|
வளைகுடா நாடுகளில்
இந்தியர்களை காப்பாற்ற மத்திய அரசு
சட்டத்திருத்தம் வளைகுடா
நாடுகளில் இந்தியத் தொழிலாளர்கள் படும்
துயரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க
சட்டத்திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவு
செய்துள்ளது. வளைகுடா நாடுகளிள் குறைந்த சம்பளம்,
கூடுதல் வேளைப்பளு, அடிப்படை வசதிகள் இல்லாத
வசிப்பிடங்கள் என இந்தியத் தொழிலாளர்கள்
கஷ்டப்படுகின்றனர். பல நிறுவனங்கள்,
இந்தியத்தொழிலாளர்களை சித்ரவதை செய்கின்றன. இந்த
துயரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு
திட்டமிட்டுள்ளது.
சட்ட விரோதமாக ஆட்களை அனுப்பும் நிறுவனங்கள்
மற்றும் ஏஜென்ட்டுகளை தடை செய்யவும், கடுமையான
விதிகள் மூலம் குடியேற்ற விதிகளை ஒழுங்கு
படுத்தவும் வெளிநாட்டு வாழ் இந்தியர் நல அமைச்சகம்
முடிவு செய்துள்ளது. இதற்காக 1983ம் ஆண்டு
குடியேற்றச்சட்டத்தில் திருத்தம் கொண்டு
வரப்படுகிறது.
சட்டவிரோதமாக தொழிலாளர்களை அனுப்பும்
ஏஜென்டுகளுக்கு குறைந்த பட்சமாக 6 மாத சிறை தண்டனை
விதிக்கப்படுகிறது. இதை 5 ஆண்டுகளாக உயர்த்த
முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அபராதத் தொகை
ஆயிரம் ரூபாயில் இருந்து 25 ஆயிரம் ரூபாயாக
உயர்த்தப்படும்.
ஐக்கிய அரபுக் குடியரசை சேர்ந்த துபாயில்
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு
உறுதி அளிக்கப்ட்ட சம்பளம் வழங்கப்படவில்லை. இதைத்
தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டினர்.
இப்படி 2 சமபவங்கள் நடந்தன. இதைத்தொடர்ந்து
சட்டத்திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவு
செய்துள்ளது.
டெல்லியில் நிருபர்களுக்கு நேற்று அளித்த
பேட்டியில் வெளிநாட்டு வாழ் இந்தியா நலத்துறை
அமைச்சர் பயலார் ரவி கூறியதாவது: வெளிநாட்டடில்
வேலை பார்க்கும் இந்திய தொழிலாளர்களுக்கு ஏதாவது
பிரச்சனை ஏற்பட்டால், அது குறித்து அவரை வேலைக்கு
சேர்த்துவிட்ட ஏஜெண்ட் பதில் அளிக்க இந்த சட்டத்
திருத்தம் வழி செய்கிறது.
வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்ட தொழிலாளருக்கு
வேலை கிடைத்துவிட்டதா? என்பதையும் ஏஜெண்ட்
உறுதிப்படுத்த வேண்டும்.
வெளிநாட்டு வேலைக்கு அனுப்பும் ஏஜெண்ட்டுகள்,
கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். தேர்வு செய்து
அனுப்பும தொழிலாளருக்கும் அவர்கள் பொறுப்பு ஏற்பதை
இந்த சட்டத்திருத்தம் உறுதி செய்கிறது.
இவ்வாறு வயலார் ரவி
கூறினார்.
நன்றி : நர்கிஸ்
|
|
போலி பல்கலை.யில் சேர்ந்து
எமாறாதீர்
மாணவர்களுக்கு எச்சரிக்கை!
நாடு முழுவதும் உள்ள 22 போலிபல்கலைக்
கழகங்களின் பட்டியலை பல்கலைக் கழக மானியக் குழு (யு
ஜி சி) வெளியிட்டுள்ளது. இவற்றில் சேர வெண்டாம்
என்று மாணவர்களை யு ஜி சி எச்சரித்துள்ளது.
மாணவர்களை உஷார்படுத்தும் வகையில நாடு
முழுவதும் உள்ள 22 போலி பல்கலைக் கழகங்களின்
பட்டியலை யு ஜி சி வெளியிட்டுள்ளது. ஒரு
நிறுவனதில் சேரும் முன்பு அதன் நம்பகத்தன்மை
குறித்து மாணவர்கள் கவனமாக ஆராய வேண்டும் என்றும்
யு ஜி சி அறிவுறத்தி உள்ளது.
யு ஜி சி அங்கீகாரம் பெறாமல் இளநிலை மற்றும்
முதுநிலை பட்டங்களை சில பல்கலைக் கழகங்கள்
அளிப்பது கண்டுபிடிக்கபட்டுள்ளது. யு ஜி சி
சட்டத்தின் 3வது பிரவின் கீழ் இந்த நிறுவனஙக்ளக்
பதிவு செய்யப்படவில்லை. இந்த போலி
பல்கலைக்கழகங்களுக்கு எந்த பட்டத்தையும் அளிக்க
உரிமை இல்லை" என்று யு ஜி சி வெளியிட்ட
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
யு ஜி சி வெளியிட்ட போலி பல்கலைக் கழகங்களின்
பட்டியல்:
- 1. மைதிலி பல்கலைக் கழகம்
விஸ்வவித்யாலயா, தர்பங்கா, பீகார்.
- 2. மகிளா கிராம வித்யாபீத்
விஸ்வவித்யாலயா, அலகாபாத், உத்திரப்பிரதேசம்
- 3. வாரனாசி சமஸ்கிருத விஸ்வவித்யாலயா,
வாரனாசி, உத்திரப்பிரதேசம்.
- 4. கமர்சியல் யுனிவர்சிடி லிமிடெட்,
தாரியாகஞ்ச், டெல்லி
- 5. உ.பி. இந்திய கல்வி கவுன்சில், லக்னோ,
உத்தரப்பிரதேசம்.
- 6. காந்தி இநதி வித்யாபீத், அலகாபாத்,
உத்தரப்பிரதேசம்.
- 7. எலக்ட்ரோ காம்ப்ளக்ஸ் ஓமியோபதி தேசிய
பல்கலைக் கழகம், கான்பூர், உத்தரப்பிரதேசம்.
- 8. நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் பல்கலைக்
கழகம் (திறந்தநிலை பல்கலைக் கழகம்),
அச்சல்தால், அலிகார், உத்தரப்பிரதேசம்.
- 9. டி.டிபி சமஸ்கிருத பல்கலைக் கழகம்,
புத்தூர், திருச்சி, தழிழ்நாடு
- 10. செயின்ட் ஜான்ஸ் பல்கலைக் கழகம்,
கிஷாந்தம, கேரளா
- 11. ஐக்கிய நாடுகள் பல்கலைக் கழகம், டெல்லி
- 12. வொக்கேஷனல் யுனிவர்சிடி, டெல்லி
- 13. உத்தரப்பிரதேச விஸ்வ வித்யாலயா,
கோசிகலன், மதுரா, உத்தரப்பிரதேசம்.
- 14. மகாராணா பதாப்சிகஷா நிகேதன் விஸ்வ
வித்யாலாயா, பிரதாப்கார், உத்தரப்பிரதேசம்.
- 14. மகாராணா பதாப் சிக்ஷா நிகேதன் விஸ்வ
வித்யாலயா, பிரதாப்கார், உத்தரப்பிரதேசம்.
- 15. ராஜா அரபி பல்கலைக் கழகம், நாக்பூர்,
மகாராஷ்டிரா
- 16. கேசர்வாணி விதயாபீத், ஜபல்பூர்,
மத்தியப்பிரதேசம்.
- 17. பாதகன்வி சர்க்கார் உலக திறந்தநிலை
பல்கலைக்க ழககம் கல்வி சங்கம், கோகாக்,
பெல்காம், கர்நாடகா
- 18. ஏ டி ஆர் மத்திய நீதி பல்கலைக்கழகம்,
டெல்லி
- 19. ஹேண்ட்ரைட்டி் யுனிவர்சிடி இநதியா,
பெங்களுர், கர்நாடகா
- 20. குருகுல் விஸ்வ விதயாலயா,
பிருந்தாவன், உத்தரப்பிரதேசம்.
- 21. துணை மருத்துவ அறிவியல் நிறுவனம்,
மீரட், உத்தரப்பிரதேசம்.
- 22. பயோ இன்பர்மேடிக்ஸ் இன்ஸ்டிடியூட்
ஆப் இந்தியா, டெல்லி
|