அனுப்பியவர்: முதுவை ஹிதாயத் ( எம் என் ஏ )   

Refer this Page to your friends


ரமளான் வந்துவிட்டால் போதும், அரபுலகத்தின் காற்றுவெளியெங்கும் அல்-குர்ஆனின் அற்புத வரிகளின் ரீங்காரம் கேட்கத் துவங்கிவிடும்.

ஆம்! பள்ளிவாசல்களிலிருந்து தொழுகையின் போதும், ஆங்காங்கே நடைபெறும் குர்ஆன் மனனப் போட்டிகளில் பங்குபெறுவோரிடமிருந்தும் தான் அந்த சுகானுபவம்.  அந்தப் போட்டிகளில் ஒன்றாக, சென்ற ரமளானின் கடைசி பத்து நாட்களில் சவூதி அரேபியா கிழக்கு மாகாணத்தில் அல்-ஹஸ்ஸா நகருக்கு அருகில் உள்ள அல்-அய்ன் என்ற ஊரில் 12 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான குர்ஆன் மனனப் போட்டி நடந்தது. அதில் இந்தியா, இலங்கை, வங்காள தேசம், நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சிறுவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இவர்களில் மிகச் சிறியவனான நாலரை வயதே நிரம்பிய ராமநாதபுரம் மாவட்டம் புதுமடத்தைச் சேர்ந்த முஹம்மது அமீர் என்ற சிறுவன் தஜ்வீது முறைப்படி மனனமாக குர்ஆனின் நீண்ட அத்தியாயங்களை தனது தேன்இனியகுரலில் ஓதி அவையோரை மட்டுமல்லாது நடுவர்களான அரபி பண்டிதர்களையும் மெய்மறக்கச் செய்தான். முதல் பரிசையும் தட்டிச் சென்றான்.

பாராட்டுக்குரிய அந்தச் சிறுவன் அல்-ஹஸ்ஸா தமுமுக கிளைச் செயலாளர் பொறியாளர் செய்யது அலீ அவர்களின் செல்வப் புதல்வன் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: மக்கள் உரிமை


Refer this Page to your friends


Chittarkottai.com