முதுவை ஹிதாயத் பக்கம்

புதிய செய்திகள்

வெளி நாடு வாழ் இந்தியர்களால் இந்தியாவுக்கு பெருமை : மன்மோகன்சிங்

புதுடில்லி: வெளி நாடு வாழ் இந்தியர்களால் இந்தியாவுக்கு பெருமை கிடைக்கிறது என தென்ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்தார். தென்ஆப்ரிக்காவிற்கான இந்திய தூதர் சத்ரபிரதாப் ரோ ஏற்பாடு செய்த கூட்டத்தில் பிரதமர் பேசுகையில் உலகம் முழுவதும் முக்கிய பொருளாதார மாற்றம் ஏற்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் வாழும் இந்தியர்கள் அறிவுத்திறனால் இந்தியா பெருமையடைகிறது என்றார். இந்திய பொருளாதார திட்டங்களில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பங்கேற்க வேண்டும் என்றார்.
.


பனைக்குளத்தில் ரம்ஜான் நோன்பை முன்னிட்டு திருக்குர் ஆன் ஓதும் போட்டி


ரம்ஜான் நோன்பை முன் னிட்டு பனைக்குளத்தில் ஐக்கிய முஸ்லிம் சங்கம் சார்பில் வருகிற 30-ந்தேதி திருக்குர்ஆன் ஓதும் போட்டி நடக்கிறது.

திருக்குர்ஆன் போட்டி

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் பனைக்குளத்தில் ரம்ஜான் நோன்பு நாட்களில் ஆண்டுதோறும் மாணவ-மாணவியருக்கான திருக்குரான் ஓதும் போட்டி நடத்தப்படுவது வழக்கம். இதன்படி இந்த ஆண்டு 13-வது ஆண்டாக அபுபக்கர் நினைவு அரங்கில் திருக்குர்ஆன் ஓதும் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.மொத்தம் 12 நாட்கள் நடக்கும் இந்த போட்டிகள் வருகிற 30-ந்தேதி(சனிக்கிழமை) காலை 9 மணிக்கு தொடங்குகிறது.

தொடக்க விழாவிற்கு பனைக்குளம் ஜும்மா பள்ளி வாசல் பேஸ் இமாம் ஹாஜா முகைதீன் ஆலிம் தலைமை தாங்குகிறார். விழாவில் பனைக்குளம் முஸ்லிம் பரிபாலன சபை செயலாளர் வக்கீல் அர்சத் கான், முஸ்லிம் நிர்வாக சபை செயலாளர் ஹாஜி கரீம் கனி, முஸ்லிம் சங்க செயலாளர் பலீல் அகமது, அகமது ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

இந்நிகழ்ச்சியில் சித்தார்கோட்டை, வாழூர், அத்திïத்து, புதுவலசை, பனைக்குளம், அழகன்குளம், ஆற்றாங்கரை ஆகிய பகுதிகளை சேர்ந்த ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். முன்னதாக இவர்களை ஹாஜி முகம்மது ஹனிபா வரவேற்கிறார்.

தங்க மோதிரம் பரிசு

முதல் நாள் நிகழ்ச்சியில் 100 மாணவ-மாணவிகள் கலந்து கொள்கிறார்கள். இவ்வாறு 12 நாட்களில் சுமார் 325க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொள்கிறார்கள். இதில் வெற்றி பெறும் மாணவ- மாணவிகளுக்கு முதல் பரிசாக தங்கம் மோதிரம், 2வது, 3வது பரிசாக தங்க காசுகள் வழங்கப்பட உள்ளன.

பங்கேற்கும் அனைவருக்கும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சிகளை திருக்குரான் ஓதும் போட்டியின் செயலாளர் ததீன் இசை பாடகர் சகுபர் ஷாஹூல் ஹமீது தலைமையில் விழா கமிட்டியினர் மிக சிறப்பாக செய்து வருகின்றனர்.இந் நிகழ்ச்சியில் பரிபாலன சபை, நிர்வாக சபை, தலைவர்கள் மாஸ் ஆலம், ஹம்சத் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

முந்தைய பகுதிகள்


தகவல் : முதுவை ஹிதாயத் ( எம் என் ஏ )

 Refer to your friends / Relatives

www.Chittarkottai.com