காய் பழங்களின் மருத்துவக் குணங்கள்

தொகுப்பு:

எம். முஹம்மது ஹுசைன் கனி,
செயலாளர் மத்திய மாகாணம், சவுதி அரேபியா, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்.

Refer this Page to your friends

தொடர்: 08
இந்தத் தொடரின் குறிப்புகள்: குமுதம் ஹெல்த்


இறைவன் மனிதனுக்கு அளித்த அருட்கொடைகளில் பழங்களும் ஆகும் அதன் முக்கியத்தும் அறிந்து சாப்பிடும் போது அதன் பலனை முழுமையாகப் பெறலாம். புனித ரமலானை முன்னிட்டு நமது வாசக நெஞ்சங்களுக்கு பழங்களைப் பற்றிய சில தகவல்கள்....


முக்கியத்துவம் ஏன்?

பழங்களில் புரதச் சத்தும் குறைவான கொழுப்புச் சத்தும் நமக்குப் போதுமான அளவில்
இருக்கின்றன. பெரும்பாலான பழங்களின் ஈரப்பதம் 80 சதவிகிதம் உள்ளது. கார்போ ஹைட்ரேட் 20 சதவிகிதமே உள்ளது. பழங்கள் உணவாக மாறிட இதுவே காரணம். அவைகளில் தாது உப்புகள் உள்ளன. உயிர்ச்சத்தான வைட்டமின்கள் உள்ளன. மேலும் பேதி மருந்துபோல் செயல்பட்டுக் குடலைச் சுத்தப்படுத்தி விடுகின்றன.
 

உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் 'சி', ஆர்கனிக் அமிலம் என பல வடிவங்களில் பழங்கள் பயன்படுவதால், முதுமையும் தள்ளிப் போகிறது. சக்தியும், புத்துணர்வும் உடனுக்குடன் கிடைக்கிறது. உடல் உறுப்புகள் மலிவான செலவில் புதுப்பிக்கப்படுகின்றன.


எப்படிச் சாப்பிடலாம்? பழுத்த பிறகே சாப்பிடுவது சிறந்ததாகும். சமைக்காமல் உண்னும்போது கார்போ ஹைடிரேட் முழுதும் கிடைக்கிறது. காலை நேரத்தில் உணவாய்க் கொள்வது நல்லது. குறிப்பாக ஸகர் சாப்பாட்டுக்குப் பிறகு பழங்களைச் சேர்த்துக் கொள்வது சிறந்ததாகும். நீரிழிவாளர்கள் மட்டும் வாழையைக் காலையில் உண்ணக் கூடாது. ஒரே நேரத்தில் பல பழங்களைச் சாப்பிடலாகாது.


நோயாளிகள் பிழிந்த சாற்றையே அருந்த வேண்டும். மூன்று வேளையும் உணவுக்குப் பிறகு
உட்கொள்ளும் பழங்களின் அளவு குறைந்தது முந்நூறு கிராமாவது இருந்தால்தான் சாப்பிடும் மற்ற உணவுகளும் உடனடியாகச் செரிமானம் கொள்ளும்.


என்னென்ன இருக்கிறது? எந்த வகைப் பழத்திலும் ஏதேனுமோர் சத்து இருக்கிறது. ஒட்டுமொத்த பழ உலகம் படைக்கும் சக்திகளைக் காண்போம்.
1. புரதச்சத்து 2. கொழுப்புச் சத்து 3. மாவுச் சத்து 4. தாதுப் பொருள் 5. கால்சியம் 6. பாஸ்பரஸ் 7. இரும்புச்சத்து 8. மக்னீசியம் 9. சோடியம் 10. குளோரின் 11. பொட்டாசியம் 12. கோபால்ட் 13. நார்ச்சத்து 14. நீர்ச்சத்து,


இவை தவிர எண்ணற்ற வைட்டமின்கள் என எத்தனையெத்தனை நன்மைகள் பழங்களில்
புதைந்திருக்கின்ற பார்த்தீர்களா?


ஆல்ரவுண்டர் திராட்சை: திராட்சை கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையில் தோன்றியதாக வரலாறு கூறுகிறது. உலக விளைச்சலில் பாதி மதுவுக்கும், மீதி உணவுக்குமாக இது பயன்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. இதிலுள்ள 'குளுக்கோஸ்' விரைவில் ரத்தத்தை அடைந்து சக்தி தருகிறது. இரத்த உற்பத்தியையும் செய்கிறது. மேலும், மலச்சிக்கல், ஆஸ்துமா, ஒற்றைத்தலைவலி என பல்முக குண ஊக்கியாய் பணிபுரிகிறது.


மருத்துவமனையாகும் எலுமிச்சை: எவரெஸ்ட் சிகரத்தை முதலில் எட்டிய வீரர்கள் இந்தச் சாற்றைப் பருகியே சாதித்ததாக கூறினர். இதன் முக்கிய சேர்க்கை 'சிட்ரிக் அமிலமும்', 'வைட்டமின் சி' யும் தான். இரத்த வாந்தியை இது நிறுத்தும். நுரையீரல், குடல், தொண்டை, ஜலதோஷம், காலரா, உடல் பருமன், நல்ல பசி என அனைத்துத் துறைகளிலும் இது பணியாற்றி சிறந்த மருந்தகமாய் திகழ்கிறது.


அத்தி தரும் ஆரோக்கியம்: இந்தப் பழம் இறைமறை குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. ஹோமரின் காவியம் பேசுகிறது. பைபிளிலும் இதன் வாசம் வீசுகிறது. இதில் விட்டமின் 'சி' இரும்புச் சத்து, புரதம், கொழுப்பு, மாவுச்சத்து இதிலுண்டு. தேயும் எலும்புக்கு வேண்டிய கால்சியம் இதில் உள்ளது. பத்தே நாளில் வீரியம் தரும் சுவரொட்டிகளுக்கு மத்தியில், இப்பழம் உண்மையிலேயே ஆண்மையைத் தட்டியெழுப்புகிறது. மூலநோய்க்கும், மூளைச் சோர்வுக்கும் இது அருமருந்து. முதுமையிலும் வேகமாக நடந்த காந்திஜி இளமையில் சாப்பிட்டது இதைத்தான்.


ஆரஞ்சும் இன்னொரு தாய்ப்பாலே: தாய்ப்பால் தரமுடியாத தாய்மார்கள் தங்களின் பிரதிநிதியாக குழந்தைகளுக்கு இந்தச் சாறைத் தரலாம். இப்பழம், இதயவலி, மார்புவலிக்கு மிகச் சிறந்த மருந்தாகும். இரத்தக் குழாய்களின் அடைப்பை நீக்கி, ரத்தத்தைக் கொண்டு செல்ல இது உதவுகிறது. ஒரு ஆரஞ்சுப் பழம் மூன்று கப் பாலுக்கு இணையானது. நல்ல தூக்கத்தை இது வரவழைக்கிறது. தினமும் இதைச் சாப்பிட நீண்ட ஆயுள் உறுதியாகும்.


வயிற்றைப் பேனும் மாதுளை: பாபிலோனியாவின் தொங்கும் தோட்டத்தில் மாதுளை இருந்திருக்கிறது. இது மஞ்சள் காமாலையைப் போக்கி, கல்லீரல், இதயம், சிறுநீரகம் இவைகளையும் பாதுகாக்கிறது. பித்த வாந்தி உள்ளோர் இதைத் தேனுடன் சாப்பிட உடனடி நிவாரணம் உண்டு. மலத்துடன் ரத்தம் வெளியேறுவதை இது தடுக்கிறது. அறிவுத்திறனை அதிகரிக்கும் பழமாகவும் இது முதலிடம் பெறுகிறது.


இப்படி நம்மைச் சுற்றிலும் எண்ணற்ற வகைகளில் பழங்களுண்டு. அவை ஒவ்வொன்றிலும் உடல் நலன் காக்கும் செய்தியுண்டு. படிக்க (ருசிக்க) வேண்டியது நமது பொறுப்பு.

 

 

Refer this Page to your friends

தலைப்புப் பகுதி