உலகின் தலைசிறந்த 100 பல்கலைக் கழகங்கள்

முயீனுதீன்

நண்பர்களுக்கு இந்தப் பக்கத்தை அறிமுகப்படுத்த...

இந்திய நாட்டின் பொறியாலர்கள், மருத்துவர்கள், அறிஞர்கள் பல்வேறு நாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் தலை சிறந்து விளங்குகின்றனர். எனினும் நமது பல்கலைகழகங்களின் தரப்பட்டியல் மற்றைய நாடுகளை விட கீழே தான் உள்ளது என்பது மிகவும் வருந்ததக்கதாகும்.

சமீபத்தில் 'ஷங்காய் ஜியோ டோங்க பல்கலைக்கழகம்" (Institute of Higher Education Shanghai Jiao Tong University) 2004 ஆண்டிற்கான உலகின் சிறந்த 100 பல்கலைகழகங்களின் பட்டியலை வெளியிட்டது. அந்த பட்டியலில் எந்த ஒரு இந்திய பல்கலைக்கழகமும் இடம் பெறவில்லை என்பது நமக்கு ஆச்சரியமாகவும் வேதனையாகவும் உள்ளது. அது மட்டுல்ல! அந்த பட்டியலில் ஆசிய பசிபிக் (ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா) பகுதியில் இருந்து எட்டு பல்கலைக்கழகங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.

அந்த 100ல் இடம் பெற்றுள்ள 8 பல்கலைக்கழகங்கள்:

  • டோக்கியோ 14 இடம்

  • கியோடோ 21 இடம்

  • ஆஸ்திரேலிய நேஷனல் பல்கலைக்கழகம் 53 இடம்

  • ஓசாகா 54 இடம்

  • மாஸ்கோ 66 இடம்

  • டோஹோக்கோ 69 இடம்

  • ஜெருசலம் ஹிப்ரூ பல்கலைக்கழகம் 90 இடம்

  • நகோயா 97 இடம்

எல்லோரும் எதிர்பார்ப்பது போல் முதல் இடத்தை 'ஹார்வேர்டு"ம் இரண்டாம் இடத்தை ஸ்டேன்போர்டும் பெற்றுள்ளன. முதல் 10 இடங்களில் அமெரிக்கா தவிர கேம்பிரிட்ஜ் 3 வதாகவும் ஆக்ஸ்போர்டு 7 வதாகவும் உள்ளன. முதல் 20 இடங்களின் பட்டியலைத் தேடினால் ஜப்பானின் டோக்கியோ பல்பலைக்பழகம் 14 இடத்தைப் பெற்று ஆசிய பசிபிக் பகுதியின் முதல் இடத்தைப் பெற்றுள்ளது. ஆக முதல் 20 இடங்களில் 17 இடங்களை அமெரிக்க பல்பலைக்கழகங்கள் பெற்றுள்ளன.

வெளிநாட்டு மாணவர்களின் சேர்க்கை அமெரிக்க பல்கலைகழகங்களில் சமீப காலமாக குறைந்து இருந்தாலும், மேல் நிலை கல்வியைப் பொறுத்த வரை அமெரிக்கா முன்னிலை வகிக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

சரி.. உலக அளவில் தான் நமது பல்கலைகழகங்கள் போட்டி போட முடியவில்லை. ஆசிய மற்றும் ஆஸ்திரேலியா கண்டங்களில்
(Asia Pacific) முதல் 100 இடங்களின் பட்டிலலைத் தேடினால்.. அங்கேயும் நமக்கு கிடைத்தது மூன்றே மூன்று இடங்கள் தான். என்ன ஆச்சரியமாக உள்ளதா?

இந்தியன் இஸ்டிடியுட் ஆப் சயன்ஸ் 22வது இடத்தையும் இன்டியன் இன்ஸ்டிடியுட் ஆப் டெக்னாலஜி மற்றும் கொல்கத்தா பல்பலைகழகம் 67 இடத்தையும் பெற்றுள்ளன. 67 வது இடத்தில் மொத்தம் 23 பல்கலைக்கழகங்கள் உள்ளன என்பதையும் நாம் கவணிக்க வேண்டும்.
ஆக உலகில் சிறந்த 502 பல்கலைக்கழகங்களில் நமது நாட்டிற்குக் கிடைத்து இடங்கள் மூன்றே மூன்று தான்.

இது போன்ற தரப்பட்டியல் பெரும்பாலும் அமெரிக்கா, ஐரோப்பியயா நாடுகளில் தான் தயாரிக்கப்படுகின்றன. அந்த ஆய்வுகள் அந்த நாடுகளைச் சார்ந்தே இருக்கும். அல்லது ஆய்வின் காரணிகள் அந்தந்த பகுதிகளுக்கு ஒத்ததாகத் இருக்கும். எனவே நாம் இங்கே அவர்களின் ஆய்வை வெளியிடவில்லை. மாறாக அமெரிக்காவிற்கு சவாலாக விளங்கும் சீனாவின் ஆய்வை வெளியிட்டுள்ளோம். சீனாவும் அந்த 100 பல்கலைக்கழகங்களில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த ஆய்வை நடத்திய பல்கலைக்கழகம் தனக்கு ஆசியாவில் 67 இடத்தையே கொடுத்துள்ளது. (உலக அளவில் 404வது இடம்)

சீனா இந்த ஆய்வை நடத்தியன் நோக்கம்:
 
தமது நாட்டின் பல்கலைக்கழகங்கள் எந்த நிலையில் உள்ளது என்பதை அறிந்து எப்படி தங்களது கல்வித்தரத்தை உயர்த்தலாம் என்பதற்கான திட்டத்தின் முதல் நிலை தான் இது.

இந்த வகையான தரப்பட்டியல்களில், சில வேறுபாடுகள் இருக்கலாம். எனினும் எல்லாத் தரப்பட்டியலிலும் அமெரிக்கா தான் முன்னிலை வகிக்கின்றது.

இந்த ஆய்வு எதன் அடிப்படையில் நடத்தப்பட்டது என்பதைப் பார்ப்போம்.

அடிப்படை
காரணிகள்
மதிப்பீடு
கல்வித் தரம்
இங்கே படித்த மாணவர்கள் பெற்ற நோபல் பரிசு (Nobel Prizes)  மற்றும் பில்ட்ஸ் மெடல்களின் *(Fields Medals) எண்ணிக்கை;
10%
ஆசிரியர்களின் தரம்
இங்கே கற்பிக்கும் ஆசிரியர்கள் பெற்ற நோபல் பரிசு (Nobel Prizes) மற்றும் பில்ட்ஸ் மெடல்களின் (Fields Medals) எண்ணிக்கை
20%

உயிரியல், மருத்துவம், இயற்பியல், வேதியில, பொறியியல் மற்றும் சமூக அறியவில் போன்றவற்றில் உள்ள பல பிரிவுகளில் எழுதப்படும் ஆராய்ச்சி கட்டுரைகளுக்கு து}ண்டுகோளாக அமைந்த குறிப்புகளின் எண்ணிக்கை

20%
ஆராய்ச்சியின் முடிவுகள்
இயற்கை மற்றும் அறிவியலில் ஆகியவற்றில் எழுதப்படும் ஆராய்ச்சி கட்டுரைகளின் எண்ணிக்கை
20%
Science Citation Index-expanded kw;Wk;  Social Science Citation Index in 2003  ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள ஆராய்ச்சி கட்டுரைகளின் எண்ணிக்கை
20%
நிறுவனத்தின் அளவு

நிறுவனத்தின் அளவிற்கேற்ப உள்ள கல்வித்தரம்
10%

* (கணிதத்துறை வல்லுநர்களுக்கு கொடுக்கப்படும் பீல்ட்ஸ் என்பரின் ஞாபகப் பரிசு -Professor J. C. Fields).

நமது நாட்டின் தலைசிறந்த மாணவர்கள் வெளிநாடுகள் சென்று ஆராய்ச்சி செய்து பெயர் பெற்றுள்ளனர். பல சிறந்த நிறுவனங்களில் பணி புரிந்து வருகின்றனர். சிறந்த மாணவர்கள் அமெரிக்க பல்கலைகழகங்களில் தங்களது மேற்படிப்பை தொடர வேண்டும் என்று விரும்புகின்றனர். கடந்த ஆண்டு மட்டும் 80000 மாணவர்கள் அதெரிக்காவில் உயர் கல்விக்காக சென்றுள்ளனர்.
 
மக்கள் தொகையில் முதல் இடத்தைப் பெற்றுள்ள சீனா வருகின்ற ஆண்டுகளில் தங்ளது கல்வித் தரத்தை உயர்த்த உள்ளனர். நமது பல்கலைக் கழகங்கள் மற்றும் நமது அரசு இதற்காக தனிக் அக்கறை செலத்தினால் நிச்சயம் நமது பல்கலைக்கழகங்கள் முன்னேறும் என்பது நிச்சயம்.
 
கல்வியை வேலைக்காக என்ற எண்ணத்தில் படிப்பவர்கள் எண்ணிக்கை நமது நாட்டில் பெருகி விட்டது. எனவே வேலை கிடைத்தவுடன் தாங்கள் படித்த படிப்பை பயன்படுததுவமில்லை.. அதனை வளர்ப்பதுமில்லை. மாறாக நாம் எங்கு பணி புரிந்தாலும் தமது கல்வியறிவால் பல சாதணைகள் செய்ய வேண்டும். சீறான சிந்தனையுடன் முயற்சி செய்தால் எங்கும் எப்போதும் வெற்றி பெறலாம்.

பசிபிக் ஆசியா பல்கலைக்கழகங்களின் தரப்பட்டியல்

Regional Rank Institution* Country World Rank
1 Tokyo Univ Japan 14
2 Kyoto Univ Japan 21
3 Australian Natl Univ Australia 53
4 Osaka Univ Japan 54
5 Tohoku Univ Japan 69
6 Univ Melbourne Australia 82
7 Hebrew Univ Jerusalem Israel 90
8 Nagoya Univ Japan 97
9-17 Hokkaido Univ Japan 101-152
9-17 Kyushu Univ Japan 101-152
9-17 Natl Univ Singapore Singapore 101-152
9-17 Tel Aviv Univ Israel 101-152
9-17 Tokyo Inst Tech Japan 101-152
9-17 Tsukuba Univ Japan 101-152
9-17 Univ Queensland Australia 101-152
9-17 Univ Sydney Australia 101-152
9-17 Weizmann Inst Sci Israel 101-152
18-21 Natl Taiwan Univ China-tw 153-201
18-21 Seoul Natl Univ South Korea 153-201
18-21 Univ New South Wales Australia 153-201
18-21 Univ Western Australia Australia 153-201
22-37 Chinese Univ Hong Kong China-hk 202-301
22-37 Hiroshima Univ Japan 202-301
22-37 Hong Kong Univ Sci & Tech China-hk 202-301
22-37 Indian Inst Sci India 202-301
22-37 Keio Univ Japan 202-301
22-37 Kobe Univ Japan 202-301
22-37 Monash Univ Australia 202-301
22-37 Okayama Univ Japan 202-301
22-37 Peking Univ China 202-301
22-37 Technion Israel Inst Tech Israel 202-301
22-37 Tsing Hua Univ China 202-301
22-37 Univ Adelaide Australia 202-301
22-37 Univ Auckland New Zealand 202-301
22-37 Univ Hong Kong China-hk 202-301
22-37 Univ Otago New Zealand 202-301
22-37 Yonsei Univ South Korea 202-301
38-66 Bar Ilan Univ Israel 302-403
38-66 Ben Gurion Univ Israel 302-403
38-66 Chiba Univ Japan 302-403
38-66 City Univ Hong Kong China-hk 302-403
38-66 Fudan Univ China 302-403
38-66 Gifu Univ Japan 302-403
38-66 Gunma Univ Japan 302-403
38-66 Hong Kong Polytechnic Univ China-hk 302-403
38-66 Kanazawa Univ Japan 302-403
38-66 Korea Advanced Inst Sci & Tech South Korea 302-403
38-66 Macquarie Univ Australia 302-403
38-66 Nagasaki Univ Japan 302-403
38-66 Nanjing Univ China 302-403
38-66 Nanyang Tech Univ Singapore 302-403
38-66 Natl Tsing Hua Univ China-tw 302-403
38-66 Nihon Univ Japan 302-403
38-66 Niigata Univ Japan 302-403
38-66 Pohang Univ Sci & Tech South Korea 302-403
38-66 Sungkyunkwan Univ South Korea 302-403
38-66 Tokyo Med & Dent Univ Japan 302-403
38-66 Tokyo Metropolitan Univ Japan 302-403
38-66 Tokyo Univ Agr & Tech Japan 302-403
38-66 Univ Newcastle Australia 302-403
38-66 Univ Sci & Tech China China 302-403
38-66 Univ Tasmania Australia 302-403
38-66 Univ Tokushima Japan 302-403
38-66 Waseda Univ Japan 302-403
38-66 Yamaguchi Univ Japan 302-403
38-66 Zhejiang Univ China 302-403
67-89 Ehime Univ Japan 404-502
67-89 Flinders Univ South Australia Australia 404-502
67-89 Hanyang Univ South Korea 404-502
67-89 Himeji Inst Tech Japan 404-502
67-89 Indian Inst Tech - Kharagpur India 404-502
67-89 Jichi Med Sch Japan 404-502
67-89 Jilin Univ China 404-502
67-89 Juntendo Univ Japan 404-502
67-89 Kagoshima Univ Japan 404-502
67-89 Korea Univ South Korea 404-502
67-89 Kumamoto Univ Japan 404-502
67-89 Kyungpook Natl Univ South Korea 404-502
67-89 La Trobe Univ Australia 404-502
67-89 Massey Univ New Zealand 404-502
67-89 Murdoch Univ Australia 404-502
67-89 Nara Inst Sci & Tech Japan 404-502
67-89 Natl Cheng Kung Univ China-tw 404-502
67-89 Osaka City Univ Japan 404-502
67-89 Shanghai Jiao Tong Univ China 404-502
67-89 Shinshu Univ Japan 404-502
67-89 Univ Calcutta India 404-502
67-89 Univ Haifa Israel 404-502
67-89 Univ Osaka Prefecture Japan 404-502

தலை சிறந்த பல்கலைக்கழகங்கள் உள்ள நாடுகளின் அட்டவணை

S# Country Top 20 Top100 Top 200 Top 300 Top 400 Top 500
1 USA 17 51 90 119 139 170
2 UK 2 11 18 29 35 42
3 Japan 1 5 9 13 26 36
4 Germany 7 17 27 37 43
5 Canada 4 9 16 19 23
6 France 4 8 13 20 22
7 Sweden 4 6 9 9 10
8 Switzerland 3 6 6 7 8
9 Netherlands 2 7 10 11 12
10 Australia 2 6 8 11 14
11 Italy 1 5 10 16 23
12 Israel 1 3 4 6 7
13 Denmark 1 3 4 5 5
14 Austria 1 1 3 4 5
15 Finland 1 1 2 4 5
16 Norway 1 1 1 3 4
17 Russia 1 1 1 2 2
18 Belgium 4 6 7 7
19 China 1 6 13 16
20 South Korea 1 2 5 8
21 Spain 1 2 4 9
22 Brazil 1 1 3 4
23 Singapore 1 1 2 2
24 Mexico 1 1 1 1
25 New Zealand 2 2 3
26 South Africa 1 2 4
27 Hungary 1 1 3
28 Ireland 1 1 3
29 India 1 1 3
30 Argentina 1 1 1
31 Greece 2 2
32 Poland 2 2
33 Czech 1 1
34 Chile 1 1
35 Portugal 1
Total 20 100 201 301 403 502

நண்பர்களுக்கு இந்தப் பக்கத்தை அறிமுகப்படுத்த...

chittarkottai.com