அறிவியல் அதிசயம் - MJM Iqbal

21-2-2004

Refer to Your Friends

பறக்கும் பைக்குகள்


சுதந்திரமாக வானில் பறந்து திரியும் பறவையைக் கண்ட மனிதன் தானும் அதுபோல பறக்க ஆசைப்பட்டான். அதன் விளைவுதான் விமானம் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகும் அவனது கண்டுபிடிப்பு ஆசை குறையவில்லை. தேவைகளும், ஆசைகளும் பெருகப் பெருக அவனது ஆராய்ச்சி மனப்பான்மை தீவிரமானது. புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க தீவிரம் காட்டினான்.மனிதனின் புதிய கண்டுபிடிப்பு களில் ஒன்றாக 'பறக்கும் கார்"கள் அமைந்துள்ளன. ஆராய்ச்சி நிலையிலும் சோதனை நிலையிலும் இருக்கும் 'பறக்கும் கார்"களுக்கு அடுத்தபடியாக 'பறக்கும் பைக்"குகள் தயாராகி வருகின்றன.

அதுபற்றிய அறிவியல் தகவல்கள் இந்த இதழில் இடம் பெறுகிறது.

பறக்க வைக்கும் முறைகள் பறக்கும் காரோடு முடிந்துவிடவில்லை. இதைத் தொடர்ந்து பறக்கும் பைக்குகளும் வர விருக்கின்றன.

ஏர் பைக்கை 'அலைய்டு ஏரோடெக்னிக்ஸ்" என்ற அமெரிக்க நிறுவனம் வடிவமைத்துக் கொண்டிருக்கிறது. இருந்தாலும் பறக்கும் பைக்குகள் காரிலிருந்து வேறுபடுகின்றன. எப்படியென்றால் பறக்கும் காரைப் போல தரையிலோ அல்லது சமப் பகுதியிலோ செல்ல முடியாது. 1984_ல் இருந்து இதை வடிவமைத்து மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. இந்த வி.டி.ஓ.எல். வாகனம், தனிநபர் வாகனம் என்றழைக்கப்படும். செங்குத்து உந்துவிசை மூலம் இயங்கக் கூடியது. இந்த விசையை விசிறி மூலம் கிடைக்கப் பெற்று செங்குத்தாகவும் இயக்க முடியும்.

இரண்டு செலுத்து அறைகளைக் கொண்ட விசிறிகள் ஒன்றோடு ஒன்று எதிர்திசையில் சுழன்று செங்குத்து உந்து விசையை ஏற்படுத்துகிறது. இந்த உந்து விசைதிறன் தயாரிக்க உதவும் திட்டக் குறிப்புகள் இன்னும் முடிவு செய்யப்படா விட்டாலும் பறக்கும் காரைப் போல் சுழல் இயந்திரங்களையே இதிலும் பயன்படுத்தப் போகிறார்கள். அதிகப்படியான காற்றை அறைகளின் மூலமாக வாகனத்தின் இருபுறம் உள்ள நகரும் மூக்குக் குழாய்கள் மூலம் வெளியேறும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தப் போகிறார்கள்.

இந்த நகரும் மூக்குக் குழாய்கள் வாகனத்தின் புவிஈர்ப்பு அச்சுக்கு சற்று மேலே பொருத்தப்பட்டிருப்பதால் வாகனத்தை நிலைநிறுத்த பேருதவி புரிகிறது.

இட வலமாக பொருத்தப்பட்ட இந்த மூக்குக் குழாய்கள் ஒரே சமயத்தில் இயங்கும் வல்லமைப் படைத்தது. இது இயங்கும் விதம் குறிப்பிட்ட உயரத்திலும் தேவையான வேகத்தில் முன் செலுத்தவும் உதவுகிறது.

இதில் அமருபவர்கள் உடம்பு அசையும்போது ஏற்படும் வாகன அதிர்வு மற்றும் திசை மாற்றங்களை சரி செய்கிறது.

இந்த மூக்குக் குழாய் கட்டுப்பாட்டு இயக்கம் ராணுவ கவச வண்டி போல் நகரும் தன்மை கொண்டது. ராணுவ கவச வண்டிகளை எவ்வாறு முன்னும் பின்னும் மற்றும் இடப்புறம் வலப்புறம் என இயங்குகிறதோ அவ்வாறு இருக்கும்.

வேகம் காட்டும் கருவி, வெப்ப மானி, எரிபொருள் அளவுமானி, வான் வேகம், நில வேகம் காட்டும் கருவி மற்றும் ரேடார் திரை என பல்வேறு கருவிகளைக் கொண்டது இந்த பறக்கும் பைக். இவ்வாகனத்தை டாப்ளர் ரேடார், ஜி.பி.எஸ். செயற்கைகோள் மற்றும் பீகான் ட்ராக்கிங் மூலம் இணைக்கப்பட்டு நிர்வகிக்கலாம்.

பறக்கும் கார், பறக்கும் பைக்கை பற்றி தெரிந்து கொண்டீர்கள். என்னதான் திறமையான நவீன தொழில் நுட்பம், கட்டுக்கோப்பான பாதுகாப்பு விதிமுறைகள், சிறந்த பயண விதிகள் ஆகியவற்றைக் கொண்டு வடிவமைக் கப்பட்டாலும் அதன் பாதுகாப்பு மற்றும் நடைமுறை சாத்தியங்களைப் பற்றி விளக்கமும், சந்தேகங்களும் எழாமல் இல்லை.

இப்படித்தான் பறக்க முடியும் என ரைட்ஸ் சகோதரர்கள் பறந்து காண்பித்த பிறகும் கூட உலகம் பல வினாக்களை எழுப்பியது. ஆனால் அவற்றுக்கெல்லாம் பதில் சொல்லும் விதமாக இன்று விமானப் போக்குவரத்துக்கள் பல சாதனைகளை படைத்துக் கொண்டிருப்பது நாம் கண்கூடாக காணும் காட்சி.

தரைவழி, கடல் வழி, வான்வழி போக்குவரத்துகள் நடைமுறையில் இருந்தாலும் ஆபத்துமிக்கதாக கருதப்படுவது வான்வழி (விமானம்)தான்.

ஆனால் இதன் பாதுகாப்பு, வடிவமைப்பு, தொழில்நுட்ப முறைகள் விபத்துக் குறைந்த போக்குவரத்துகளில் விமானம்தான் முதலிடம் வகிக்கிறது. விமான பயண நேரங்களில் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட தடைகள் (கட்டிடங்கள், பாலங்கள், டவர்கள் ஆகியவை) ஒரு சதவிகிதத்திற்கும் குறைவு. ஆனால் நகரில் இயங்கப் போகும் பறக்கும் கார்கள், பறக்கும் 'பைக"குகளுக்கு ஏகப்பட்ட தடைகள் உள்ளன.

விமானத்தை எவ்வாறு விபத்தில்லாத வாகனமாக அங்கீகரிக்கப்பட மேற்கொண்ட முயற்சிகளைவிட பல மடங்குகள் மேற்கொள்ள வேண்டிய நிலை இருந்தாலும் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிகளையும், உத்திகளையும் பயன்படுத்தி வெற்றிகரமாக நாடுகளை வலம் வரப்போகிறது.

அதிவேகமாக மாறிவரும் இக்கால கட்டத்தில் உள்ளம் நாம் காலத்திற் கேற்றபடி உலகையும் மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டாலும்கூட பறக்கும் கார், பறக்கும் பைக் போன்ற அறிவியல் சாதனைகள் இந்த சவால்களை எதிர்கொண்டு புதியதோர் உலகம் படைக்க தன்னை முழுவதும் அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் மனித குலத்திற்கு ஒரு மணிமகுடமாக அமையப் போவது உறுதி.




சூப்பர் கார்


நவீனயுகத்தில் பலதரப்பட்ட கார்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இன்று நவீன கார்களை தயாரிக்கும் பணியில் பல முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு களத்தில் உள்ளன. சொகுசு, ஆடம்பரம், அதிவேகத்திறன், பயணிகளின் பாதுகாப்பு என்று பல்வேறு அம்சங்களைக் கொண்டு கார்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த அம்சங்களில் யார் முன்னணி? என நடக்கும் ஆரோக்கியமான போட்டியில் எந்த நிறுவனம் வெற்றி பெறுகிறதோ அந்நிறுவனம் அதன் பெருமையைத் தக்க வைத்துக் கொள்கிறது. அதே மாதிரி இதை வாங்கி சொந்தமாக்கிக் கொள்ளும் பல வாடிக்கையாளர்களுக்கும் பெரு மையையும் அந்தஸ்தையும் ஈட்டிக் கொடுக்கிறது இந்த நவீன ரக கார்கள்.

இன்று நவீன ரக கார்களின் பட்டியலில் அதிகவேகமாக செல்லும் திறன் கொண்டதாக விளங்குகிறது கோயெனிக்செக்  என்ற சூப்பர் கார். இந்தக் கார் மணிக்கு 390 கிலோ மீட்டருக்கு மேல் செல்லும் திறனுடையது. இதன் (முடுக்கு) வேகத்திறன் காரணமாக மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை 3.5 வினாடியில் எட்டிவிடும். அது மட்டுமல்ல இந்தக் கார் சாலைகளில் இயங்க சட்டபூர்வமான அங்கீகாரத்தையும் பெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் காரை வடிவமைத்தவர் சுவீடன் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியன் வோன் கோயெனிக்செக் என்ற 30 வயது தொழில் அதிபர் ஆவார்.

ஒரு சூப்பர் காரை வடிவமைப்பது என்பது இவருடைய சிறுவயது இலட்சியக் கனவு. அந்தக் கனவின் நனவுதான் இந்த சூப்பர் கார். சூப்பர் காரை வடிவமைக்கும் எண்ணம் தோன்றிய ஆண்டு 1994. இந்தக் காலக்கட்டத்தில்தான் அமெரிக்கா சுவீடன் நாட்டின் முன்னணி நிறுவனங்களான வால்வோ மற்றும் சாப்களை வாங்கியது. ஃபெராரி, லம்போர்கினி போன்ற கார் நிறுவனங்கள் உலகத்திலேயே அதிவேகக் கார் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டன. ஆனால் இந்த கோயெனிக்செகின் சூப்பர்கார் இதையெல்லாம் முறியடித்து 'கின்னஸ்" என்ற உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. பொறியியல் கல்லு}ரியில் பட்டம் பெற்ற பிறகு இவர் ஒரு சின்ன பணிமனை ஒன்றை அமைத்து இக்காரை வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் மூலதனம் வேண்டுமே? என்ன செய்வது என்று யோசித்த போது, 'சுவீடன் தொழில் வளர்ச்சி நிறுவனம்" இவரது ஆர்வத்தையும், திறமையையும் பார்த்து மில்லியன் டாலர் (சுமார் ரூபாய் 2 கோடியே 25 லட்சம்) வழங்கியது. பல்வேறு துறைகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள், தொழிலதிபர்கள் உதவியோடு வீறு நடைபோட்டு வளர்ந்தது இந்த சூப்பர் கார். ஆறு வருடங்களுக்குப் பிறகு என்ற ஏஞ்சல்காம் என்ற இடத்தில் தொழிற்சாலை ஆரம்பித்து பலவித தகுதி சோதனைகளில் வெற்றிப் பெற்ற இந்த சூப்பர் கார் ஐரோப்பா மற்றும் பல உலக நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டு விற்பனைக்கு வரவிருக்கிறது.

மீனும், பறவையும் இணைந்து இயற்கையின் வடிவமைப்பை ஒத்த இந்த சூப்பர் காரின் வடிவம் முதலில் பார்த்தவுடனேயே மனதைக் கொள்ளைக்கொள்ளும் விதமாக அமைந்தது. இதன் உயரம் 42.1 அடி ஆகும். இந்த நு}தன அழகான வடிவமைப்பு பல உயரிய பதக்கங்களை பெற்றுத் தந்தது. இந்தக்கார் தரம் கொண்ட பொருட்கள் மற்றும் கார்பன் இழைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டது. அதிவேக திறனுக்கு ஈடுகொடுக்கும் விதமாக டயர்களை தயாரித்துக் கொடுத்தது. மெக்கலின் நிறுவனம். முன் சக்கரங்களில் 18 அங்குலம் த45 (ஆரம் 45) த55 (ஆரம் 55) அளவுள்ள டயர்கள் பொருத்தப்பட்டன. இக்காரின் மேற்புறம் பட்டனை அமுக்கியவுடன் மூடவும், திறக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதில் தட்பவெப்ப நிலைக் கட்டுப்பாடு, குளிர்சாதன வசதி, மின்னியக்க ஜன்னல்கள், கதவுகள், கண்ணாடிகள், சிடி வசதிகள் (வழித்தடம் அறியவும் மற்றும் வழி நடத்தவும் உதவும் முறைகள்) பின்பக்க காமிரா என பல்வேறு வசதிகளைக் கொண்டது. இன்னும் பல்வேறு வசதிகள் வாடிக்கையாளர்களின் வேண்டுகோளுக்கேற்ப வடிவமைத்துக் கொடுக்கப்படும் என்று இதன் தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். 32 வால்வுகள், 4.7 லிட்டர் திறன் கொண்டது. ஒரு நிமிடத்திற்கு 7300 சுற்றுகள் 655 குதிரைத் திறன் வழங்கும் வசதிக் கொண்டது இந்த இயந்திரம். இதன் கியர் பாக்ஸ் ஆறு வேகங்களில் (ளiஒ ளிநநன) மாற்றும் தன்மை கொண்டது. இவ்வளவு திறன் கொண்டாலும் இதன் எளிய வடிவமைப்பு ஓட்டுனர்கள் கியர் மாற்ற மிகவும் எளிதாகிறது. இதன் சேஸிஸில் 21 அடுக்குகளைக் கொண்ட கார்பன் இழைகளில் தயாரிக்கப்பட்டது. மற்றும் செமி மோனோகோக் போன்ற பகுதிகளை உள்ளடக்கியது. இந்த சூப்பர் காரில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. இது ஏபிஎஸ் (யுவெi-டழஉம டீசயமiபெ ளுலளவநஅ) மற்றும் பவர் பிரேக் தொழில் நுட்ப முறைகளைப் பின்பற்றியது. அதிக திறன் வெளிக்கொணரும் விதமாக வடிவமைக்கப்பட்ட இந்த சூப்பர் காரின் என்ஜின் சாதாரண ரோடுகளுக்கும் பந்தயக்கார் ஓடுதளத் திற்கும் உகந்ததாக வடிவமைக்கப் பட்டது.

குவார்ட்டர்மைல் என்ற விற்பனை நிறுவனம் மூலம் ஐக்கிய அரபு நாடுகளில் விற்பனையைத் துவக்க இருக்கிற இந்த சூப்பர் காரின் விலை 565,930 டாலராகும் (சுமார் 2 கோடியே 50 லட்சம் ரூபாய்).