|
Refer
this Page to your friends
தூக்குத் தண்டனை
சத்தாமுக்கு! வாக்குத்தண்டனை
புஷ்ஷ¤க்கு!
'சத்தாம் ஹ¤ஸைன் என்ற சர்வாதிகாரி பேரழிவு ஆயுதங்களை
வைத்திருக்கிறார் ; அல்காயிதாவின் ஒசாமா பின் லேடனுடன்
தொடர்பு வைத்திருக்கிறார்; உலகமும் - குறிப்பாக
அமெரிக்காவும் சத்தாம் இருக்கும் வரை பாதுகாப்பாக இராது'
என்று கூறி , ஐக்கியநாடுகள் சபையின் அனுமதியையும்
பொருட்படுத்தாமல் தன்னிச்சையாக ஈராக் மீது போர் தொடுத்தன
அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும்!
ஆறு லட்சம் மக்கள் அக்கிரமமாகக் கொன்றொழிக்கப் பட்டார்கள்
- படுகிறார்கள்!
'ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இல்லை; அல்காயிதாவுடன்
சத்தாமுக்குத் தொடர்பிருந்ததற்கான ஆதாரங்களே இல்லை ' என்று
அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரப் பூர்வமாக அறிக்கையே
விட்டது மட்டுமல்லாமல் , அமெரிக்க மக்களில் பெரும்பாலோர் -
ஏன் உலகமக்களில் பெரும்பாலோரும் கூட சத்தாமைவிட
புஷ்ஷால்தான் அமெரிக்காவுக்கும் உலகுக்கும் ஆபத்து என்று
கருத்துக் கொள்ள ஆரம்பித்தார்கள்!
வந்தது அமெரிக்க இடைத்தேர்தல், நவம்பர் 7-ம் தேதி !
அதற்கு முன் சத்தாம் மீதான வழக்கின் தீர்ப்புக்கு நாள்
குறிக்கப் பட்டது!
144 பேர் கொல்லப் பட்ட வழக்கு அது; அதுவும் கூட சத்தாம்
அமெரிக்காவுக்கு நண்பராக இருந்த போது நடை பெற்ற சம்பவமே!
இருந்தும்.....
அவருக்கு 'மரண தண்டனை நிச்சயம்' என்று செய்தி
கசியவிடப்பட்டது!
அவ்வாறே 'தூக்கில் போட்டுக் கொல்லவேண்டும்" என்று
தீர்ப்பும் வழங்கப் பட்டது!
அந்தத் தீர்ப்பால் அமெரிக்க மக்கள் மகிழ்ந்து
அள்ளிப்போடுவார்கள் வாக்குகளை தனது குடியரசுக்குக்
கட்சிக்கு என்பது அதிபர் புஷ்ஷின் எதிர்பார்ப்பு!
அள்ளித்தான் போட்டார்கள் அமெரிக்க மக்கள் ! ஆனால்,
புஷ்ஷின் கட்சிக்கல்ல; அவரது எதிரிக்கட்சியான ஜனநாயகக்
கட்சிக்கு!
வாக்கு வாங்கும் பேராசையில் தூக்குத் தீர்ப்பை விரைந்தெழுத
வைத்தார் புஷ்!
ஆனால் .......
தூக்குக் கயிறு
சத்தாமின் கழுத்தை நெறிப்பதற்கு முன்
புஷ்ஷின் கழுத்தை நெறுக்கிவிட்டது அமெரிக்க மக்களின்
வாக்குக் கயிறு!
இதுவரை செய்தது போல...... இனி புஷ்ஷால்
கொக்கரிக்க முடியாது ; குரலுயர்த்திப் பேசவும்கூட முடியாது
!
காரணம் .......
மக்கள் சபையும் பிரதிநிதிகள் சபையும் இப்போது ஜனநாயகக்
கட்சியின் கையில்!
அவ்விரு சபைகளும் இடும் உத்தரவுப் படிதான் இனி புஷ்
இயங்கியாக வேண்டும்!
இன்னும் இரண்டாண்டுகளுக்கு அவர் ஜடமாகத்தான் ....
முடமாகத்தான் நடமாடியாக வேண்டும்!
காரணம் .....
'ஈராக்கின் மீதான அணுகுமுறை கண்டிப்பாக மாறியாக வேண்டும் '
எனக் கொள்கை முழக்கமிடுகிறார் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்
பட்ட சபாநாயகர் திருமதி பெலோஸி !
தூக்குத்தண்டனை கிடைத்த சத்தாமின் தலை கொஞ்சமும்
குனியவில்லை!
அவரது குரல் ! நடுங்கவில்லை! ஒடுங்கவில்லை !
நிமிர்ந்து நின்று நெஞ்சை உயர்த்தி 'அல்லாஹ் பெரியவன்'
என்று வீரமுழக்கமிடுகிறார் அவர் !
ஆனால்......
வாக்குத்தண்டனை கிடைத்த புஷ்ஷின் தலை தாழ்ந்து விட்டது!
குரல் நடுங்கி ஒடுங்கி 'இனி ஈராக்கில் அமைதி நிலவ ஈரானும்
சிரியாவும் உதவ வேண்டும்' என்று ஓலமிடத் தொடங்கிவிட்டது!
அராஜகமும் ஆணவமும் மேவ 'இவ்விரு
நாடுகளும் அழிவின் மைய அச்சு'
(Axis of Evil) என்று அன்று முழங்கிய வாய் இப்போது மரண
அடிபட்ட அவஸ்தையில் அலறுகிறது!
உண்மையில் எதுதான் பெரியது?
தூக்குத் தண்டனையா?
வாக்குத் தண்டனையா?
உலகம் வியந்து கேட்கிறது!
நன்றி : நர்கிஸ்
டிசம்பர் -2006 இதழ்
Refer
this Page to your friends
|