முதுவை ஹிதாயத் பக்கம்

கடந்த வாரச் செய்திகள்
 

முனைவர் பட்டம் பெற இருக்கும் ஆலிம்

சென்னை வண்டலூரி கீழக்கரை புகாரி ஆலிம் அரபிக் கல்லூரியின் முதல்வர் மெளலவி பி எஸ் செய்யிது மஸ்ஊது ஃபாஜில் ஜமாலி 'இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்தின் பரிணாம வரலாறு' என்ற தலைப்பில் பி.எச்.டி ஆய்வு செய்துள்ளார். சென்னைப் பல்கலைக்கழக வாய்மொழித் தேர்வுக்குப் பின்னர் முனைவர் பட்டம் பெறத் தகுதி எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

துபையில் இலவச பல் மருத்துவ முகாம்

துபை அல் ஃபாலா கிளீனிக், சித்தார்கோட்டை.காம் மற்றும் யாஹிந்த்.காம் ஆகியவை இணைந்து ஒரு மாத கால இலவச பல் மருத்துவ ஆலோசனை முகாமை ஏப்ரல் 2006 முழுவதும் நடத்த இருக்கின்றது.

இப்பல்மருத்துவ இலவச ஆலோசனை முகாம் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் என்.எம் ஷாகுல் ஹமீது தலைமையில் நடைபெறுகிறது. டாக்டர் ஷாகுல் ஹமீது திருவாரூர், லிபியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட இடங்களில் சுமார் 20 வருடங்கள் பணிபுர்ந்த அனுபவமிக்கவர்.

அல் ஃபாலா கிளீனிக் துபை தேரா பகுதியில் போரி மஸ்ஜித் ரோட்டில் அமைந்துள்ளது. இலவச மருத்துவ முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர் 04-2717223 எனும் தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
 

புதுமையும் இனிமையும்

ரியாத் மாநகரில் வசிக்கும் தமிழ் பேசும் குடும்பத்தவர்களே! ங்களுக்ாக!

மறந்து விடாதீர்கள்!

இனியதோர் இஸ்லாமிய நிகழ்ச்சி

 

இடம்: கலை ஓய்வகம் ரெஸ்ட் ஹவ்ஸ் (ஸ்தறாஹா)
நாள் : வெள்ளி 07- 04 -2006
நேரம்: மாலை 4 மணி முதல் 9.30 மணி வரை
நிகழ்வு:
04.00 - 06.30 பல் சுவை நிகழ்ச்சிகள்.
07.15 - 09.00: மார்க்கக் சொற்பொழிவுகள், கேள்வி பதில்  நிகழ்சசிகள்
குறிப்பு: இரவு உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்களுக்ககாகன பேச்சுப் போட்டி - "உஙகள் ரசூல்" என்ற தலைப்பில்... வெற்றி பெறுபவர்களுக்கு சிறப்புப் பரிசுகள்..

தொடர்புக்கு:

மவுலவி நலீம்: 0508169619

மவுலவி மஃப்ஹம்: 0504150373

மவுலவி ரம்ஜான்: 0507129963

மவுலவி அப்துர ரஹீம் : 0509266502
 

முந்தைய பகுதி

தலைப்புப் பக்கம்


தகவல் : முதுவை ஹிதாயத் ( எம் என் ஏ )

 Refer to your friends / Relatives

www.Chittarkottai.com