"லஞ்சத்தை ஒழிக்க தகவல் பெறும் உரிமை சட்ட
பயிற்சி'
சென்னை, ஆக. 3:லஞ்சம், ஊழலை முழுவதும்
ஒழிக்கும் வகையில் "5-வது தூண் இந்தியா'
இயக்கம் தமிழகம் முழுவதும் தகவல் பெறும்
உரிமை சட்டம் குறித்த பயிற்சியை அளிக்க
உள்ளது.
இதுகுறித்து 5-வது தூண் இந்தியா இயக்கத்
தலைவர் விஜய் ஆனந்த் புதன்கிழமை
செய்தியாளர்களிடம் கூறியது:
ஆகஸ்ட் மாதத்தை லஞ்சத்திலிருந்து விடுதலை
பெறும் மாதமாக இந்த இயக்கம்
அறிவித்துள்ளது. அதன்படி தமிழகம்
முழுவதும் இந்த அமைப்பின் பிரதிநிதிகள்
சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவர்களையும்,
பொதுமக்களையும் இவர்கள் சந்தித்து,
லஞ்சத்தை ஒழிக்க எடுக்கவேண்டிய
நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்க
உள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக தகவல் பெறும் உரிமைச்
சட்டத்தை முழுமையாகப் பயன்படுத்திட
தேவையான பயிற்சியை இலவசமாக அளிக்கவும்
திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களை
உடனடியாக கவரக்கூடிய வகையிலும், லஞ்சம்
வாங்குபவர்களை அதிர்ச்சியளிக்கக் கூடிய
வகையிலும் உருவாக்கப்பட்டுள்ள "ஜீரோ
ரூபாய்' நோட்டுகள் தமிழகம் முழுவதும்
விநியோகிக்கப்பட உள்ளன. இதற்காக ஒன்றரை
லட்சம் ரூபாய் நோட்டுகள்
அச்சடிக்கப்பட்டுள்ளன.
தபால் பெட்டி எண். 5338, கோடம்பாக்கம்,
சென்னை என்ற முகவரிக்கு லஞ்சம் கேட்போர்
குறித்த விவரங்களை பொதுமக்கள்
தெரிவிக்கலாம். இதன் மூலம் அவர்கள் மீது
நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
|
துபாயில் ரிசர்வ் வங்கி அதிகாரிக்கு பிரிவு
உபசார விழா
அமீரகத்தின் கலாச்சாரத் தலைநகர் ஷார்ஜாவில்
எமிரேட்ஸ் இன்ஸ்டிடியூட் ஃபார் பேங்கிங் அண்ட்
ஃபைனான்ஸியல் ஸ்டடீஸ் ( Emirates Institute
for Banking and Financial Studies ) முதுநிலை
விரிவுரையாளராகப் பணியாற்றி வந்த டாக்டர் ஜெ.
சதக்கத்துல்லா பணிமாறுதல் பெற்றுச்
செல்வதையட்டி தமிழக சமுதாய அமைப்பான இந்தியன்
முஸ்லிம் அசோஷியேஷன் ( ஈமான்)பிரிவு உபசார
நிகழ்ச்சி ஒன்றை 21.06.2007 அன்று துபையில்
ஏற்பாடு செய்திருந்தது.
நிகழ்ச்சிக்கு ஈமான் அமைப்பின் துணைத்தலைவர்
அல்ஹாஜ் அப்துல் கத்தீம் தலைமை தாங்கினார்.
பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ லியாக்கத் அலி
வரவேற்புரை நிகழ்த்தினார்.
ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் எம் அப்துல்
ரஹ்மான் டாக்டர் சதக்கத்துல்லா வங்கிப்
பணிகளில் ஆற்றி வரும் சாதனைகளைக்
குறிப்பிட்டதுடன், இஸ்லாமிய வங்கியியல்
இந்தியாவில் மலர்வதற்குரிய எல்லாவிதமான
முயற்சிகளையும் மேற்கொள்ள கேட்டுக் கொண்டார்.
ஈமான் கல்வித்துறைச் செயலாளர் ஏ முஹம்மது தாஹா
ஈமான் அமைப்பு மேற்கொண்டு வரும் கல்வி மற்றும்
சமுதாயப் பணிகளை எடுத்துரைத்தார்.
டாக்டர் ஜெ சதக்கத்துல்லா தனது ஏற்புரையில்
ஈமான் அமைப்பு மேற்கொண்டு வரும் சமுதாய
மற்றும் கல்விப் பணிகளை வியந்து பாராட்டினார்.
நிகழ்ச்சியில் குத்தாலம் ஏ அஷ்ரப் அலி,
ஆடிட்டர் ஃபாருக், ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர்
கீழக்கரை ஏ ஹமீது யாசின் உள்ளிட்ட நிர்வாகிகள்
பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஈமான் அமைப்பின்
ஊடகத்துறை பொறுப்பாளர் முதுவை ஹிதாயத்
செய்திருந்தார்.
டாக்டர் ஜெ சதக்கத்துல்லா இந்திய ரிசர்வ்
வங்கியின் வடபகுதி பிராந்திய இயக்குநராக
நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மதுரை மாவட்டம்
திருப்புவனத்தைச் சேர்ந்தவர்.
தகவல் : முஸ்லிம் நியூஸ் ஏஜென்ஸி ( எம் என் ஏ
)
|
|
இரு 'சிம்' கார்டு
பொருத்தும் வசதியுடன், நவீன மொபைல் போன், இரு 'சிம்' கார்டு பொருத்தும்
வசதியுடன், நவீன மொபைல் போன், விரைவில்
விற்பனைக்கு வருகிறது.
'டூ இன் ஒன்' அடிப்படையில் பயன்படும்
இந்த மொபைல் போன், இந்தியாவில் முதன்
முறையாக விற்பனைக்கு வருகிறது. ஒரே
மொபைல் போனில், இரண்டு 'சிம்'கார்டு
போடமுடியும் என்பது மட்டுமல்ல; ஒரு
'சிம்' கார்டை, ஜி.எஸ்.எம்.,
தொழில்நுட்பம் மூலம் இணைப்பு பெற்று,
இன்னொன்றில், ஜி.எஸ்.எம்., அல்லது
சி.டி.எம்.ஏ., தொழில்நுட்பம் மூலம்
இணைப்பு பெறலாம்.இந்த வகை போன்கள்,
சீனா, கொரியாவில் விற்பனையில் உள்ளது;
இந்த நாடுகளை அடுத்து, இந்தியாவில்
தான் இப் போன்கள் விற்பனைக்கு வர
உள்ளது. இந்த போனில், ஒரு 'சிம்'
மூலம் அழைப்பு வந்து, அதில்
பேசிக்கொண்டிருக்கும் போது, இன்னொரு
'சிம்' மூலம் அழைப்பு வந்தால், அது
'வெயிட்டிங்'கில் இருக்கும் வசதியும்
உள்ளது.ஸ்பைஸ் நிறுவனம், இந்த நவீன ரக
மொபைல் போனை விற்பனைக்கு விடுகிறது.
பஞ்சாப், கர்நாடகாவில், இந்த
நிறுவனம், ஜி.எஸ்.எம்., மொபைல்
இணைப்பை நடத்தி வருகிறது.அடிக்கடி
வெளியூர் போவோர், 'ரோமிங்' கட்டணத்தை
தவிர்க்க, இந்த வகை போன்களை
பயன்படுத்தலாம். ஒரு 'சிம்'மில்,
ஜி.எஸ்.எம்., இணைப்பை போட்டுக்கொண்டு,
உள்ளூர் அழைப்புகளுக்கு பேசலாம்.
இன்னொரு 'சிம்'மில், சி.டி.எம்.ஏ.,
இணைப்பு பெற்றால், ரோமிங் கட்டண செலவு
மிச்சமாகும்.
1st august
dinamalar
|
|
முதுகுளத்தூரில் இலவச மருத்துவ முகாம்
கமுதி: முதுகுளத்தூர் பள்ளி வாசல் மேல்
நிலை பள்ளி வளாகத்தில் வரும் முன்
காப்போம் இலவச மருத்துவ முகாம்நடந்தது.
பரமக்குடி கோட்ட சுகாதார துணை இயக்குனர்
செல்லதுரை தலைமை வகித்தார். தலைமை
ஆசிரியர்கள் சுலைமான், காதர்ஷா.
பேரூராட்சி செயல் அதிகாரி முனியாண்டி
முன்னிலை வகித்தனர். டாக்டர் ராஜா உட்பட
30 பேர் சிகிச்சை அளித்தனர். 6
பெண்களுக்கு மகபேறு நிதியாக தலா ரூ.ஆயிரம்
வழங்கப் பட்டது
|
|
துபாயில் ஈமான் அமைப்பு நடத்தும் புனித
மிஃராஜ் இரவு சிறப்பு சொற்பொழிவு
ஐக்கிய அரபு அமீரகத்தின் வணிகத்தலைநகராய்
விளங்கும் துபாய் நகரில் ஈமான் அமைப்பு
அகிலத்திற்கோர் அருட்கொடையாய் அருளப்பெற்ற
அஹ்மது நபி ( ஸல் ) அவர்களின் புனித
மிஃராஜ் இரவையட்டி சிறப்பு சொற்பொழிவு
நிகழ்ச்சியை வரும் ஆகஸ்ட் மாதம் 9 ஆம்
தேதி வியாழக்கிழமை மாலை இஷாத்
தொழுகைக்குப் பின்னர் நடத்துகிறது.
இந்நிகழ்ச்சி துபை தேரா பகுதியில்
அமையப்பெற்றுள்ள லூத்தா ஜாமிஆ மஸ்ஜிதில் (
குவைத் பள்ளி ) நடத்தப்படுகிறது.
ஈமான் அமைப்பின் தலைவரும், ஈடிஏ அஸ்கான்
ஸ்டார் குழுமங்களின் மேலாண்மை
இயக்குநருமான அல்ஹாஜ் செய்யது எம்
ஸலாஹ¤தின் நிகழ்ச்சிக்கு தலைமை
வகிக்கிறார்.
லூத்தா ஜாமிஆ மஸ்ஜித் இமாம் மெளலவி
அல்ஹாஜ் எம்.ஏ. காஜா முஹம்மது ஜமாலி மக்கி
மன்பயீ ''புனித மிஃராஜ் இரவு' குறித்து
சிறப்புரை நிகழ்த்துகிறார்.
சிறப்புரைக்குப் பின்னர் தஸ்பீஹ் தொழுகை,
திக்ரு, தவ்பா ஆகிய நிகழ்ச்சிகள்
நடைபெறும். பெண்களுக்கு பள்ளியின் மேல்
தளத்தில் தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சி குறித்து மேலதிக
விபரங்களுக்கு ஈமான் அமைப்பின் விழாக்குழு
செயலாளர் காயல் யஹ்யா முஹ்யித்தீன் 050 58
53 888 மற்றும் ஈமான் அமைப்பின் ஜமாஅத்
ஒருங்கிணைப்பாளர் கீழக்கரை ஏ ஹமீது யாசின்
050 475 3052/04-2661415 ( மாலை 6 மணிக்கு
மேல் ) ஆகிய தொடர்பு எண்களில் தொடர்பு
கொள்ளலாம்.
தகவல் :
முதுவை ஹிதாயத்
ஊடகத்துறை பொறுப்பாளர்
இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் ( ஈமான் )
துபாய்
|
|
மாபெரும்
இஸ்ரா-மிஃராஜ் நிகழ்ச்சி
நாள் : இன்ஷா அல்லாஹ் 10.08.2007
வெள்ளிக்கிழமை
நேரம் : சரியாக மாலை 5.00 மணி முதல் இரவு
9.00 மணி வரை மட்டுமே
இடம் : ஜம்இயத்துல் இஸ்லாஹ் உள் அரங்கம்,
ரவ்தா
40 ம் எண் ரோடு (அஹ்மதி
நெடுஞ்சாலை), ஹவல்லி ஏஸி பிரிட்ஜ்
எதிரில்.
பேரூந்து வழித்தடங்கள் : 17 மற்றும் 19
கருப்பொருள்:
அண்ணல் நபியின் விண்ணுலக பயணம் - நன்மையே
மண்ணுலகில் வாழும் மானிடருக்கு!
தலைமை :
மௌலானா மௌலவீ அல்ஹாஜ் அப்துல் லத்தீஃப்
காஸிமி ஹழ்ரத்
(இமாம், மஸ்ஜித் அல் உகாஷா, குவைத் -
தலைவர் 'K-Tic' )
கிராஅத் :
அல்ஹாஜ் A.A. கபீர் அலி (துணைத் தலைவர்
'K-Tic')
வரவேற்புரை :
டாக்டர் K.S. அன்வர் பாட்சா (துணைத்
தலைவர் 'K-Tic' )
நிகழ்ச்சி நெறியாளர்:
மவ்லவீ அஃப்ழலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத்
பாகவீ M.A.,
(பொதுச்செயலாளர் 'K-Tic')
சிறப்புரை:
துபையிலிருந்து வருகை தரும் சிறப்பு
விருந்தினர்
மவ்லவீ காஜா முஹம்மது மக்கீ . மன்பஈ B.A.,
(கத்தீப் / இமாம், மஸ்ஜித் அல் குவைத்,
தேரா துபை, ஐக்கிய அரபு அமீரகம்)
மற்றும்
இலங்கை மவ்லவீ M.J.M. அஜ்வத் (மார்க்க
அறிஞர்கள் குழு 'K-Tic' )
அல்ஹாஜ் N.B. அப்துல் பாரி (துணைத் தலைவர்
'K-Tic')
நன்றியுரை :
மௌலவீ M.S. முஹம்மது மீறாஷா ஃபாஜில் பாகவீ
(துணைத் தலைவர் 'K-Tic' )
இச்சிறப்புமிகு நிகழ்ச்சியில்
குவைத்திலிருந்து வெளியாகும் முதல் இலவச
இஸ்லாமிய மாத இதழான 'K-Tic' செய்தி மடல்
'மிஃராஜ்" சிறப்பிதழாக வெளியிடப்படும்.
அனைவரும் குடும்பத்துடன் வருக! குறையில்லா
அறிவமுதம் பெருக!!
நிகழ்ச்சியில் பெண்கள் கலந்து கொள்ள
தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு :
மவ்லவீ அஃப்ழலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத்
பாகவீ M.A.,
(பொதுச்செயலாளர் 'K-Tic' )?w 78 72 482
சகோ. A.K. சுல்தான் அப்துல் நாஸர் B.A.,
(இணைப்பொதுச்செயலாளர் 'K-Tic') 94 30 786
சகோ. N . முஹம்மது நாஸர் (இணைப்பொருளாளர்
'K-Tic') 730 27 47
|
முந்தைய பகுதிகள்
|