பயணக் கட்டுரைகள்

 
 

சித்தார்கோட்டையைச் சேர்ந்த டாக்டர் சையித் இபுராஹிம் அவர்கள் ஹிமானா சையித் என்ற பெயரில் உலகத்தமிழ் மக்களிடையே பிரபலமாகி உள்ளார்கள்.

தனது தமிழ் இலக்கியம், சமதாயச் சேவையின் காரணமாக பல்வேறு விருதுகள் பெற்ற அவர்கள் தனது சேவையின் ஓரு பகுதியாக பாரதம் மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர், புருனை, இலங்கை, ஹாங்காங், தாய்லாந்து, அரபிய அமீரகம், சவுதிய அரேபியா, குவைத், போன்ற நாடுகளுக்கும் சென்றுள்ளார்கள்.

இந்தப் பகுதியில் தனது வெளிநாட்டு பயணங்களின் அனுபவங்களை சமுதாய வளர்ச்சிக் கண்ணோட்டத்துடனும் சகோதரப் பாசத்துடனும் சுவைபட தர உள்ளார்கள்.

வாசகர்கள் தங்களது கருத்துக்களை இந்த தளத்திற்கு அனுப்பினால் இந்த தளத்தில் பதிவோம். (Click here to write your comments)

  • அன்பார்ந்த புருனை வாழ் தமிழ் நெஞ்சங்களுக்க

    உங்களது அன்பிலும் அபூர்வமான உபசரிப்பிலும் நெகிழ்ந்து நிற்கும் சகோதரன் ஹிமானா சையித்தின் அன்பும் வாழ்த்தும்!

    நான்கு நாட்கள் மலேசியாவில் தங்கிவிட்டு இன்று சிங்கப்பூர் திரும்பினேன்.

    ஒரு வாரப் பயணம்தான் அது.

    என்றாலும் அது தந்துள்ள நிறைவும் அமைதியும் அல்லாஹ்வின் முன் நெக்குருகி நிற்க வைக்கின்றன.

    இன்ஷா அல்லாஹ் விரைவில் புருனைப் பயண அனுபவங்களை இந்த வலைத்தளத்தில் எழுதவுள்ளேன்.

    உங்கள் அன்புக்கும் அரவணைப்புக்கும் மீண்டும் ஒருசேர நன்றி சொல்லி -
    ஹிமானாசையித்


நண்பர்களுக்கு இந்தப் பக்கத்தை அறிமுகப்படுத்த...

 
 

Chittarkottai.com