துபாயில் சங்கமம் தொலைக்காட்சி ஆரம்ப விழா    

துபாயில் செயல்பட்டு வரும் சங்கமம் வானொலி தனது புதிய சேவையான சங்கமம் தொலைக்காட்சி ஆரம்ப விழாவை துபாய் ஸ்காலர்ஸ் பள்ளி அரங்கில் 09-12-2005 வெள்ளிக்கிழமை மாலை நடத்தியது.

நிகழ்ச்சியில் தொழிபலதிபர்கள் அல்ஹாஜ் செய்யது அப்துல் காதர் (சி.த.), கீழக்கரை ஹுசைன் காக்கா, அல்ஹாஜ் சம்சுதீன் காக்கா, பாபநாசம் அப்துல் ஹமீது, கல்கண்டு வார இதழ் ஆசிரியர் லேனா தமிழ்வாணன், இலங்கைத் தூதரக அதிகாரிகள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் துபாய் தமிழ்நாடு பண்பாட்டுக் கழக தலைவர் அஷ்ரஃப் அலி, இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் (ஈமான்) பொதுச் செயலாளர் குத்தாலம் லியாக்கத் அலி, துபாய் தமிழ்ச் சங்க தலைவர் சபேசன், அன்வர் பாஷா, ஏ முஹம்மது தாஹா, உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சங்கமம் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் வரும் 16-12-2005 வெள்ளிக்கிழமை முதல் தினந்தோறும் இரவு 9.00 முதல் 12.00 மணி (துபாய் நேரம்) வரை டான் மியூசிக் சேனலில் (TRT) ஒலிபரப்பாகும்.

விழா நிகழ்ச்சியினை சங்கமம் தொலைக்காட்சியின் முகாமைத்துவ பணிப்பாளர் கலையன்பன் (00 971 506507604)

தகவல்: முதுவை ஹிதாயத் (எம் என் ஏ)