|
Refer this Page to your
friends
பகுதி
-21
அரைமணி நேரத்தில் சிஸேரியன் ...ஓப்பன் ஈத்தரில் மயக்கமருந்து!
இரண்டு மாதங்களுக்கு முன் மலேசியாவின் பழம்பெருமை வாய்ந்த பினாங்கு நகரின்
வரலாற்றுச் சிறப்புமிக்க தாவூத் ரெஸ்டாரண்ட்டின் இ¨ணைப்புக் கட்டடத்தில் அதன் அதிபர்
அண்ணன் அலியார் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த - பினாங்கு ஈமான் பேரவை
நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் விருந்து நிகழ்ச்சி.
அப்போது ஓர் இளைஞர் ஸலாம் சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தார். அவர் எனது ஊரைச்
சேர்ந்தவர்; உறவினர். அவரை எதிர்பாராமல் பார்த்ததும் அதற்கு முந்தைய நாள் தினமலர்
ஈ.பேப்பரில் இராமனாதபுரம் மாவட்டச் செய்திகள் பகுதியில் செய்யது அம்மாள்
பொறியியற்கல்லூரி நிகழ்வுகள் குறித்த செய்திகளை வாசித்து - கல்வித்தந்தை என்று
போற்றப்படுகிற மர்ஹ¥ம் டாக்டர் ஈ.எம். அப்துல்லாஹ் அவர்களைப் பற்றிய பசுமையான
நினைவுகளை அசைப்போட்டது உடன் முன் வந்து நின்றது; ஊற்றுக்கண் திறந்து கொண்டது.
அது 1973 - ம் ஆண்டின் இறுதிப் பகுதி அல்லது 1974 - ம் ஆண்டின் கடைசியாக இருக்கலாம்.
அடைமழை காலம் ; வைகையின் வெள்ளப் பெருக்கில் சாலைகள் பழுதடைந்திருந்தன.
மின்சாரத்தடையில் ஊர் இருளில் மூழ்கியிருந்தது.
நடுநிசியில் ஓர் அவசர அழைப்பு. பிரசவ கேஸ். டார்ச் லைட் உதவியுடன் நோயாளியின்
வீட்டுக்குச் சென்று சோதித்தேன். குழந்தை தாறுமாறாகக் கிடந்தது. ஏற்கனவே நீர்க்குடம்
உடைந்திருந்தது. உடனடியாகக் குழந்தை பிறக்காவிட்டால் குழந்தைக்கும் தாய்க்கும்
ஆபத்து என்ற நெருக்கடி நிலைமை. விரைவில் சுகப்பிரசவமாவதற்கான வாய்ப்பு இல்லை.
நிலைமையின் நெருக்கடியில் உடனடியாக பேஷண்டை இராமனாதபுரத்துக்குக் கொண்டு சென்று
சிஸேரியன் செய்தாக வேண்டும்.
ஊரில் ஒரேயரு டாக்ஸி . போன் எல்லாம் அப்போது கிராமத்தில் இல்லை. உறவினர்களிடம்
நிலைமையின் அவசரத்தை விளக்கிச் சம்மதம் பெற்று டாக்ஸிக்கு ஆள் அனுப்பினேன்.
நல்ல நேரம், டாக்ஸி வெளியில் செல்லாமல் இருந்தது. அரை மணி நேரத்தில் டாக்ஸியைக்
கொண்டு வந்து அடுத்த ஒரு மணி நேரத்தில் செய்யதம்மாள் மருத்துவ மனையில் அட்மிட்
செய்தேன். டாக்டர் அப்துல்லாஹ் வேறொரு அவசர நோயாளிக்காக மருத்துவமனையில் இருந்தார்.
"உடனடியாக சிஸேரியன் செய்தாகனும்ப்பா ... குழந்தை ஆபத்தான நிலையில் இருக்கிறது...
ரொம்ப நேரம் தாங்காது... என்னோட அஸிஸ்டெண்ட் டாக்டர் (அவர் பெயர் நினைவில்லை; ஒரு
முதிய வயதுப் பெண் டாக்டர்) இன்றைக்கு லீவ் போட்டுவிட்டு வெளியூர் சென்றிருக்கிறார்.
ஆப்பரேஷன் செய்ய நான் ரெடி .. ஆனால் அனெஸ்தீஸியா ( மயக்க மருந்து) கொடுக்க டாக்டர்
இல்லை ... நீ அதற்கு ஒப்புக் கொண்டால் உடனடியாகச் செய்யலாம் ... ரிஸ்க்
எடுத்துத்தான் செய்யனும் ... ஆனால் செய்யாவிட்டால் தாய்க்கும் குழந்தைக்கும்
உத்தரவாதமில்லை.." என்றார் டாக்டர்.
யோசிக்கவோ கருத்துப் பரிமாறிக்கொள்ளவோ அவகாசமில்லை.
மயக்க மருந்து கொடுக்க 'பாயில் அப்பரட்டஸ்' அப்போது இராமநாதபுரத்தை
எட்டியிருக்கவில்லை. ஈத்தர் என்ற மருந்தைத்தான் உபயோகித்தாக வேண்டும். ஒரு 'காஸ்துணி'
பேடை நோயாளியின் முகத்தில் போர்த்தி கொஞ்சம் கொஞ்சமாக ஈத்தரை ஊற்ற வேண்டும். சில
நிமிடங்களுக்கொருமுறை நோயாளியின் மூச்சு - நாடித்துடிப்பு -இதய இயக்கம் போன்றவற்றைத்
தொடர்ந்து கண்காணித்துக் கொண்டு நான் மயக்க மருந்து கொடுக்க , டாக்டர் அப்துல்லாஹ்
சுறுசுறுப்பாக இயங்கி அரை மணிநேரத்தில் அறுவை சிக்கிச்சை செய்து குழந்தையை வெளியில்
எடுத்தார்.
குழந்தை உடனே அழவில்லை. பிரசவப் பாதையின் கடைசிப் பகுதியில் மாட்டிக்கொண்டு அதிக
நேரம் இருந்ததால் குழந்தை உடனே சுவாசத்தைத் தொடங்கவில்லை.
மயக்கமருந்தைக் கண்காணித்துக் கொண்டே , அடுத்த சில நிமிடங்கள் நானும் ஸ்டா•ப் நர்ஸ¤ம்
இணைந்து போராடி , குழந்தையை நார்மல் நிலைக்குக் கொண்டு வர, டாக்டர் ஆப்பரேஷன் செய்த
பகுதியைத் தைத்து முடித்தார்.
குழந்தை நார்மலாக சுவாசிக்கத் தொடங்கியதும் , தாய் மெல்ல மெல்ல இயல்புக்குத்
திரும்பியதும் எங்களுக்குப் பெரும் நிம்மதியைத் தந்தது.
அப்படியான ஒரு அவசர சிகிச்சையில் - மிக நெருக்கடியான சூழ்நிலையில் பிறந்த
குழந்தைதான் பினாங்கில் சந்தித்த அந்த முஹம்மது இபுராஹிம் என்ற இ¨ளைஞர்.
இப்படித்தான் கிராமிய மருத்துவத் தொழில்முறையில் - நவீன மருத்துவ சிகிச்சை
உபகரணங்கள் கிராமப்புறங்களை எட்டாத அந்தக் காலத்தில் எத்தனை எத்தனை நெருக்கடிகளை/
சவால்களைச் சந்தித்த அனுபவங்கள்!
உயிருக்கு அபாயமேற்படுத்தும் பாம்பு கடிகள் / திருக்கை மீன் குத்தல்கள் /
மாரடைப்புகள் / பக்கவாதங்கள் என்று எத்தனையெத்தனை அவசர கேஸ்களுக்கு
சிகிச்சையளித்ததும் , முதலுதவி செய்து பாதுகாப்பாக நகர்ப்புற மருத்துவ மனைகளுக்கு
மேற்சிகிச்சைக்காக அனுப்பி வைத்ததுமான அனுபவங்களும்!
ஊற்றெடுத்துப் பாயும் அந்த எண்ணவோட்டங்கள்தான் எத்தனை அலாதியான மனநிறைவினைத்
தருகின்றன!அல்ஹம்துலில்லாஹ்!
மூவாயிரம் மக்களை மட்டுமே கொண்ட - நான் பிறந்து வளர்ந்த அந்த தாய்க்கிராமத்தில் என்
மருத்தவத் தொழில் வாழ்வை அல்லாஹ் எழுதினான். அதன் பின்னணியில் நான் 10 வயதாய்
இருந்த போதே இறைவனிடம் மீண்ட என் வாப்பா மல்லாரி அப்துல் கனி மரைக்காயர் அவர்களது
வஸீயத்தும் , அதைத் தக்க தருணத்தில் நினைவூட்டி என்னை அவ்வூரில் தொழில் ரீதியாக நிலை
நிறுத்திய என் அம்மா உம்மு ஹபீபா அவர்களும்தான்!
இன்று கடல் கடந்து வெளிநாட்டில் வாழ்ந்தாலும் மறக்க முடியாத அந்த 33 ஆண்டுகால தொழில்
வாழ்க்கையும் - அதனை மையப் புள்ளியாக வைத்துச் செயல்பட்ட களப்பணி ஊழியமும் தான்
பிராணவாயு போல ஆசுவாசம் தந்துகொண்டிருக்கிறது. நகரும் ஒவ்வொரு விநாடியும் அந்த என்
மண் வாசனையின் நிறைவைத்தான் நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன.
நன்றி: சிந்தனை சரம்
- பிப்ரவரி -2007
Refer
this Page to your friends
|