முதுவை ஹிதாயத் பக்கம்

புதிய செய்திகள்
டாக்டர் ஹிமான சையத் தாயகம் வருகை

டாக்டர் ஹிமானா சையத், பிரபல சிறுகதை எழுத்தாளர். தற்பொழுது சிங்கப்பூரில் தனது மகனுடன் இருந்து வருகிறார்.

கடந்த 23 ஆம் தேதி தாயகம் வருகை புரிந்தார். இரண்டு மாதங்கள் அவர் தமிழகத்தில் இருப்பார்.

டாக்டர் ஹிமான சையத் அவர்களை 944 27 56845 எனும் அலைபேசியிலோ அல்லது 04567 261229/04567261700 தொலைபேசி இலக்கத்திலோ தொடர்பு கொள்ளலாம்.

டாக்டர் ஹிமானா சையத், நர்கிஸ் பெண்கள் மாத இதழின் கெளரவ ஆசிரியராகவும், சிந்தனை சரம், உள்ளிட்ட பல்வேறு சமுதாய இதழ்களில் ஆக்கங்களை எழுதி வருபவர். சமுதாய கல்வி விழிப்புணர்வை குறிப்பாக பெண் கல்வி விழிப்புணர்வை தனது எழுத்துக்கள் மூலம் ஏற்படுத்தி வருவதை தமிழக முஸ்லிம் சமுதாயம் அறிந்த ஒன்று.

டாக்டர் ஹிமானா சையத்தின் ஆக்கங்களை www.chittarkottai.com எனும் இணையத்தளத்தில் காணலாம்.


தகவல் : முஸ்லிம் நியூஸ் ஏஜென்ஸி ( எம்.என்.ஏ. )

கோவைக்கு இலங்கையிலிருந்து புதிய விமான சேவை

சிறீலங்கன் ஏர்வேய்ஸ் அக்டோபர் 29 ஆம் தேதி முதல் கொழும்புவிலிருந்து கோயமுத்தூருக்கு புதிய விமான சேவையை அறிமுகப்படுத்துகிறது. இவ்விமான நிறுவனம் இந்தியாவுடன் விமானசேவையை வழங்கும் 11 ஆவது விமானதளம் கோயமுத்தூர்.

கேரளாவின் எல்லையருகே கோயமுத்தூர் அமைந்திருப்பதால் சுற்றுலாப்பயணிகளுக்கு மிகவும் வசதியாக இப்புதிய சேவை இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஆரம்பத்தில் வாரத்திற்கு நான்கு முறை விமானசேவையைத் துவங்கும் இந்நிறுவனம் பின்னர் படிப்படியாக சேவையை அதிகரிக்கும்

பஹ்ரைனில் இந்திய வங்கிக்கு அனுமதி

பஹ்ரைனில் இந்தியாவின் ஐந்தாவது பெரிய வங்கியான பாங்க் ஆப் பரோடா மொத்த விற்பனை சேவையை அளிக்க அனுமதி பெற்றுள்ளது. பஹ்ரைனின் மத்திய வங்கி இவ்வனுமதியை வழங்கியுள்ளது.

இப்புதிய சேவை மூலம் பாங்க் ஆப் பரோடா பல்வேறு பெரிய நிறுவனங்களின் முதலீடுகளைப் பெற தனது பணியினைத் துரிதப்படுத்தும்.

சித்தார் கோட்டையில் அறிவியல் கண்காட்சி


சித்தார்கோட்டை முகம்மதியா மேல்நிலைப் பள்ளியில்அறிவியல் கண்காட்சிநடந்தது. பள்ளி தாளாளர் அகமது கபீர் துவக்கி வைத்தார். கல்விக்குழு தலைவர் தஸ்தகீர், இணைத் தலைவர் யூசுப் முன்னிலை வகித்தனர். ஊராட்சி தலைவர் முகம்மது அப்துல்கனிதுவக்கி வைத்தார். பள்ளி செயலாளர் முகம்மது முஸ்தபா, கல்விக்குழு உறுப்பினர் அகமது இபுராகீம் (வட்டம்), ஜமாத் தலைவர் தாவூது, துணைத் தலைவர் அல்தாப் உசேன் ஆகியோர் பங்கேற்றனர். ஆரம்ப கல்வி பள்ளி தலைமை ஆசிரியர் சாஜிதா பானு செயல் விளக்கப் பாடம் நடத்தினார்.
துபையில் வன்முறையில் ஈடுபட்டதாக 90 இந்தியர்கள் மீது குற்றச்சாட்டு

துபையில் தொழிலாளர்கள் நடத்திய ஆர்பாட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டதாக 90 இந்திய தொழிலாளர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த 4 ஆயிரம் தொழிலாளர்களை நாட்டை விட்டு வெளியேற்றும் முடிவையும் ஐக்கிய அரபு அமீரக அரசு கைவிட்டுள்ளனர்.

ஊதிய உயர்வு மற்றும் சிறப்பான பணிச்சூழல் ஆகியவற்றை வலியுறுத்தி துபையில் உள்ள ஜேபில் அலி தொழிலாளர் முகாமில் தங்கியுள்ள பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்கள் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக 90 இந்திய தொழிலாளர்கள் உள்பட 159 பேர் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவர்கள் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநிலங்களை சேர்ந்தவர்கள்.

இதனிடையே உள்ளூர் அதிகாரிகள், கட்டுமான நிறுவனத்தினர் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகள் ஆகியோருடன் ஐக்கிய அரபு அமீரக உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதன் பின்னர் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த 4 ஆயிரம் தொழிலாளர்களை நாட்டை விட்டு வெளியேற்றும் முடிவை அந்நாட்டு அரசு கைவிட்டுள்ளதாக துபையில் உள்ள இந்திய தூதரக தொழிலாளர் குழு அதிகாரி முபாரக் கூறினார்.

முன்னதாக தொழிலாளர்கள் அடைக்கப்பட்டுள்ள சிறைக்கு செவ்வாய்க்கிழமை முபாரக் மற்றும் அதிகாரிகள் சென்றனர்.

ஆர்ப்பாட்டம் நடந்த போது முகாமில் இருந்த பெரும்பான்மையான தொழிலாளர்கள் வன்முறையில் ஈடுபடவில்லை.

எனவே சிறையில் உள்ள பெரும்பாலான தொழிலாளர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை நிறுத்தம் மற்றும் தொழிலாளர் சங்கங்களுக்கு சட்டத்தில் இடமில்லை. இதனால் அங்கு வேலைநிறுத்தம் மற்றும் தொழிலாளர் போராட்டங்கள் நடைபெறுவது மிகவும் அரிது.

லண்டன் வாழ் இந்திய டாக்டருக்கு "சிறந்த ஆசியர்' விருது

லண்டன் வாழ் இந்திய மருத்துவரான காலித் ஹமீதுக்கு "2007-ம் ஆண்டின் சிறந்த ஆசியர்' விருது வழங்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் பிறந்தவர் காலித் ஹமீத். 66 வயதான இவர் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியதற்காகவும், மருத்துவத்துறையில் சிறந்த பங்களிப்பு வழங்கியதற்காகவும் அவருக்கு "சிறந்த ஆசியர் விருது' வழங்கப்பட்டது.

லண்டன் ஹில்டன் ஹோட்டலில் திங்கள்கிழமை இரவு "ஏசியன் ஹூஸ் ஹூ 2007' சஞ்சிகை ஏற்பாடு செய்திருந்த விழாவில் அதன் ஆசிரியர் ஜே.எஸ்.சச்சார் இந்த விருதை ஹமீதுக்கு வழங்கினார்.

லண்டனின் இயங்கி வரும் சர்வதேச மருத்துவமனையான ஆல்பா குழும மருத்துவமனையில் தலைவர் மற்றும் முதன்மை அதிகாரியாக பணியாற்றி வருகிறார் ஹமீத்.

புற்றுநோய், மூளை, இதயம் தொடர்பான நோய்களுக்கு புதிய மருத்துவமனைகளையும் அவர் துவக்கியுள்ளார். பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேயரின் மனைவி செர்ரி பிளேயர் உள்ளிட்ட பிரபலஙகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ஷார்ஜாவில் ஆங்கில பயான்

ஷார்ஜா கனத் அல் கஸ்பா ( Qanat Al Qasba ) பகுதியில் அமையப்பெற்றுள்ள பள்ளிவாசலில் அரபி மொழி அறியாத பிற நாட்டவர் அறிந்து கொள்ளும் வகையில் ஆங்கில மொழியில் ஜும் ஆ பயான் நிகழ்த்தப்பட்டுவருகிறது.

இதில் இந்தியர், பாகிஸ்தானியர் மற்றும் பல்வேறு மேலை நாட்டவரும் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.

தொழுகைக்குப் பின்னர் கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது.

அஜ்மான் பிரெஸ்டன் பல்கலையில் இஸ்லாமியக் கல்வி

அஜ்மான் பிரெஸ்டன் பல்கலைக்கழகம் இளநிலைப் படிப்பில் இஸ்லாமியக் கல்வியை நடத்தி வருகிறது. இப்பல்கலைக்கழகம் அமெரிக்காவில் உள்ள பிரெஸ்டன் பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்றது.

இப்பல்கலை இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை வணிகம், அறிவியல், இஸ்லாமியக் கல்வி மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் பட்டங்களை வழங்கி வருகிறது.

இஸ்லாமியக் கல்வியில் இளநிலை பட்டப்படிப்பில் சேர பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு கிடையாது.

இப்பல்கலைக்கழகம் ஆடியோ, வீடியோ நூலகம், இணைய வசதியுடன் கூடிய கணினி ஆய்வுக்கூடம், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனி வகுப்பறைகள், போக்குவரத்து வசதி, காலை மற்றும் மாலை வகுப்புகள் உள்ளிட்ட வசதிகள் கொண்டது.

இளநிலையில் பிபிஏ, இன்பர்மேஷன் டெக்னாலஜி, பேஷன் டிசைன், முதுநிலைப்படிப்பில் எம்.பி.ஏ, இன்பர்மேஷன் டெக்னாலஜி ஆகிய படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அரபு மொழியில் சான்றிதழ் மற்றும் டிப்ளமோ வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலதிக விபரங்களுக்கு :

PRESTON UNIVERSITY AJMAN
Masfout Plaza
Sh. Humaid Bin Abdul Aziz Road
Ajman
Tel : 06  742 4445
Fax : 06 742 4446
E mail : prestonu@emirates.net.ae
www.islamicstudiespu.com
SMS : 050 5026456

நூல் அறிமுகம்

நூல் : இறைவாக்கும் ! நபி வாழ்வும் ! - ஆசிரியர் : பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன்

பக்கங்கள் : 152  - விலை    : ரூ. 50
வெளியீடு  : கவியரசன் பதிப்பகம்
எண் 12 சாயி நகர் இணைப்பு, சின்மயா நகர், சென்னை 600 092
தொலைபேசி : 24871375 / 28552237
மின்னஞ்சல் : va_mu_sethuraman@yahoo.com

பெருங்கவிக்கோ அபிராமம் நத்தம் ஆரம்பப் பள்ளியில் பயின்றவர். சென்னையில் தமிழாசிரியராகப் பணியாற்றியது முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி. தனது வாழ்க்கையின் பல படிக்கட்டுகளின் ஏற்றத்திற்கும் இசுலாமியப் பெருமக்கள் பலர் உதவி உள்ளதாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.

பல்வேறு நூல்களைப் படைத்த என்னை இறைவாக்கும், நபிவாழ்வும் எனும் நூல் உருவாகக் காரணமாக இருந்தவர்கள் மறைந்த சங்கு அப்துல் காதர் மற்றும் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவராக இருந்த மர்ஹ¤ம் அசன் முஹம்மது உள்ளிட்ட பல்வேறு பெருமக்கள்

கவிஞர்கள் என்றால் கற்பனைக் குதிரையில் சவாரி செய்பவர்கள் என்ற மரபுக்கு மாற்றமாக, நூலின் பெரும்பகுதி திருக்குர் ஆன் வசனங்கள், திருநபி வாக்குகளுக்குக் கற்பனை கலக்காத நேரடி மொழிபெயர்ப்பாகவே அமைந்திருப்பதாக வீரசோழன் கைராத்துல் இசுலாம் அரபுக்கல்லூரி முதல்வர் மவ்லவி ஓ.எம்.அப்துல் காதர் பாகவி குறிப்பிட்டுள்ளார்.

முழுமையான ஒரு மாமனிதர் நபிகள் நாயகம் ( ஸல் ). அவர்களுடைய வாழ்வியல் கோட்பாட்டின் குறிப்புகள், மாமறை குர் ஆன் இறைவாக்கு, இனிய இதயம் ஈர்க்கும் நிறை நிகழ்வுகள் இந்நூலில் ஒளிர்கின்றன. நவில்தொறும், பயில்தொறும் நயம்விஞ்சும் தமிழ் கொஞ்சம் பெருங்கவிக்கோவின் உன்னதக் கவிதை நூல் இறைவாக்கும் நபிவாழ்வும் என்றால் அது மிகையாகாது என தேசிய ஒருமைப்பாட்டுப் பேரவைத் தலைவர் எஸ்.எம். இதாயத்துல்லா வாழ்த்துரை வழங்கியுள்ளார்.

கல்வி தாகத்தைத் தணிக்க ஓர் வரப்பிரசாதம்

உங்களின் கல்வித் தாகத்தைத் தணிப்பதற்கு ஓர் உன்னத முயற்சியாக தமிழ் பல்கலைக் கழகத்தை அறிமுகம் செய்வதில் அகமகிழ்கிறோம். தற்போது இளநிலைப் பட்டம், முதுநிலைப் பட்டம் மற்றும் தொழில் முறைப் பாடப் பிரிவுகளுக்கு சேர்க்கை நடை பெறுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகிறோம்.

தமிழ் பல்கலைக் கழகம் வழங்கும் சான்றிதழ் மற்றும் பட்டையப் படிப்புகளிலும் சேர்ந்து பயனடைவீர். குறிப்பிட்ட இடங்களே உள்ளதால் ஏமாற்றத்தைத் தவிர்க்க உங்களின் விண்ணப்பங்களுக்கு முந்திக் கொள்ளுங்கள்.

குறிப்பு : இப்பல்கலைக் கழகம் தொலை நிலைக் கல்வி இயக்கத்தின் கல்வி மற்றும் தகவல் மையத்தின் அங்கீகாரம் பெற்றது.

சவுதி அரேபியாவில் தொடர்புக்கு, முகவர்: திருமதி: மும்தாஜ் எஹ்யா செல் போன்: 055 864 98 09.
 
அபுதாபியில் கல்விக் கண்காட்சி

ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபியில் அமையப் பெற்றுள்ள அபுதாபி தேசிய கண்காட்சி மையத்தில் கல்வி, பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு கண்காட்சி நவம்பர் நான்காம் தேதி முதல் ஆறாம் தேதி வரை காலை பத்து மணி முதல் மாலை ஏழு மணி வரை நடைபெறுகிறது.

இக்கண்காட்சி குறித்த விபரங்களை www.najah-online.com  ல் காணலாம்.

முந்தைய பகுதிகள்


தகவல் : முதுவை ஹிதாயத் ( எம் என் ஏ )

 Refer to your friends / Relatives

www.Chittarkottai.com