முதுவை ஹிதாயத் பக்கம்

புதிய செய்திகள்
துபையில உலகின் முதல் இஸ்லாமிய தமிழ்த் தொலைக்காட்சி துவக்கம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபையில் 'கிரஸெண்ட் டிவி' எனும் உலகின் முதல் இஸ்லாமிய தமிழ்த் தொலைக்காட்சி துவக்க விழா 23.06.2006  வெள்ளிக்கிழமை எவரெஸ்ட் இண்டர்நேஷனல் ஹோட்டலில் 'கிரஸெண்ட் டிவி' இயக்குநர் காயல் இளவரசு தலைமையில் நடைபெற்றது.

கிரஸெண்ட் டிவியின் முதல் ஒளி(லி)பரப்பை ETA  அஸ்கான் குழுமத்தின் மேலாண்மை இயக்குநரும், துபை ஈமான் அமைப்பின் தலைவருமான அல்ஹாஸ் சையத் எம் ஸலாஹத்தீன் துவக்கி வைத்தார். அவர் தனது தலைமையுரையில் தனது எண்ணத்தில் உதித்த இத்திட்டத்தை செயல் வடிவாக்கியுள்ள காயல் இளவரசைப் பாராட்டியதுடன் இச்சேவை சிறப்புற அணைவரும் தங்களது ஒத்துழைப்பை நல்கிட கேட்டுக் கொண்டார்.

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ்இத்தொலைக்காட்சி சிங்கபூரிலிருந்து தனது சேவையினைச் செய்து வருகிறது.

இந்தியா,வளைகுடா மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட பகுதிகளில் இத்தொலைக்காட்சி ஒளிபரப்பைக் காணலாம் என இதன் இயக்குநர் காயல் இளவரசு தெரிவித்தார். உலகின் முதன் முதலாக ஒளிபரப்பாகும் இஸ்லாமிய தமிழ் தொலைக்காட்சி இது என்பது குறிப்பிடத்தக்கது.

Yamal - 202, 49 டிகிரி கிழக்கு நோக்கி இதன் அலைவரிசை அமைந்துள்ளது. Frequency 3780 என்பது இதன் தொழில்நுட்பத் தகவல்.

இந்நிகழ்ச்சியில் ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் அல்ஹாஜ் எம் அப்துல் ரஹ்மான், பொதுச்செயலாளர் குத்தாலம் எ லியாகத் அலி, ஏ. முஹம்மது தாஹா, எஃப் எம் அன்வர் பாஷா, 'செல்வி' தொலைக்காட்சி தொடர் புகழ் பாலா, தீனிசைத் தென்றல் தேரிழந்தூர் தாஜுதீன் பைஜி, தென்றல் டிவி இயக்குநர் சாதிக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கிரஸெண்ட் தொலைக்காட்சி பற்றி விபரமறிய 98 400 42255 மற்றும் 99 400 7860.0 ஆகிய தொபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

S.Y. Quraishi, was appointed the third election commissioner of India
 

New Delhi, June 29 (IndianMuslims.info) After weeks of intense
speculation, S.Y. Quraishi, secretary in the ministry of youth affairs
and sports, was Thursday appointed the third election commissioner of
India.

Shahabuddin Yaqoob Quraishi is a Haryana Cadre IAS officer of 1971
Batch. He is famous for his integrity and respected by his colleagues
and media alike.

Born on June 11, 1947, in Delhi, Quraishi is a post-graduate in
history. He did his Ph.D in the areas of communication and social
marketing. The title of his doctoral thesis was "The Role of
Communication and Social Marketing in Development of Women and
Children". His book 'Social Marketing for Social Change' has broken
new ground in the field of development communication and is considered
as a pioneering effort with special reference to women and children.

He has authored two papers, "Islam, Muslims and Family Planning in
India', and "Islam & AIDS".

He is the first Muslim to be appointed as the election commissioner of
India.

Quraishi fills the slot following the appointment of N. Gopalaswamy as
chief election commissioner succeeding present incumbent B.B. Tandon
who steps down Friday.

Navin Chawla is the other commissioner.

Tandon had come under criticism from the Left parties for his handling
of the office-of-profit issue, particularly on the poll panel's action
on the disqualification petitions against Lok Sabha Speaker Somnath
Chatterjee and nine other MPs of the Communist Party of India-Marxist.

ஜசீரா ஏர்வேஸ் அறிமுகம்

ரூ. 1,300 கட்டணத்தில் குவைத் பறக்கலாம்

புதுடெல்லி, ஜூலை 5: வளைகுடா நாடுகளுக்கு விமான சேவை அளிப்பதில் இன்னொரு குறைந்த கட்டண நிறுவனம் அறிமுகமாகி உள்ளது. குவைத்தைச் சேர்ந்த ஐசீரா ஏர்வேசில் கட்டணம் ரூ1,300 மட்டுமே!

நம் நாட்டில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு விமான பயணம் செய்வோர் அதிகம். ஆனால், வளைகுடா நாடுகளுக்கு விமானங்களை இயக்க குறைந்த கட்டண தனியார் விமான நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை. மத்திய அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மட்டுமே குறைந்த கட்டணத்தில் விமானங்களை இயக்கியது.

இப்போது குவைத்தைச் சேர்ந்த ஜசீரா ஏர்வேஸ் சேவை தொடங்கியுள்ளது. இதில் குவைத் செல்ல ஒருவழிக் கட்டணம் ரூ1,300. முதல் கட்டமாக, டெல்லி, மும்பைக்கு விமானங்களை அது இயக்குகிறது. அதிக தேவை இருக்கும் தமிழகம், கேரா நகரங்களில் இருந்து விரைவில் சேவை தொடங்கும் என்றார் ஐசீரா ஏர்வேஸ் தலைமை செயல் அதிகாரி மார்வான் போட்டாய்.

முந்தைய பகுதி

தலைப்புப் பக்கம்


தகவல் : முதுவை ஹிதாயத் ( எம் என் ஏ )

 Refer to your friends / Relatives

www.Chittarkottai.com