உயர்கல்வி பெற அழைக்கிறது ஆஸ்திரேலியா!

Refer this Page to your friends


வேலைவாய்ப்புக்காக மட்டுமின்றி தரமான கல்வியைப் பெறுவதற்காகவும் தற்போது உலகமெங்கும் உள்ள உயர்கல்வி நிலையங்களை நாடிச் செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலியாவில் அதிகமான இந்திய மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

தற்போது ஆஸ்திரேலியாவில் பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 16,969. பன்னாட்டு படிப்புத் திட்டத்தில் சேர்ந்துள்ள 826 மாணவர்கள் மற்றும் கணினி வழி, தொலைவழி கல்வித் திட்டங்களில் பயிலும் 277 பேர் நீங்கலான எண்ணிக்கை இது.

பட்ட மேற்படிப்புக்காக ஆஸ்திரேலியா செல்லும் வெளிநாட்டு மாணவர்களில் இந்திய மாணவர்கள்தான் அதிகம். 2002-ம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரித்துள்ளது. குறிப்பாக தொழில்படிப்புகளுக்கு இந்திய மாணவர்களிடம் நல்ல வரவேற்பு.

அறிவியல் ஆராய்ச்சிகளைப் பொறுத்தவரை ஆஸ்திரேலியாவுக்கு என்று தனியிடம் உள்ளது. 2 கோடி மக்கள்தொகையையே கொண்ட ஆஸ்திரேலியாவில் இதுவரை 9 விஞ்ஞானிகள் நோபல் பரிசு பெற்றுள்ளனர்.

அத்துடன் இந்திய ஆராய்ச்சியாளர்களை ஈர்க்கும்

வண்ணம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆராய்ச்சியாளர் பரிமாற்றத் திட்டத்தின் கீழ் 25 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என ஆஸி. பிரதமர் ஜான் ஹோவர்டு அறிவித்துள்ளார்.

இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஐ.ஐ.எஸ்.சி., பிட்ஸ் பிலானி போன்ற அமைப்புகளுடன் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள் கல்வி சார்ந்த பல ஒப்பந்தங்களைச் செய்துள்ளன.

ஆஸ்திரேலிய பல்கலைக்கழங்களில் தேர்ச்சி பெற்ற இந்திய மாணவர்கள் அங்கேயே நிரந்தமாகக் குடியேற நினைக்கும் வகையில் அங்கு நல்ல சூழல் நிலவுகிறது. இங்கிலாந்து, நியூசிலாந்து நாட்டு மக்களுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவில் அதிகமாகக் குடியேறுவோர் இந்தியர்களே.

ஆஸ்திரேலிய குடிபெயர்தல் மற்றும் பன்னாட்டு பண்பாடுகளுக்கான அமைச்சர் அமந்தா வான்ஸ்டோன், கல்வி அறிவியல் ஆராய்ச்சித் துறை அமைச்சர் ஜூலி பிஷப் ஆகியோர் புதிய குடியேற்ற உரிமைத் திட்டங்களை அறிவித்துள்ளனர். அதன்படி ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியை முடிக்கும் மாணவர்கள் அங்கேயே வேலை பெறுவதற்கான தாற்காலிக விசா பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.

ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களின் பிரதிநிதியாக ஐ.டி.பி. எஜுகேஷன் ஆஸ்திரேலியா லிமிடெட் ஐஈட உக்ன்ஸ்ரீஹற்ண்ர்ய் அன்ள்ற்ழ்ஹப்ண்ஹ கண்ம்ண்ற்ங்க் உள்ளது. 39 ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களுக்கும் முழுவதும் உடமையான அமைப்பாக இது உள்ளது.

இந்நிறுவனம் இந்தியாவில் ஆண்டுக்கு 2 முறை, ஆஸ்திரேலியாவில் கல்வி கற்பதற்கான நேர்காணலை நடத்தி வருகிறது. இத்திட்டம் ஆஸ்திரேலிய அரசு, அந்நாட்டு வணிக வாரியம், ஆஸ்திரேலிய முன்னாள் மாணவர் சங்கம் ஆகியவற்றின் ஆதரவுடன் நடத்தப்படுகிறது. சென்னை, புதுதில்லி, சண்டிகர், அகமதாபாத், மும்பை, பெங்களூர், ஐதராபாத் ஆகிய இடங்களில் இம்மாதம் இந்த நேர்காணல் நடைபெறவிருக்கிறது.

சென்னையில் இம்மாதம் 19-ம் தேதி தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை நேர்காணல், ஆஸ்திரேலிய கல்விக் கண்காட்சி, கருத்தரங்கு நடைபெறவிருக்கிறது. இதில் ஆஸ்திரேலியாவின் 33 சிறந்த கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கல்வியாளர்களும், பிற வல்லுநர்களும் பங்கேற்கின்றனர். இதுபோன்ற கண்காட்சியையும், கருத்தரங்கையும் கடந்த 11 ஆண்டுகளாக தொடர்ந்து ஐ.டி.பி. நடத்தி வருகிறது.

இந்தக் கருத்தரங்கும், கண்காட்சியும் வழக்கமானதைப் போலல்லாமல் வித்தியாசமாக நடைபெறும். ஆஸ்திரேலியாவில் கல்வி பெற விரும்பும் மாணவர்களும் அவர்களது பெற்றோரும் ஆஸ்திரேலிய பிரதிநிதியிடம் நேரில் உட்கார்ந்து பேசி விவாதித்து படிப்புத் திட்டங்களை அமைத்துக்கொள்ளலாம். சில குறிப்பிட்ட கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் தகுதி உறுதி செய்யப்பட்டு, உடனேயே சேர்க்கைக் கடிதம் அளிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனால் மாணவர்கள் விண்ணப்பம் அனுப்பும் செலவு மிச்சம். நேர்காணல், கருத்தரங்கில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் ஐ.டி.பி. அலுவலகத்திலோ,
www.idc.com/india என்ற இணையதளத்திலோ முன்பதிவு செய்துகொள்வது அவசியம். அல்லது இது தொடர்பான கூடுதல் ஆலோசனை பெறுவதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 044- 42179388, 89, 90.

ஆலோசனை பெற விரும்பும் மாணவர்கள் நேரில் செல்லும்போது உங்கள் ஒரிஜினல் கல்விச் சான்றிதழ்களையும் அவற்றின் நகல்களையும் மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள்.

மா. பழனியப்பன்

நன்றி: தினமனி 08-09-2006
Monday September 4 2006 10:53 IST


Refer this Page to your friends


Chittarkottai.com