உயிர்ப் பாடம் நீ....!

 

நண்பர்களுக்கு இந்தப் பக்கத்தை அறிமுகப்படுத்த...

அஞ்சல் செய்யப்படாத கடிதம்

சதாம்...
உனக்குத் தூக்கு.

இந்த நாளுக்காய்த்தானே காத்துக் கிடந்தேன். உன் உயிரற்ற சடலம் கண்டு என் ரணங்களை ஆற்ற வேண்டும். நீ ஆடிய ஆட்டனெம்ன?  உன் ஆங்காரக் கொக்கரிப்புகள் என்னென்ன? நீ கொன்றொழித்தது குறைவா? சுட்டுத் தள்ளியதும், வெட்டிவீழ்த்தியதும் எத்தனை எத்தனை? அமிலம் உமிழ்ந்து அழிந்தவைதாம் என்ன?

உன் ஆடம்பரமென்ன? ஆணவமென்ன? அதிகாரமென்ன? அராஜகமென்ன? குடும்பம் கூட உனக்கு விளையாட்டு . அதில் கூட யுத்த ஒத்திகை. நீயே பெரியவன் ... நீ மட்டும் என்றாயே...!

என்னாயிற்று..! மழையில் நனைந்த செம்மறியாடாய் உன்னை அமெரிக்கக் கூலிகள் பிடித்தார்கள். உன் விஷப்பல்லை அமெரிக்க ஓநாய்கள் பிடிங்கியது கண்டு ரணம் ஆற்றினேன்.

என் கண் முன்னே என் குடும்பம் கலைத்தாய். சொந்தம் சிதைத்தாய். என் வாழ்வு முடக்கினாய். முடமாக்கினாய்..!

உனக்கு தூக்கு என்றதும் 'அல்லஹ் அக்கபர்' என்று கர்ஜித்தாயே..

சதாம்!.. அப்போது தான் அந்த நிமிடம்தான் என் கோபமும் பழி தீர்த்தலும் நொறுங்கிப் போய் உன்னை நேசிக்கத் தொடங்கினேன். உன் கம்யூனிச சாயலையும் ஆன் ஆணவத்தையும் காலில் போட்டு மிதித்து இறைவன் பொரியவன். நான் அவனின் அடிமை என்று உரத்து சொன்னாயே.. நீ பாடமாகி விட்டாய். தவறு செய்பவன் மனிதன். உணர்பவன் மாமனிதன். உணர்ந்து தெளிபவன் மாகத்மா. நீ மாத்மா சதாம். நீயொரு படிப்பினை மிகு பாடமப்பா!

அல்லாஹ்வே ஆட்சியனைத்துக்கும் அதிபதி. தான் நாடியவருக்கு ஆட்சியை அளிப்பான். உனக்கும் தந்தான். நாடியவர்களிடமிருந்து ஆட்சியைப் பறிப்பான். உன்னிடமிருந்து எடுத்தான். நீங்கள் தவறிழைத்தால் வேறொரு சமுதாயத்தைக் கொண்டு வருவான்.

சதாம்!

எந்த நாட்டில் நீ அதிபராக ராஜ நடை போட்டாயோ அதே நாட்டில் அதே மக்கள் முன் நீ குற்றவாளியாய் .. சிறைக் கைதியா.. கைகள் கட்டப்பட்ட தூக்குக் கைதியாய்..! என்னே இறை வல்லமை..!

உலகுக்கெல்லாம் நீ ஒரு உயிர்ப்பாடம்.

இறைவனுக்கு முன் நாம் ஒன்றுமில்லை... ஒன்றுமே இல்லை... ஆட்சி அவனுக்கே. அதிகாரம் அவனுக்கே.. புகழ் அவனுக்கே. தான் நாடியதைச் செய்யம் ஒரே வல்லமை அவனுக்கு மட்டுமே. அந்த இறைவனே வல்லசு

சதாம்!..

அவன் எல்லையில்லாக் கருணையாளன். மன்னிக்கும் மாண்பாளன். அவன் மீது நம்பிக்கை வைத்துச் செல்கிறாய். நீ அரஃபா நாளன்று (தியாத் திருநாளுக்கு முந்தைய நாள் நோன்பு வைப்பது நபிவழியாகும்) நோன்பு வைத்தாயாமே. குர்ஆனோடு இறுதி வரை இருந்தாயாமே.. பழிவாங்குதல் கூடாதென்றாயாமே.. என் மக்கள் என் தேசம் என்று சொன்னாயாமே... கண் கலங்கினேன்.

என் இனிய சதாம்.

உன் ஆணவம், அதிகாரம், செருக்கு யாவும்.. யாவும் விட்டொழித்து இறைவன் திருமுன் மண்டியிட்டாய். ஆனால் கடைசி நிமிடம் வரை அமெரிக்க அராஜகத்திற்கு முன் நீ மண்டியிடவி்ல்லை. உனக்கு உயிர் பிச்சை கிடைப்பதை விரும்பாமல் நெஞ்சு நிமிர்த்தி சிங்கமாய் தூக்குக் கயிறு தொட்டாயே..! நீ வீர மறவன்!

உன் முகம் வீரத்தின் விலாசம் என்பதாலா.. மூட வேண்டாம் என்றாய்..! ஸலாஹ{த்தீன் ஐயூபியின் தேசப் பாசம் உன் கண்களில்.  உமர் முக்தாரின் சாந்தம் உன் முகத்தில்.

நண்பனே..!

உலகெல்லாம் மகிழும் ஒப்பற்ற பெருநாளில் உன்னைப் படுகொலை செய்கிறார்கள்.

அது தியாகத் திருநாள். அது தியாகத்தின் திருநாள்.

அது தன்னையே குர்பானி செய்ய முன் வந்த முத்தான தினம் என்பது அந்த முட்டாள் குரங்குகளுக்கென்ன தெரியும்? நீ தியாகியாகி விட்டாயோ இல்லையோ.. நீ வரலாறாகி விட்டாய்.

உன் வரலாற்றின் முதல் பக்கம் உரத்துச் சொல்கிறதப்பா..

'பிர்அவ்ன்கள் வென்றதில்லை'

போய் வா  சதாம்.. போய் வா..

நான் இன்னாரு நாளுக்காய் காத்துக் கிடக்கிறேன்.

உன் வீரத்தில் நெஞ்சுயர்த்தும்

ஈராக்கியன்

குறிப்பு: ஆசிரியர் தெரியவில்லை. மின்னஞ்சல் மூலம் பெறப்பட்டது.

நண்பர்களுக்கு இந்தப் பக்கத்தை அறிமுகப்படுத்த...