நண்பர்களுக்கு இந்தப் பக்கத்தை அறிமுகப்படுத்த...

ஹிமானாசையத் பதில்கள்

1987 முதல் வாசக அன்பர்களின் கேள்விகளுக்கு பத்திரிக்கைகளின் வாயிலாகவும், சில சமயங்களில் நேரடியாகவும் பல்வேறுபட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லி வருகிறேன். உடல்நலம், அரசியல், ஆன்மீகம்,  சமூகநலம், கல்வி, மார்க்க நடைமுறை, உலகநடப்பு, தனிப்பட்ட வாழ்வியல் பிரச்சினைகள், தற்கால இலக்கியம், சர்வதேச அளவில் முஸ்லிம்கள் சந்தித்துவரும் பிரச்சினைகள் என்று அது ஒரு பரந்த பரப்பிலானது. இதுவரை சுமார் 10,000 பத்தாயிரம் பதில்கள் சொல்லப்பட்டிருக்கலாம். இவற்றில் உடல்நலம் சம்பந்தப்பட்ட பதில்கள்கள் மட்டும் "பொது மருத்துவம் கேள்விபதில்" என்று தலைப்பில் நூலாகியது. இவை அனைத்தையும் நூலாக்குவதில் உள்ள நடைமுறைச் சிக்கலை விளக்கத் தேவை இல்லை என்று நினைக்கிறேன்.

இங்கே உங்களுக்காக அவ்வப்போது சில முக்கியமானவற்றை மட்டும் தொகுத்துத்தர விழைகிறேன். தமிழகத்தில் இப்போது ரொம்ப ரொம்ப சூடான விஷயம் சங்கர மடாதிபதி ஜெயேந்திரர் கைது விவகாரந்தான்.அதிலிருந்தே தொடங்குவோமே!


1.கேள்வி: சங்கராச்சாரியார் கைதின் மூலம் முதல்வர் ஜெயலலிதா முஸ்லிம்களைக் கவர்ந்துள்ளாரா? (பரீதா, மதுரை)

பதில்: இல்லை. முஸ்லிம்கள் எப்போதுமே காஞ்சிமடாதிபதியைப் பகைவராகப் பார்த்ததில்லை. இந்துமுன்னணி ராமகோபாலனைவிட அவர் ஒன்றும் முஸ்லிம்களைப் பற்றித் தவறான முறையில் பேசிவிடவில்லை. எனவே இந்தப் பிரச்சினையில் முஸ்லிம்களுக்கு எந்த நேர்மை - எதிர்மறை பாதிப்பும் இல்லை. முஸ்லிம்கள், இதை ஒரு சாதாரண சட்ட ஒழுங்குப் பிரச்சினையாக மட்டுந்தான் பார்க்கிறார்கள்.

2.கேள்வி: பா.ஜ.க., சங்பரிவார், அவரது கைதை இந்து மதத்தின் மீதான தாக்குதல் என்று கூறுவது பற்றி உங்கள் கருத்து...?  (மொஹ்ஸின், திண்டுக்கல்)

பதில்: சங்கரராமன் என்ற ஒரு இந்து நபர், கோவிலில் வைத்தே படுபயங்கரமாகக் கொல்லப் பட்டிருக்கிறார்.அவர் ஒரு முஸ்லிமோ, கிறிஸ்த்தவரோ, அல்லது சீக்கியரோ அல்ல. அப்படி இருக்கும்போது அவரைக் கொன்றவர்களைப் பிடித்துத் தண்டிக்க முயல்வது எப்படி இந்து மதத்தின் மீதான தாக்குதல் ஆகும்? வேடிக்கை மனிதர்கள் இவர்கள்.

3.கேள்வி: பிரதமர் காஞ்சிப்பெரியவர் கைது பற்றி, முதல்வருக்குக் கடிதம் எழுதியது சரியா? (ஹலீமா, கும்பகோணம்)

பதில்: நாட்டு மக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள ஒரு விஷயத்தில் - அதிலும் குறிப்பாக நாட்டின் பிரதான எதிர்க்கட்சி இந்த விவகாரத்தை மதப்பிரச்சினையாக்கி இருக்கும் வேளையில், பிரதமர் மவுனம் சாதித்தார் என்ற குற்றச்சாட்டு வந்துவிடக் கூடாதே என்பதால் எழுதியிருக்கலாம். என்றாலும் சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டாம் என்று அவர் கூறவில்லையே?

4. கேள்வி: காஞ்சிப்பெரியவர் கொலை செய்தார் என்று நீங்கள் நம்புகிறீர்களா? (ஆபிதா ஆஷிகீன், நீடாமங்கலம்)

பதில்: நான் நம்புவது ஒருபுறம் இருக்கட்டும்! இக்கொலை வழக்கை விசரிக்கப் போகும் நீதிபதியே கூட, அவர்முன் சமர்ப்பிக்கப்படும் ஆதாரங்களின் அடிப்பையில்தான் தீர்ப்புச் சொல்லப் போகிறாரே தவிர அவரது சொந்த நம்பிக்கையின் அடிப்படையில் அல்ல. சிங்கப்பூர் தமிழ்முரசு இதழில் புகழ்பெற்ற எழுத்தாளர் திரு மாலன் ஒரு கட்டுரையில் தந்துள்ள குறிப்புக்களைக் கீழே தந்திருக்கிறேன்:
 

  1. ஜெயெந்திரர் ஜனகல்யான், ஜனஸாஹரன் என்ற அமைப்புகளை ஆரம்பித்த காலத்தில்தான், தமிழகத்தில் மதவாத இந்துமுன்னணி, ஆலய பாதுகாப்புக் குழு, வி.எச்.பி. பொன்ற அமைப்புக்கள் காலூன்ற ஆரம்பித்தன.

  2. பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதை ஜெயேந்திரர் கண்டிக்கவில்லை.

  3. 1994-ல் மஹாப்பெரியவாள் மறைந்த பிறகு, ஜெயேந்திரர் தீவிர இந்துத்துவா அரசியலில் இறங்கினார்.

  4. 1998, 1999-ல் பா.ஜ.க. மத்தியில் ஆட்சிக்கு வந்ததும், காஞ்சிபுரம் ஜெயேந்திரர் பகிரங்கமாக அரசியலில் தீவிரம் காட்டினார்.

  5. தமிழை "நீச மொழி" என்றார்.

  6. ஞ்சிபுரம் அருகே உள்ள 'கூத்தரம்பாக்கம்' கிராமத்து தலித் மக்கள், பொதுக் கோவிலுக்குள் நுழைய மறுக்கப் பட்டதால், மதம் மாறப்போவதாக அறிவித்தனர். அதற்காகவே, தமிழ்நாடு கட்டாய மதம் மாற்றுச்சட்டம் கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டது; அதைத் தூண்டியவர் ஜெயேந்திரர் என்று கூறப்பட்டது.

  7. தேவையற்ற வணிக-வியாபார, ரியல் எஸ்டேட் விஷயங்களில் தீவிரம் காட்டினார். அதனால் தேவையற்ற பல நச்சு சக்திகளுடன் தொடர்பு வலுப்பெற்றது.

  8. அவரது குடும்பத்தினர் மட விவகாரங்களில் பகிரங்கமாக ஈடுபட ஆரம்பித்தனர்; அதைத் தொடர்ந்து விஜயேந்திரர் உறவினர்களும் உள்ளே நுழைந்தனர்.

  9. அவரது கைதை பா.ஜ.க. ஸங்பரிவாரினரைத் தவிர வேரு யாரும் வலுவாக எதிர்க்கவில்லை.

  10. எத்தனையோ பிராமணர்கள் அல்லாத சாமியார்கள் கைதானபோது கண்டுகொள்ளாமல் இருந்த இவர்கள், ஜெயேந்திரருக்காக மட்டும் குரல் கொடுப்பதைப் பார்க்கும்போது, குறிப்பிட்ட உயர்ஜாதியினர் ஆதரவு நிலை வெளிப்பையாகத் தெரிகிறது.....

இப்படி மாலன் அடுக்கிக் கொண்டே போகிறார். இதே கருத்தை "இந்து" பத்திரிக்கையின் "ப்ரன்ட்லைன்" இதழும் வலியுறுத்துகிறது.


5. கேள்வி: அரசியல்வாதி கலைஞர் - இலக்கியவாதி கலைஞர் இருவரில் உங்களைக்கவர்ந்தவர் யார்? (பாத்திமா பாரூக், நீலகிரி)
 

பதில்: இலக்கியவாதி கலைஞர் கருணாநிதியுடன் எனக்குக் கருத்து வேறுபாடு எப்பொதும் இல்லை.ஆனால், அரசியல்வாதி கலைஞருடன் பல்வேறு கட்டங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளன.அரசியலுக்கென்றே ஒரு தனி அகராதி உண்டுதானே?


6.
கேள்வி: "ஓடும் நதிக்கரையில் இருந்தாலும் ஒரு துளி நீரைக்கூட விரயம் செய்யாதீர்கள்" என்ற நபிகளாரின் தீக்க தரிசனம் பற்றி உங்கள் கருத்து என்ன?  (பாத்திமா பாரூக், நீலகிரி)
 

பதில்: அனுபவப் பூர்வமாக இதோ அனுபவித்துக் கொண்டிருக்கிறோமே! கருத்துச் சொல்ல என்ன இருக்கிறது?"வீண் விரயம் செய்யாவேண்டாம்; அதை அல்லாஹ் விரும்புவதில்லை" என்ற வசனம் குர் ஆனில் அடிக்கடி வரக்கூடியது என்பதையும் பார்க்கவேண்டும்.


7. கேள்வி: 
சுதந்திரப் போராட்டத்தில் தங்கள் உயிர்களையே தியாகம் செய்த திப்பு சுல்தான், பகதூர்ஷா, யூசூப்கான் போன்றோரை வரும் தலைமுறை மறந்துவிடும் போலிருக்கிறதே? (ஏ.ஆர். முஹம்மது பைஸல்கான், இனாம்குளத்தூர்)


பதில்: தீரர் திப்புசுல்தானின் வாளை மதுச்சக்கரவர்த்தி மல்லய்யா ஏலத்தில் வாங்கியிருக்கிறார் என்பது ஒரு கொடூரமான செய்தி.பகதூர்ஷாவின் குழந்தைகளின் தலைகளைக் கொய்து தட்டில் வைத்து உணவுபோலப் பரிமாறினர் கொடுங்கோல் ஆங்கிளேயர். உங்கள் கவலையைநான் புரிந்துகொள்கிறேன். இந்த தியாக தீபங்களின் வரலாற்றை முற்றிலுமாக எந்த சக்தியாலும் அழித்துவிடவோ மறைத்துவிடவோ முடியாது.முந்தய பா.ஜ.க. அரசு எத்தனையோ சரித்திரப் புரட்டுகளைச் செய்தது.இதோஅவை திருத்தி எழுதப்படப் போகின்றன. இறைவனின் நாட்டத்தை மீறி எந்த நல்லதும் கெட்டதும் நடந்துவிட முடியாது என்பதே நம் தவக்கல்-தக்வா.
 

8. கேள்வி: 17- வது மந்திரிசபையிலும் முஸ்லிம்மந்திரி சேர்க்கப்படவில்லையே? (பாரூக் ஜெய்லானி, மதுரை)


பதில்: இந்த ஒரு விஷயத்தில் மட்டும் முதல்வர் கடைப்பிடித்துவரும் கண்டிப்பு நிலை, அக்கட்சியில் உள்ள முஸ்லிம்களுக்குத் தரப்படும் செய்தி. தம் கட்சியில் மந்திரியாகும் தகுதி எந்த அண்ணா திமுக முஸ்லிமுக்கும் இல்லை என அவர் நினைக்கிறார் என்பதுதானே பொருள்?


9.
கேள்வி: அமெரிக்காவின் ரகசியங்களையே இஸ்ரேல் வேவு பார்த்ததாமே? (எம்.ஜாஹிர் ஹுஸைன், சேலம் - 5)


பதில்: ஆம்! இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. அமெரிக்க அரசாங்கமே யூதர்களின் கையில்தானே! அமெரிக்கா இன்று சந்தித்து வரும் அவலங்கள் அவமானங்கள் - அனைத்துக்கும் இஸ்ரேல்தான் காரணம்


10.
கேள்வி: சர்வாதிகாரி ஹிட்லர்- ஜனாதிபதி புஷ் .. ஒப்பிடுக. (பாத்திமா பாரூக், நீலகிரி)


பதில்: ஒற்றுமைகள் அதிகம். அதனால் வேற்றுமைகளை மட்டும் குறிப்பிடுகிறேன்.ஹிட்லர் யூதர்களைக் கொன்று குவித்தார். புஷ் யூதர்களுக்காக முஸ்லிம்களைக் கொன்று குவிக்கிறார்.


11.
கேள்வி:  இடது சாரிகள் மத்திய அரசுக்கு பலமா?  பலகீனமா? (மன்சூர், பார்த்திபனூர்)

பதில்: இந்திய மக்களுக்கு பலம்! மத்திய அரசு சால் மாறிப் போகாமல் பாதுகாப்பதற்கு மக்களே எற்படுத்திக்கொண்ட பாதுகாப்பு அரண்!

12. கேள்வி: போலிச்சாமியார்கள் பற்றி இவ்வளவு செய்திகள் வருகின்றனவே இருந்தும் மக்கள் ஏமாறுவது நின்ற பாடில்லையே?  (பர்வீன் ஜஹ்ரா,லால்பேட்டை)


பதில்: நிதி நிறுவன மோசடிகள் பற்றித் தினமும் செய்திகள் வரத்தான் செய்கின்றன;மக்கள் எமாறுவது நின்ற பாடில்லையே? மனித பலகீனமும், பேராசையும் தான் இதன் அடிப்படை.
 

அடுத்த பகுதி..a

நண்பர்களுக்கு இந்தப் பக்கத்தை அறிமுகப்படுத்த...

Chittarkottai.com