|
பக்ரீத் பண்டிகையையொட்டி
சித்தார்கோட்டையில் ஒட்டக குர்பானி |
|
பனைக்குளம்,ஜன.13-
பக்ரீத் பண்டிகையை யொட்டி சித்தார்கோட்ட யில்
ஒட்டகம் குர்பானி செய்யப்பட்டது.
குர்பானி
தியாக திருநாளான பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் ஆடு, மாடு போன்ற
பிராணிகளை அறுத்து அவற்றின் இறைச்சியை 3 பங்காக்கி, ஒரு பங்கை
ஏழைகளுக்கும், மற்றொரு பங்கை உறவினர்களுக்கும் கொடுப்பதை கடமையாக
கொண்டுள்ளனர். இந்த நிலையில் ராமநாதபுரம்
அருகே உள்ள சித்தார்கோட்டை ஜமாத்தை சேர்ந்த தொழில் அதிபர்
ஜமிருல் ஹசன், அகமது இபுராகீம், வருசை உமர்கான்,
தாவூது, செய்யது இபுராகீம் அலி, ஆரிப்கான், வருசை உமர் கான்
ஆகிய 7 பேரும் சேர்ந்து ஒட்டகத்தை கூட்டு குர்பானி கொடுத்தனர்.
ஆந்திராவில் இருந்து வரவழைக்கப்பட்ட சுமார் 10 அடி உயரமுள்ள அந்த
ஒட்டகம் நேற்று காலை அறுத்து குர்பானி கொடுக்கப்பட்டது.
ராமநாதபுரம் கிழக்கு மாவட்டத் தில் ஒட்டகத்தை
குர்பானி கொடுப்பது இதுவே முதல் முறை என்பதால் அதனை காண
சித்தார்கோட்டை மற்றும் அதனை சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்த ஏராளமானோர்
சித்தார் கோட்டை வந்திருந்தனர். இதே போல தேவிபட்டினம், அத்தியூத்து,
புதுவலசை, பனைக்குளம், அழகன்குளம், ஆற்றாங்கரை, பெருங்குளம்,
சாத்தான்குளம், இருமேனி, வேதாளை, மண்டபம் போன்ற பகுதிகளில் ஆடு, மாடு
போன்றவை குர்பானி கொடுக்கப்பட்டது.
நன்றி: தினத்தந்தி
தகவல் : முதுவை ஹிதாயத் ( எம் என் ஏ )