|
ஒரு விண்கலம் பூமியில் இருந்து புறப்பட்டு விண் வெளியில்
185 முதல் 643 கிலோ மீட்டர் உயரம் வரை செல்ல கீழ்க்கண்ட
முக்கிய பாகங்கள் உதவி செய்கின்றன.
* இரண்டு திட ஏவுகல பூஸ்டர்
* மூன்று முக்கிய என்ஜின்கள்
* வெளி எரிபொருள் அறை
* சுற்றுவட்டப் பாதையில் செல்வதற்குரிய நேர்த்தியான
வழிமுறைகள்
விண்கலத்தை து}க்கிச் செல்வதற்குரிய முக்கிய உந்து விசை
சக்தியை திட ஏவுகல பூஸ்டர்கள்தான் கொடுக்கின்றன. இது தவிர
விண்கலத்தில் தகவல் தொடர்பு கருவிகள், ஆய்வு சாதனங்கள்,
உந்து விசை கட்டுப்பாட்டு சாதனங்கள், பாராசு10ட்டுகள்
போன்றவை உள்ளன.
விண்கலங்கள் எவ்வாறு இயங்குகின்றன?
விண்வெளி ஆராய்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பவை
விண்கலங்கள். செயற்கைகோள்களை சுமந்து செல்லும் பணியில்
ராக்கெட்டு களும் விண்வெளி வீரர்கள் மற்றும் பிற
உபகரணங்களை விண்வெளிக்கு கொண்டு செல்ல விண்கலங்களும்
பெரிதும் உதவுகின்றன.
இந்த விண்கலங்கள் பற்றிய விரிவான தகவல்கள், அவை செயல்
படும் விதம் ஆகியவை பற்றிய தகவல்கள் இந்த வார அறிவியல்
அதிசயம் பகுதியில் இடம்பெறுகிறது.
சூரியனைச் சுற்றி 9 கோள்களும் வால் நட்சத்திரங்களும்
மற்றும் விண்கற்களும் இயங்குகின்றன.
பூமியைப் போல மனிதர்களும் உயிரினங்களும் வசிக்கும் வசதி
வேறு எந்த கிரகத்தில் உள்ளது என்பது பற்றிய ஆய்வு தீவிரமாக
நடந்து வருகிறது. இந்த ஆய்வின் ஒரு பகுதியாக நிலவுக்கு
மனிதன் சென்று ஆய்வு நடத்தினான். அடுத்ததாக செவ்வாய்க்
கிரகத்துக்கு ''ரோபர்""களை அனுப்பி ஆய்வு நடத்தி
வருகிறான்.
விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையம் ஒன்றை அமைக்கும்
பணியிலும் அமெரிக்கா, ரஷியா உள்பட பல்வேறு நாட்டு விண்வெளி
விஞ்ஞானிகள் கூட்டாக ஈடுபட்டுள்ளனர்.
விண்வெளி ஆய்வின் தொடக்க கட்டத்தில் நிலவு மற்றும்
விண்வெளி சுற்றுப் பாதையை அடைய 'ராக்கெட்டு"கள்
பயன்படுத்தப்பட்டன. செயற்கைகோள்களை சுமந்து சென்றுவிண்வெளி
சுற்றுப் பாதையில் விடும் பணிகளை ராக்கெட்டுகள் செய்து
வந்தன. இந்த ராக்கெட்டுகளை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த
முடியும். இதற்கான தயாரிப்பு செலவுகளும் மிக அதிகம்.
எனவே இது தொடர்பாக நடந்த ஆராய்ச்சிகளின் முடிவில்
உருவானதுதான் மறு உபயோக ஏவுகலங்கள். ஸ்பேஸ் ஷட்டில் என்று
அழைக்கப்படும் இந்த விண்கலங்கள் விமானம் போல
செயல்படக்கூடியது. விண்வெளி வீரர்கள் மற்றும் பொருட்களை
விண்வெளிக்கு சுமந்து சென்றுவிட்டு மீண்டும் பூமிக்கு
திரும்பும் திறன் கொண்டது.
நவீன விண்கலங்களை தயாரிப்பதில் அமெரிக்கா வெளி நிலையமான
'நாசா" நீண்ட காலமாக ஆராய்ச்சிகளை நடத்தி வருகிறது.
1972-ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் கூறும்போது,
''மறு உபயோகத்திறன் கொண்ட விண்கலங்களை நாசா வடி வமைக்கும்"
என்று கூறினார்.
ராக்கெட்டுகள் விண்வெளிக்கு செல்லும்போது அவற்றின் எரி
பொருள் அறைகள் தனியாக எரிந்து கழன்று விடும் வகையில்
இருக்கும். எரி பொருள் பகுதி ஒவ்வொரு அறையாக எரிந்து
முடிந்த பின்னர் செயற்கை கோள் அல்லது விண்கலத்தின் பகுதி
மட்டும் விண்வெளி சுற்றுப் பாதையில் கழற்றி விடப்படும்.
ஆனால் விண்கலங்களின் செயல்பாடுகள் இதில் இருந்து
மாறுபட்டவை. பூமியில் இருந்து புறப்பட்டுச் செல்லும்
விண்கலம் விண்வெளியில் தனது பணியை முடித்துக்கொண்டு
மீண்டும் பூமிக்கு திரும்ப வேண்டும். எனவே எரிபொருள்
அறைகள் வெளிப்பகுதியில் பொருந்து மாறு விண்கலங்களின் வடி
வமைப்பு இருக்க வேண்டும் என்று 'நாசா" தீர்மானித்தது.
அந்தக் காலகட்டத்தில் விண்கலங்கள் ஒரு வெப்ப பாதுகாப்பு
தடுப்புகளை கொண்டிருந்தது. இவை விண்கலம்
பூமிக்கு திரும்பும்போது புவி சுற்று வட்டார எல்லைக்குள்
வந்தவுடன் பூமியின் வெப்பத் தால் எரிந்து தனியாகப்
பிரிந்து விடும். இருந்தாலும் மறுஉபயோகத் தன்மை கொண்ட
விண்கலம் செலுத்தும் பாகங்களைக் கொண்ட விண்கலங்களை
வடிவமைப்ப தற்காக பலவித வழி முறைகள் கையாளப்பட்டன. விண்கல
வடிவமைப்பாளர்கள் விண்கலங்கள் இறங்கும்போது புவி
சுற்றுவட்டார எல்லையை அடையும்போது ஏற்படும் வெப்பத்தை
தாங்கிக்கொள்வதற்காக விண்கலத்தைச் சுற்றி பல
செராமிக்டைல்ஸ் கொண்டு
தடுப்புகள் அமைக்கப் பட்டன. இதனால் விண் கலம் மற்றும்
அதில் பயணம் செய்யும் வீரர்கள் வெப்பத்தில் இருந்து
பாதுகாக்கப்படுகின்றனர்.
விண்கலங்கள்
தயாரிப்பில் முதலில் எண்டர்பிரைஸ் ஓடத்தின் மாதிரி வடிவம் உருவாக்கப்பட்டது.
இந்த 'எண்டர்பிரைஸ்" விண்கலம் விண்வெளி சுற்றுப்பாதைக்கு
செல்லாமல் புவி எல்லைக்கு உட்பட்ட இடங்களில் பலமுறை
பறந்தும், தரை இறங்கியும் சோதனைகள் நடத்தப்பட்டது.
சோதனையின்போது இந்த விண்கலம் போயிங் 747 ரக விமானத்தில்
இருந்து செலுத்தப்பட்டது.
அதாவது போயிங் 747 விமானத்தில் 'எண்டர்பிரைஸ்" விண்கலத்தை
ஏற்றியபடி வானில் பறந்தது. நடு வானில் பறக்கும்போது
'எண்டர்பிரைஸ்" கலம் தனியாக பிரிந்து சென்று தன்னிச்சையாக
பறந்தது. இவ்வாறு பல முறை சோதனைகள் நடத்தப்பட்ட பிறகு
'எண்டர்பிரைஸ்" வடிவமைக்கப்பட்டது.
இதுபோன்ற ஆய்வுகளின் மூலம் கொலம்பியா, டிஸ்கவரி
அட்லாண்டிஸ், சேலஞ்சர் ஆகிய 4 விண்கலங்கள் தயாரிக்கப்பட்டது. இவை ஒவ்வொன்றும் வௌ;வேறு திறனும் சக்தியும்
கொண்டவை.
முதன் முதலாக 1981-ல் கொலம்பியா விண்கலம் ஜான் யெங்
மற்றும் ராபர்ட் கிரிப்பென் ஆகியோரை ஏற்றிக்கொண்டு
விண்வெளிக்கு பறந்தது.
1986-ல் சேலஞ்சர் விண்கலம் ஒரு மோசமான விபத்தை சந்தித்தது.
இதன் திட ஏவுகல பூஸ்டர் இணைப்பில் ஏற்பட்ட தீ காரணமாக
விண்கலம் தீப் பிடித்து வெடித்துச் சிதறியது. இந்த
விபத்தில் அதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்தனர். இதைத்
தொடர்ந்து விசாரணைகளும், ஆய்வுகளும் நடந்தது. தவறுகளும்
குறைபாடுகளும் சரி செய்யப்பட்டு சேலஞ்சருக்கு பதிலாக
'என்டோலர்" என்ற விண்கலத்தை வடி வமைத்து விண்வெளி பயணத்தை
தொடர்ந்தது.
தற்போது விண்கலம் ஒன்றின் ஆயுட் காலம் 100 விண்வெளிப்
பயணமாக இருந்தாலும் பாதுகாப்பு கருதி 25 பயணங்களுக்கு
மட்டும் விண்கலங்கள் பயன்படுத்தப்படுகிறது.
தகவல் தொகுப்பு: எம்.ஜே.எம்.இக்பால், துபாய்.
அடுத்த வாரம்
எந்திர மனிதன் எனப்படும் 'ரோபட்"டுகள் பற்றிய தகவல்கள்
இடம் பெறுகிறது.
|