உலகளாவிய ஆய்வுப்படி. G.C.C. (Gulf
Co-operation Council) நாடுகள் கணிணி தொழில் நுட்ப அறிவில்
மூன்றாம் இடத்தில் சிறந்து விளங்குகிறது.
உலகின் முதல் இரண்டு நிலைகளில் முறையே பிரிட்டன் மற்றும்
இத்தாலி இருந்து வருகிறது.
G.C.C.. நாடுகள் என்பது சவுதி அரேபியா, ஐக்கிய அரபு
அமீரகம், கத்தார், பஹ்ரைன், குவைத் மற்றும் ஓமான் ஆகிய
நாடுகள் உள்ளடக்கிற சபையாகும்.
2005-ல் நடைபெற்ற கணிணி தொழில் நுட்ப மாநாட்டில் பங்கேற்ற
138 நாடுகளிடையே, G.C.C. கூட்டமைப்பு மூன்றாம் இடத்தைப்
பெற்றது. அடுத்த முறை நாங்கள் முதலிடத்தைப் பிடிப்போம்
என்கிறார் I.C.D.L. நிறுவனத்தின் பொது இயக்குநரான ஐமீல்
எஸ்ஸோ.
தி இன்டர்நேஷனல் கம்ப்யூட்டர் டிரைவிங் லைசன்ஸ் (I.C.D.L.)
எனும் திட்டத்தை ஐரோப்பிய யூனியன் (E.U.)தான் துவக்கி
வைத்தது. கணிணி அறிவை மக்களிடம் பரப்புவதற்காகவும் பல்வேறு
நாடுகளில் இலவச கணிணி வகுப்புகளை நடத்தவும் தான் இந்த E.U.
இதைத் துவக்கியது.
இந்த ஆண்டில் மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் (யு.எ.இ.)
50,000 பேர் இத்திட்ட வகுப்பில் சேர்ந்துள்ளனர். G.C.C.
நாடுகளில் முழுவதுமாக 2 இலட்சத்திற்கு மேற்பட்டோர்
இத்திட்ட வகுப்பில் சேர்ந்துள்ளனர்.
'கடந்த 2005 ஆம் ஆண்டு கணிணி தொழில் நுட்ப அறிவின் இடைவெளி
கணிசமாகக் குறைந்துள்ளது' என I.C.D.L-GCC நிறுவனம்
கூறியுள்ளது
அரசுகள் தங்கள் அலுவலர்களுக்கு இப்படிப்பைக்
கட்டாயமாக்கியது.
இந்த பிராந்தியத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் I.C.D.L.
பாடத்தை தங்களது கல்வித் திட்டத்தில் இணைத்துள்ள நாடுகள்
தங்களது ஆசிரியர்களுக்கும் அலுவலர்களுக்கும் I.I.C.D.L. ஐ
தகுதி நிர்ணயமாக ஆக்கியது.
G.C.C., பிராந்தியத்தில் மட்டும் 32,000 ஆசிரியர்கள்
மற்றும் அரசாங்க அலுவலர்கள் இத்திட்டத்தால்
பயனடைந்துள்ளார்கள்.
37 சதவீதத்திற்கு மேலான அரசு அலுவலகங்கள் தங்களது
பணியாளர்களுக்கு இக்கல்வியைக் கொடுத்தது.
தீயணைப்புத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அலுவலர்கள்
தங்களது திறனை வளர்த்துக் கொண்டனர்
பிரிட்டனும் இத்தாலியும் இத்தொழில்நுட்பத்தில் சிறந்து
விளங்குவதற்குக் காரணம் அதன் அரசாங்கங்கள் இலவசமாக கணிணி
தொழில்நுட்பத்தை பயில்விப்பதும் மற்றும் மாணியம்
கொடுப்பதும்தான்.
இதுபோல இலவச பயிலரங்கங்களை ஊக்குவிப்பதும் இங்குள்ள
அனைவருக்கும் கணிணி அறிவை கொடுப்பதும்தான் எங்கள் கொள்கை
என்கிறார் I.C.D.L. நிறுவனத்தின் பொது இயக்குநரான ஐமீல்
எஸ்ஸோ.
தகவல்: வி.களத்தூர் மு முஹம்மது காசிம்
|