முதுவை ஹிதாயத் பக்கம்

கடந்த வாரச் செய்திகள்

துபாயில் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாத் பேச்சுப் போட்டி

துபாயில் செயல்பட்டு வரும் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் ( ஈமான் ) வருடந்தோறும் நபிகள் நாயகம் ( ஸல் ) பிறந்த தினத்தையட்டி மாபெரும் மீலாத் பேச்சுபோட்டியை வருடந்தோறும் நடத்தி வருகிறது.

இவ்வாண்டு பேச்சுபோட்டி 31.03.2006 வெள்ளிக்கிழமை மாலை அஸ்கான் சமுதாயக்கூடத்தில் நடைபெற இருக்கிறது. இப்போட்டிக்கான தலைப்புகள் வருமாறு :
 

  • அறிஞர்கள் பார்வையில் அண்ணலார் ( ஸல் )
  • அண்ணலாரும் அரசியலும்
  • பெருமானாரின் வீரமும் பொறுமையும்
     

மேற்கண்ட மூன்று தலைப்புகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து போட்டியாளர்கள் பேசலாம்.

போட்டியில் ஆண், பெண் இருபாலரும், எந்த நம்பிக்கை கொண்டவரும் பங்கேற்கலாம். போட்டியில் பங்கேற்க விரும்புவோர்

  • யஹ்யா முஹ்யித்தீன் 050 5853888
  • முஹம்மது தாஹா 050 6241625
  • முஹம்மது ஹிதாயத் 050 7752737
  • முதுவை ஹிதாயத் 050 5196433
     

ஆகிய ஏதேனும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளவேண்டும்.

போட்டியில் வெற்றி பெறுவோருக்கு

  • முதல் பரிசாக இந்தியன் ஏர்லைன்ஸ் வழங்கும் ஷார்ஜா - திருச்சி - ஷார்ஜா இருவழி விமான பயண டிக்கெட்டும்,
  • இரண்டாம் பரிசாக எமிரேட்ஸ் நிறுவனம் வழங்கும் துபாய் - சென்னை - துபாய் இருவழி விமான பயண டிக்கெட்டும்,
  • மூன்றாம் பரிசாக ஈடிஏ அஸ்கான் நிறுவனம் வழங்கும் ஏர் கண்டிஷனரும் பரிசாக வழங்கப்படும்.
  • ஆறுதல் பரிசாக அல் ஹஸீனா ஜுவல்லர்ஸ் வழங்கும் அன்பளிப்பு கூப்பன்களும்,
  • லேண்ட்மார்க் ஹோட்டல் வழங்கும் தங்க நாணயம்,
  • மஸ்ரிக் இண்டர்நேஷனல் வழங்கும் ஜெனார்ட் கைக்கடிகாரம்

ஆகியவையும் வழங்கப்படும்.

இப்போட்டியில் பங்கேற்போர் ஏழு மணித்துளிகளுக்குள் பேச வேண்டும். போட்டியில் பங்கேற்க விரும்புவோர் 21.03.2006 க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி தெரிவித்தார். இப்போட்டிகள் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்டு வருவதாகத் அவர் தெரிவித்தார்.
 

இந்திய சுதந்திரப்போரில் முஸ்லிம்கள் - ஆய்வு வேண்டுகோள்

புதுதில்லியிலுள்ள ‘Institute of Objective Studies’ என்னும் இஸ்லாமிய ஆய்வு நிறுவனம் 'இந்திய சுதந்திரப் போரில் முஸ்லிம்களின் பங்கு 1857 – 1947' என்ற தலைப்பில் ஆறு தொகுதியாக ஆய்வு நூல் வெளியிடத்திட்டமிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம் பெற்ற சமுதாய ஆய்வு நிறுவனமாகும் இது.

எனவே இந்நிறுவனம் வெளியிடும் நூல் உலகளாவிய அளவில் சுற்றுக்கு வரும். இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய தென்பிராந்தியம் குறித்த ஆறாவது தொகுதியினைத் தயாரித்து எழுதிதரும் பொறுப்பு தமிழக முஸ்லிம்களின் வரலாறு பண்பாடு குறித்து தமிழ்நாடு அரசு அருங்காட்சியகத்துறையில் உதவி இயக்குநராக இருந்து ஓய்வு பெற்ற ஜெ ராஜா முஹம்மது அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய சுதந்திரப்போரில் கலந்து கொண்டு உழைத்த, இன்னுயிர் நீத்த முஸ்லிம் தியாகச் செம்மல்களின் வரலாறு இன்னும் இருட்டறையிலேயே பூட்டிவைக்கப்பட்டிருக்கிறது. இதை வெளிச்சத்திற்கு கொண்டு வர நல்ல வாய்ப்பு கிட்டியுள்ளது. விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் சுதந்திரப் போரில் (1857 முதல் 1947 வரை) பங்கு கொண்ட முஸ்லிம்கள் குறித்த செய்திகள் , புத்தகங்கள், புகைப்படங்கள், கடிதங்கள், செய்தித்தாள்கள் ஆகிய எந்தக் குறிப்பு தங்களிடம் இருந்தாலும் அதனைக் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி உதவிடக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தகவல் தந்தவர்கள் தகுந்த முறையில் நூலில் குறிக்கப்படுவார்கள்.

ஜெ ராஜா முஹம்மது
உதவி இயக்குநர் ( ஓய்வு )
தமிழ்நாடு அரசு அருங்காட்சியகத்துறை
எண் 1 / 107 D ஜீவா நகர் முதல் தெரு
புதுக்கோட்டை 622 001

தொலைபேசி : 04322 270970
செல் : 94431 32922

Overseas Indian goes online

NEW DELHI : The Indians abroad can update themselves with the latest information on matters relating to them through internet.

The on-line edition of Overseas Indian, a monthly publication of the Overseas Indian Affairs Ministry launched on 28th February 2006.

Prime Minister Manmohan Singh launched the print version at the inaugural ceremony of the Pravasi Bharatiya Divas ( PBD ) 2006 in Hyderabad in January 2006.

Launching the online edition, OIA minister Vayalar Ravi said the website will provide almost every information on Indians residing in foreign countries.

The overseas Indian can be accessed at www.overseasindian.in

The unique feature of the online version is that it would provide an interactive platform to the members of the 25 million strong diaspora spread in 110 countries.

Through the online version NRIs can also send their feedback, hold discussions, contribute news, give suggestions and spell out their grievances for redresal, Ravi said.

The site, which displays the latest issue of the publication in PDF format, will be updated daily with news about and from the Indian diaspora.

The inaugural issue of the Overseas Indian, launched by the Prime Minister, was in five languages – English, Hindi, Malayalam, Gujarati and Telugu.

துபையில் புதிய தமிழ் நிறுவனங்கள் திறப்பு விழா
வென்•பீல்ட் ( veinfield ) ஆடவர் ஆடையகம்


வென்•பீல்ட் ( veinfield ) எனும் இந்திய ஆடவர் ஆடையகம் பாபநாசம் அப்துல் ஹமீது அவர்களை நிர்வாக இயக்குநராகக் கொண்டு செயல்படும் ஹமீது குரூப் ஆப் கம்பெனியால் 24.02.2006 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணியளவில் பர்துபையில் திறக்கப்பட்டது.

துபை இந்திய துணைத்தூதரக கன்சல் திரு கே அசோகன் ஆடையகத்தை திறந்து வைத்தார். அபுதாபி இலங்கைத் தூதரக அதிகாரி திரு அப்துல் லத்தீப் முஹம்மது லாபிர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

துபை செம்பி குரூப் ஆ•ப் கம்பெனிகளின் நிறுவனர் டாக்டர் அல்ஹாஜ் செம்பி ஷேக் நூர்தீன் அவர்கள் முதல் விற்பனையைத் துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் நிறுவன அதிபர் பாபநாசம் அப்துல் ஹமீது வரவேற்றார்.
 

புதிய வைர நிறுவனம்

துபை லூத்தா பள்ளி இமாமாகப் பணிபுரிந்து வரும் ஆயங்குடி மெளலவி ஹாஜா முஹம்மது ஜமாலி அவர்கள் புதிய வைர நிறுவனத்தை ஏற்படுத்தியுள்ளார். இதனை டாக்டர் அல்ஹாஜ் தைக்கா ஷ¤ஐபு ஆலிம் அவர்கள் 24.02.2006 வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.


தகவல் : முதுவை ஹிதாயத் ( எம் என் ஏ )

 Refer to your friends / Relatives

www.Chittarkottai.com