|
ஹிமானாசையத்
பதில்கள்
1987 முதல் வாசக அன்பர்களின் கேள்விகளுக்கு பத்திரிக்கைகளின்
வாயிலாகவும், சில சமயங்களில் நேரடியாகவும் பல்வேறுபட்ட கேள்விகளுக்கு பதில்
சொல்லி வருகிறேன். உடல்நலம், அரசியல்,
ஆன்மீகம், சமூகநலம்,
கல்வி, மார்க்க
நடைமுறை, உலகநடப்பு, தனிப்பட்ட வாழ்வியல் பிரச்சினைகள்,
தற்கால இலக்கியம், சர்வதேச
அளவில் முஸ்லிம்கள் சந்தித்துவரும் பிரச்சினைகள் என்று அது ஒரு பரந்த
பரப்பிலானது. இதுவரை சுமார் 10,000 பத்தாயிரம்
பதில்கள் சொல்லப்பட்டிருக்கலாம். இவற்றில் உடல்நலம்
சம்பந்தப்பட்ட பதில்கள்கள் மட்டும் "பொது மருத்துவம் கேள்விபதில்" என்று
தலைப்பில் நூலாகியது. இவை அனைத்தையும் நூலாக்குவதில் உள்ள நடைமுறைச் சிக்கலை
விளக்கத் தேவை இல்லை என்று நினைக்கிறேன்.
இங்கே
உங்களுக்காக அவ்வப்போது சில முக்கியமானவற்றை மட்டும் தொகுத்துத்தர விழைகிறேன்.
தமிழகத்தில் இப்போது ரொம்ப ரொம்ப சூடான விஷயம் சங்கர மடாதிபதி ஜெயேந்திரர் கைது
விவகாரந்தான்.அதிலிருந்தே தொடங்குவோமே!
19.
சுதந்திரம் கிடைத்து
அரைநூற்றாண்டுக்கு அதிகமாக ஆகியும் வெள்ளைக்காரர்களைப் பின்பற்றும் அடிமைத்தனம்
நம்மை விட்டுப் போகவில்லையே? ராபியத்து
பஸரியா, கோட்டக்குப்பம்.
பதில்: நல்லனவற்றைப் பின்வற்றுவதில் தவறில்லை. குறிப்பாக
ஆங்கில மொழி. அதுதான் இன்று உலக அளவில் நம் பிள்ளைகளுக்கு தொழில்நுட்ப வேலைகளை
வாரிக்கொடுத்துக் கொண்டிருப்பதுடன் , கோடிக்கணக்கில் அந்நியச் செலாவணியையையும்
கொண்டுவந்து கொட்டுகிறது. உங்களுக்கு ஒரு சுவையான தகவல் தரட்டுமா? இன்று
உலகத்திலேயே அதிகமாக கடைகள் - சூப்பர் மார்க்கெட்டுகளில் திருடுவோர்
பிரிட்டிஷ்காரர்கள் தான் என்று ஒரு ஆய்வு புலப்படுத்தியிருக்கிறது. "
பிரிட்டிஷ் சென்டர் ·பார் ரீஸெர்ச்" என்ற அமைப்பின் முடிவை ராய்ட்டர் அண்மையில்
வெளியுட்டுள்ளது. அதன் படி, 6.29 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு அவர்கள்
திருடியிருக்கிறார்கள். அதிகமாகத் திருடிய பொருட்கள் : ஷேவிங் பிலேடு, டாய்லெட்
உபயோகப் பொருட்கள் மற்றும் மதுபானம்.
20.
வாரம் தவறினாலும்
அமெரிக்காவில் வகை வகையான புயல் - சூறாவளிகள் வருவது தவறுவதில்லையே.... இதை
இறைவனின் கோபப் பார்வை என்று எடுத்துக் கொள்ளலாமா?
ஹாஜா கமாலுதீன் , புளியங்குடி
பதில்: இருக்கலாம். அது
இறைவனின் நாட்டம் ; அவனது அதிகாரத்துக்குட்பட்ட விசயம்! அப்படிக் கொள்வதானால் ,
சென்ற ஓராண்டில் சுனாமி, பூகம்பங்கள் போன்ற இயற்கைப் பேரழிவுகளாலும், குண்டு
வெடிப்பு போன்ற வன்முறைகளாலும் இறந்தவர்களில் பெரும்பாலோர் முஸ்லிம்கள்தான்
என்பதையும் நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். முஸ்லிம்களான நாம், அவனும்
அவனது தூதரும் காட்டிய வழியிலிருந்து பிறழ்ந்து மனம்போன படி நடப்பதால் அவனுக்கு
ஏற்பட்டுள்ள கோப வெளிப்பாடுதான் காரணம் என்றும் எடுத்துக் கொள்ள வேண்டும்!
21.
கராத்தே தியாகாராஜன்
விவகாரம் பற்றி உங்கள் கருத்து...?
ஜெயினுலாப்தீன் , பரங்கிப் பேட்டை.
பதில்: திரு ஸ்டாலினின் நியாயமான ஜனநாயகத் தேர்தல்
வெற்றியைத் தட்டிப்பறிக்க அதிமுகவுக்கு நியாயமற்ற முறையில் உதவியவர் இன்று
குய்யோ முறையோ என்று கூப்பாடு போட்டுக் கொண்டு இருக்கிறார். "எந்தச்
செயலுக்கும் அதற்கிணையான எதிர்வினை இருந்தே தீரும்" என்பது நியூட்டனின்
அறிவியல் தரும் அடிப்படை விதி. பி.எஸ்.ஸி. பட்டதாரியான கராத்தேயுக்கு அது புரிய
இவ்வளவு நாட்களாகியிருக்கிறது.
22.
மருத்துவத்தில் புதிய
செய்தி ஒன்று....?பாரூக் ஜெய்லானி , வந்தவாசி ; ரேஷ்மா முனவ்வரா,
திருச்சி-8.
அ)பெர்மிங்ஹாமில் 'ஈ நோஸ் ஸா·ப்ட்வேர்' என ஒரு
கம்ப்யூட்டர் மென்பொருள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. கண்டுபிடித்தவர்
இஞ்சினியர் ரிடாபென். இது புண்கள், காயங்கள் இவற்றிலிருந்து வெளிப்படும்
வீச்சத்தத்திலிருந்தே எந்த வகைக் கிருமித் தாக்கம் என்பதைக் கண்டு
சொல்லிவிடும். இதனால் மிகக் குறைந்த நேரத்தில் வியாதி கண்டுபிடிக்கப் பட்டு
சிகிச்சையினைத் தொடங்க ஏதுவாகும். வர்த்தக ரீதியாகத் தயாரிக்கும் முயற்சி நடை
பெற்று வருகிறது. இதன் விலை இப்போது சுமார் 50 லட்சம். போகப் போகக் குறையலாம்.
ஆ) கர்னாடகா மாநிலத்தின், ராய்ச்சூர் ' ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஸாலிடி
மருத்துவமனையின் சர்ஜன் டாக்டர் தீபக் பில்பந்தி என்பவர் முஹம்மது இர்·பான்
என்ற ஒரு நோயாளியின் வலது பக்க சிறிநீ£ரகத்திலிருந்து 130 கற்களை அறுவை
சிகிச்சை மூலம் அகற்றி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
23.
மனதைத்தொட்ட ஒரு சம்பவம்
.....? தாஹிர் பாத்திமா , சேலம்-5.
பதில்: அன்னை தெரஸா ஒருமுறை ஏழைகளுக்காக பணம் வசூலிக்க
தெருவில் மக்களிடம் கையேந்தியிருக்கிறார். அப்போது சிலர் பணம் கொடுத்தனர்.
சிலர் பணமில்லை என்று சொல்லிவிட்டுச் சென்றனர். ஒருவர் அவர் கையேந்தியபோது
சற்றும் எதிர்பாராத விதமாக அவர் கையில் எச்சிலை உமிழ்ந்திருக்கிறார்.
அதிர்ச்சியில் ஒரு வினாடி உறைந்துபோன அந்த மகா மனுஷி எச்சில் பட்ட அந்தக் கையை
அப்படியே நெஞ்சில் வைத்துக் கொண்டு, " நீங்கள் அன்புடன் அளித்த இதை நான்
எனக்காக வைத்துக் கொள்கிறேன். நான் குறிப்பிட்ட அந்த ஏழைப் பிள்ளைகளுக்காக பண
உதவி செய்யுங்கள் " என்று அவரிடமே மீண்டும் அடுத்த கையை ஏந்தினாராம். இதை நான்
சமீபத்தில் படித்த போது , மறைந்த சக்காராப் பள்ளி தந்த செம்மல், முஹிப்புல்
உலமா, பி.ஏ. ஹாஹியார் ஒருமுறை சிங்கப்பூரில், தம்மிடம் உதவி கேட்டு வந்த ஒரு
ஆலிமுக்கு உதவி விட்டு, ஒரு பிரபல சமூகப் பிரமுகரிடமும் அழைத்துச் சென்ற போது,
அந்தப் பிரமுகர் " உங்களுக்கு இதில் எவ்வளவு கமிஷன்?" என்று கேட்டாராம். பொதுப்
பணியில் ஈடுபடும்போது இத்தகைய அவமானங்களை மென்று விழுங்கித்தான்
ஆகவேண்டியிருக்கிறது என்பதை இந்த சம்பவங்கள் சுட்டிக் காட்டுகின்றன அல்லவா?
24.
உங்களுக்கு ஒரு டெஸ்ட்!
தமிழத்தில் இதுவரை கவர்னராக இருந்தவர்களின் பட்டியலைத் தரமுடியுமா?
அப்துல்கரீம் , நாகபட்டினம் ; குல்சாத் ரஹீம், மேலூர்.
பதில்: ம்...ம்.....ம்....ம்...! முயன்று பார்க்கலாமே!
இப்போதைய கவர்னர் சுர்ஜி¢த் சிங் பர்னாலா 2004- ல் கவர்னராக நியமிக்கப்
பட்டார். அவர் பதவிக்காலம் நவம்பர் 7-ல் முடிவடைகிறது. முன்பு 1991- ல் அவர்
ஒருமுறை கவர்னராக இருந்து, ராஜினாமாச் செய்தார் என்பது நினைவிருக்கும்.
இவருக்கு முன் ஆந்திராவைச்சேர்ந்த ராம்மோஹன் ராவ் 2002-2004 வரை.
அவருக்கு முன் கேரளாவைச் சேர்ந்த பாத்திமா பீவி 1997 -2001.
2001-2002 வரை டாக்டர் சி.ரங்கராஜன்.
1967-ல் திமுக முதன் முதலாக ஆட்சிக்கு வந்த போது உஜ்ஜல் சிங் 1966- 1971 வரை
கவர்னராக இருந்தார்.
1971-1976 வரை கே.கே.ஷா.
பிறகு , 1976-1977 ராஜஸ்தானைச் சேர்ந்த மோஹன்லால் சுகாதியா.
1977- 1980 வரை குஜராத்தைச் சேர்ந்த பிரபுதாஸ் பட்வாரி.
1980-1982 வரை ராஜஸ்தானின் சாதிக் அலி
1982- 1988 வரை எஸ்.எல்.குரானா
1988- 1990 வரை கேரளாவைச் சேர்ந்த பி.சி.அலெக்ஸாண்டர்
1990- 1991 வரை சுர்ஜித்சிங் பர்னாலா
1991- 1993 வரை பீஷ்ம நாராயண்சிங்
1993- 1996 வரை டாக்டர் சென்னா ரெட்டி.
அவர் மறைவை ஒட்டி 1996 முதல் 1997 வரை கிருஷ்ணகாந்த்.
அதற்கு முன் கவர்னர்களாக இருந்தவர்களில் பிரகாசம் அவர்கள் பெயர் மட்டுமே
நினைவுக்கு வருகிறது. நோன்பு நேரம் பாருங்கள்!
என்ன பாஸ் மார்க்கா?
25.
கர்ப்பத்தில் இருக்கும்
குழந்தைக்குத் தாயின் கர்ப்பகால மனக்கஷ்டங்கள் பாதிப்பை உண்டுபண்ணும் என்று ஒரு
பத்திரிக்கையில் படித்தேன். உண்மையா?
ஹைருன்னிசா, புதுக்கோட்டை.
பதில்: ஆம். ஒரு தாய் கருவுற்றிருக்கும்போது அதிகமான மன
அழுத்தத்துக்கு ஆளானால் , அக்குழந்தை மிகச்சிறுவயதிலேயே 'ஆன்க்ஸியடி' என்ற
'மனப்பதற்றநோய்' க்கு ஆளாகலாம் என்று பிரிட்டிஷ் ஆய்வாளர்கள்
நிரூபித்திருக்கிறார்கள். மனஉளைச்சலில் இருந்த ஒருதாயிடமிருந்து
ஸ்ரெஸ்ஹார்மோன்கள் நஞ்சு (பிலேஸன்டா) வழி குழந்தைக்குச் சென்று 10 வயதுக்குள்
அக்குழந்தை ஆன்க்ஸியடி நோய்க்கு ஆளானதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.
'கார்ட்டிஸால் ' என்ற 'ஸ்ட்ரெஸ்ஹார்மோன்' அளவு அக்குழந்தையின் ரத்தத்தில் மிக
அதிகமாக இருந்தது நிரூபிக்கப் பட்டிருக்கிறது.
26.
ஒரு முஸ்லிம் குடும்பத் தலைவியின் வாழ்க்கை வெற்றி எதில்
அடங்கியிருக்கிறது? ஷமீம் பானு,
கூத்தாநல்லூர்
பதில்: இப்படி ஒரு அருமையான கேள்வியைக் கேட்ட உங்களுக்கு
முதலில் என் பாராட்டுகள்! புருஷனை முழுமையாகப் புரிந்து கொள்வதில் - அவன்
சம்பாத்தியத்துக்குள் வாழ்க்கையை நகர்த்த முற்படுவதில் ; குடும்பத்தில் உள்ள
பிற உறுப்பினர்களை அணைத்துப் போவதில் - குறிப்பாக குடும்பப் பெரியவர்களை
கண்ணியத்துடன் நடத்துவதில் ; மார்க்க விழுமியங்களை முரண்பாடில்லாமல் கடைப்
பிடிப்பதில்; அண்டை வீட்டாரிடம் அன்பு பாராட்டுவதில் ! இவைதான் இஸ்லாம்
பெண்களுக்கு விதித்துள்ள கடமைகள்; வாழ்க்கை வெற்றியின் அடிப்படைகள்!
27.
செல்வம், தற்பெருமை ,
புகழ்ச்சியால் ஏற்படும் தலைக்கனம் இவற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள
கைக்கொள்ளும் வழிகளைச் சொல்லி உதவ முடியுமா?
மஹ்ஷ¥க் ரஹ்மான், விழுப்புரம்.
பதில்: எனக்கு ஒரு பெரியவர் சூசகமாக உணர்த்தி , நான்
அவ்வப்போது கைக்கொள்ளும் வழிகள் ரொம்ப சிம்பிளானவை. இரவில் தூங்குமுன் நாம்
வாழும் ஊரில் உள்ள தெருக்களில் ஒவ்வொரு வீடாக மனதில் கொண்டு வந்து , அந்த
வீடுகளில் நமக்குத் தெரிய வாழ்ந்தவர்களில் மரணித்தவர்களின் எண்ணிக்கையைக்
கணக்கிடுவது; அவர்களில் அழகு, அதிகாரம், செல்வம், அறிவாற்றல் இப்படிப் பலவிதமான
சிறப்புக்களுடன் வாழ்ந்தவர்களையும் மனதில் கொண்டுவருவது; அவர்கள் எல்லாம்
இப்போது எங்கே? என்று நம்மை நாமே கேட்டுக் கொள்வது! இரண்டு மூன்று தெருக்களை
எண்ணி முடிப்பதற்குள் நூற்றுகணக்கில் எண்ணிக்கை வந்துவிடும் ; பெருமையும் ஆணவ
எண்ணமும் பொசுக்கென்று அடங்கிவிடும்! முயன்று பாருங்கள்.
28.
உலகத்தின் தலை சிறந்த
யுனிவெர்ஸிட்டிகள் பட்டியலில் , அமெரிக்காவின் ஹார்வர்ட் முதலிடத்தையும்,
மஸாச்சுஸெட்ஸ் இரண்டாம் இடத்தையும், பிரிட்டனின் கேம்ப்ரிட்ஜ் , ஆக்ஸ்·போர்ட்ஸ்
மூன்றாம் நான்காம் இடங்களையும் பிடித்திருப்பதாக வந்துள்ள தகவல்கள் பற்றி
உங்கள் கருத்து என்ன? ஜாகீர்ஹ¤ஸைன்,
இளயாங்குடி; சாதுல்லாஹ், தஞ்சாவூர்.
பதில்: சுற்றுச்சூழல், கட்டிட வசதி , ஆய்வகத்தரம், பெரிய
கட்டண விகிதம் இவற்றில் இருக்கலாம். சரி, அப்படியென்றால், ஏன் அமெரிக்காவும்
பிரிட்டனும் , மற்ற மேலை, கீழை நாடுகளும் இந்தியாவின் அரசு - தனியார்
-கார்ப்பொரேஷன் பள்ளிகளில் படித்து அவர்கள் பட்டியலில் நூறில் ஒரு இடத்தினைக்
கூட பெறத் தகுதி இல்லாத சாதரண இந்திய பல்கலைக் கழகங்களில் உயர்கல்வி கற்ற
இந்தியத் தொழில்நுட்ப வல்லுநர்களால் தங்கள் அலுவகங்களையும் - ஆய்வகங்களையும்
நிரப்பிக் கொண்டுள்ளன? இன்று உலகை ஆட்டிப் படைக்கும் இன்·போஸிஸ் நிறுவனர்
நாராயனமூர்த்தியும், விப்ரோ அஸீம் பாயும் ஹார்வர்ட் - கேம்பிரிட்ஜ்களில்
படித்தவர்களா, என்ன? இது காலனி ஆதிக்க உணர்வின் மறுபிறவி விளம்பர உத்திதான்.
வாய்ப்புக் கிடைதால், சிங்கப்பூருக்கு வந்து கிழக்குக் கடற்கரைப் பூங்காவில்
ஒரு அரை மணி நேரம் உட்காருங்கள். நம் தமிழக கிராமிய மணம் வீசும் உடை நடை
பாவனைகளுடன் - தோளில் தொங்கும் லேப்டாப் சம்ப்யூட்டர் பையுடன் அழகு தமிழில்
பேசிக்கொண்டு நடை பயிலும் நூற்றுக் கணக்கான- கொழுத்த சம்பளம் வாங்கும் நம்
இளம்பிள்ளைகளை- பெண்களைக் கண்டு ரசிக்கலாம்; பூரிப்படையலாம்.
NANDRI :NARGIS
|