|
Refer
this Page to your friends
வி.பி.சிங்
என்ன செய்ய வேண்டும்?
வி.பி.சிங்!
உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர்; இந்திய முன்னாள் பிரதமர்!
வயது 75 ! சிறுநீரகங்கள் பழுது பட்டிருப்பதால், ஒரு வாரத்தில்
மூன்றுமுறை டயாலிஸிஸ் செய்து கொள்ள
வேண்டிய கட்டாயத்தில் - பத்தாண்டுகளுக்கும்
மேலாக கேன்ஸர் நோயுடன் போராடிக்கொண்டிருக்கும் ஒரு
மூத்த அரசியல் வாதி!
அவரது உடல் நிலையில் பலரும் வீட்டில் முடங்கிக் கொண்டு வாளாவிருப்பார்கள்
விரக்தியின் உச்சியில்!
ஆனால் அவர் அப்படியில்லை. இந்தியாவெங்கும் ஆடி ஓடி ஏதாவது
செய்து கொண்டிருக்கிறார் அரசியல் ரீதியாக! சமீபத்தில் ஜனமோர்ச்சா
என்ற ஓர் அரசியல் இயக்கத்தையும் ஆரம்பித்திருக்கிறார்!
ஏன்? பதவி ஆசையா? உ.பி. முதல்வராகும் ஆசையா? அல்லது மறுபடியும்
இந்தியப் பிரதமராகும் விருப்பமா?
எதுவுமே இல்லை! அப்படியானால் ஏன் அவர் அப்படி உழைக்கிறார்?
உழைக்க வேண்டும்?
அதற்குக் காரணமிருக்கிறது! நியாயமான காரணம் இருக்கிறது.
அதைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், ராஜீவ் பிரதமரானது தொடங்கி
அவரைப் பதவியிறக்கி அந்த இடத்தில் வி.பி.சிங் உட்கார்ந்த வரலாற்றைத்
தெரிந்திருக்க வேண்டும்!அந்த வரலாறு:
- தன்னை சர்வதேச அளவுக்கு உயர்த்திய ஒருவருக்கு துரோகம்
செய்தது
- ெறும் 2 எம்.பி. களுடன் சோர்ந்து கிடந்த பி.ஜே.பியை
80 எம்.பி. களுடன் நிமிரச்செய்தது.
- பாஜக உதவியுடன் பிரதமரானது
- மண்டல் கமிஷன் பரிந்துரையை அமுல்படுத்தி பா.ஜ.க. வைப்
பகைத்துக் கொண்டு, அவர்கள் காலை வாரிவிட்டதால் ஆட்சியை
இழந்தது.
.... இப்படிப் பல திருப்பங்களைக் கொண்டது!
இதைக் கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாம்.
ராஜீவ் காந்தி பிரதமரானதும் விபி சிங்கை நிதியமைச்சராக்கினார்;
நிதித்துறையில் அவருக்கு முழு அளவு அதிகாரம் கொடுத்து புதிய
நிதிக்கொள்கைகளுக்கு வழியமைத்தார். அதன் மூலம் ஆசியாவிலேயே
தலைசிறந்த நிதி மந்திரி என்ற பெயர் விபி சிங்குக்குக் கிடைத்தது.
அது அவரை பிரதமருக்கு அடுத்த ஸ்தானத்துக்கு இட்டுச் சென்றது.
அதுமட்டுமல்லாது, "ராஜீவுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் பதவியை
வகிக்கப் போவது இவர்தான் " என்ற அந்தஸ்தையும் அவருக்குப் பெற்றுக்கொடுத்தது.
அவரைச் சுற்றி சில ஒத்தூதிகள் - ஜால்ராக்கள் சேர்ந்தனர். "அதென்ன
, ராஜீவுக்குப் பிறகு? ஏன் இப்போதே பிரதமராகக் கூடாதா?" என்று
அவரது மனதுக்குள் தூபம் போட்டனர். அதற்கு அவரும் இரையானார்.
காங்கிரஸை - ராஜீவை முதுகில் குத்தினார். வெறும் இரண்டே எம்.பி.க்களுடன்
செயலிழந்துபோய்க் கிடந்த மதவாத பா.ஜகவுடன் கைகோர்த்து அவர்கள்
துணையுடன் பிரதமரானர். மதவாதக் கட்சி தன்னை 80 எம்.பி.களுடன்
பலப்படுத்திக் கொண்டதுடன் தமக்கு ஆதரவான அதிகாரிகளை
நிர்வாகத்துக்குள் நுழைத்துக் கொண்டது.
மண்டல் கமிஷன் விசயத்தில் / பாபரி மஸ்ஜித் சம்பந்தமான கொள்கைப்
பாட்டில் பா.ஜ.க., தான் யார் என்பதை அவருக்கு உணர்த்தியது.
அவர் பதவியிறக்கப் பட்டார்; ஓரங்கட்டப் பட்டார். இங்கே நினைவூகூறத்தக்கதும்,
மறக்க முடியாத விசயமும் காங்கிரஸ¤க்குச் செய்த துரோகமும்,
பி.ஜே.பி க்கு அபார அரசியல் பலத்தைக் கொடுத்ததுமாகும். இவ்விரண்டும்
இந்திய அரசியலில் பா.ஜ.க. வுக்கு ஏறுமுகத்தைக் கொடுத்ததுடன்
மத்திய அரசையும் அவர்கள் கைக்குக்
கொண்டு வந்தது.
ஆக, பி.ஜே.பி. வலிமை பெற்றதற்கும் அது ஆட்சிக்கு வந்து அதன்
காரணமாக நாட்டில் ஏற்பட்ட அத்தனை பாதிப்புக்களுக்கும் பிரதான
காரணம் வி.பி.சிங்கே என்று அடித்துக் கூறமுடியும்!
வி.பி. செய்த துரோகம் அதிகமாக பாதிப்பேற்படுத்தியது உத்தரப்பிரதேச
அரசியலில் தான். அங்கு அக்கட்சி
இன்னமும் கூட நான்காம் இடத்தில்தானிருக்கிறது.
ராஹ¤லின் பிரவேசம் அங்கு கொஞ்சம் மாற்றத்தை ஏற்படுத்தி வந்தாலும்
அது பழைய வலிமையைப் பெற வேண்டுமானால் முலாயம்சிங் மற்றும்
மாயாவதியை பின்னுக்குத் தள்ள வேண்டும்.
இந்த நேரத்தில் வி.பி.சிங் ஜனமோர்ச்சாவைத் தொடங்கியிருக்கிறார்.
அதன் பிரதான நிர்வாகப் பொறுப்பில் நடிகர் ராஜ் பாப்பர் . இவர்
முலாயமின் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர். கட்சி மாறுவதிலும்
அரசியல் வியாபாரத்திலும் கில்லாடியான அஜீத்சிங்கும் துணை சேர்ந்திருக்கிறார்.
அண்மைக்காலமாக சோனியா பற்றி வி.பி. சிங் தெரிவித்துவரும் கருத்துக்கள்
அவர் ராஜீவுக்கு இழைத்த தவறுகளை உணர்ந்தது போலவே உள்ளன.
சமீபத்தில் வி.பி.சிங்கின் 75-ம் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
அதற்கு ராம்விலாஸ் பாஸ்வான் வீட்டில் ஒரு விருந்துபசரிப்பு
நடத்தப்பட்டது. மூன்றாம் அணி பற்றிய பேசுக்களை கம்யூனிஸ்டுகள்
கிளப்பி வரும் இந்த நேரத்தில் இந்த விருந்து நிகழ்ச்சி முக்கியமான
ஒரு அரசியல் நிகழ்ச்சியாகப் பேசப்பட்டது. சோனியா இதில் கலந்துகொள்ளாவிட்டாலும்
பிரதமர் கலந்து கொண்டிருக்கிறார்.
வி.பி. சிங் உண்மையில் இந்திய அரசியலில் ஒரு ஆரோக்கியமான சூழ்நிலை
ஏற்படவேண்டும் என நினைத்தால் -
மதச் சார்பற்ற சக்திகளை எட்ட நிற்க வைக்க வேண்டும் என நினைத்தால்,
அவர் இப்போது காங்கிரஸை பலகீனப் படுத்தும் எந்தச் செயலையும்
செய்யக் கூடாது.
மாறாக அவர் முன்பு தாம் செய்த தவறுக்குப் பரிகாரம் தேடுவது
போல காங்கிரஸை வலுப்படுத்த உதவ வேண்டும்- குறிப்பாக உத்தரப்
பிரதேசத்தில்.
அது அவரை ஒரு அரசியல் தீர்க்கதரிசியாக வரலாற்றில் பதிவு செய்யும்.
சோர்ந்து கிடந்த மதச் சார்பு சக்திகள் புனர்ஜன்மம் பெற உதவிய
அவரே அச்சக்திகள் மீண்டும் பலகீனமடைய உதவிட வேண்டும்.
ஏனெனில், நாட்டுக்கு இப்போதைய அவசரத் தேவை மூன்றாம் அணி அல்ல.
காங்கிரஸின் தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி அரசு எக்காரணத்தை
முன்னிட்டும் பலகீனப்பட்டு விடாமல்
இருப்பதும்; அது வலிமையானதாக நிலைக்க வேண்டும் என்பதுமே!
நன்றி : நர்கிஸ்
ஆகஸ்ட் 2006 இதழ்
Refer
this Page to your friends
|