|
துபாய் நீடூர் நெய்வாசல் அஸோஸியேஷன் |
|
துபாயில் செயல்பட்டு வரும் நீடூர் நெய்வாசல்
அஸோஸியேஷனின் மாதாந்திரக் கூட்டம் 13.01.2006 வெள்ளிக்கிழமை ஈமான்
அலுவலகத்தில் நடைபெற்றது.
இவ்வமைப்பு ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு உதவுதல், ஏழை மாணவர்களது
கல்விக்கு உதவுதல், ஏழைகளின் மருத்துவத்திற்கு உதவுதல், புனித ரமளானில்
பித்ரா வசூலித்து உள்ளூர் எளியோர்க்கு உதவுதல், புனித ஹஜ்ஜுப்
பெருநாளைக்கு குர்பானி கொடுப்பதற்கு ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட செயல்
திட்டங்களை குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
தகவல் : முதுவை ஹிதாயத் ( எம்
என் ஏ )