக
நடைபெறுகின்றது. ஒவ்வொரு முஅல்லிம்
அலுவலகத்திலும் பாதுகாப்புப் பெட்டகங்கள்
இருக்கின்றன. நீங்கள் அதை உபயோகப் படுத்தி
அதற்குண்டான ரசீதை வாங்கிக் கொள்ளலாம்.
அதுமட்டுமல்லாமல் ஹரம் பகுதியிலும் இதுபோன்ற
பாதுகாப்புப் பெட்;டகவசதிகள் உள்ளன.
33) கடந்த சில வருடங்களாக சில விஷமிகள்
குறைந்த விலையில் குர்பானீ கொடுக்க நாங்கள்
உதவி செய்கின்றோம் என்று ஏமாற்றுகிறார்கள்.
நீங்கள் நேரடியாகவோ அல்லது இஸ்லாமிக்
டெவலப்மென்ட் பேங்க் மூலமாக பணம் செலுத்தி
குர்பானி கூப்பனைப் பெற்றுக்கொள்ளலாம். இதை
இஸ்லாமிய மார்க்க அறிஞர்களால்
அனுமதிக்கப்பட்டது ஆகும்.
ஊ) மதீனாவிற்குச்
செல்வதும், திரும்புவதும்
34) நீங்கள் அறையை விட்டு வரும் போது அறைச்
சாவிகளை கட்டிடத்தின் காவலாளியிடம் கொடுத்து
வரவும். ஏனென்றால் உங்களுக்குப் பிறகு மற்றும்
பல ஹாஜிகள் அங்கு வந்து தங்க வாய்ப்பு உள்ளது.
உங்களுடைய பயணம் திட்டமிட்டபடி நடக்க
இருப்பதால் அதைச் சரியாக பின்பற்றப்பட
வேண்டும்.
35) அதனால் மக்கா, மதீனா பயணங்களை உங்களுக்கு
அறிவித்த நேரத்தின் படி அமைத்துக்
கொள்ளுங்கள். உங்களால் மற்ற ஹாஜிகளுக்கு
இடையூறு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும்.
36) மதீனாவில் தங்குமிடத்தினுடைய பிரிவுகள்
இல்லை. எல்லா ஹாஜிகளும் ஒரே பிரிவில்தான்
தங்கவைக்கப்படுவார்கள். இவர்களுடைய இருப்பிடம்
ஹரத்திலிருந்து 850 மீட்டர் தூரத்தில்
சித்தீன் ஸ்ட்ரீட் என்ற சாலையில்
அமைந்துள்ளது. ஆனாலும் ஹாஜிகள் மர்க்கஸீயா
பகுதியிலும் தங்க வைக்கப்படுவார்கள்.
37) மதீனா போகும் பொழுதும் (ஹஜ்ஜிற்கு முன்போ
அல்லது பின்னோ) உங்களுடைய கம்பளி ஆடைகளை
எடுத்துச் செல்லுங்கள். அதேசமயம் உங்களுடைய
இஹ்ராம் ஆடைகளை எடுத்துச் செல்வதற்கு
மறக்காதீர்க்ள். ஏனெனில் நீங்கள்
மதீனாவிலிருந்து மக்காவிற்கு வரும் போது
இஹ்ராம் உடையுடன்தான் வரவேண்டும்.
38) நீங்கள் 40 வேளை தொழுகைகளை மதீனாவில்
முடித்துக்கொண்டு மக்காவிற்கு வரும்போது
உங்களுடைய வாகனம் மீக்காத் எல்லையாகிய
துல்ஹுலைஃபாவில் நிறுத்தப்படும். நீங்கள்
அங்கு இஹ்ராமைக் கட்டிக்கொண்டு உங்களுடைய
வாகனங்களுக்கே திரும்ப வேண்டும். அனைத்து
வாகனங்களும் ஒரே மாதிரி இருப்பதினால்
உங்களுடைய வாகனத்தின் எண்ணை குறித்துக்கொண்டு
அதேவாகனத்திற்கு திரும்ப வேண்டும்.
எ) ஹஜ்ஜுடைய நாட்களில் மினா, அரஃபா மற்றும்
முஜ்தலிஃபாவில் தங்குதல்
39) துல்-ஹஜ் பிறை 7 மற்றும் 8 ஆகிய
தினங்களில் மினாவிற்குச் செல்லும்பொழுது 2
ஜோடி கம்பளி ஆடைகளையும், போர்வைகளையும்
உங்களுடன் எடுத்துச் செல்வது மிக அவசியம்.
ஏனெனில் அங்கு குளிர் மிக அதிகமாக இருக்கும்.
40) மினாவில் ஹாஜிகள் அவர்களுடைய எண்கள்
வாரியாக கூடாரங்களில் தங்க வைக்கப படுவார்கள்.
ஹாஜிகள் மக்காவிலிருந்து மினா கூடாரங்களுக்கு
அவர்கள் அலுவகத்தினரால்
ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள பேருந்துகளின் மூலமாக
கூடாரங்களுக்கு அழைத்துவரப்படுவார்கள்.
ஒவ்வொரு ஹாஜிகளுக்கும் அவர்கள் தங்கும்
கூடாரத்தில் ஒரு சதுர மீட்டர் அளவு இடம்
ஒதக்கப்படும். ஆகவே நீங்கள் தயவுசெய்து இதை
பற்றி புகார்களை எழுப்பவேண்டாம்.
41) ஹாஜிகளை கவனித்துக்கொள்ளும் முஅல்லிம்கள்
தெற்காசிய ஹஜ் நிருவனங்களாக இருப்பார்க்ள்.
இதை அரபி மொழியில் முஃஸஸா ஜுனூப் ஆசியா என்று
அழைப்பார்கள். தெற்காசிய ஹஜ் நிருவனத்தின்
நிறம் மஞ்சள் ஆகும். மினாவிலும், அரஃபாவிலும்
இந்த அலுவலகத்தின் அறிவிப்புப் பலகைகளின்
நிறம் மஞ்சள் ஆகும். அரஃபாவிலே நீங்கள்
தங்குமிடத்தின் குறியீடுகள் மிக உயர்ந்த
மஞ்சள் நிறத்தினாலான தூண்களினால்
அமைக்கப்பட்டிருக்கும். மிகத்தொலைவிலிருந்தும்
அதைப் பார்க்கலாம். ஹாஜிகள் தங்களுடைய அடையாள
அட்டைகளை இந்த இடங்களில் கண்டிப்பாக
அவர்களுடனேயே வைத்திருக்க வேண்டும்.
வழிதவறினால் முஃஸஸா ஜுனூப் ஆசியா என்றோ அல்லது
இந்தியன் ஹஜ் ஆஃபீஸ் என்றோ அல்லது ஃபைத்துல்
ஹஜ் அல்-ஹிந்த் என்று கேட்டு உதவிபெற
வேண்டும். உங்களின் முஅல்லிம் ஆஃபீஸின் எண்களை
நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
42) இந்தியத் தூதரகத்தின் ஒரு அலுவலகம்
மினாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.
இந்தத் தூதரகத்துடன் மருத்துவ
முகாமும் இணைக்கப்பட்டிருக்கும். இந்திய
ஹாஜிகளின் முகாம்கள் இரு பிரதான சாலைகளில்
அமையப் பெற்றுள்ளது. அந்தச் சாலைகளின் பெயர்
சூக்குல் அரப் என்றும் சாரே-ஜுஹரா என்றும்
அழைக்கப்படும். ஹாஜிகள் இந்தியக் கொடியைப்
பார்த்து அவர்களுடைய முகாம்களை எளிதாக
அடையாளம் கண்டுபிடித்துவிடலாம்.
43) இந்திய ஹஜ்-கமிட்டி அலுவலகப்
பொறுப்பாளர்கள் மினா முழுவதும் இருப்பார்கள்.
இவர்கள் இந்தியா-அல்ஹிந்த் என்ற எழுத்துக்கள்
பொறிக்கப்பட்ட ஊதா நிற சட்டையை அணிந்துகொண்டு
வலம் வந்துகொண்டிருப்பார்கள்.
44) உங்களுக்கு மினாவில் ஏதேனும்
பிரச்சினையென்றால் மேற்கூறிய பொறுப்பாளர்களை
அணுகுவதற்குத் தயங்க வேண்டாம்.
மருத்துவர்களும் சம்மந்தப்பட்ட
கூடாரங்களுக்குச் சென்று மருத்துவ வசதிகள்
செய்ய ஒவ்வொரு அலுவலகத்திலும் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது.
45) மினாவில் உங்களுடைய உணவுத் தேவைகளை
நீங்களே பூர்த்தி செய்துகொள்ள வேண்டும். அங்கு
உணவுகளும், பழவகைகளும் மற்றும் அனைத்து வகையான
பொருட்களும் உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள்
பிஸ்கெட், குக்கீஸ், பழங்கள், ஜுஸ் வகைகளை
உங்களுடன் எடுத்துச் செல்லலாம்.
46) ஜமராத்தில் ஷைத்தானிற்கு கற்கள்
வீசுவதற்கு இரண்டு அடுக்கு நிலை வழிகள் உண்டு.
நீங்கள் உங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரத்தின்
பிரகாரம் ஷைத்தானிற்கு கற்கள் வீசுவதற்குச்
செல்லலாம். இந்தியன் அலுவலக அதிகாரிகள்,
முஅல்லிம்கள் உங்களுக்குப் பாதுகாப்பாக
வருவார்கள். நீங்கள் எக்காரணத்தைக் கொண்டும்
கூட்டத்தில் சிக்கிவி;டக் கூடாது. நீங்கள்
ஷைத்தானிற்கு கற்கள் வீசுவதற்கு கீழ் தளத்தின்
வழி அல்லது மேல் தளத்தின் வழி ஆகிய இரண்டில்
எங்கு கூட்டம் குறைவாக உள்ளதோ அதை தேர்வு
செய்து செல்லலாம். முதியவர்களுக்காகவும்,
குழந்தைகளுக்காகவும், இயலாத பெண்களுக்காகவும்
இன்னும் யாராருக்கெல்லாம் கூட்ட நெரிசலில்
சென்று கற்கள் வீச
முடியவில்லையோ அவர்களுக்காக மற்றொருவரை கற்கள்
வீச ஏற்பாடு செய்து கொள்ளலாம். கூட்ட நெரிசல்
அதிகமாக இருப்பின் உடனே திரும்பி
வந்துவிடவும். எப்பொழுது கூட்டம் இல்லையோ
அப்பொழுது சென்று ஷைத்தானிற்கு கற்கள் வீசுவது
நல்லது.
47) கூட்டமாக வரும் சில நாட்டைச் சேர்ந்த
ஹாஜிகள் கூட்ட நெரிசலில் உங்களைத் தள்ளக்
கூடும். அப்பொழுது நீங்கள் கவனமாக இருக்க
வேண்டும். வழி தவறிவிடக் கூடாது. அதற்கு
எதிர்திசையில் வருதல் கூடாது. கூட்டத்தின்
காரணமாக கோபமாகி மற்றவர்களுடன் சண்டை இடுதல்
கூடாது. ஷைத்தானிற்கு கல் எரியச் செல்லும்
போது கனமான பைகளை உங்களோடு எடுத்துச்
செல்லாதீர்கள்.
48) இந்த வருடத்திலிருந்து துல்-ஹஜ் பிறை 13
அன்றும் மினாவிலே ஹாஜிகளுக்குக் கூடாரம்
கொடுப்பதற்கு சவூதி அரசாங்கம்
முஅல்லிம்களுக்கு அறிவித்திறுக்கின்றது. ஆகவே
துல்-ஹஜ் 12 மற்றும் 13 களில் கூட்ட நெரிசல்
தவிர்க்கப்படும். மேலும் துல்-ஹஜ் 12-ல் ஒரு
பகுதி ஹாஜிகளும், துல்-ஹஜ் 13-ல் மற்றொரு
பகுதி ஹாஜிகளும் மினாவிலிருந்து ஜமராத்தில்
கல் எரிந்துவிட்டு மக்காவிற்கு எளிதாகச்
செல்வதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. துல்-ஹஜ்
13 அன்று மினாவில் தங்குவதும் சுன்னத்ஆன
வழிமுறைகளில் ஒன்றாகும்.
49) ஹாஜிகளாகிய நீங்கள் எந்த ஒரு விபத்தும்
ஏற்படாமல் பாதுகாப்பாக, எளிதாக உங்களுடைய ஹஜ்
கடமைகளை நிறைவேற்றுவதே எங்களுடைய விருப்பம்.
ஆகவே நீங்கள் மேற்கூறிய விஷயங்களை மனதில்
வைத்துக்கொள்வதுடன் உலமாக்களிடத்திலும்
ஹஜ்ஜுடைய மார்க்க சட்டதிட்டங்களை
கேட்டறியுங்கள்.
50) இஸ்லாம் உங்களை நீங்களே வருத்திக்
கொள்வதற்கு ஏவவில்லை. அல்லாஹ் கூறுகின்றான்.
...இந்த தீனில் (மார்க்கத்தில்) அவன்
உங்களுக்கு எந்த சிரமத்தையும்
ஏற்படுத்தவில்லை... (அல்-குர்ஆன் 22:78)
ஆகவே நீங்கள் இஸ்லாம் கூறிய எளிய முறைகளை
உங்கள் முன் நிறுத்தி சிரமங்களிலிருந்து
தவிர்ந்துக் கொள்ளுங்கள்.
51) துல்-ஹஜ் பிறை 9 அன்று அரஃபா மைதானத்தில்
தங்குவதுதான் ஹஜ்ஜின் கிரிகைககளில்
முக்கியமானதாகும். ஆகவே அன்றைய முழு
நேரத்தையும் வணக்கத்திலும், திக்ரிலும், பாவ
மன்னிப்பு கோருவதிலும், துஆக்களிலும்
செலவிடுங்கள். அரஃபாவிலே உங்களுடைய
கூடாரங்களிலேயே நீங்கள் தொழுங்கள். நீங்கள்
ஜபலே-ரஹ்மத்திற்கோ அல்லது மஸ்ஜித் நிம்ரா
பள்ளிக்கோ செல்லவேண்டும் என்று எண்ணினால்
உங்களுடைய கூடாரங்களின் அமைவிடத்தை கவனமாக
மனதில் வைத்துச் செல்லுங்கள்.
52) மஃரிப் பாங்கு கொடுத்த பின்னரே அரபாத்
புறப்படவேண்டும். ஆயினும் முஜ்தலிபா வந்து
சேர்ந்த பின்னர் மஃரிபையும் இஷாவையும்
சேர்த்து (ஜம்உ) தொழுதுகொள்ளவேண்டும் என்பதை
நினைவில் கொள்ளவும்.
53) அரபாத் முஜ்தலிபாவிற்கு இடையேயான 5
லிருந்து 6 கி.மீ தூரத்தை பேருந்தில் கடக்க 6
லிருந்து 8 மணி நேரம் கூட ஆகலாம். சவூதி
அரசாங்கம் அழகான நீண்ட நடைபாதைகூட இதற்காக
அமைத்திருக்கின்றது. திடகாத்திரமானவர்கள்
பேருந்தில் செல்வதை விட நடந்தே செல்ல
முயற்சித்தால் அரை மணி நேரத்தில் முஜ்தலிபாவை
அடைந்துவிடலாம். முஜ்தலிபாவில் நெருக்கடி
அதிகம். கழிவறை கூடங்களில் (வுழடைநவ)
மணிக்கணக்கில் காத்து நிற்போரின் வரிசையை
காணலாம். நல்ல உடல் நிலையில் உள்ளவர்கள்
அதிகாலை தொழுகையை முடித்துவிட்டு நடந்தே
மினாவில் உள்ள தங்கள் கூடாரங்களை அடைய
முயற்சிப்பதால் வயோதிகர்களையும் பெண்களையும்
வாகணங்களில் அழைத்து செல்வது எளிதாக
இருக்கும்.
ஹஜ்ஜுஸ்ரீக்கு பிறகு
54) சவூதியை விட்டு புறப்படுவது
மதீனாவிலிருந்தோ அல்லது ஜித்தாவிலிருந்தோ
இருக்கலாம். ஜித்தா வழியாக
வந்தவர்களில் சிலர் மதீனாவிலிருந்தும் திரும்ப
வேண்டி யிருக்கலாம். எனவே எல்லா ஹாஜிகளும்
முன்னதாகவே தாங்கள் திரும்பும் ஏற்பாடு
குறித்து நிச்சயித்து கொள்வதால் கடைசி நேர
ஏமாற்றங்கள் அல்லது சிரமங்களை தவிர்க்கலாம்.
55) புறப்படும் குழுக்கள் பற்றிய விபரங்களை
முஅல்லிம் மற்றும் இந்திய ஹஜ்
மிஷன்களிடமிருந்து அறிந்துக்கொள்ளலாம்.
விமானம் புறப்படுவதற்கு 8 மனி நேரம் முன்னதாக
விமான நிலையத்தை அடையவேண்டுமென்பது சவூதி
அரசாங்கத்தின் விதிமுறையாகும். எனவே ஜித்தாவை
அடைய தேவைப்படும் 4 மணி நேரத்தையும் கணக்கில்
எடுத்து மக்காவை விட்டு 12 மனி நேரம் முன்னதாக
புறப்படுவது நல்லது . ஹாஜிகள் தங்கியிருக்கும்
கட்டடங்களின் வெளியே பஸ் வந்து சேருவதற்கு
முன்னரே காத்திருப்பது அவசியம். அவரவரின்
உடமைகள் கட்டப்பட்டு ஒழுங்கு படுத்தப்பட்டு
கட்டிடத்தின் கீழ்தளத்தில் தயாராக
வைக்கப்படவேண்டும். கடைசி நேரத்தில்
கடைகளுக்கு ஓடி பொருட்கள் வாங்குவதை
கண்டிப்பாக தவிர்க்கவும். மேலும் பஸ் வந்து
சேர்ந்த பின்னரே தவாபுல் விதாஃ செய்ய விரைவது
தவிர்க்கவேண்டியதாகும். 2 அல்லது 3 மனி
நேரத்திற்கு முன்பே தவாபை
முடித்திருக்கவேண்டும்.
56) சாதாரண சூழ்நிலையில் பயணத்தில் மாற்றம்
என்பது அனுமதிக்க முடியாததாகும். எனினும்
மருத்துவம் அல்லது தவிர்க்க முடியாத அவசர
காரணங்களால் பயணத்தை தள்ளி போட
விண்ணப்பிக்கலாம். அடுத்தடுத்த விமானத்தில்
இருக்கும் காலி இடங்களை அனுசரித்தே இத்தைகைய
கோரிக்கைகள் பரீசீலிக்கப்படும். இதற்காக ஹஜ்
அலுவலகத்தில் ஏர் இந்தியா அமைத்திருக்கும்
கணிணி முன் பதிவு மையத்தை அணுகவேண்டும். சவூதி
விமான சேவையாக இருப்பின் இந்திய ஹஜ் அலுவலக
ஊழியர்களே மாற்று விமான டிக்கட்டை பெற்று
தருவார்கள். ஏர் இந்தியாவிலிருந்து சவூதி
விமானத்தில் டிக்கட்டை மாற்றுவது
சாத்தியமில்லாதது.
57) ஹாஜிகள் விமானத்தில் இலவசமாக 45 கிலோ
பெட்டியும் கையில் 10 கிலோவும் எடுத்து செல்ல
அனுமதிக்கப்படுவார்கள்.
அத்துடன் இந்திய ஹாஜிகள் இந்தியாவில் தாங்கள்
சேரவேண்டிய விமான நிலையத்தை அடைந்ததும்
ஒவ்வொருவரும் 10 லிட்டர் ஜம்ஜம் தண்ணீர்
இலவசமாக வழங்கப்படுவார்கள் ஆகையால் பயணத்தின்
போதே தங்களுடன் ஜம்ஜம் தண்ணீரை எடுத்து
செல்வது அவசியமில்லை. உங்கள் உடமைகள் சரியான
பெயர், விலாசம், ஹாஜி கவர் எண்ணுடன் அடையாளப்
படுத்தப்பட்டுள்ளதா என்று சரி பார்த்து
கொள்ளுங்கள்.
58) அளவிற்கு அதிகமாக பொருட்கள் எடுத்து
செல்வது சுமூகமான பயனத்திற்று சிரமம்
விளைவிப்பதே என்பதை நினைவில் கொள்ளவும். அதிக
பொருட்கள் இருப்பின் கார்கோ வசதிகளை
பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
59) ஹஜ்ஜுக்கு பிறகு உங்களுக்கு நிகழும்
அனுபவங்களை அதற்கான கணிப்பு நடத்த
வழங்கப்படும் படிவத்தில் குறிக்க
மறக்காதீர்கள்.
ஹஜ்ஜை எளிதாக்கி வைக்க அல்லாஹ்விடம்
பிரார்த்திக்கவும். அல்லாஹ்வின்
விருந்தினர்களாகிய உங்களிடம் அன்பான
நடவடிக்ககைளும் பொறுமையும்
நிறைந்திருக்கவேண்டும். புனித மக்கா மதீனாவை
தரிசிக்க வந்த உங்கள் உன்னத குறிக்கோளை
மறக்கவேண்டாம். எங்களால் ஆனமட்டும் உங்களுக்கு
உதவவே ஆசைப்படுகிறோம் . அதே நேரத்தில்
கொஞ்சமு; குறையே இல்லாத பாதுகாப்பை எங்களால்
அளித்திடமுடியும் என்று உறுதியிட்டு கூறிடி
இயலவில்லை. உங்களின் மேலான திருப்தியை
பெற்றிடவேண்டும் என்ற எங்கள் உணர்வை புரிந்து
அதற்கான உங்கள் ஒத்துழைப்பையும் ஆதரவையும்
வேண்டுகிறோம்.
இறைவன் உங்கள் ஹஜ் நற்கருமங்களை
பொருந்திக்கொள்வானாக. பரஸ்பர நம் துஆக்களில்
அந்த வல்லோனின் அருளை வேண்டுவோமாக.
இணைப்பு:
|
நம்பர் |
பிரச்சனை |
தீர்வு |
|
1 |
விலைமிக்க பொருட்கள் மற்றும் பணத்தை
ஒப்படைத்தல் |
முஅல்லிம் ஆபீஸ் |
|
2 |
கட்டிடம் குறித்த புகார் |
கட்டிடத்தில் உள்ள புகார்
புத்தகத்தில் உங்கள் குறைகளை எழுதவும்
. கட்டிட கண்காணிப்பாளர் தினமும்
வருகை தருகிறார். எனினும் ஒவ்வொரு
அறையாக அவரால் வந்து குறை கேட்டிட
இயலாது. புகார் புத்தகத்திலிருந்து
உங்கள் குறைகளை அறிந்து அதை
நிவர்த்திக்க நடவடிக்கை எடுப்பார்.
ஹாஜிகள் கிளை அலுவலகத்தையும் மற்றும்
காதிமுல் ஹுஜ்ஜாஜையும் அணுகி தங்களின்
குறைகளை தெரிவிக்கலாம். |
|
3 |
ஹாஜிகள் வழி தவறினால் |
XXXXXXXXX
என்று எழுதப்பட்ட உடை
அணிந்திருக்கும் உதவி ஊழியர்களை காண
முயற்சிக்கவும் . அல்லது அருகாமையில்
உள்ள இந்திய கிளை அலுவலகத்தை
அனுகவும். உங்களுடன் இருந்த வேறொரு
ஹாஜியை காணவில்லையென்றாலும் உங்கள்
கிளை அலுவலகத்தில் தெரிவிக்கவும். |
|
4 |
உடமை தவறினால் |
உங்கள் கிளை அலுவலகத்தை அனுகவும்.
உங்கள் கிளை அலுவலகத்தின் கூறாதவரை
நேரடியாக காணடிந்த பொருட்கள்
அலுவலகத்தை அனுகவேண்டாம். |
|
5 |
பணம் காணாமல் போகுதல் அல்லது திருட்டு |
அஜ்யாதில் உள்ள தலைமை இந்திய ஹஜ்
மிஷன் ஆபீசை அணுகவும். ஹாஜிகள் நல
சங்கத்தின் தாற்காலிக உதவி வழங்க
ஏற்பாடு செய்யப்படும். |
|
6 |
மதீனாவிற்கு
புறப்படுதல் |
கட்டிடத்தில் ஒட்டப்பட்டுள்ள
அறிவிப்புகளை
பின்பற்றவும் . அஜ்யாத் அலுவலகத்தில்
உள்ள முஅல்லிம் அலுவலகம் அல்லது மதீனா
புறப்பாடு உதவி அலவலகத்தை அணுகவும் |
|
7 |
மஷாயிருக்கு (முஜ்தலிபா) புறப்படுதல் |
கட்டிடத்தில் ஒட்டப்பட்டுள்ள
அறிவிப்புகளை பின்பற்றவும் . அல்லது
முஅல்லிம் அலுவலகத்தை அணுகவும். |
|
8 |
விமான தேதியில் மாற்றம் |
சவூதி அரேபியன் ஏர் லைன்ஸ் விமான தேதி
மாற்றங்களை ஏற்றுக்கொள்வதில்லை.
ஏர் இந்திய சேவையாக இருப்பின் ஹஜ்
அலுவலகத்தில் ஏர் இந்தியா
அமைத்திருக்கும் கணிணி முன் பதிவு
மையத்தை ( ) அனுகவேண்டும். சவூதி
விமான சேவையாக இருப்பின் இந்திய ஹஜ்
அலுவலக ஊழியர்களே மாற்று தேதி விமான
டிக்கட்டை பெற்று தருவார்கள். ஏர்
இந்தியாவிலிருந்து சவூதி விமானத்தில்
டிக்கட்டை சாத்தியமில்லாதது. |
|
9 |
ஜித்தாவிற்கு புறப்படுதல் |
கட்டிடத்தில் ஒட்டப்பட்டுள்ள
அறிவிப்புகளை பின்பற்றவும் . அஜ்யாத்
அலுவலகத்தில் உள்ள முஅல்லிம்
அலவலகத்தை அனுகவும். |
|
10 |
அதிகப்படியான லக்கேஜ் |
விமான நிலையத்தில் செலுத்தும் தொகையை
விட ஹாஜிகள் தங்கள் அதிகப்படியான
உடமைகளை ஏர் இந்தியா கார்கோ மூலம்
அனுப்புவது மலிவானதாகும். சில சமயம்
நீங்கள் அதிகப்படியான லக்கேஜுக்கான
கட்டனத்தை செலுத்துவதாக இருந்தாலும்
விமான சேவை நிர்வாகம் ஏர்போர்டில் அதை
நிராகரிக்கவும் வாய்ப்பு உண்டு |
|
11 |
மினாவை சென்றடைவது |
முஅல்லிம் அலுவலகம் |
|
12 |
மருத்துவ மற்றும் அவசர கால உதவி |
உங்கள் கிளை மருத்து முகாம் டாக்டரை
கலந்தாலோசிக்கவும் . அவசரகால உதவிக்கு
எந்த மருத்துவ
கூடாரங்களையும் அனுகலாம் . உயிருக்கு
போராடும் அவசர உதவிக்கு டாக்டர்களை
உங்கள் கட்டிடங்களுக்கு அழைக்கலாம். |
|
13 |
மினாவில் ஏற்படும் பிரச்சனைகள் |
மினாவில் அமைந்திருக்கும் முஅல்லிம்
ஆபீஸ் அல்லது இந்தியன் ஹஜ் மிஷன். |
|
14 |
சக
ஹாஜி மரணம் |
முஅல்லிம் ஆபீஸ் , கிளை ஆபீஸை
அணுகவும் . அடக்க ஏற்பாடுகள்
முஅல்லிம் அலுவலகத்தால் செய்யப்படும்.
அடக்கத்திற்கான னால்
வழங்கப்படுகின்றது., |
|