கீழக்கரை கல்லூரி மாணவர்களின் அரிய கண்டுபிடிப்பு.

Information by: A.Hameed Yasin   

நண்பர்களுக்கு இந்தப் பக்கத்தை அறிமுகப்படுத்த...

கீழக்கரை தக் இன்ஜியனிரிங் கல்லூரியில் 4ம் ஆண்டு ஏரோநாட்டிக்கல் பிரிவில் பயிலும் மாணவர்களான நூர்தீன், சினாஸ்கான், வினோத்பாபு, முகம்மது ஹசன் பசரி, ராஜன் ஆகியோர் 'ஹோவர்கிராப்ட்' என்ற போக்குவரத்து சாதனத்தை கண்டுபிடித்துள்ளனர்.



இந்த சாதனம் சுமைகளைத் தாங்கிக் கொண்டு காற்றில் அசையாமல் நிற்கும் தன்மையுடையது. 
'ஹோவர் கிராப்ட்' தொழில் நுட்பத்தை பயன் படுத்தி கடல், மற்றும் பனிபிரதேசங்களில் ஏற்படும் இயற்கை சீற்றங்களில் சிக்கிகொள்ளும் மக்களை பாதுகாக்கலாம் குறிப்பாக பாதுகாப்பு துறையினருக்கு பயனுள்ள கருவியாக அமையும்.
 

ஹெலிகாப்டர் இயங்கும் தத்துவத்தை பயன்படுத்தி இக்கருவி இயங்குகிறது. 'ஹோவர்கிராப்டின்' முன்னோக்கி செல்லும் இயக்கமானது இக்கருவியின் பின்புறம் அமைந்துள்ள டனலின் வழியாக காற்றின் ஒரு பகுதி பின்னோக்கி இழுப்பதால் கிடைக்கிறது. இது நீயூட்டனின் 3வது விதியின்படி (Newton's Third Law of Motion) செயல்படுகிறது.


இந்த கருவியினைக் கண்டுபிடிப்பற்கு இது வரை ரூ2 லட்சம் செலவாகியுள்ளது. மேலும் இதை விரிவாக்கம் செய்வதற்கு கல்லூரி நிர்வாகம் தயாராக இருப்பதாகவும், இதறகு உண்டாகும் செலவுகளை ஏற்போம் என்றும் கீழக்கரை சதக் இன்ஜியனிரிங் கல்லூரியின் தலைவர் ஹமீது அப்துல் காதர் மற்றும் தாளாளர் கபீர் ஆகியோர் கூறியுள்ளனர்.

கனவு காணுங்கள் என்ற நமது குடியரசு தலைவர் கலாமின் கூற்றை நிறைவேற்ற பாடுபடும் இவர்களைப் போன்ற இளைஞகர்களை நாம் பாராட்டுவோம்.

 

நண்பர்களுக்கு இந்தப் பக்கத்தை அறிமுகப்படுத்த...