முஸ்லிம் தர்ம பரிபாலன சபா:


சித்தார்கோட்டை வாழ் முஸ்லிம்களின் ஓர் ஐக்கியம் தான் முஸ்லீம் தர்மபரிபாலன சபாவாகும். உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் முறையாக ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்த அமைப்பு தான் சித்தார்கோட்டை வாழ் முஸ்லிம்களின் தாய்ச் சபை. அணைவர்களும் இதன் சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டு வாழ்கின்றனர்.


முஸ்லிம் தர்ம பரிபாலன சபா என்ற குடையின் கீழ்


சபாவின் நோக்கங்களும் திட்டங்களும்:

சித்தார்கோட்டையின் கல்வி, கலாச்சாரம், ஒழுக்கம், திருமண அமைப்புகள் ஆகியவை இஸ்லாமிய 'ஷரீஅத்' சட்ட விதிமுறைகளுக்கு முரண்படாதவாறு பார்த்துக் கொள்ளல் இதன் அடிப்படை நோக்கமாகும்.

பொதுநல விஷயங்களில் சபா தன்னார்வத் தொண்டர்களை ஊக்குவித்து, கௌரவித்துக் கொண்டிருக்கின்றது. இதுவரை சபாவிற்கு ஒது;துழைப்பும் பெருவாரியான நிதியுதவியும் அளித்து வருகின்ற கொடையுள்ளம் படைத்த வள்ளல் பெருந்தகைகள் அனைவரும் சபாவின் மனமார்ந்த நன்றிக்குரியவர்கள். சபா தனது சிறப்பான வெற்றிப் பாதையைத் தொடர்வதற்கும் சித்தார் கோட்டையின் ஒளிமயமான எதிர்காலத்திற்கும் கண்ணியமிகு தனவந்தர்களும் வள்ளல்கள் பெருந்தகைகளும்ஈ தங்களது மேலான ஒத்துழைப்பை என்றெந்றும் நல்குவார்கள் என்று சபா முழுமையாக நம்புகின்றது.

மேலும், சபாவும் தனக்கு கிடைத்து கொண்டிருக்கும் மிகச்சிறய வருமானத்தையும் பொதுக்காரியங்களுக்கே செலவிட்டு கொண்டிருக்கின்றது. குறிப்பாக சமுதாய கருத்தரங்குகள், உடலியல், உளவியல் சம்பந்தமான கருத்தரங்குகள்ஈ அரசு மற்றும் தனியார்துறைகளின் மருத்துவம் மற்றும் பல்வேறாhன சிறப்பு முகாம்கள் நடத்தவும் சபாவே முன்னின்று ஆவண செய்கின்றது.

தற்கால நிதிநிலையை சமாளிக்கும் பொருட்டு சபாவிற்கென்று நிரந்தர வருவாயை ஈட்டித்தரவல்ல சொத்துக்களென்று ஏதுவுமில்லாதது சபாவிற்குள்ள மிகப்பெரிய குறையாகும். இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களில் சபா இக்குறை நீங்க தீவிரமுயற்சியில் ஈடுபடும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.


முஸ்லிம் தர்ம பரிபாலன சபா:

தலைவர்: ஜனாப் S. மீரான் கனி அவர்கள்
துணைத் தலைவர்: ஜனாப் E. கிதுரு முஹம்மது அவர்கள்
செயலாளர்: ஜனாப் A. ஷாஹுல் ஹமீது கனி அவர்கள்
துணைச் செயலாளர் மற்றும் பள்ளிச் செயலாளர்;: ஜனாப் A ஜமீருல் ஹஸன் அவர்கள்
பள்ளிகளின் தாளாளர்: ஜனாப் P.A.S. வருசை உமர் கான் அவர்கள்

 

வாலிப முஸ்லிம் தமிழ்க் கழகம்

தலைவர்: ஜனாப் முஹம்மது இபுறாஹிம் அவர்கள்
துணைத் தலைவர்: ஜனாப்  பாரிஸ் கான் அவர்கள்
செயலாளர்: ஜனாப் அஹமது இபுறாஹிம் அவர்கள்
துணைச் செயலாளர்: ஜனாப்  இஸ்மத் அவர்கள்

 


chittarkottai.com