Google   within Chittarkottai.com All the Web

Font Help

Contact us

eGreetings cards

Refer to Friends / Family

Visitors' Sites

GuestBook

 

 

தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?

தற்போது தேர்வுகாலம், பல்வேறு போட்டி தேர்வுகள், அரசு நடத்தும் 10 ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு தேர்வுகள் என பல்வேறு தேர்வுகள் மாணவ மாணவிகளை நெருங்கி கொண்டு இருக்கின்றன. இந்த சூழ் நிலையில் நாம் நுழைவு தேர்வுகளிலும், அரசு பொது தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண் எடுத்தால் தான், நாம் நினைக்கும் படிப்பை குறைவான செலவில் படித்து, நாம் நினைத்த வேலைக்கு போக முடியும். இந்தியாவை பொருத்தவரை நாம் எடுக்கும் மதிப்பெண் தான் நம்முடைய அறிவு திறனை தீர்மானிக்கும் அளவுகோலாக இருக்கின்றது. எனவே நாம் கல்வி துறையில் முன்னேற அதிகமாக மதிப்பெண் எடுப்பது கட்டாயமாகின்றது. முழுமைக்கு இங்கே கிளிக் செய்யவும


வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்

ஆஹா! இதோ பார்! சூப்பர் ஃபிகர்! ஸ்டில் போடப்பா என்று ஒருவர் சொல்கின்றார். மற்றொருவர் ரீவைண்ட் பண்ணப்பா! தூள் பரத்துகிறது என்கிறார். ஏ இது யாரப்பா? இவர் சம்சுகனி சம்சாரம். அது யாரப்பா? ஆள் அசத்தலா இருக்கே? இது நம்ம காதர் தங்கச்சி!

தங்களுக்கு முன்னால் ஓடிக் கொண்டிருக்கும் வீடியோ காட்சிகளுடன் மேற்கண்ட வீடியோ கமென்டரி உரையாடல்களும் கலகலப்பாக ஓடிக் கொண்டிருக்கும். இவை எல்லாம் எங்கு நடக்கின்றன என்கிறீர்களா? சாதி சமய பேதமற்று எம்மதமும் சம்மதம் என்ற கோட்பாட்டின்படி சர்வ சமயத்தவரும் சங்கமமாகி தங்கியிருக்கும் அரபு நாட்டின் அறைகளில் தான்.

(அரபு நாடு என்றவுடன் அங்கு பணிபுரியும் எல்லோருமே இப்படித் தான் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. மார்க்கப் பணிகளுக்காகவும், மார்க்கப் பிரச்சாரத்தைக் கேட்பதற்காகவும் மட்டுமே தங்கள் விடுமுறை நாட்களை அர்ப்பணிக்கும் சகோதரர்களும் அரபகத்தில் இருக்கின்றார்கள். இங்கு நாம் குறிப்பிடும் சங்கதிகளும் அரபகத்தில் நடக்காமல் இல்லை. வீடியோவில் பெண்கள் போஸ் கொடுப்பதால் ஏற்படும் விளைவுகளைச் சுட்டிக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்) முழுமைக்கு இங்கே கிளிக் செய்யவும


 

ரூ10 செலவில் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு

இன்றய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரககல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது.

இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது.
அந்தளவுக்கு வலி பின்னி பெடலெடுத்து விடும். இரண்டு நாட்கள் முன், சக பதிவர் ” தோழி” என்பவரின் பதிவு படித்தேன்.

அதை படித்ததிலிருந்து, நான் எனக்கு ஏற்பட்ட சிறுநீரகக்கல் பிரச்சினையை எப்படி `10 செலவில் தீர்வு கண்டேன் என்பதை நாலு பேருக்கு தெரிவிக்கலாம் என்பதெ இந்த பதிவுன் நோக்கம்.

எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின் அளவு கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.முழுமைக்கு இங்கே கிளிக் செய்யவும


நபி வழியில் முழுமையான ஹஜ் வழிகாட்டி 2

இஹ்ராம் அணிந்து மதீனாவின் எல்லையைக் கடப்போர் கவனத்திற்கு
மதீனாவின் எல்லையிலுள்ள ‘துல்ஹுலைஃபா” பள்ளிவாசல் ‘வாதில் அகீக்” எனும் புனித பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. நபிகள் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காக அவ்விடத்தில் நிய்யத் செய்து அதைக் கடக்க முற்பட்ட போது வானவர் ஜிப்ரீல் (அலை) வந்து,

صحيح البخاري)) صَلِّ فِي هَذَا الْوَادِي الْمُبَارَكِ

‘இந்தப் புனித ஓடையில் தொழுவீராக” எனக் கூறினார்கள். (புகாரி). என்ற ஹதீஸை அடிப்படையாகக் கொண்டு மதீனாவின் எல்லையில் இருந்து ‘இஹ்ராம்” அணியும் ஒருவர் ‘துல்ஹுலைஃபா” பள்ளியில் இரண்டு ரகஅத்துக்கள் தொழ வேண்டும்.

வேறு எல்லையில் இருந்து செல்வோர் இந்த இரு ரகஅத்துக்களையும் தொழ வேண்டியதில்லை. மதீனா எல்லைக்கென வந்துள்ள ஹதீஸை அனைத்து எல்லைக்கும் பொதுவான ஹதீஸாகக் கொள்ள முடியாது முழுமைக்கு இங்கே கிளிக் செய்யவும


பிலால் (ரழி)

பிலால் (ரழி) அவர்கள் அபிஷீனிய நாட்டைச் சார்ந்த நீக்ரோ அடிமையாவார். சில பேரித்தம் பழங்களுக்கு அடிமையாய் இருந்தவர். பிலால் (ரழி) யின் எஜமான் உமைய்யா பின் கலஃப் என்பவன். இவன் பனு ஜுமஹ் வம்சத்தை சார்ந்தவன்.

பிலால் (ரழி) அவர்களின் தந்தைப் பெயர் ரபாஹ். தாயாரின் பெயர் ஹமாமா இவரும் அடிமையாய் இருந்தார்கள். அடிமையாயிருந்த பிலால் (ரழி) ஒட்டகம் மேய்த்துக் கொண்டிருந்தார். அன்றைய அரபு உலகில் புரையோடிப் போயிருந்த பல தெய்வக் கொள்கையிலும், புரோகிதத்திலும், தனிமனித வழிபாட்டிலும் திளைத்திருந்த மக்களிடம் நபி(ஸல்) அவர்கள் ஏகத்துவக் கொள்கையை எடுத்துரைத்த போது அதனை இதயப்பூர்வமாக ஏற்றுக்கொண்டவர்களில் பிலால் (ரழி) அவர்களும் ஒருவர். அபரிதமான இணைவைப்பாளர்களுக்கு இடையில் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் இருந்த ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்டோரின் நிலை பரிதாபகரமாக இருந்தது. இணைவைப்பாளர்களின் கொடுமைக்கும் சித்தரவதைக்கும் ஆளாயினர்.
முழுமைக்கு இங்கே கிளிக் செய்யவும


 சுவனத்திற்கு செல்லும் எளிய வழிகள்!

சுவனத்தில் அநாதைகளை ஆதரிப்போரின் உன்னத நிலை! 
‘நானும் அநாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம்’ என்று கூறியபடி நபி (ஸல்) அவர்கள் தங்களின் சுட்டு விரலாலும் நபி (ஸல்) விரலாலும் (சற்றே இடைவெளிவிட்ட) சைகை செய்தார்கள். (புகாரி)
 
நோய் விசாரிக்கச் சென்றால் சுவனத்தில் ஒரு தோட்டம்! 
ஒரு முஸ்லிம் நோயுற்ற முஸ்லிமை விசாரிக்கக் காலையில் சென்றால் அவருக்காக ஏழாயிரம் வானவர்கள் மாலை வரை அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறார்கள். அவ்வாறே மாலையில் நோய்விசாரிக்கச் சென்றால் மறுநாள் காலை வரை ஏழாயிரம் வானவர்கள் அவருக்காகப் பிரார்த்திக்கிறார்கள். அவருக்கு சுவனத்தில் ஒரு தோட்டம் இருக்கும். (திர்மிதீ)'முழுமைக்கு இங்கே கிளிக் செய்யவும


வாருங்கள் பரகத்தைப் பெருவோம்

அல்லாஹ் யாருக்காவது அதிகமான செல்வத்தை வழங்கி விட்டால் அவனுக்கு பரகத் கிடைத்துவிட்டது என்று நம்மில் அதிகமானவர்கள் கருதிக் கொண்டு இருக்கிறார்கள். அல்லாஹ்; அதிகமான செல்வத்தை வழங்கினால் அது பரகத்தாக ஆகிவிடாது.பரகத் என்றால் ஒரு குறிப்பிட்ட பொருளில் அதை விட அதிகமாக பலனைப் பொருவது தான் பரகத் என்னும் அல்லாஹ்வின் மறைமுகமான அருள் ஆகும்.

உதாரணமாக நாம் ஒரு மாதத்திற்கு 5000 ருபா சம்பாதிக்கிறோம் என்றால் அந்த பணத்தை வைத்து அதைவிட அதிகமான சம்பாதித்தால் அதை வைத்து என்ன வேளை செய்வோமோ அந்த வேளைகளை இந்த 5000 ருபாவை வைத்து செய்வோம்.நாம் சிலரைப்பார்க்களாம் அவர்கள் குறைந்த அளவில் தான் சம்பாதிப்பார்கள் ஆனால் அதை வைத்து நிம்மதியாக உண்ணுவார்கள் நிம்மதியாகப் பருகுவார்கள் தங்களுடைய குழந்தைகளை நல்ல முறையில் படிக்கவும் வைப்பார்கள் எந்த கடன் தொல்லைகளும் இல்லாமல் நிம்மதியாகவும் வாழ்வார்கள்.இது தான் அல்லாஹ்வின் மறைமுகமான அருள். இன்னும் சிலரைப் பார்த்தால் அவர்கள் பல ஆயிரம்கள் சம்பாதிப்பார்கள் ஆனால் அவர்களுடைய வாழ்கையில் நிம்மதியைக்காண முடியாது.கடன் தொல்லைகளும் இருந்து கொண்டே இருக்கும்.இதற்கு காரணம் அல்லாஹ்வின் மறைமுகமான அருள்இல்லாதது தான்.'முழுமைக்கு இங்கே கிளிக் செய்யவும


மரங்களை வெட்டுங்கள்

அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்' தான் அது. ( பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை வெட்டிகொண்டே விளக்கம் சொல்வாரே ! )

நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை இங்கு தூவியதாக ஒரு கருத்தும் , கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம் ) வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன. உண்மை எதுவென்று ' யாம் அறியேன் பராபரமே'முழுமைக்கு இங்கே கிளிக் செய்யவுமநல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள்

உண்மையில் நல்லொழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்குவதற்கு பெற்றோர்கள் முயற்சி செய்ய வேண்டும், இதுவே சமூகத்;தின் எதிர்பார்ப்புமாகும்.

பெற்றோர்களைப் பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கும், குணாதிசயங்கள் இருக்கும். இருப்பினும், குழந்தைகளை இப்படித் தான் நடத்த வேண்டும் என்ற பொதுவானதொரு வழிமுறை இருக்கின்றது. அதனைப் பின்பற்றினால் ஒழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்க முடியும். நாம் நினைத்தமாதியெல்லாம் குழந்தைகளை வளர்த்து விட முடியாது. திட்டமிட்ட அடிப்படையில் அவர்களை வழிநடத்தும் பொழுது, நல்லபல விளைவுகள் ஏற்படும். முழுமைக்கு இங்கே கிளிக் செய்யவும


மரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள்

ஒரு மனிதன் மரணத்திற்குப் பின் அவரது அமல்களில் மூன்றைத் தவிர மற்றவை எல்லாம் செயலற்றவை ஆகி விடுகின்றன. அம்மூன்று செயல்கள்:---
1.சதக்கத்துல் ஜாரியா 2.பலன் தரும் கல்வி 3.பெற்றோருக்காக பிரார்த்திக்கும் நேர்மையான (ஸாலிஹான) பிள்ளைகள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்:முஸ்லிம்

ஒரு முஸ்லிமின் மரணத்தோடு அவரது செயல்கள் முற்றுப்பெறுகின்றன. நற்செயல்கள் செய்து நன்மையைத் தேடிக்கொள்வதும் இயலாமல் ஆகிவிடுகின்றது. ஆயினும் அவர் உயிரோடு இருந்த காலத்தில் செய்த நற்செயல்களில் சில மரணத்திற்குப் பின்னரும் நிரந்தரமாக என்றென்றும் எந்நோக்கத்துடன் அச்செயல் நிறைவேற்றப்பட்டனவோ அந்நோக்கங்கள் நிறைவேறிக் கொண்டு இருக்கும் காலமெல்லாம் அவர் மரணமடைந்த பின்னரும் நன்மைகள் சேர்ந்து கொண்டிருக்கும். உதாரணமாக பள்ளிவாசல்கள், கல்விக்கூடங்கள், மக்கள் குடிநீர் பெற தோண்டிய கிணறுகள், மருத்துவமனைகள், அநாதை இல்லங்கள், தர்ம ஸ்தாபனங்கள், பலன் தரும் விஞ்ஞான கண்டு பிடிப்புகள் இவையாவும் அத்தகையனவாகும்.

முழுமைக்கு இங்கே கிளிக் செய்யவும


  

கொள்ளையர் மத்தியில் ஒரு கொள்கையாளன் !

தனியார் நிறுவனங்களில், கொள்ளை லாபத்துடன் வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் ஒரு முக்கியமான துறை மருத்துவத்துறை. உலக வர்த்தக ஒப்பந்தம் என்கிற போர்வையில் அமெரிக்கா மாதிரியான வளர்ந்த நாடுகளில் விற்கப்படும் விலைகளுக்கு ஈடாக நம் நாட்டிலும் விற்று வருகிறார்கள். நடுத்தர குடும்பத்தினரே வாங்கிட தடுமாறும் நிலையில்,கடைநிலை மக்களின் நிலைமையை கேட்கவே வேண்டாம். இந்த லட்சணத்தில் இந்த மருந்து கம்பெனிகள் நடத்தும் ஆராய்ச்சிகளுக்கு நம் மக்களை சோதனை எலிகளாக பயன்படுத்தும் கொடுமையும் நடந்து வருவது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். இம்மாதிரியான ஆராய்ச்சிகளுக்கு ஆகும் செலவும் நோயாளிகள் தலையில் தானே விழும்.

இப்படி மக்களின் உயிருடனும் உடலுடனும் மனசாட்சியே இல்லாமல் கொள்ளை லாபத்துக்காக விளையாடும் மல்டிநேஷனல் கம்பெனிகளுக்கு Protectionism என்ற சர்வதேச வர்த்தக ஒப்பந்தம் துனை போகிறது என்றால் மிகையில்லை
தனியார் நிறுவனங்கள் இப்படி தன்னிச்சையாக மருந்துகளின் விலையை உயர்த்திக் கொள்ளையடிப்பது நமது அரசுக்கு தெரிந்தாலும், கண்டும் காணாமல் இத் தனியார் கொள்ளைக்கு அரசும் உடந்தையாக இருந்து வருவது கொடுமையான கொடுமை..

.முழுமைக்கு இங்கே கிளிக் செய்யவும்


முஸ்லிம் மாணவியர் விடுதியில் சேர விண்ணப்பம்

சென்னை: சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் இயங்கும் முஸ்லிம் பள்ளி, கல்லூரி மாணவியர் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: முஸ்லிம் மாணவியர் இடைவிடாது கல்வி பயிலும் நோக்கில் சிறுபான்மையினர் நலத்துறை வேலூர் வாணியம்பாடி, திருச்சி வைகுண்டகோஷ்புரம், திண்டுக்கல் பேகம்பூர், கோவை சிட்கோ, சுந்தரபுரம் மற்றும் திருநெல்வேலி பாளையங்கோட்டையில் அரசு முஸ்லிம் பள்ளி, கல்லூரி மாணவியர் விடுதியை இயக்கி வருகிறது. இந்த கல்வியாண்டில் இவ்விடுதிகளில் மாணவியர்
சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.  .முழுமைக்கு இங்கே கிளிக் செய்யவும்


இறுதிநாள் (கியாமத்) நெருங்குகிறது!!!

உலக முடிவு நாள் எப்பொழுது சம்பவிக்கும் என்று ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு காலகட்டத்திலும் தனக்குள் கேள்வி எழுப்பி கொண்டே இருந்தான். அதற்கு தீர்வாக மனிதர்களுக்கு இறுதிநாளின் அடையாளங்களை நினைவுபடுத்துகிறோம். பொறுப்புடனும், பொறுமையுடனும் படித்து மரணத்தைப் பற்றியும், மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையைப் பற்றியும் பயந்து, சிந்தித்து உலக இறுதி நாளின் நெருக்கத்தில் நாம் இருக்கிறோம் என்பதை நினைவில் நிறுத்தி இறைவனுக்கு மட்டுமே கட்டுப்பட்டு நடப்போமாக என்று எங்களையும், உங்களையும் கேட்டுக்கொண்டு ஆரம்பம் செய்கிறோம்.

இந்த உலகம் நிரந்தனமானது அல்ல. பிறந்ததெல்லாம் இறந்தே ஆகவேண்டும் என்ற நியதியுடைய இவ்வுலகத்தின் அழிவை பற்றி விஞ்ஞானிகள் கூறும் பொழுது :- உலகின் அழிவு துவங்கிவிட்டது. நாம் ஒரு மாய நேரத்தில் வாழ்ந்து கொண்டிருக்றோம். மனித இனம் என்ற சுவடே இல்லாமல் அழிந்தொழியும். பூமியானது தூள்தூளாகி அனைத்து மூலக்கூறுகளும், அணுக்களும் தூசியாகி விண்வெளியில் பறக்கும்' என்று விஞஞானிகள் விஞ்ஞான வளர்ச்சியின் உச்சாணியில் இருந்து கொண்டு ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறார்கள்.

இதனையே இறைவன் 1425 வருடங்களுக்கு முன்பு விஞ்ஞானம் என்றால் என்ன என்று தெரியாத காலகட்டத்திலேயே திருக்குர்ஆனில் கூறும் பொழுது...
.முழுமைக்கு இங்கே கிளிக் செய்யவும்


எதற்கு முன்னுரிமை?

தாம் சார்ந்திருக்கும் இயக்கத்தின் தலைவர் எதைக் கூறினாலும் அதை தலைக்கு மேலே தூக்கிக்கொண்டாடும் இயக்கப்பற்றின் காரணமாக, ஏகத்துவத்தைப் போதிக்கின்றோம் என்று கூறிக்கொண்டே சகோதர முஸ்லிம்களுக்கிடையில் ஒருவருக்கொருவர் கீழ்தரமான வார்த்தைகளால் வசைபாடிக் கொண்டிருடிருக்கும் இயக்கங்களைச் சார்ந்தவர்களின் செயல்பாடுகள் ஒருபுறம்! தம்மை சீர்திருத்தவாதிகள் என்று கூறிக்கொண்டு தவறுசெய்பவர்களைத் தட்டிக்கேட்கின்றோம் என்ற போர்வையில் தமக்குப் பிடிக்காத ஒரு ஒரு குறிப்பிட்ட இயக்கத்தைக் குறிவைத்து அவர்களைக் கடுமையான வார்த்தைகளால் வசைபாடும் இயக்கவெறியை எதிர்கின்ற இயக்க எதிர்ப்பு வெறியை உடையவர்களின் செயல்பாடுகள் மறுபுறம்!

யார் எக்கேடு கெட்டுப்போனால் நமக்கென்ன? நாம் உண்டு! நமது வேலையுண்டு என்று சுயநலத்தின் மொத்த உருவாய் செயல்படுபவர்களின் செயல்பாடுகள் ஒருபுறம்! தர்ஹா, சமாதி வழிபாடுகள், தட்டு, தாயத்து என்று இணை வைப்பின் உச்சத்தில் உழன்றுக் கொண்டிருந்த தமிழக முஸ்லிம்களிடையே ஏகத்துவம் வீறுகொண்டு எழுவதைப் பொறுக்காத ஷைத்தானின் சூழ்ச்சியில் சிக்குண்டு, தவ்ஹீதுவாதிகள் என்று தம்மைத்தாமே அழைத்துக் கொண்டு தமக்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்குப்பவர்களைப் பார்த்து இவர்கள் ஒன்றுபடவே மாட்டார்களா என்று மனம் வெதும்புபவர்கள் மறுபுறம்,

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது போல் குர்ஆன் ஹதீஸைப் போதிப்பவர்களுக்கிடையில் நடைபெறும் இந்தக் குழுச்சண்டைகளினால் குதூகலமடைந்த குராஃபிகளும், ஷிர்க் மற்றும் பித்அத் புரிபவர்களும் வீறுகொண்டெழுந்திருக்கின்றனர்.
.முழுமைக்கு இங்கே கிளிக் செய்யவும்


மகளிர் இட ஒதுக்கீடு: உள் ஒதுக்கீடு ... தாமதம் கூடாது!  - ஹிமானா - தலையங்கம்

லாலுவும், முலாயமும் முறையே பீஹார், உ.பி. மாநில முஸ்லிம்களின் பேராதரவில் ஆட்சியதிகாரம் பெறுவதற்கு வழியமைத்துக் கொண்டவர்கள். அவர்களாகவே 'தங்களுக்குத்தான் என்றைக்கும் முஸ்லிம்களின் ஆதரவு' என்று நினைத்துக் கொண்டு முஸ்லிம் விரோத சக்திகளுடனும் கொஞ்சிக் குலவத் தொடங்கிதன் காரணமாகவும், காங்கிரஸின் ராகுல் காந்தி போன்ற இளந்தலைவர்களின் வாக்குறுதிகளில் நம்பிக்கை பெற்று முஸ்லிம்கள் காங்கிரஸின் பக்கம் மீண்டும் தொடர்புகொள்ளத் தொடங்கியதாலும் அந்த ஆதரவை மீண்டும் பெறும் முயற்சியில் இருப்பவர்கள். எங்கே காங்கிரஸ் இந்த சட்டவடிவின் மூலம் தங்களை செல்லாக்காசாக்கிவிடுமோ என்ற பீதியில் அவைகளில் 'உள்ளொதுக்கீடு கோரி ' ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்; மசோதாவை எதிர்க்கின்றனர். ஆனால் 33% ஒதுக்கீடு நிறைவேறிய பிறகு முஸ்லிம்களுக்கும், தலித்களுக்கும் உள்ளொதுக்கீடு செய்துகொள்ளலாம் என்பது மத்திய அரசின் நிலை.
  .முழுமைக்கு இங்கே கிளிக் செய்யவும்


சர்க்கரை, ஹார்ட் அட்டாக்.. - மரபியல் ரீதியானதா???

'‘'மரபியல் காரணமாகத்தான் இதய ரத்தநாள அடைப்புப் பிரச்னை, நீரிழிவு நோய் இதெல்லாம் வருகிறது என்கிற ஒரு கூற்று இருக்கிறது. அது முழுக்க தவறு என்பதை இந்த ஆய்வின் மூலம் நாங்கள் கண்டுபிடித்திருக்கிறோம். எங்களின் ஆய்வில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்கள் கலந்தே இருக்கிறார்கள். நகர்ப்புற மக்களின் நோய் பாதிப்புகளுக்கும் கிராமப்புற மக்களின் நோய் பாதிப்புகளுக்குமிடையே நிறைய வேறுபாடுகள் காணப்படுகின்றன. கிராம மக்கள் அதிகமாக உடல் உழைப்பைக் கொடுப்பதால், எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள். அதனால், அவர்களிடையே இதய ரத்தநாள அடைப்பு பாதிப்பு அதிகம் இல்லை. ஆனால், நகர்ப்புறவாசிகளிடம் இந்த பாதிப்பு அதிகமாக காணப்பட்டது. இந்த நோய், மரபு ரீதியிலான விஷயம் என்றால், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் இரண்டு இடங்களிலுமே ஒரேமாதிரியாகத்தானே இருக்கவேண்டும்?  முழுமைக்கு இங்கே கிளிக் செய்யவும்


சிறுநீரக செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி

கிட்னி கல் என்றால் என்ன?

சிறுநீரில் பல வேதிப் பொருட்கள் கலந்துள்ளன. அவற்றுள் சில மணிச்சத்துக்கள், சில உயிரியற் பொருட்கள். இவை இரண்டும் தகுந்த விகிதத்தில் இருப்பதால்தான் அவை படிகங்களாகவோ, (crystals) திடப்பொருள்களாகவோ, சிறுநீர்த் தாரைகளில் படியாமல் இருக்கின்றன. சிலருக்கு ஏற்படும் வளர்சிதை மாற்றங்கள் இவற்றின் விகிதங்களை மாற்றி இவற்றைச் சிறு துகள்களாகவோ, கற்களாகவோ படிய வைக்கின்றன. இவையே நாளடைவில் கற்களாக உருவாகின்றன. முழுமைக்கு இங்கே கிளிக் செய்யவும்


சித்தார் கோட்டை - ஓர் ஆய்வுக்கோவை -5 (பொட்டலில் பூத்த புது மலர் -2)

..எல்லையற்ற வியப்பால் அரபு வியாபாரி, "ஆ! என்று கூவி விட்டார்.

சீனத்துப் பட்டு, பீங்கான், சாவகத்தீவின் வாசனைப் பொருட்கள், சிங்களத் தீவின் தேயிலை, பாக்கு மற்றும் நறுமணப் பொருட்கள்!

கண்ணைக் கவரும் வண்ண வண்ணக் கைவினைப் பொருட்கள்! முற்றிலும் அவர் எதிர்பார்த்திராத அபூர்வ பொருட்கள்.

"இவ்வளவு பொருட்களையும் எதற்காக இந்தக்குடிசைக்குள் வைத்திருக்கிறீர்கள்?" என்று தேவரைப் பார்த்துக் கேட்டார்.

"விற்பதற்கு", ஒரே வார்த்தையில் பதில் வந்தது.

"நானே வாங்கிக் கொள்கிறேன்"

சரக்குப் பொதிகள் அனைத்தும் - செட்டியாரின் பொதிகள் உள்பட - பிரித்துப் பார்த்து அரபு வியாபாரி வாங்கிக் கொண்டார். இந்த பேரத்தில் தேவர் வகைக்கு நல்ல இலாபம் கிடைத்தது........முழுமைக்கு இங்கே கிளிக் செய்யவும்


பழைய சாதத்துல இவ்வளவு விஷயமா?

...பழைய சாதத்தின் மகத்துவத்தைப் பற்றி அமெரிக்காவில் வசிக்கும் நம் இந்திய விஞ்ஞானி ப்ரதீப் கூறியதில் இருந்து சில, நம் சினேகிதிகளுக்காக...

"காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிபபதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது. இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது. மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.

அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது.

இந்தப் பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து நான் சாப்பிட்டதில் நல்ல வித்தியாசம் தெரிந்தது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு, உடல் எடையும் குறைந்தது." என்கிறார்......முழுமைக்கு இங்கே கிளிக் செய்யவும


விண்ணை முட்டும் உயரத்திற்கு கூடு கட்டும் கண் பார்வையற்ற கறையான்கள்
கறையான்களின் குணநலன்களில் முக்கியமான மற்றொன்று யாதெனில், அவைகள் தங்கள் புற்றுக்களை பாதுகாக்கும் விதம். கறையான் புற்றுக்களிள் உயரம் ஏழு மீட்டர் வரை (21 அடி) இருக்கும். இந்த புற்றுக்களில் ஒரு சிறிய பழுது ஏற்பட்டுவிட்டாலும் உடனடியாக கரையான்கள் எச்சரிக்கையாகி விடுகின்றன. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் கறையான்கள் தங்களது தலைகளை புற்றுக்களின் சுவர்களில் மோதி மற்ற கறையான்களை விழிப்படையச் செய்கின்றன. எச்சரிக்கை செய்தி கிடைத்ததும் விழிப்புற்ற மற்ற கறையான்கள் குஞ்சுப் பருவத்தில் இருக்கும் கறையான் முட்டைகளை (Larve)பாதுகாப்பான மற்றொரு அறைக்கு எடுத்துச் செல்கின்றன.

ராஜா மற்றும் ராணி கறையான்கள் இருக்கும் அறையின் வாயிற்பகுதி உடனடியாக கட்டப்படும் சுவர் மூலம் மூடப்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதி முழுவதையும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் கரையான்கள் சூழந்து கொள்கின்றன. பாதிக்கப்பட்ட பகுதிக்கு சுவர் கட்டத் தேவையான பொருட்கள் யாவும் வேலைக்கார கறையான்களால் கொண்டு வரப்படுகின்றது. சில மணி நேரங்களில் பாதிக்கப்பட்ட பகுதியின் வெளிப்பகுதி , மற்றும் உட்பகுதி முழுவதும் சரிசெய்யப்படுகின்றது. இவ்வாறு பல பிரிவைச் சார்ந்த ஒவ்வொரு கறையான்களும் அவசர காலங்களில் மட்டுமின்றி சாதாரண வேளைகளிலும் ஒழுங்குற வகுக்கப்பட்ட ஒரு திட்டத்தின் கீழ் செயல்படுவது போல எந்தவித குழப்பமுமின்றி சிறப்புற செயல்படுகின்றன. இவ்வாறு அவகைள் ஒரு குறுகிய கால அவகாசத்தில் தங்களுக்கு இடப்பட்ட பணிகளை இத்தனை சிறப்பாக முடிப்பதிலிருந்து கறையான்களுக்கிடையே முறையாக தொடர்பு கொள்ளும் திறமை உண்டென தெளிவாக அறிய முடிகிறது. கறையான்கள் தங்களுக்கிடையே வேலையை முறையாக பகிர்ந்து கொள்கின்றன. பகிர்ந்து கொண்ட வேலைகளுக்கேற்ப எந்தவித குழப்பமுமின்றி வானளாவிய உயரத்திற்கு கூடுகள் கட்டுகின்றன. கட்டிய கூட்டினை பாதுகாப்பதற்கென முன்னெச்சரிக்கையான திட்டங்கள் தீட்டி அதன்படி செயல்படுகின்றன. இத்தனை வேலைகளையும் திறமையாக செய்து முடிக்கும் கறையான்கள் பார்வையற்றவை.   முழுமைக்கு இங்கே கிளிக் செய்யவும்


தப்லீக்கின் அடிப்படை அம்சங்கள் (ஆறு நம்பர்) -ஐந்தாம் நம்பர்

மக்கள் நல்வழி நடக்க வேண்டுமென்பதற்காக அவர்களது வீடு வரை தேடிச்சென்று அவர்களிடம் உரையாடல் , குஸூஸி உமூமி கஸ்த்துக்களில் ஈடுபடுவதற்காக தமது அந்தஸ்த்து தொழில் வர்த்தகம் அனைத்தையும் தியாகங்செய்து நேரமொதுக்கல், அலைந்து திரிந்து மூலை முடுக்குகளெல்லாம் செல்வதால் ஏற்படும் சிரமங்களை அல்லாஹ்வுக்காகப் பொறுத்துக் கொள்ளல் , எவ்வித சுயநல உலக நோக்கமுமின்றி தன்னை விடப்படிப்பில் அந்தஸ்த்தில் செல்வ நிலையில் தாழ்ந்தவர்களிடத்தில் கூட அவர்களின் காலடிக்குச் சென்று பள்ளிக்கு அழைத்தல் , ஒரு காரியத்தைத் திட்டம;ட்டு மஸூரா அடிப்படை யில் செய்தல் போன்ற விடயங்களைச் சொல்லலாம் . இவர்களிடம் இவ்விடயங்களில் உலக நோக்கங்கள் எதுவும் இல்லை- இவற்றை இவர்கள் பூரண இக்லாஸூடனேயே செய்கின்றனர் என்பதைக் காட்டுகின்றன . இதற்காக இவர்களை அனைவரும் பாராட்டித்தான் ஆக வேண்டும்.

ஆனால் இவர்கள் தமது ஆத்மீக வழிகாட்டிகளாக அல்குர்ஆன்-ஹதீஸை நம்பியிருக்காமல் இதை விடுத்து இவர்களது மேலிடத்து உத்தரவுகளையும் வழிகாட்டல்களையுமே நூற்றுக்கு நூறு நம்பியிருப்பதால் இவர்களிடம் ஷிர்க்கான பித்அத்தான விடயங்கள் பல இவர்களையறியாமலே ஏற்பட்டு விடுகின்றன. குறிப்பிட்டுச் சொல்வதென்றால் தப்லீக் பெரியார்களின் வேத நூலான அமல்களின் சிறப்பு, ஹஜ்ஜின் சிறப்பு, ஸதக்காவின் சிறப்பு போன்றவற்றிலுள்ள அனைத்து விடயங்களையும் இவர்கள் உண்மைப்படுத்துவதால், சரியானவையென உறுதிப்படுத்துவதால் அதிலுள்ள நான் முன்னர் சுட்டிக்காட்டிய காட்டாத அனைத்தையும் நம்பித்தொலைத்து விடுவதால்; அதன் மூலம் பலவித பித்அத்தான ஷிர்க்கான நம்பிக்கைகள் இவர்களிடம் தோன்றி விடுகின்றன .
எனவே இவர்களைப் பொறுத்த வரைக்கும் அல்குர்ஆனுக்கோ ஹதீஸூக்கோ முரணான எந்தவொரு விடயத்தையும் இவர்கள் செய்வதில்லை அதைத் தமது மேலிடத்துப் பெரியார்கள் வலியுத்தினாலும் சரிதான் , மேலும் அவர்கள் சொல்பவை இஸ்லாத்துக்கு மாற்றமானதா இல்லையா? எனப் பார்த்தே எடுத்து நடப்போம் என இவர்கள் முடி வெடுத்தால்தான் இவர்கள் புரியும் இக்லாஸான தப்லீக் நடவடிக் கைகளுக்கு அல்லாஹ்விடத்தில் நற்கூலி கொடுக்கப்படுமென அடித்துச் சொல்ல முடியும் . ஏனெனில் நாம் புரியும் ஒரு இபாதத்து ஸாலிஹான அமலாக அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமாயின் அது முழுக்க இக்லாஸூடனும் செய்யப்பட வேண்டும் . அதேபோல் நபியின் வழிகாட்டல்ப்படியும் செய்யப்பட வேண்டும் என்பதை அல்குர்ஆனும் நபிமொழிகளும் உறுதிப்படுத்துகின்றன முழுமைக்கு இங்கே கிளிக் செய்யவும்


திருந்தினால் திரை விலகும் - (சிறுகதை)

ஷாகிரா பயோடேட்டாவை மட்டும் வாங்கிப் பார்த்தாள். அதில் படித்த, அழகான, வசதியான பெண் வேண்டுமென்று குறிப்பிடப்பட்டிருந்தது.  
 
"வாப்பா,எனக்கு இந்த மாப்பிள்ளைகள் பிடிக்கவில்லை"என்றாள் ஷாகிரா.
 
"என்னம்மா சொல்றே, எந்த போட்டோவையும் பார்க்காமலேயே எப்படிம்மா பிடிக்கலைன்னு சொல்றே?"
 
"பயோடேட்டாங்கிறது முகம் பார்க்கும் கண்ணாடி மாதிரி, மாப்பிள்ளைகளுடைய குணம், நோக்கம்,எதிர்பார்ப்பு எல்லாம் அதிலேயே தெரிஞ்சுக்கலாம். எனக்கு மார்க்கப்பற்றுள்ள, படித்த, எளிமையான மாப்பிள்ளை போதும், வாப்பா; பணம், வசதி எல்லாம் வேண்டாம்".   
 
"என்னம்மா, புரியாத பொண்ணா இருக்கியே! குணம் மட்டும் பத்தாது, பணம் தாம்மா நம்மை வாழவைக்கும்".


முழுமைக்கு இங்கே கிளிக் செய்யவும்


அண்ணலாரின் விருப்பம் அசைவ உணவா? (அளவான உணவு - ஆரோக்கிய வாழ்வு)

இன்று பரவலாக முஸ்லிம்கள் என்றாலே அசைவ உணவை விரும்பிச் சாப்பிடுபவர்கள் என்ற பேச்சுள்ளது. அசைவ உணவு சாப்பிடலாம் தவறில்லை. ஆனால் அதற்குத் தகுந்தாற்போல் வேலைப்பளு என்பது தற்காலத்தில் குறைந்து விட்டது விளைவு! உடல் பெருக்கம், இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற உபாதைகளுக்கு தள்ளப்படுகிறோம். குறிப்பாக இறைவழிபாடு, தொழுகை, நோன்பு போன்றவற்றுக்கு அதுபோன்ற உபாதைகள் இடையூறை ஏற்படுத்தி விடுகிறது. அசைவப் பொருளை வாங்குவது கட்டாயம் என்பது போன்ற சில தினங்களை நாம் ஏற்படுத்தி உள்ளோம். குறிப்பாக ஜும்ஆ வுடைய தினம் என்றாலே மட்டன், சிக்கன் எடுத்தாக வேண்டும் என்ற கட்டாய நிலையை ஏற்படுத்திக் கொண்டோம். வெள்ளிக் கிழமை என்றாலே மட்டன், சிக்கன் சமைத்தாக வேண்டுமா? ஸஹாபாக்கள் வெள்ளிக்கிழமை என்ன உணவு சாப்பிட்டார்கள்? வரலாற்றை நாம் புரட்டிப் பார்க்கும்போது ஸஹாபாக்களுக்கு வெள்ளிக்கிழமை என்றாலே குறிப்பிட்ட உணவை சாப்பிடப் போகிறோம்! என்ற சந்தோஷம் அவர்களுக்கு வந்து விடும். அப்படி என்ன உணவை சந்தோஷமாக உண்டார்கள் என்பதை அவர்களின் மூலமாகவே நாம் கேட்போம். ஹள்ரத் சஹ்ல் இப்னு சவுத் (ரளி) அவர்கள் கூறுகிறார்கள். வெள்ளிக்கிழமை வந்து விட்டாலே நாங்கள் சந்தோஷமும் மகிழ்வும் அடைவோம். காரணம் ஜும்ஆ தொழுகைக்கு பிறகு வழக்கமாக ஒரு வயோதிகப் பெண்மணி எங்களுக்காக ஒரு உணவை தயார் செய்து கொடுப்பார். அதை நாங்கள் சாப்பிடுவதில் ஆனந்தமும் மகிழ்ச்சியும் அடைவோம். அப்படி என்ன ஸ்பெஷலான உணவு அது? என்று பார்த்தால் - தண்டுக் கீரையும், கோதுமையும் கடைந்து தயாரிக்கப்பட்ட ஒரு வகையான உணவுதான் அது ! அதை ஜும்ஆ தினத்தில் சாப்பிடுவதில்தான் ஸஹாபாக்கள் குதூகலம் அடைந்துள்ளார்கள். ( புகாரி 5403 )

முழுமைக்கு இங்கே கிளிக் செய்யவும்


கேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது!

1) ஒவ்வொரு மனிதனின் உடம்பிலும் கேன்சர் செல்கள் உள்ளது, அது சாதாரண டெஸ்டில் தெரிய வராது, அவை சில பில்லியன் செல்களாக பெருக்கம் ஆன பின்புதான் தெரிய வரும். கேன்சர் சிகிச்சைக்குப் பின், டாக்டர் நோயாளியின் உடம்பில் கேன்சர் இல்லை என்று சொன்னால், இதற்க்கு உண்மையான அர்த்தம் சோதனையால் அந்த உடம்பில் உள்ள கேன்சர் செல்லை கண்டுபிடிக்கும் படியான எண்ணிக்கையில் இல்லை என்று மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
2) ஒரு மனிதனின் வாழ்நாளில் 6 முதல் 10 க்கு மேற்பட்ட முறை கேன்சருக்கான செல் உருவாகிறது.
3) ஒரு மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி (immune system) வலுவாக இருக்கும்போது கேன்சருக்கான செல் அழிக்கப்பட்டு, பெருக்கம் அடைவதற்கான வாய்ப்பும் தடுக்கப்பட்டு, டயுமர்(tumors) ஏற்படுவதற்கான வாய்ப்பும் தடுக்கப்படுகிறது.

முழுமைக்கு இங்கே கிளிக் செய்யவும்


செல்போன்கள் -(அறிவியல் அதிசயம்)

தொலைபேசிகள் இயக்கத்திற்கு வந்த பிறகும்கூட தொலைபேசியின் மூலம் அழைப்பது என்பது குதிரைக் கொம்பாகவே இருந்தது. கிராமத்திற்கு ஒரு தொலைபேசியோ அல்லது பல தெருவிற்கு ஒன்றோ என்று அங்கொன்றும் இங்கொன்று மாகத்தான் இருந்தன. நாளடைவில் தொலை தொடர்பு துறையில் ஏற்பட்ட வளர்ச்சியின் தாக்கத்தால் பல வளர்ச்சிகள் ஏற்பட்டு இன்று வீட்டிற்கு ஒரு தொலைபேசி என்றாகி தொலைது}ர அழைப்புகளுக்கு எஸ்.டி.டி. பூத்துகளுக்கு செல்வதைக் குறைத்து இன்று மக்களே ஒரு நடமாடும் எஸ்.டி.டி. பூத்துகளாகவே மாறுவதற்கு காரணமாய் அமைந்தது செல்போனின் வளர்ச்சி.

செல்போன் ஆரம்பிக்கப்பட்ட ஆரம்பகாலமான 1990-ல் செல்போனின் எடை இரண்டு கிலோ முதல் இரண்டரை கிலோ வரையும் சார்ஜரின் எடை 1 கிலோ வரையும் இருந்த இது இப்படி படிப்படியாக குறைந்து இப்போது கிராம் கணக்கில் வந்துள்ளது. இனி வரும் அத்தியாயங்களில் செல்போன் எவ்வாறு இயங்குகிறது மற்றும் பலவிதமான நவீன செல்போன்கள் மற்றும் பல்வேறு அம்சங்களை பற்றிப் பார்ப்போம்.   முழுமைக்கு இங்கே கிளிக் செய்யவும்

 

Visitors:  

Copyright © 2001 - Chittarkottai.com. All Rights Reserved.