துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி

துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி சார்பில் முன்னாள் மத்திய அமைச்சரும், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினருமான தனுஷ்கோடி ஆதித்தன், இந்திய தேசிய காங்கிரஸின் தமிழ்நாடு மாநில சிறுபான்மைத்தலைவரும், ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்க சென்னை கிளையின் தலைவரும், இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பேரவையின் தலைவரும், இராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரைச் சேர்ந்த அல்ஹாஜ் எஸ் எம் இதாயத்துல்லா உள்ளிட்டோருக்கு 10.02.2006 வெள்ளிக்கிழமை லேண்ட்மார்க் ஹோட்டலில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு ஸ்கை குருப் ஆப் கம்பெனிகளின் இயக்குநர் கீழக்கரை அல்ஹாஜ் செய்யது அப்துல் காதர் (சீனா தானா) தலைமை வகித்தார். ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் அமீரக அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் எம் அப்துல் ரஹ்மான் வரவேற்புரை நிகழ்த்தினார்.

ஏற்புரை நிகழ்த்திய அல்ஹாஜ் எஸ் எம் இதாயத்துல்லா தனது உரையில் மத நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாடு இவற்றினை வளர்க்கும் கலைக்கூடமாக திருச்சி ஜமால் முஹம்மது திகழ்ந்து வருவதாகக் குற்ப்பிட்டார். திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்க சென்னை கிளை துவக்க விழாவில் நாடாளுமன்ற துணை சபாநாயகர் ரெஹ்மான் கான், தற்போதைய மத்திய அமைச்சரும், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜி கே வாசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்ததை நினைவு கூர்ந்தார். அந்நிகழ்ச்சியில் ஜி கே வாசன் அவர்கள் தனது தொகுதி நிதியில் இருந்து ஐந்து லட்சம் ரூபாயை கல்லூரி வளர்ச்சிக்கு வழங்கினார். முன்னாள் மாணவர்கள் இளங்கோவன் ஐஏஎஸ் , தங்கராஜ் இபிஎஸ் உள்ளிட்டோரும் கல்லூரி வளர்ச்சிக்கு உதவி வருவதிலிருந்து அக்கல்லூரியின் சிறப்பினை நாம் உணர்ந்து கொள்ளலாம் என்றார்.

தனுஷ்கோடி ஆதித்தன் தனது உரையில் குறைந்தபட்ச கட்டண விமான சேவை ( Budget Airlines )யின் மூலம் விரைவில் தமிழக மக்களும் பயன்பெற முயற்சிகள் மேற்கொளவதாகக் குறிப்பிட்டார். விரைவில் அமைய இருக்கும் தமிழக அரசில் வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறை ஏற்படுத்தப்படும் என்றார்.

அப்துல் கத்தீம் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஏ லியாக்கத் அலி, கல்விக்குழு செயலாளர் ஏ முஹம்மது தாஹா, தமிழ்நாடு பண்பாட்டுக் கழக தலைவர் ஏ அஷ்ரப் அலி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


தகவல் : முதுவை ஹிதாயத் ( எம் என் ஏ )

 Refer to your friends / Relatives

www.Chittarkottai.com