முதுவை ஹிதாயத் பக்கம்

புதிய செய்திகள்

பிற்பட்டோர் ஆணைய பரிந்துரை தமிழக அரசு ஏற்பு
 

சிறுபான்மையினருக்கு தனி இடஒதுக்கீடு முதல்வர் கருணாநிதி அறிவிப்பு


ஏப். 5- முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கலாம் என பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அளித்த பரிந்துரையை தமிழக அரசு ஏற்றுக் கொண்டுள்ளது என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
 

சட்டசபையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடந்தது. இதில், அரவக்குறிச்சி தொகுதி உறுப்பினர் கலிலூர் ரகுமான் (தி.மு.க.) பேசினார். அப்போது குறுக்கிட்டு பேசிய முதல்வர் கருணாநிதி கூறியதாவது:

சிறுபான்மையினத்தை சேர்ந்த முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் கல்வி நிலையங்கள் மற்றும் அரசுப் பணிகளில் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாகவே இருந்து வருகிறது. கடந்த தேர்தலின்போது தி.மு.க. தேர்தல் அறிக்கையிலும் இதுபற்றி அறிவிக்கப்பட்டது.

'சிறுபான்மை சமுதாயத்தைச் சார்ந்த முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு கல்வி நிலையங்களிலும் வேலை வாய்ப்புகளிலும் தனி இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசை வலியுறுத்தி வருவதுடன், தமிழகத்திலும் அவர்களுக்கு இடஒதுக்கீடுக்கு வழிவகுத்திட தேவைப்படும் உறுதியான நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ளும்' என்று 2007-08 நிதிநிலை அறிக்கையிலும் உறுதி வழங்கப்பட்டது.


இதை செயல்படுத்துவதற்கு முதல்கட்டமாக, நீதியரசர் ஜனார்த்தனனை தலைவராகக் கொண்டுள்ள தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் இப்பொருள் பற்றி விரிவாக விசாரணையும் ஆய்வும் செய்து உரிய பரிந்துரைகளை தருமாறு அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. அந்த ஆணையம் சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு பற்றிய பரிந்துரையை தமிழக அரசுக்கு அளித்துள்ளது.


ஜெ.அ.அம்பாசங்கரை தலைவராகக் கொண்டு அமைக்கப்பட்ட தமிழ்நாடு இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு அறிக்கையில் காணப்படும் இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவர்களில் பிற்படுத்தப்பட்டோர் மக்கள் தொகை பற்றிய புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் தனி இடஒதுக்கீடு வழங்கலாம் என்று தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

கல்வி நிலையங்களிலும் அரசுப் பணிகளிலும் கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் தனி இடஒதுக்கீடு வழங்கலாம் என்று அமைந்த அனைவரும் ஒப்புக் கொள்ளத்தக்க, சட்ட ரீதியிலான இந்த பரிந்துரையினை தமிழக அரசு ஏற்றுக் கொள்வது என்று முடிவு செய்துள்ளது.

தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்துவரும் 69 சதவீத இடஒதுக்கீடு சம்பந்தமான வழக்கு ஒன்று சுப்ரீம் கோர்ட் விசாரணையில் இருந்து வருகிறது. அந்த வழக்கின் தீர்ப்பு கிடைத்த பிறகு, சிறுபான்மையினர் இட ஒதுக்கீடு தொடர்பான பரிந்துரையினை நடைமுறைப்படுத்துவதற்கு சட்டரீதியான முடிவுகளை தமிழக அரசு மேற்கொள்ளும். தோழமைக் கட்சிகளுடன் கலந்தாலோசித்து அதன் பின்னர் முழு விவரம் அறிவிக்கப்படும்.


இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார். முதல்வரின் கருத்துக்கு பேரவையில் அனைத்துக்
கட்சியினரும் வரவேற்று ஆதரவு தெரிவித்தனர்.
- எம். ஹெச். ஜி.

துபையில் பெண்களின் மாண்புகள் குறித்த உரை

துபை ETA Ascon சமுதாயக் கூடத்தில் ஹிஜிரி 1428 ரபிவுல் அவ்வல் பிறை 13 ( 01 ஏப்ரல் 2007 ) ஞாயிறு மாலை "பெண்களின் மாண்புகள்" குறித்த உரை நிகழ்த்தப்பட்டது.

துபை செம்பி டிரேட் இண்டர்னேஷனல் இயக்குநர் அல்ஹாஜ் K.S.M.B. அஹமது யாசின் தலைமை வகித்தார். மேலப்பாளையம் உஸ்மானியா அரபிக் கல்லூரி பேராசிரியர் மெளலவி P.A. காஜா முயீனுத்தீன் பாகவி "பெண்களின் மாண்புகள்" குறித்து சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார். சமுதாயப் பிரமுகர்கள் பலர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

9 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறும் வகையில் ரூ.42 கோடியில் மலட்டாறு திட்டம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.42 கோடி செலவில் மலட்டாறு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 9 ஆயிரம் ஏக்கர் பாசன நிலம் பயனடையும் என்று மாவட்ட வருவாய் அதிகாரி தெரிவித்தார்.

மலட்டாறு திட்டம்

ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அதிகாரி தண்டபாணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலாடி, கமுதி, முதுகுளத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள விளை நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் மலட்டாறு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் 34 கண்மாய்கள் பயன் பெறும். இத்திட்டத்திற்கென மொத்தம் ரூ.42 கோடி செலவிடப்படுகிறது. மலட்டாறு கால்வாய் 2 பிரிவுகளாக செல்கிறது.

ஒருவானேந்தல், புனவாசல், ஆப்பனூர் ஆகிய கால்வாய்கள் ஒரு பிரிவாகவும், புனவாசல், மாரந்தை, ஓரிவயல் ஆகியவை மற்றொரு பிரிவாகவும் செல்கிறது. இந்த பகுதிகளில் உள்ள மலட்டாறு செல்லும் வழிகள் அனைத்தும் தூர்வாரப்பட்டு ஷட்டர்கள் பழுது பார்க்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் அந்த பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த சுமார் 150 பட்டாதாரர்கள் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கென தனி தாசில்தார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி: தினத்
தந்தி

துபை ஈமான் அமைப்பு நடத்திய மீலாதுப் பெருவிழா

பேச்சுப் போட்டியில் வென்றவர்களுக்குப் பரிச


துபை ஈமான் அமைப்பு 30.03.2007 வெள்ளிக்கிழமை இஷா தொழுகைக்குப் பின்னர் லூத்தா ஜாமிஆ ( குவைத் ) மஸ்ஜிதில் மீலாதுப் பெருவிழாவை நடத்தியது.

விழாவிற்கு ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் சையது எம் ஸலாஹ¤தீன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் அல்ஹாஜ் எம் அப்துல் ரஹ்மான் வரவேற்புரை நிகழ்த்தினார்.

சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த காயல்பட்டணம் மெளலவி அஹமது அப்துல் காதர் ஆலிம் தனது உரையில் மனித சமுதாயத்தின் வாழ்வு சிறக்கவும் அவர்களது உயர்வுக்கும் உதித்த சிந்தனையாளர் தான் நபிகள் நாயகம் ( ஸல் ) என்றார். நபி ( ஸல் ) அவர்கள் பிறந்த இந்நாளில் மஸ்ஜிதில் நாம் அனைவரும் கூடியிருப்பதும் ஒரு இபாதத் தான் என்றார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைமைக் கழகப் பேச்சாளர் நாவலர் கெளது முஹ்யித்தீன், குவைத் பள்ளி இமாம் மெளலவி ஹாஜா முஹியித்தீன் ஜமாலி உள்ளிட்டோரும் உரை வழங்கினர்.

பேச்சுப் போட்டி

ஈமான் அமைப்பு வருடந்தோறும் மீலாது விழாவையட்டி பேச்சுப்போட்டியை நடத்தி வருகிறது. இவ்வாண்டு நடைபெற்ற பேச்சுப் போட்டியில் காயல்பட்டிணத்தைச் சேர்ந்தவர்கள் முதல் நான்கு இடங்களைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியன் ஏர்லைன்ஸ் ஷார்ஜா திருச்சி ஷார்ஜா விமானச்சீட்டை முதல் பரிசாக சித்தி ராபியாவும், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் துபை சென்னை துபை விமானச்சீட்டை இரண்டாவது பரிசாக கதிஜாவும், ஏர் அரேபியா ஷார்ஜா சென்னை ஷார்ஜா விமானச்சீட்டை மூன்றாவது பரிசாக ஹாபிஸ் செய்கு ஸலாஹ¤தீனும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் துபை சென்னை துபை விமானச்சீட்டை நான்காவது பரிசாக ஹாபிஸ் ஹ¤சைன் மக்கி ஆலிமும் பெற்றனர்.

ஈடிஏ அஸ்கான் நிறுவனம் வழங்கும் ஏர் கண்டிஷனரை எம் ஜெகபர் சாதிக் (கோட்டாறு) லேண்ட் மார்க் ஹோட்டல் வழங்கும் ஒரு பவுண் தங்க நாணயத்தை பாத்திமா ஹலிமா (காயல்பட்டணம்), மஸ்ரிக் இண்டர்நேஷனல் வழங்கும் ஜெனார்ட் கைக்கடிகாரத்தை எஸ் எம் ஏ முஹம்மத் ஈஸா (காயல்பட்டணம்) ஹாபிஸ் முஹம்மது சிராஜிதின் ஆகியோரும்,

அல்ஹஸீனா தங்க நிறுவனம் வழங்கும் பரிசுக் கூப்பன்களை முஹம்மது ரபீக் பிலாலி, ஹாபிஸ் தமிமுல் அன்சாரி (காயல்பட்டணம்), ஹஸீனா ஹாத்துன் ஸலீம் (காயல்பட்டணம்) இஷ்ரத் பரிதா (கீழக்கரை) சிக்கந்தர், ருவைஸா பர்வீன், செய்யது இப்ராஹிம் ஆகியோரும்,

மாணவர்களுக்கான ஆறுதல் பரிசுகளை மர்யம் ஜெய்னா, ஜெ முனிரா பானு, அல்பியா பானு நாஸர், செய்யது மூஸா காதிரி (காயல்பட்டணம்), நிஷாத் உமர், நபிலா அல் பைஸியா, முஜாஹித் ஹ¤சைன் (மதுக்கூர்) உள்ளிட்டோர் பெற்றனர்.

பரிசுகளை அல்ஹாஜ் சையது எம் ஸலாஹ¤த்தீன், அல்ஹாஜ் பி எஸ் எம் ஹபிபுல்லாஹ், அய்மான் தலைவர் அல்ஹாஜ் காதர் பக்ஸ் ஹ¤ஸைன் சித்திக்கீ, இந்திய முஸ்லிம் பேரவையின் ஷர்புதீன் ஹாஜியார் உள்ளிட்டோர் வழங்கினர்.

சமுதாயப் பிரமுகர் மெஜஸ்டிக் அப்துல் கரீம் அவர்களுக்கு ஈமான் தலைவர் அல்ஹாஜ் சையது எம் ஸலாஹ¤த்தீன் பொன்னாடை போர்த்தி சிறப்பித்தார்.

பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.

தகவல் : முதுவை ஹிதாயத்
துபையில் மீலாதுப் பெருவிழா

துபையில் மீலாதுப்பெருவிழா ஹிஜிரி 1428 ரபிவுல் அவ்வல் 12 ( 31 மார்ச் 2007 ) சனிக்கிழமை சிறிய ஜர்வூனி ( கோட்டைப் ) பள்ளியில் நடைபெற்றது.

கண்மணி நபிகள் நாயகம் ( ஸல் ) பிறந்த நாளன்று பஜ்ர் தொழுகைக்குப் பின்னர் குர்ஆன் ஓதி கத்தம் செய்து, அஸ்மாவுல் ஹ¤ஸ்னாவுடன், ஸலவாத்து, யாநபி பைத்து புகழ் பாட்டுடன் மெளலவி P.A. காஜா முயீனுத்தீன் பாகவி அவர்களின் நீண்ட சிறப்பான பிரார்த்தனை நடைபெற்றது.

மாலையில் நடைபெற்ற நிகழ்விற்கு செம்பி டிரேட் இண்டர்நேஷனலின் இயக்குநர் அல்ஹாஜ் K.S.M.B. அஹமது யாசின் தலைமை வகித்தார்.
 
உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தியவர் நபி ( ஸல் )

துபை ETA HRM தொழிலாளர் முகாம் மீலாது விழாவில் மெளலவி அஹமது அப்துல் காதர் பேச்சு

துபை சோனாப்பூர் ETA HRM தொழிலாளர் முகாமில் உத்தம திருநபி ( ஸல் ) அவர்களின் மீலாத் பெருவிழா ஹிஜிரி 1428 ரபியுல் அவ்வல் பிறை 19 (06.04.2007) வெள்ளிக்கிழமை ம•ரிப் தொழுகைக்குப் பின்னர் மஸ்ஜித் வளாகத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு அமீரக காயிதே மில்லத் பேரவை தலைவர் அல்ஹாஜ் எம் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தார். அமீரக தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா பேரவை துணைப் பொருளாளர் ஆர்.எஸ். மங்கலம் மெளலவி எம். முஹ்ம்மது யூசுப் ஆலிம் உலவி இறைவசனங்களை ஓதினார்.

முகாம் நிர்வாகி முதுகுளத்தூர் எஸ். சம்சுதீன் வரவேற்புரை நல்கினார். அல்ஹாஜ் அப்துல் ரஹ்மான் தனது உரையில் ஈமான் அமைப்பு மேற்கொண்டுவரும் கல்வி மற்றும் சமுதாயப் பணிகளை எடுத்துரைத்து அதில் தங்களையும் இணைத்துக் கொள்ள முகாமில் தங்கியிருக்கும் ஊழியர்களிடம் கேட்டுக் கொண்டார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை நிலையப் பேச்சாளர் திருப்பத்தூர் நாவலர் சா. கெளது முஹியித்தீன் அவர்கள் தனது உரையில் கோமான் நபி ( ஸல் ) அவர்கள் உழைப்பாளிகளுக்கு ஏற்படுத்தித் தந்த மகத்துவத்தை எடுத்துரைத்தார்.

விழாப் பேருரை நிகழ்த்திய காயல்பட்டிணம் முஅஸ்கர் மகளிர் அரபிக் கல்லூரி முதல்வர் அல்ஹாஜ் மெளலவி H.A. அஹமது அப்துல் காதிர் மஹ்ழரி அவர்கள் தனது உரையில் உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தியவர் நபி ( ஸல் ) என்றார். மனிதர்களுக்கிடையே ஏற்றத்தாழ்வு இல்லை என்பதை எடுத்தியம்பியவர் நபி ( ஸல் ). நியாயமான முறையில் பொருளீட்டி வாழ்க்கையை மேற்கொண்டால் அவ்வாழ்வு பரக்கத் நிறைந்ததாக இருக்கும்.

இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பிரபல் குத்துச் சண்டை வீரர் முஹம்மது அலி தனது பத்திரிகைப் பேட்டியன்றில் எகிப்து நகருக்கு தான் சென்ற பொழுது அங்குள்ள பள்ளிக்குச் செல்பவர்கள் எவ்வித ஏற்றத்தாழ்வும் இன்றி அனைவரும் ஏழை, பணக்காரர் என்ற பேதமின்றி சங்கமித்த நிகழ்வே தன்னை இஸ்லாத்தின் இணைத்துக் கொள்ள தூண்டுதலாக இருந்த முக்கிய நிகழ்வாகக் குறிப்பிட்டார்.

சீனி கருணை பிலாலி இஸ்லாமிய கீதம் பாடினார்.

அல்கூஸ் அஸ்கான் கேம்ப் நிர்வாகி எஸ் காதிர் முகைதீன் நன்றி கூறினார். மெளலவி சுலைமான் ஆலிம் லெப்பை மஹ்ளரி துஆ ஓதினார்.

நிகழ்ச்சியில் ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் ஏ லியாக்கத் அலி, கல்விக் குழு செயலாளர் ஏ முஹம்மது தாஹா, விழாக்குழு செயலாளர் காயல் யஹ்யா முஹியித்தீன், ஊடக ஒருங்கிணைப்பாளர் முதுவை ஹிதாயத், இராமநாதபுரம் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துபை கிளை பொறுப்பாளர் மெளலவி ஜஹாங்கீர் அரூஸி, ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொருளாளர் ஏ அஹமது இம்தாதுல்லாஹ், உலமாக்கள் மற்றும் பலர் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தகவல் : முதுவை ஹிதாயத்
 

முந்தைய பகுதிகள்


தகவல் : முதுவை ஹிதாயத் ( எம் என் ஏ )

 Refer to your friends / Relatives

www.Chittarkottai.com