அறிவியல் அதிசயம் - MJM Iqbal

20-05-2006

Refer to Your Friends

விண்வெளியை ஆராயும் நவீன தொலைநோக்கி

மெகா டெலஸ்கோப்பின் சக்தி வாய்ந்த கண்ணாடிகள்
தொலைவில், வெகு தூரத்தில் இருக்கும் பொருட்களை பார்க்க பைனாக்குலர் மற்றும் டெலஸ்கோப்கள் (தொலைநோக்கிகள்) உதவுகின்றன. இதில் பைனாக்குலர் மூலம் குறிப்பிட்ட தொலைவில் உள்ள பொருட்களை மட்டும் தான் பார்க்க முடியும்.

வெகு தொலைவில் அதாவது விண்வெளியில் உள்ள பிற கோள்கள், நட்சத்திர மண்டலங்கள் மற்றும் பால்வெளி வீதியில் உள்ள பொருட்களை பற்றி ஆராய-தெரிந்து கொள்ள அதிக சக்தி வாய்ந்த தொலைநோக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. விண்வெளி ஆராய்ச்சிக்கு பயன்படுத்தும் தொலைநோக்கிகள் பெரும்பாலும் பூமியில் உள்ளன. சில தொலைநோக்கிகள் மட்டும் விண்வெளியில் சுழன்றபடி ஆய்வுப்பணியில் ஈடுபட்டு வருகின்றது. இதற்கு உதாரணம் ஹப்பிள் டெலஸ்கோப் ஆகும்.

டெலஸ்கோப்பை முதன் முதலில் கண்டுபிடித்தவர் ஜேன் லிப்பர்ஷை.

பல கண்டுபிடிப்புகள் எதிர்பாராத விதமாக ஒரு விபத்து போலத்தான் கண்டுபிடிக்கப்படுகிறது. டெலஸ்கோப் கண்டுபிடிக்கப்பட்டதும் இப்படி ஒரு எதிர்பாராத தருணத்தில் தான்.

ஆலந்து நாட்டில் உள்ள மிடில் பர்க் என்ற நகரத்தில் மூக்கு கண்ணாடி தயாரிக்கும் தொழில் செய்து வந்தவர் ஜேன் லிப்பர்ஷை. 1608-ம் ஆண்டு ஒரு நாள்... ஜேன் தனது கண்ணாடி அறையில் அமர்ந்து கண்ணாடி தயாரிக்கும் வேலையை செய்து கொண்டு இருந்தார். அப்போது அவரது குழந்தைகள் வீட்டுக்கு வெளியே சில கண்ணாடி லென்சுகளை வைத்து விளையாடிக்கொண்டு இருந்தனர். இரண்டு வித்தியாசமான லென்சுகளை அருகருகே வைத்து பார்த்தபோது வெகு தொலைவில் உள்ள மாதா கோவிலின் கோபுரம் தெரிந்தது. உடனே குழந்தைகள் ஓடிப்போய் இதை தங்கள் தந்தையிடம் தெரிவித்தனர்.

ஜேன் ஆச்சரியத்துடன் குழந்தைகள் சொன்னபடி கண்ணாடி லென்சுகளை வைத்துப்பார்த்தார். குழந்தைகள் சொல்வது உண்மை என்று உணர்ந்து கொண்டார். இப்படித்தான் முதன் முதலாக டெலஸ்கோப் கண்டுபிடிக்கப்பட்டது.

டெலஸ்கோப்பினை அதிக அளவில், இன்னும் சொல்வதென்றால் முதலில் பயன்படுத்தியவர் கலீலியோ தான்.

1609-ம் ஆண்டு இவர் டெலஸ் கோப்புகளை பயன்படுத்தி விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டார். 1610-ம் ஆண்டு கலீலியோ சனி கிரகத்தின் வளையங்களை கண்டுபிடித்தார். தொடர்ந்து ஜுபிட்டர் கிரகத்திற்கு 4 முக்கிய துணைக்கோள்கள் இருப்பதையும் கண்டுபிடித்தார்.

அதன்பின்னர் சர் ஐசக் நிïட்டன் தொலைநோக்கியில் சில மாற்றங்களை கொண்டுவந்தார். தொடர்ந்து நடைபெற்ற ஆராய்ச்சிகள் மூலம் அதி நவீன தொலைநோக்கிகள் உருவாக்கப்பட்டன.

தற்போது உலகின் மிகப் பெரிய டெலஸ்கோப் அமெரிக்காவில் உள்ள ஹவாயி நகரில் உள்ளது. இங்குள்ள மவுனா கியா என்ற மலை உச்சியல் இந்த டெலஸ்கோப் அமைக்கப்பட்டுள்ளது. இதன் பெயர் கெக் டெலஸ்கோப் (ஓக்ஷஙி பக்ஙீக்சூஷச்சிக்) இது இரண்டு டெலஸ்கோப் இணைந்ததாகும்.

இதைவிட பெரியதாக சிலியில் தற்போது கட்டப்பட்டு வருகிறது. இதற்கும் பெரிதாக ஒரு டெலஸ்கோப் உருவாக்க ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிலையம் திட்டமிட்டுள்ளது.



இது வரை உருவாக்கப்பட்டுள்ள டெலஸ்கோப்புகளில் அதிக சக்தி வாய்ந்தது பூமியில் இல்லை. அது விண்வெளியில் சுற்றிக்கொண்டு இருக்கிறது. அது தான் ஹப்பிள் டெலஸ்கோப். பூமியில் உள்ள டெலஸ்கோப்புகளை விட அளவில் சிறியதாக இருந்தாலும் அவை அனைத்தையும் விட அதிக சக்திவாய்ந்ததாகும்.

தற்போதுள்ள டெலஸ்கோப்பை விட பெரிய டெலஸ்கோப் ஒன்று சிலி பகுதியில் உருவாக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான தகவல்களை இந்த வாரம் காண்போம்.

சிலி நாட்டின் வடக்கு பகுதியில் அமைய இருக்கும் இந்த மெகா டெலஸ்கோப் இது வரை உருவான டெலஸ்கோப்புகளில் அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கும். அதாவது தற்போதுள்ள டெலஸ்கோப்புகளில் சக்தி வாய்ந்த ஹப்பிள் டெலஸ்கோப்பை விட 10 மடங்கு துல்லியமானதாக இருக்கும்.

உலகிலேயே மிகப்பெரிய இராட்சத தொலைநோக்கியான இது 18 மாடிக் கட்டிட உயர அளவில் ஆயிரம் டன் எடையுள்ளதாக இருக்கும். அதனால் தான் இதற்கு தி ஜெயன்ட் மெகல்லன் டெலஸ்கோப் (எகூஹஙூஞ் ஙஹகீக்ஙீஙீஹஙூ பக்ஙீக்சூஷச்சிக்) என்று பெயரிட்டுள்ளனர்.

ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக் கழகம் (அஞிசூஞ்சுஹஙீகூஹஙூ சஹஞ்கூச்ஙூஹஙீ மஙூகூஞீக்சுசூகூஞ்ட்) உட்பட 9 ஆராய்ச்சி நிறுவனங்கள் இணைந்து இதை வடிவமைக்கின்றது. இதன் மூலம் பிரபஞ்சம் மற்றும் கறுப்பு துவாரத்தையும் (ஆஙீஹஷஙி ஏச்ஙீக்) நாம் காண முடியும். பிரபஞ்சத்தில் சூரிய குடும்பத்தையும் தாண்டி இதுவரை நாம் காணாத சில அரிய தகவல்களையும், விவரங்களையும் இந்த மெகல்லன் டெலஸ்கோப் மூலம் காண முடியும்.

இதன் மற்றொரு சிறப்பம்சம் இதன் மூலம் எந்த சூழ்நிலையிலும் தெளிவான காட்சிகளை தரும். அதாவது புவி மண்டலத்தைத் தாண்டி எத்தனையோ சுற்றுப்புற மற்றும் வானிலை மாற்றங்கள், விண்வெளி மற்றும் ஏனையக் கோள்களில் ஏற்படும் சுற்றுப்புற சூழ்நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் இவைகளினால் எந்த தடையோ, இடர்களோ ஏற்படாது.

இந்த மெகா டெலஸ்கோப் 7 பெரிய கண்ணாடிகளைக் கொண்டு வடிவமைக்கப்படுகிறது. இதனால் சாதாரண டெலஸ்கோப்புகள் மூலம் காண்பதைவிட கறுப்பு துவாரங்கள் (ஆஙீஹஷஙி ஏச்ஙீக்சூ) பற்றிய எண்ணற்ற வினோத தகவல்களை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அறிய முடிகிறது.


இதனை உருவாக்குவதற்கு திட்டமிட்டிருக்கும் மொத்த செலவு 310 மில்லியன் பவுண்டுகள் ஆகும். இந்திய ரூபாயில் இதன் மொத்த செலவு கிட்டத்தட்ட 2,600 கோடிகளாகும். இதுவரை 9.5 மில்லியன் பவுண்டுகள் (சுமார் 80 கோடி ரூபாய்) செலவு செய்யப்பட்டுள்ளது.

7 பெரிய கண்ணாடிகளில் ஒவ்வொன்றும் 8.4 மீட்டர் விட்டத்தைக் கொண்டது. 20 டன் எடையுள்ள உருக்கப்பட்ட கண்ணாடிப் பொருட்களால் உருவாக்கப்பட்டு சிறந்த தொழில்நுட்பத்துடன் மெருகூட்டப்பட்டுள்ளது.

`முதல் கண்ணாடியின் சோதனை பலவகைகளில் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஏனென்றால் இது தற்பொழுது உள்ள தொலைநோக்கிகளை விட அதிகத் திறன் கொண்டதாக விளங்க வேண்டும்', என்று இதன் ஆராய்ச்சியாளர் டாக்டர் ஏஞ்சல் கூறுகிறார். அனைத்து (7) கண்ணாடிகளும் பொருத்தப்பட்டவுடன் தொலைநோக்கி இலக்கை பார்ப்பதற்கு தகுந்த அளவில் 24 மீட்டர் குறுக்களவில் அமையும்.


தொலைநோக்கியிலிருந்து விண்ணுக்கு செலுத்தப்படும் லேசர் கதிர்கள் மூலம் விண்ணில் ஏற்படுகிற சுற்றுப்புற சூழ்நிலைகள் அளவீடு செய்யப்படுகிறது. இதன்மூலம் எல்லா விதமான இடர்களும் அகற்றப்பட்டு விண்ணில் நட்சத்திரங்களை அப்படியே ஒளிரும் தன்மையோடு காண முடிகிறது. கணினி கட்டுப்பாட்டுடன் இயங்கக்கூடிய இயந்திரப் பொறிகள் மூலம் ஏற்படுத்தப்படும் கதிர்கள் ஒவ்வொரு கண்ணாடியின் புறப் பரப்பையும் சரிசெய்து தெளிவான விண்வெளி இலக்கின் தோற்றத்தைக் காண உதவுகிறது. தொலைநோக்கியை பொருத்துவதில் மற்றொரு பிரச்சினை என்னவென்றால் பலத்தக் காற்று. காற்றினால் தொலைநோக்கி அதன் நிலையிலிருந்து மாறிவிடாமல் சரியாக பொருத்தியிருக்க வேண்டும்.

டாக்டர் ஏஞ்சல் கூறுகையில், "காற்று போன்றவற்றினால் தொலைநோக்கி அதன் இலக்கின் தன்மையிலிருந்து மாறாமல் இருப்பதற்கு ஒரு அங்குலத்தில் லட்சம் அளவு வரை சரியாக பொருத்தப்பட வேண்டும்'' என்கிறார்.

இந்த தொலைநோக்கியின் கட்டுமானப் பணிகள் 2015ம் ஆண்டில் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்பொழுது தொலைநோக்கியில் பிரபஞ்சத்தையும், விண்வெளியையும் காண்பது அரிதானாலும் நாளடைவில் இது சர்வ சாதாரணமாகி சுற்றுலாப் பயணிகளும் சுற்றுலாத் தலங்களிலிருந்தே பிரபஞ்சத்தை ரசிக்கும் அளவிற்கு வரும் காலம் வெகு தொலைவில் இல்லை என்றே கூறலாம்.

தொடரும்...
 

 

http://www.dailythanthi.com/Irmalar/home/second_page.asp?issuedate=5/20/2006&secid=76