அய்யம்பேட்டை துபாய் ரமளான் நற்பணி மன்றத்தின் பணிகள்

அமீரகத்தில் பொருள் தேட வந்துள்ள தமிழகத்தைச் சார்ந்தவர்கள் பொருள் தேடுவதை மட்டும் குறிக்கோளாக கொள்ளாமல், தாங்கள் சார்ந்துள்ள சமுதாயம் மற்றும் தாங்களின் சொந்த ஊரின் நலனுக்கென அமைப்புகள் ஏற்படுத்தி செயலாற்றி வருகிறார்கள்.

அத்தகைய வகையில் துபாயில் இயங்கி வரும் தஞ்சை மாவட்டத்தைச் சார்ந்த அய்யம்பேட்டை சக்கராப்பள்ளி ரமலான் நற்பணி மன்றமும் ஒன்று. அதன் பணிகள் வருமாறு :

இம்மன்றம் கடந்த இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது. குறிப்பாக ஏழைப் பெண்களின் திருமணம், பெற்றோரை இழந்த மற்றும் ஏழைச் சிறுவர்களின் சுன்னத்துக்காக உதவுதல் மற்றும் அற நெறிகளைப் போதிக்கும் பள்ளிகளுக்கு உதவுதல் என்று துவங்கிய பணிகள் இன்று வட்டியில்லாமல் கடன் வழங்கும் வகையில் மிகச் சரியான திட்டம் வகுத்து அதை நடைமுறைப்படுத்தி செயலாற்றி வருகின்றது.

மேலும் பட்டப்படிப்பு மேற்கொள்ள பொருளாதார வசதியில்லாத மாணவர்களுக்கு (இந்த ஆண்டு வரையில் 13 பேர்கள்) பண உதவி செய்யப்பட்டு வருகிறது. நோன்பு காலங்களில் புதிய மற்றும் பழைய துணி மணிகள் வழங்குவது, பித்ரா பகிர்ந்து அளிப்பது உள்ளிட்ட பணிகளூடன் தொழிலதிபர்கள் வழங்கும் ஜக்காத் உதவித்தொகையை முறையான ஏழை நபர்கள் அடையாளம் கண்டு ஊரில் விநியோகிக்கும் நடவடிக்கையினையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சமீபத்தில் ஊரில் கட்டப்பட்ட பெரிய பள்ளிவாசலின் கட்டுமான பணிக்கு ரூ 20 இலட்சம் வரையில் வழங்கி உள்ளது.

மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். ஊர் செல்பவர்கள் வசம் அனுப்பப்படும் கடிதங்களையும், ஊரிலிருந்து துபாய் வரும் கடிதங்களும் முறையாக விநியோகிக்கும் பொறுப்பையும் இம்மன்றம் மேற்கொண்டுள்ளது.

ஊர் மக்கள் பயன்பெறும் வகையில் தொழில் துறைக்கு ஏற்பாடு செய்வது தான் எதிர்காலத்திட்டம் என இம்மன்றத்தின் நிறுவனர்களில் ஒருவரான வாலன் ஜே சுலைமான் பாட்சா தெரிவித்துள்ளார்.

நன்றி : இனிய தமிழ்த் தென்றல்


தகவல் : முதுவை ஹிதாயத் ( எம் என் ஏ )

 Refer to your friends / Relatives

www.Chittarkottai.com