|

பிறந்தது முதல் மரணம் வரை மனிதனின் வாழ்க்கைப் பயணம்
'தேடுதலை' குறிக்கோளாக கொண்டே நகருகிறது. கல்வி, வேலை,
பணம், புகழ், விரும்பிய பொருள்... என்று மனிதன் ஆசைப்பட்ட
விஷயங்களை அடைய எந்திரத்தனமாக ஓடிக் கொண்டே இருக்கிறான்.
எந்திரமயமான மனித வாழ்க்கையில் எந்திரங்களின் பங்கு மிக
முக்கியமானதாகி விட்டது. எந்திரங்களின் துணை இல்லை என்றால்
மனித வாழ்க்கை ஸ்தம்பித்து போய்விடும் நிலை உள்ளது.
வாழ்க்கை வசதிகளை அதிகப்படுத்திக் கொள்ள மனிதன்
உருவாக்கிய கண்டு பிடிப்புகளில் குறிப்பிடத்தக்கது
'ரோபட்'டுகள். மனிதனின் தேவை, உபயோகத்துக்கு ஏற்றபடி
பல்வேறு வகைகளில் வடிவங்களில் 'ரோபட்டு'கள்
தயாரிக்கப்பட்டு வருகின்றன. அறிவியல் அதிசயம் பகுதியில்
இடம் பெற்று வரும் 'ரோபட்'டுகள் பற்றிய கட்டுரை தொடரில்
இந்த இதழில் வீட்டு உபயோக 'ரோபட்'டுகள் பற்றிய தகவல்கள்
இடம் பெறுகிறது.
தொழிற்சாலைகள், ஆய்வுப்பணிகள் மட்டுமின்றி வீட்டு
உபயோகத்திற்கும் 'ரோபட்'டுகள் பெருமளவில் பயன்படுத்தப்
பட்டு வருகின்றன. வீட்டை காவல் காக்கும் பணி, சுத்தம்
செய்யும் பணி, அன்றாட பணிகளை ஒழுங்குபடுத்தி நமக்கு நினைவு
படுத்தும் பணி, பொழுது போக்கு அம்சங்களில் ஈடுபட்டு
நம்மை மகிழ்விக்கும் பணி என்று பல விதமான பணிகளில் இன்றைய
'ரோபட்'டுகள் ஈடுபட்டு வருகின்றன.
'ரோபட்'டுகளுக்கு செயற்கை புத்திசாலித்தனத்தை அளிக்கும்
முயற்சிகளும், ஆராய்ச்சிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த ஆய்வுகளில் ஓரளவு வெற்றியையும் விஞ்ஞானிகள் அடைந்து
விட்டனர். ஆர்டிபீசியல் இண்டலிஜன்ஸ் (யுசவகைiஉயட
ஐவெநடடபநnஉந) எனப்படும் செயற்கையாக சிந்திக்கும் திறனை
'ரோபட்'டுகள் முழுமையாக பெறும் போது மனித வாழ்க்கை
முறையே மாறிவிடும் என்பது விஞ்ஞானிகளின் எதிர்பார்ப்பாக
இருக்கிறது.
தொழில் நுட்ப வளர்ச்சியால் வரும் நூற்றாண்டுகளில் சமுதாய
மாற்றங்களில் 'ரோபட்'டுகள் பெரும் பங்கு வகிக்கும்.
'வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம், 'ஆடை இல்லாத மனிதன் அரை
மனிதன்' போன்ற பழமொழிகள் எல்லாம் 'வீட்டுக்கு ஒரு
'ரோபட்' வளர்ப்போம் (வைத்திருப்போம்)', 'ரோபட் இல்லாத
மனிதன் அரை மனிதன்' என்று புதுமொழிகளாக மாறி இருக்கும்.
வீடுகளில் குழந்தை பராமரிப்பு, செல்லப் பிராணிகளை
கவனித்துக் கொள்ளுதல், வீடு சுத்தம் செய்தல், கார்களை
துடைப்பது, தோட்டங்களை சீரமைப்பது போன்ற பணிகளை எல்லாம்
'ரோபட்'டுகள் செய்யும் காலமாக எதிர்காலம் இருக்கும்.
காவல்துறைகளில் 'ரோபட்'களில் (ரோபோ காப்ஸ்) பணியில்
அமர்த்தப்படும். குறிப்பாக இரவு நேர ரோந்துப்பணிகளில்
'ரோபட் போலீசார் அதிகமாக ஈடுபடுத்தப்படுவார்கள். இதே
போல போக்குவரத்தை ஒழுங்குப்பத்தும் பணிகள், போக்கு
வரத்து விதிமுறைகள் மீறப்படுகிறதா என்று கண்காணிக்கும்
பணிகளிலும் 'ரோபோ காப்ஸ்'கள் ஈடுபடுவார்கள்.
இதனால் விதிமுறைகள் மீறும் வாகனங்கள் பாரபட்சம் இன்றி
கண்டுபிடிக்கப்பட்டு உடனுக்குடன் அபராதம் மற்றும் தண்டனை
வழங்கப்படும். அபராத தொகை குற்றவாளியின் வங்கி கணக்கில்
இருந்து நேரடியாக கழித்துக் கொள்ளும் வகையில் இருக்கும்.
('மாமூல்' கொடுத்து தப்பிக்க முடியாது). இதனால்
நீதிமன்றம் மற்றும் காவல் துறையின் பணிகள்
எளிதாக்கப்படும்.
வீடுகளில் சமையல் வேலை மற்றும் குழந்தைகள் பராமரிப்பு,
தட்ப வெப்பநிலைகளுக்கு ஏற்ப உணவு மற்றும் உடைகளை தேர்ந்து
எடுத்து கொடுத்தல் போன்ற பணி களை கவனிக்கும் வகையில்
'ரோபட்'டுகள் இருக்கும்.
சமையல் பணிகளில் நமது தேவைக்கு ஏற்ப உணவுகளை தயாரிக்கும்
அளவுக்கு திறன் கொண்டதாக 'ரோபட்'டுகள் இருக்கும். அதாவது
நோஞ்சான் உடல் வாகு கொண்டவர்களுக்கு அதிக சத்து நிறைந்த
உணவுகளையும், குண்டான கொழுப்பு சத்து நிறைந்த உடல்வாகு
கொண்டவர்களுக்கு கேப்பை கழியும் தயாரித்து கொடுக்கும்.
குழந்தைகளுக்கு டியூஷன் சொல்லிக் கொடுக்கும் (சரியாக
படிக்காவிட்டால் தலையில் கொட்டுவது, கன்னத்தில் கிள்ளுவது
போன்றவற்றை செய்யாது)
காலை நேரத்தில் நாம் அசந்து தூங்கிவிட்டால் நமது முகத்தில்
தண்ணீர் தெளித்து 'சோம்பேறி, சீக்கிரம் எழுந்திரு லேட்டா
போய் பலரிடம் திட்டு வாங்கப் போற, எழுந்திரு', என்று
மிரட்டும்.
திரைப்படங்களில் முன்னணி கதாநாயகர்களில் ஒன்றாக விளங்கும்.
நடித்த படங்கள் எல்லாம் 100 நாட்கள் தாண்டி
ஓடிக்கொண்டிருக்கும். (ரசிகர் மன்றம் வைத்து வருங்கால
முதல்வர் என்று சொல்லாமல் இருந்தால் சரி).
தேர்தல் பணிகளிலும் இதன் ஆதிக்கம் மேலோங்கியிருக்கும்.
வேட்பாளர்களின் சொத்து விவரங்கள், கல்வி, விவரம், உயரம்,
எடை போன்ற பல்வேறு விவரங்களை விரல் நுனியில்
வைத்திருக்கும். தேர்தல் நடத்தை விதிகளில் ஒரு 'இன்ச்'
மீறினாலும் கூட களத்தில் இருந்து தூக்கி எறிந்து விடும்.
ஓட்டுரிமை கொண்ட அனைத்து வாக்காளர்கள் பற்றிய அனைத்து
விவரங்களையும் கொண்டிருப்பதால், தேர்தல் சாவடியில்
இருக்கும் ரோபட்டுகள் கள்ள ஓட்டுப் போடுபவர்களை விரட்டி
அடிக்கும். திருடர்கள், வழிப்பறி கொள்ளைக்காரர்கள் போன்ற
குற்றவாளிகளைப் பற்றிய அனைத்து விபரங்களையும்
கொண்டிருப்பதால் அவர்களை தொடர்ந்து கண்காணிக்கும்.
(விடுதலை செய்யப் பட்ட பிறகும்). இதனால் சமூக குற்றங்கள்
குறைந்து பொது மக்கள் பயமின்றி வெளியில் நடமாடலாம்.
(அண்ணல் காந்தியடிகளின் கனவு நனவாகும்).
என்ன 'கப்ஸா' விடுகிறீர்கள் என்கிறீர்களா? கேட்பதற்கு ஒரு
திரைப்படம் பார்ப்பது போல் இருந்தாலும் இது எல்லாம்
சாத்தியமாகப் போகிறது. ஒரு காலத்தில் 'கணினி'கள் வந்த
போது அதைக் காண்பதற்காக கூட்டம் கூட்டமாய் போய்
பார்த்தது உண்டு. ஆனால் இன்று நமது அன்றாட வேலைகளில்
ஒன்றாக அங்கம் வகிக்கிறது. வீட்டு மளிகை சாமான்கள்,
பட்ஜெட் போன்ற பல காரியங்களுக்கு கணினி இல்லாமல் நம்மால்
வேலை பார்க்க முடியவில்லை. அவ்வாறு நாமும், கணிணியும்
ஒன்றோடொன்று இணைந்து விட்டோம். அதுபோல் ரோபட்டும்
வரும் நூற்றாண்டுகளில் சமுதாயத்தில் மிக உன்னதமாக அங்கம்
வகிக்கும். கல்யாணப் பத்திரிக்கைகளில் 'சுற்றமும் நட்பும்
மற்றும் ரோபட்டும்' என்றிருக்கும்.
மக்கள் தொகை குறைந்த மேலை நாடுகளில் இந்த ரோபட்டுகள்
சரிப்பட்டு வரும். மக்கள் தொகை பெருக்கம் கொண்ட நமது
நாடுகளுக்கு சரிப்பட்டு வருமா? வேலையில்லாத் திண்டாட்டம்
பெருகி விடாதா? என்ற கேள்வியும் எழாமல் இல்லை. கணிணி மெல்ல
மெல்ல நமது நாட்டில் ஊடுருவி விட்டபொழுதும் இதை எதிர்த்து
கோஷங்கள் எழத்தான் செய்தன. ஆனால் நிலைமை வேறு
மாதிரியல்லவா ஆயிற்று இன்று. இந்தியர்கள் என்றால்
உலகெங்கும் சிவப்புக் கம்பளம் விரித்து நம்மை
வரவேற்பதற்கும் முக்கியக் காரணமாய் அமைந்தது கணினிகள்
துறையில் நம்மவர்களின் அசாத்திய திறமை அல்லவா? அது போல்
நாமும் இந்த இயந்திர மனிதர்களின் வளர்ப்பில் அக்கறை
செலுத்த வேண்டும். கணினிகள் துறையில் பல புரட்சிகளை
படைத்துக் கொண்டிருக்கும் நமக்கு, இந்த மனிதர்களின்
தயாரிப்பு என்பது மிக எளிதாக இருக்கும். இதற்காக பள்ளி,
கல்லூரி மாணவர்கள் சின்ன சின்ன ரோபட்டுகளை வடிவமைப்பதில்
ஆர்வம் காட்ட வேண்டும். பொருளாதாரத் தேவை அதிகம் என்றால்
ஒரு குழுவாகச் சேர்ந்து இதனை படைக்கும் ஆராய்ச்சி மற்றும்
தயாரிப்பில் ஈடுபடலாம். வெறும் வார்த்தைகளில் 'இந்தியா
ஒளிர்கிறது', 'இந்தியா வல்லரசு' என்று கூறினால் போதாது.
நமது இளைஞர்களை ஆக்கப் பணியில் முன்னேற்ற நம் அப்துல்கலாம்
எண்ணற்ற சொற்பொழிவுகள் மற்றும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை
வெளியிட்டு வருகிறார். இவற்றைப் பின்பற்றி செயல்படத்
தொடங்கினால் நாளை நமதே!.
புகழ்பெற்ற 'ரோபட்'டுகள்
சு2னு2 மற்றும் ஊ-3Pழு:- இந்த 'ரோபட்' 'ஸ்டார்வார்ஸ்'
ஆங்கில படத்தில் நடித்தது. கெட்டிகாரத்தனம் மற்றும் பேசும்
திறன் போன்ற மனிதப் பண்புகளை கொண்டதாக இது இருந்தது.
யுஐடீழு :-சோனி நிறுவனத்தின் தயாரிப்பு இந்த 'ஐபோ'
'ரோபட்'. இது நாய்க்குட்டி வடிவில் தயாரிக்கப்பட்டது.
குரைக்கும், வாலை ஆட்டும்.
யுளுஐஆழு:-ஹோண்டா நிறுவனத்தின் தயாரிப்பு இது. மனிதனைப்
போல கை, கால்களுடன் நடக்கும் திறன்கொண்டது, இந்த
'அசிமோ'.
தொழிற்சாலை 'ரோபட்'டுகள்:-
தொழிற்சாலைகளில் ஒருங்கிணைப்பு பகுதிகளில் இயங்கும்
எந்திரங்கள் 'தொழிற்சாலை ரோபட்'டுகள் என்று
அழைக்கப்படுகின்றன. கார் தயாரிப்பு போன்ற பல வகையான
பொருட்கள் தயாரிப்பு பணிகளில் இந்த வகை 'ரோபட்'டுகள்
அதிக அளவில் பயன் படுத்தப்படுகின்றன.
டேடா:- ஏறக்குறைய மனிதனைப் போன்ற தோற்றம் கொண்ட 'ஸ்டார்
டிரெக்' 'ரோபட்',
'பேட்டில் போட்ஸ்': ரிமோட் கண்ட்ரோல் மூலம் சண்டை
போடும் 'எந்திர வீரன்'.
வெடி பொருட்களை செயல் இழக்க வைக்கும் ரோபட்'டுகள்:-
வெடிகுண்டுகள் மற்றும் வெடி பொருட்களை கண்டுபிடித்து
அவற்றை செயல் இழக்க வைக்கும் ஆபத்தான பணிகளை செய்யும்
'ரோபட்'.
மார்ஸ் பாத் பைண்டர் (ஆயசள pயவா குiனெநச) விண்வெளி
ஆராய்ச்சியிலும் 'ரோபட்'கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
'நாசா' விண்வெளி ஆராய்ச்சி நிலையம் செவ்வாய் கிரகத்துக்கு
அனுப்பிய 'ரோபட்'. இதே போல தற்போது விண்வெளியில்
செவ்வாய் கிரக ஆய்வில் மார்ஸ்ரேலா ஸ்பிரிட் மற்றும்
ஆப்பர்சுனிட்டி என்ற பெயரில் இரு 'ரோபட்'டுகள்
ஆய்வுப்பணியில் ஈடுபட்டு வருகின்றன.
ர்யுடு 2001:- 'ஸ்பேஸ் ஓடிசி' ஆங்கில படத்தில் இடம் பெற்ற
விண்கலத்தில் இருந்த 'கம்ப்யூட்டர் ரோபட்'.
ரோபோ மோவர்:- புல்வெட்டும் 'ரோபட்'.
இது போன்று பல்வேறு வகையான 'ரோபட்'டுகள் மனிதர்களை
சந்தோஷப்படுத்தவும் அவர்களின் பணிகளை நிறைவேற்றவும்
பயன்படுத்தப்பட்டன. 'ரோபட்'டுகளை உருவாக்கும்
ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ள நிபுணர்கள் கூறும் போது
'புதிய புதிய நிகழ்ச்சிகளை மூளையில் பதிவு செய்து கொண்டு
இதன் மூலம் உடலை அசைக்கும் (செயல்படும்) எந்திரம் தான்
'ரோபட்'. மற்றபடி 'புல்வெட்டுவது' 'சண்டை போடுவது'
போன்ற 'தமாஷ்' வேலைகளைச் செய்வது எல்லாம் எந்திரங்கள்
தானே தவிர 'ரோபட்' அல்ல என்கிறார்கள்.
ரோபோ காப்ஸ்
அரசனாக இருந்தாலும் சரி. ஆண்டியாக இருந்தாலும் சரி,
நாட்டுக்கு அதிபராக இருந்தாலும் சரி. சாதாரண குடிமகனாக
இருந்தாலும் சரி, தப்பு செய்தால் இவர்கள் நீதிமன்றத்தில்
தண்டனையே. எந்த மொழியிலும் இவர்களுக்கு பிடிக்காத
வார்த்தை 'மாமூல்'.
கடமை தவறாத இந்த போலீஸ்காரர்களை (சுழடிழஉழிள)
உருவாக்கியவர்கள் ஜப்பான்காரர்கள்.
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 'டம்சுக்' (வுஅளரம) நிறுவனம்
ரோந்துப் பணிக்கு உகந்த ரோபட்களை வாடகைக்கு விட
இருக்கிறார்கள். இவைகள் குடியிருப்புகள் மற்றும் அலுவலகக்
கட்டிடங்களில் ரோந்து பணிக்காக தன்னை அர்ப்பணிக்க தயாராக
இருக்கின்றன. கட்டிடங்களின் மாடிகளை அடைவதற்கு லிப்டில்
ஜம்மென்று ஏறி செல்லும் அறிவு படைத்தது. வேண்டாத
விருந்தாளிகளை (அத்து மீறி நுழைபவர்களை) அடையாளம் கண்டு
உடனடியாக அவர்கள் மீது வர்ணபந்துக்களை (Pயiவெ டீயடடள)
சரமாரியாக பிரயோகிக்கும். இந்த வகை ரோபட்டுகள் உலகின்
முதல் போலீஸ் ரோபோட்டுகள் என்றும், மேலும் அத்துமீறி
நுழைபவர்கள் மீது புகைத் திரையை (ளுஅழமந ளுஉசநநn) போட்டு
வளைக்கும் வல்லமையும் படைத்தது.
ஏற்கனவே உள்ள நிரலமைப்பின் படி (Pசழபசயஅஅநன) உள்ள
வழித்தடங்களில் அந்த தளத்தில் (குடழழச) தொடர்ந்து 8 மணி
நேரம் கண்காணிப்பில் ஈடுபடுவதோடு தேவைப்படும்பொழுது
புகைப்படங்களை எடுத்து உடனுக்குடன் பாதுகாப்பு சோதனைச்
சாவடிக்கு அனுப்பும் திறன் கொண்டது.
ரோபட் மூலம் கிடைக்கப்பெறும் தகவல்களில் 'அவசர
காலம்(நுஅநசபநnஉல்) என்று உணரப்பட்டால் சோதனைச் சாவடியில்
உள்ள அதிகாரிகள் அங்கிருந்தபடி தொலைக்கட்டுப்பாட்டு மூலம்
இந்த ரோபட்டுகளை இயக்க முடியும் என்பதும் இதன்
தனிச்சிறப்பு. வுஅளரம நிறுவனத்தை சேர்ந்த பெண் செய்தி
தொடர்பாளர் ரிசுடோ கூறுகையில் 2 செ.மீ சுற்றளவு கொண்ட
வர்ணப்பந்து கதிரொளிகள் மீது சுடப்பட்டவுடன் அவர்கள் மீது
மோதி அழிக்க முடியாத மஞ்சள் நிற வர்ணத்தை அவர்கள் மீது
தெளிக்கும் என்கிறார்.
'வு63ஆர்டமீஸ்' என்ற இந்த ரோபட் 157 செ.மீ உயரமுடையது.
மணிக்கு 7 கி.மீ வேகத்தில் சத்தமில்லாமல் நடக்கும்
சாதுர்யம் கொண்ட இந்த ரோபட்டின் எடை 100 கிலோ. ஏற்ற
இறக்கம் கொண்ட சுமார் 20 வாய் மொழிகள் மூலம் தொடர்பு
கொள்ளலாம். இவ்வளவு வல்லமைகள் பொருந்திய இந்த ரோபட்டை
வுஅளரம நிறுவனம் வாடகைக்கு விட தயாராக இருக்கின்றன. இதன்
மூலம் தனியார் நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள்,
ஆஸ்பத்திரிகள் மற்றும் பல முக்கிய நிறுவனங்கள், இந்த
'ரோபட் போலீஸ்களை பாதுகாப்பு பணிக்கு அமர்த்தும்
முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.
|