Assistance
available for minority students
Deserving students from minority communities
may apply for educational assistance since
the Union Ministry of Minority Affairs has
decided to extend a helping hand to 2,676
students from Tamil Nadu during 2007-2008.
Thirty per cent of the total allocation will
go to girl students from low income group
families. If the officials cannot identify
deserving girl students, the assistance
reserved for girl students will go to boys..
According to Collector G. Prakash, the
educational assistance will be provided to
1,372 Muslims, 1,496 Christians, each four
Sikhs and Buddhists, if they applicants have
got 50 per cent marks in the previous annual
examination and regular attendance to the
school / college. Applicants, whose parents'
or guardians' annual income does not exceed
Rs. 2 lakh from all sources, must not have
received any educational assistance from the
Backward Class Welfare Department during
2007-2008.
An affidavit on the income should be
submitted by the parents / guardians in
Rs.20-worth non-judicial stamp paper along
with the application. Stringent legal action
will be taken against the parents /
guardians, who intentionally hide their
income particulars in the affidavit.
While Plus One and Plus Two students will
get an assistance of Rs. 7,000 towards
admission, tuition and hostel fees for a
year or the actual annual fees whichever is
less, the applicants in the vocational
courses equivalent to Plus One and Plus Two
(ITI, polytechnic etc.) will get Rs.10,000
or the actual annual fees whichever is less.
The undergraduate and postgraduate students
will get Rs.3,000.A monthly assistance of
Rs.235 for Plus One, Plus Two, ITI,
polytechnic hostel students and Rs.140 for
others will be given. This assistance will
be Rs. 355 for undergraduate and
postgraduate hostel students and Rs.185 for
others.
Research hostel students will get Rs.510 as
monthly allowance and this aid will be
Rs.330 for others. For details, students may
visit www.minorityaffairs.gov. in/newsite/
and forward their applications to their
headmasters or principals before January 31
and the heads of the institutions should
send the applications to the District
Backward Class and Minorities Welfare
Officer before February 10.
http://www.hindu.com/2008/01/29/stories/2008012954350600.htm |
பி.எஸ்.
அப்துர் ரஹ்மானுக்கு உரிய அங்கீகாரம் பெற்றுத்
தரப்படும்
"கல்வியாளரும் தொழிலதிபருமான பி.எஸ். அப்துர்
ரஹ்மானின் சேவையையும், பணியையும் பாராட்டி
மத்திய அரசிடம் உரிய அங்கீகாரம் பெற்றுத்தர
முயற்சி செய்வேன்' என்று மத்திய இணை அமைச்சர்
ஜி.கே. வாசன் கூறினார்.
சென்னையில் உள்ள பி.எஸ்.ஏ கிரசன்ட் பொறியியல்
கல்லூரியில் "சாதனை வரலாற்றில் பி.எஸ்.ஏ' என்ற
நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை (03 பிப்ரவரி
2008 ) நடைபெற்றது. விழாவில் அவர் பேசியது:
சிறுபான்மை மக்களின் வளர்ச்சிக்காக பல
அறக்கட்டளைகளைத் தொடங்கி நடத்தி வருகிறார்.
தன்னுடைய கல்வி நிறுவனங்கள் மூலம்
மாணவர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி,
அவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை
உருவாக்கியுள்ளார்.
அவரது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகமான "சாதனை
வரலாற்றில் பி.எஸ்.ஏ'-வை அனைவரும் படிக்க
வேண்டும்.
ராஜீவ் காந்தி, எம்.ஜிஆர்., முதல்வர்
கருணாநிதி என அனைத்து அரசியல் தலைவர்களுடனும்
நெருங்கிப் பழகியவர்.
மத்திய, மாநில அரசுகள் சிறுபான்மையினருக்காக
பல திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி
வருகின்றன. சிறுபான்மையினருக்காக தனி
அமைச்சகம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
ஆட்சியில்தான் உருவாக்கப்பட்டது' என்றார்
வாசன்.
கவிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி:
சமுதாயத்தில் அடித்தட்டில் இருந்து வரும்
ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின்
முன்னேற்றத்துக்காக 25 சமூக அமைப்புகளை
உருவாக்கி சாதனை புரிந்துள்ளார்.
உலகம் முழுக்க பெண் கல்வியை உயர்த்தி பிடித்த
சமூகமே முன்னேறியள்ளது. இந்த நூலில் பலதடவை
பெண் கல்வியின் அவசியத்தை தொடர்ந்து
வலியுறுத்தி கூறியுள்ளார்.
"மற்றவர்கள் இவர் வழி நடக்க வேண்டும்' என்று
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி
மாறன் கூறியுள்ளார். இது வசிஷ்டர் வாயால்
வாழ்த்து பெற்றது போல் ஆகும்' என்றார்
கனிமொழி.
இந்த விழாவில் ஏற்புரை வழங்கிய பி.எஸ்.
அப்துர் ரஹ்மான், "பெண் கல்வி சமூக
முன்னேற்றத்துக்கு அவசியமானது. பெண் படித்தால்
அந்த குடும்பமே படித்த மாதிரி. அதனால்தான்
பெண் கல்வியில் அதிக அக்கறை செலுத்தி
வருகிறேன்' என்றார்.
மாநிலங்களவை துணைத் தலைவர் கே. ரஹ்மான்கான்,
இ.டி.ஏ குழும நிர்வாக இயக்குநர் சையது எம்.
சலாஹுதீன்,இயக்குநர் ஆரிஃப் ரஹ்மான்,ஈஸா
அல்குரைர், கல்வியாளர் மூஸா ரஸா, சத்தியபாமா
பல்கலைக்கழக வேந்தர் ஜேப்பியார், சிலம்பொலி
செல்லப்பன் உள்ளிட்டோர் இந்த விழாவில்
பங்கேற்றனர்.
|
கீழக்கரை கடல்
பகுதியில் இயற்கை பாலம் !
கீழக்கரையில்
உள்ள பல்லாக்கு ஒலியுல்லாஹ் தர்கா அருகேயுள்ள
கடல் பகுதியில் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு
பாறைகளால் ஆன இயற்கை கடல் பாலம் அமைந்துள்ளது.
இந்த பகுதியில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும்
பலர் இந்த பகுதி கடலின் ஆழம் குறைவாக உள்ளதால்
பாறைகளால் ஆன பாலத்தின் அருகே சென்று மீன்
பிடித்து வருகின்றனர்.
இதுகுறித்து இப்பகுதியில் மீன் பிடித்து வரும்
பெரோஸ்கான் ( வயது 32 ) இந்த பாறைகள் ஒரே
சீராக இருப்பதால் பாலம் போல்
காட்சியளிக்கிறது. இது பல ஆண்டுகளாக இருந்து
வருகிறது. பாறைகள் மேல் உள்ள பாசிகளை உண்ண
மீன்கள் அதிக அளவில் வருகின்றன. இதனால் மீன்
பிடிப்பவர்களுக்கு இப்பாலத்தின் மேல் நின்று
மீன் பிடிக்க எளிதாக உள்ளதாக அவர்
தெரிவித்தார்.
தகவல் : ஹமீது யாசின், கீழக்கரை |
செய்யதம்மாள் பொறியியல்
கல்லூரி நாட்டுநலப்பணித்திட்ட முகாம் துவக்கம்
ராமநாதபுரம் செய்யதம்மாள் பொறியியல் கல்லூரி
நாட்டுநலப்பணித்திட்ட சிறப்பு முகாம் காருகுடி
கிராமத்தில் துவங்கியது. துவக்க நிகழ்ச்சிக்கு
செய்யதம்மாள் அறக்கட்டளை உறுப்பினர்
செல்லத்துரை அப்துல்லா தலைமை வகித்தார்.
அறக்கட்டளை செயலாளர் டாக்டர் சின்னத்துரை
அப்துல்லா முன்னிலை வகித்தார். முதல்வர்
அகமதுஷெரீப் வரவேற்றார். பத்து நாள் சிறப்பு
முகாமை செய்யதம்மாள் அறக்கட்டளை தாளாளர்
டாக்டர் பாபுஅப்துல்லா துவக்கி வைத்து
பேசும்போது, Ôஇம் முகாமில் எய்ட்ஸ்
விழிப்புணர்வு, மரபு சாரா எரிசக்தி மற்றும்
அதன் பயன்கள், மண்புழு உரம் தயாரித்தல், உடல்
ஊனமுற்றோர் நலத்திட்டங்கள் குறித்த
விழிப்புணர்வு கருத்தரங்கம், மரம் நடுதல்,
பள்ளிவளாகம் சுத்தப்படுத்துதல் ஆகிய பணிகள்
நடைபெற உள்ளன.
கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் இலவச
கண் சிகிச்சை முகாம், இலவச மருத்துவ முகாம்
நடத்தப்பட உள்ளதுÕ என்றார். ஒன்றிய குழு
உறுப்பினர் காருகுடி சேகர், ஸ்ரீமதிஜெகநாதன்
உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை திட்ட
அலுவ லர் மெய்கண்டகணேஷ்குமார் செய்திருந்தார் |
ஜித்தாவில் உணர்வாய் உன்னை
தன்னம்பிக்கை பயிற்சி முகாம்
ஜித்தாவில் தமிழ் ஃபைன் ஆர்ட்ஸ் குரூப் (
TAFAREG ) சார்பில் உணர்வாய் உன்னை எனும்
ஆளுமைத்திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்
01.02.2008 வெள்ளிக்கிழமை ஜித்தா ஸஃப்வா
இஸ்த்திரஹாவில் நடைபெற உள்ளது.
பயிற்சி முகாமை தஞ்சை ஜே.எஸ். ஜலாலுதீன் (
துபாய் ) வழங்க இருக்கிறார். மேலதிக
விபரங்களுக்கு 050 459 8243 எனும் அலைபேசியில்
தொடர்பு கொள்ளலாம்.
பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது |
கல்லூரியில் கவிதை அரங்கம்
கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல்
கல்லுõரியில் கவிதை அரங்கம் நடந்தது.கல்லுõரி
முதல்வர் முஸ்தபா தலைமை வகித்தார். திட்ட
அலுவலர் சேக் சகுபான் பாதுஷா வரவேற்றார்.
நெல்சன் டேனியல், ஆசிரியர் சுபைர் அலி
முன்னிலை வகித்தார்.மாணவர்கள் பர்சான்காதர்,
ஒபேக்கா, விஜயகுமாரி, பிரியதர்ஷினி உட்பட பலர்
பங்கேற்றனர். நிர்வாக துறை தலைவர் நாசர்
ஏற்பாடுகளை செய்திருந்தார். தமிழ்த்துறை
தலைவர் ராமர் நன்றி கூறினார். |
| |
திருமண மகால் திறப்பு
கீழக்கரை முகம்மது சதக் கல்வி அறக்கட்டளை
சார்பில் ராமநாதபுரம் முகம்மது சதக் சென்ட்ர்
வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள முகம்மது
சதக் திருமண மகாலை கலெக்டர் கிர்லோஷ்குமார்
திறந்து வைத்தார். அறக் கட்டளை தலைவர் ஹமீது
அப்துல்காதர் வரவேற்றார். செயலாளர்
கபீர்சாகிப், தி.மு.க.,நகர் செயலாளர்
ரத்தினம், அறக்கட்டளை உறுப்பினர் ஹபீப்
முகம்மது, சதக் கல்வி நிறுவன இயக்குனர்
பைசல்அப்துல்காதர், இன்ஜினியரிங் கல்லுõரி
முதல்வர் வேமுரி லட்சுமிநாராயணன், சைடெக்
கல்லுõரி முதல்வர் ரியாஷ், இஸ்லாமிய பள்ளி
நிறுவன தலைவர் முகம்மது இப்ராகிம், பொறியாளர்
அத்தாவூர் ரஹ்மான் பங்கேற்றனர். செய்யது ஹமீதா
கலை கல்லுõரி முதல்வர் முஸ்தபா நன்றி
கூறினார்.
|
துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மீலாத்
பேச்சுப் போட்டிகள்
அமீரகத்தின் வணிகத் தலைநகராக விளங்கும்
துபாயில் கால் நூற்றாண்டுக்கும் அதிகமாக கல்வி
மற்றும் சமூக மேம்பாட்டுப் பணியில் தன்னை
ஈடுபடுத்திக் கொண்டுள்ள இந்தியன் முஸ்லிம்
அசோஷியேஷன் ( ஈமான் ) வருடந்தோறும் மீலாத்
பெருவிழாவை முன்னிட்டு பேச்சுப் போட்டிகளை
நடத்தி வருகிறது. இதுகுறித்து ஈமான்
பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி
செய்தியாளர்களிடம் தெரிவித்த போட்டிகள்
குறித்த விபரமாவது :
பேச்சுப் போட்டி 1 ( ஆலிம் பெருமக்களுக்கு
மட்டும் )
வெள்ளிக்கிழமை 29.02.2008 மாலை 4.00 மணிக்கு
அஸர் தொழுகைக்குப் பின்னர் துபாய் தேரா லூத்தா
பள்ளிவாசலில் ( தமிழ் உணவகம் அருகில் ) நடைபெற
இருக்கிறது.
உலக வாழ்வில் பெருமானாரின் இறுதி நாட்கள்,
இன்றைக்கும் பொருந்துகிற இறுதித் தூதரின்
சொற்கள், மஹ்ஷர் வெளியில் மாநபியின் ஷபாஅத்,
அரபகம் அண்ணலாரின் வருகைக்கு
முன்னரும்,பின்னரும் ஆகிய தலைப்புகளில்
ஏதேனும் ஒன்றில் பேசுவதற்கு தயார் நிலையில்
வரவேண்டும். இப்போட்டிக்கு விண்ணப்பிக்க
இறுதிநாள் 20.02.2008
இப்போட்டியில் வெற்றி பெறுவோருக்கு எமிரேட்ஸ்
விமான நிறுவனம் வழங்கும் துபாய் சென்னை துபாய்
இலவச விமானப் பயணம், ஈடிஏ அஸ்கான் நிறுவனம்
வழங்கும் திர்ஹம் 500 பரிசுக்கூப்பன், லேண்ட்
மார்க் ஹோட்டல் வழங்கும் நான்கு கிராம் தங்க
நாணயம், அல் ஹஸீனா தங்க நகை மாளிகை வழங்கும்
திர்ஹம் 200 பரிசுக் கூப்பன், அல் மஸ்ரிக்
இண்டர்நேஷனல் வழங்கும் ஜெனார்ட் கைக்கடிகாரம்
ஆகியவை வழங்கப்படும்.
புனித குர்ஆன் மனனப் போட்டி 07.03.2008
வெள்ளிக்கிழமை
வெள்ளிக்கிழமை 07.03.2008 மாலை 4.00 மணிக்கு
அஸர் தொழுகைக்குப் பின்னர் துபாய் தேரா லூத்தா
பள்ளிவாசலில் ( தமிழ் உணவகம் அருகில் ) நடைபெற
இருக்கிறது.
புனித குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ்களுக்கான
மனனப் போட்டியில் நாற்பது வயதிற்கு உட்பட்ட
ஹாபிழ்கள் இவ்வரிய வாய்ப்பினை பயன்படுத்திக்
கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இப்போட்டி இவ்வருடம் முதல் நடத்தப்பட இருப்பது
குறிப்பிடத்தக்கது. இப்போட்டிக்கு
விண்ணப்பிக்க இறுதிநாள் 29.02.2008
இப்போட்டியில் வெற்றி பெறுவோருக்கு ஏர்
இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வழங்கும் துபாய்
சென்னை துபாய் இலவச விமானப் பயணம், ரஷாதி ஹஜ்
சர்வீஸ் வழங்கும் இலவச புனித உம்ரா பயணம்,
துபாய் இந்தியா சில்க் ஹவுஸ் வழங்கும் திர்ஹம்
500 பரிசுக் கூப்பன், அல் ஹஸீனா தங்க நகை
மாளிகை வழங்கும் திர்ஹம் 200 பரிசுக் கூப்பன்,
அல் மஸ்ரிக் இண்டர்நேஷனல் வழங்கும் ஜெனார்ட்
கைக்கடிகாரம் ஆகியவை வழங்கப்படும்.
பேச்சுப் போட்டி 2 ( பொதுமக்கள், மாணவ,
மாணவியர் )
வெள்ளிக்கிழமை 14.03.2008 மாலை 4.00 மணிக்கு
அஸர் தொழுகைக்குப் பின்னர் துபாய் அஸ்கான்
சமுதாயக் கூடத்தில் ( அல்முதினா லூலூ செண்டர்
பின்புறம் ) நடைபெற இருக்கிறது.
அகிலத்தின் அருட்கொடை அண்ணல் ( ஸல் ) அவர்கள்,
வேந்தர் நபிகளின் வருகை பற்றி வேதங்களின்
முன்னறிவிப்பு, சான்றோர்கள் பார்வையில் ( ஸல்
), உத்தம நபியும், உண்மைத் தோழர்களும், பயணம்
வகுத்த பாதை ( ஹிஜ்ரத் ) ஆகிய தலைப்புகளில்
பொதுமக்கள் பேசலாம்.
இப்போட்டியில் அனைத்து சமுதாய மக்களும் ஜாதிம்
மதம், இன வேறுபாடின்றி பங்கேற்கலாம்.
அண்ணலார் ( ஸல் ) ஓர் அழகிய முன்மாதிரி எனும்
தலைப்பில் இல்லறம், வணிகம், வீரம், ஆட்சிமுறை,
நட்பு, வணக்கம், பொறுமை, எளிமை, நேர்மை,
விஞ்ஞானம் ஆகிய ஏதேனும் ஒன்றில் மாணவ,
மாணவியர் பேசலாம்.
இப்போட்டிக்கு விண்ணப்பிக்க இறுதிநாள்
10.03.2008
இப்போட்டியில் வெற்றி பெறுவோருக்கு இந்தியன்
ஏர்லைன்ஸ் நிறுவனம் வழங்கும் ஷார்ஜா திருச்சி
ஷார்ஜா இலவச விமானப் பயணம், ஈடிஏ அஸ்கான்
நிறுவனம் வழங்கும் திர்ஹம் 500
பரிசுக்கூப்பன், லேண்ட் மார்க் ஹோட்டல்
வழங்கும் நான்கு கிராம் தங்க நாணயம், அல்
ஹஸீனா தங்க நகை மாளிகை வழங்கும் திர்ஹம் 200
பரிசுக் கூப்பன், அல் மஸ்ரிக் இண்டர்நேஷனல்
வழங்கும் ஜெனார்ட் கைக்கடிகாரம் ஆகியவை
வழங்கப்படும்.
போட்டி குறித்த மேலதிக விபரங்களுக்கு
விழாக்குழு செயலாளர் காயல் யஹ்யா
முஹ்ய்யத்தீன் 050 58 53 888, ஜமாஅத்
ஒருங்கிணைப்பாளர் கீழக்கரை ஹமீது யாசின் 050
2533712, ஈமான் அலுவலகம் 04 2661415 தொலைநகல்
04 2664142 ஆகிய இலக்கங்களில் தொடர்பு
கொள்ளலாம்.
MESSAGE FROM
Muduvai Hidayath
Media Co-ordinator,
Indian Muslim Association ( IMAN )
Dubai
muduvaihidayath@gmail.com,
00971 50 5196433 |
இணையம் மூலம் இஸ்லாம் குறித்த
சந்தேகங்களுக்குத் தீர்வு
அமீரக இஸ்லாமிய வக்ஃப் வாரியம் மற்றும்
இஸ்லாமிய விவகாரத்துறை அமைச்சகம் இஸ்லாம்
குறித்த சந்தேகங்களுக்கு பொதுமக்கள் தங்களது
சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள வசதியாக இணைய
வழி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்தகவலை
டாக்டர் முஹம்மது மத்தார் அல் காபி
தெரிவித்துள்ளார்.
www.awqaf.ae
கேள்விகளை fatwa@awqaf.ae எனும் மின்னஞ்சல்
முகவரிக்கும் அனுப்பலாம். காலை எட்டு மணி
முதல் இரவு எட்டு மணி வரை 800 2422 எனும்
தொலைபேசி இலக்கத்தில் இலவசமாக தொடர்பு கொண்டு
சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம்.
தகவல் : முதுவை ஹிதாயத்
முஸ்லிம் நியூஸ் ஏஜென்ஸி ( எம். என். ஏ. ) |
துபாயில் தமிழக
மருத்துவருக்கு விருது
ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத், ஐக்கிய
அரபு அமீரகத்தின் சார்பில் துபாய் கராச்சி
தர்பார் உணவகத்தில் நடைபெற்ற வரவேற்பு
நிகழ்ச்சியில் பிரபல தமிழக மருத்துவர் டாக்டர்
ஏ. அமீர்ஜஹானுக்கு 'முதுவை நகர் சாதனையாளர்
விருது' 02.02.2008 சனிக்கிழமை மாலை
வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு ஜமாஅத் தலைவர் என்.எஸ்.ஏ.
நிஜாமுதீன் தலைமை தாங்கினார். முன்னதாக
மார்க்க ஆலோசகர் மௌலவி ஏ.சீனி நைனார் முஹம்மது
தாவுதி இறைவசனங்களை ஓதினார்.
பொதுச்செயலாளர் கே. முஹம்மது ஹிதாயத்துல்லாஹ்
வரவேற்புரை நிகழ்த்தினார். துணைத்தலைவர் எஸ்.
சம்சுதீன் தனது துவக்கவுரையில் ஐக்கிய
முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் மேற்கொண்டு
வரும் கல்வி மற்றும் சமுதாயப் பணிகள் குறித்து
விவரித்தார்.
ஆடிட்டர் ஹெச்.அமீர் சுல்தான் 'முதுவை நகர்
சாதனையாளர் விருதை' டாக்டர் ஏ. அமீர்
ஜஹானுக்கு அவரது சமூக நல்லிணக்கம் மற்றும்
மருத்துவப் பணிகளை கௌரவிக்கும் விதமாக ஐக்கிய
முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பாக
வழங்கினார்.
அமீர்சுல்தான், மௌலவி சீனி முஹம்மது, எம்.
காஜா நஜுமுதீன், சிக்கந்தர், பக்ருதீன், ஷேக்
முஹம்மது, சாதிக் உள்ளிட்டோர் வாழ்த்துரை
வழங்கினர்.
டாக்டர் அமீர் ஜஹான் தனது ஏற்புரையில் கல்வி,
செல்வம், வீரம் ஆகியவை ஒரு சமூகத்தின்
அடையாளம் என்றார். ஜமாஅத்தினர் மேற்கொண்டு
வரும் கல்வி மற்றும் சமுதாய மேம்பாட்டுப்
பனிகளைப் பாராட்டினார். தான் மருத்துவக்
கல்லூரியில் சேர்ந்த போது தான் முதுகுளத்தூர்
என்றதும் தன்னை ராகிங் செய்யாமல் ஒதுங்கிக்
கொண்ட நிகழ்வை நினைவு கூர்ந்தார். தங்களை
உருவாக்கிய மண்ணை நினைவு கூர்ந்து அதற்காக
செயலபட்டு வருவது போற்றத்தக்கது என்றார்.
டாக்டர் ஏ. நஸீருல் அமீன் தனது உரையில்
முதுகுளத்தூர் மாணவர் ஒருவருக்கு மருத்துவம்
பயில ஏ.ஜெ.கல்வி அறக்கட்டளை மூலம் உதவிட
உறுதியளித்தார். மேலும் முதுகுளத்தூரில்
மருத்துவ முகாம் இலவசமாக நடத்துவதற்கான
முயற்சிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகத்
தெரிவித்தார்.
பொருளாளர் ஏ. அஹம்து இம்தாதுல்லா நன்றி
கூறினார்.
தகவல் : முதுவை ஹிதாயத்
மனித நேயப்பணிகளைச் செய்து வரும் துபாய்
ஈமான் அமைப்பு : டாக்டர் ஏ. அமீர்ஜஹான்
பாராட்டு
துபாய் இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் ( ஈமான்
) அமைப்பு 04.02.2008 திங்கட்கிழமை மாலை
அஸ்கான் சமுதாயக்கூடத்தில் ( அல் முதீனா லூலூ
செண்டர் பின்புறம் ) ஆரோக்கிய அறிவியல் எனும்
மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி நடைபெற்றது.
ஈமான் துணைத்தலைவர் எம். அப்துல் ரஹ்மான்
தலைமை தாங்கினார். துவக்கமாக ஜாபர் சாதிக்
இறைவசனங்களை ஓதினார். துணைத்தலைவர் அஹமது
மொஹிதின் முன்னிலை வகித்தார்.
பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி
வரவேற்புரை நிகழ்த்தினார்.
தமிழகத்திலிருந்து வருகை புரிந்த பிரபல
செக்ஸாலஜி நிபுணர் டாக்டர் ஏ. அமீர் ஜஹான்
உடல்நலத்தின் இன்றியமையாமை குறித்து உரை
நிகழ்த்தினார். மேலும் ஈமான் அமைப்பு
மேற்கொண்டு வரும் கல்வி மற்றும் மனிதநேயப்
பணிகள் குறித்து பாராட்டினார். ஒரு காலத்தில்
கிழக்கைப் பார் எனும் முழக்கம்
ஏற்பட்டிருந்தது. தற்பொழுது அமீரகம் மற்றும்
வளைகுடாவில் ஏற்பட்டு வரும் மகத்தான வளர்ச்சி
மேற்கைப் பார் எனும் முழக்கம் ஏற்பட
வழிவகுத்திருப்பதாகக் குறிப்பிட்டார்.
ஒவ்வொருவரும் உழைப்புக்கு கொடுக்கும்
முக்கியத்துவம் போன்று தங்களது
ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க
வேண்டும் என்றார். ஆயுளைக் குறைக்கும் ஆயிலை (
எண்ணெய் ) உணவுப் பொருட்களில் குறைத்து
சாப்பிட வேண்டும். நல்லவை நடக்க நாம் தினமும்
காலாற நடக்க வேண்டும் என்றார். உணவில் காய்கற்
மற்றும் பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்ள
வேண்டும். நல்ல சிந்தனைகள் நம் வாழ்வின் ஆயுளை
அதிகரிக்கும் என்றார்.
அதனைத் தொடர்ந்து டாக்டர் ஏ. நஸீருல் அமீன்
உரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து கேள்வி
பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
விழாக்குழு செயலாளர் காயல் யஹ்யா முஹ்யித்தீன்
நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். ஊடகத்துறை
பொறுப்பாளர் முதுவை ஹிதாயத் நன்றி கூறினார்.
ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் கீழக்கரை ஹமீது
யாசின், ஷேக் முஹம்மது உள்ளிட்டோர்
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
தகவல் : முதுவை ஹிதாயத் |
இந்திய ஏஜெண்டுகளின்
'ஆள் கடத்தல்'
மத்திய அரசின் விசா விதிமுறை தளர்வை ஆள்
கடத்தலுக்கு இந்திய ஏஜென்டுகள்
பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஈராக்குக்கு அதிக அளவிலான தொழிலாளர்கள்
முறைகேடாக அழைத்துச் செல்லப்படுவதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய அரசு, விசா
விதிமுறைகளை தளர்த்தியது. விசிட் விசாவில்
வெளிநாடு செல்வோர், அவர்களது பாஸ்போர்ட்டில்,
எமிகிரேஷன் சோதனை தேவையில்லை என்ற முத்திரை
இருந்தாலும் கூட, கண்டிப்பாக அதற்கான
அனுமதியைப் பெற வேண்டும் என்ற ஒரு முக்கிய
ஷரத்து முன்பு இருந்தது.
10ம் வகுப்புக்கும் குறைவாக
படித்தவர்களுக்குத்தான் பாஸ்போர்ட்டில்
எமிகிரேஷன் சோதனை தேவை என்று முத்திரை இடம்
பெற்றிருக்கும். மற்றவர்களுக்கு அது
இருக்காது.
இதன் காரணமாக 10ம் வகுப்புக்குக் குறைவாக
படித்தவர்கள், இந்தியாவில் உள்ள எட்டு
குடியேற்றப் பிரிவு அலுவலகத்தில் ஏதாவது
ஒன்றில் அதற்கான அனுமதியைப் பெற வேண்டும்.
அப்போதுதான் அவர்களால் வெளிநாடுகளுக்குச்
செல்ல முடியும்.
ஆனால் மத்திய அரசு எந்தவிதமான முத்திரை
பாஸ்போர்ட்டில் இருந்தாலும் குடியேற்றப்
பிரிவு அதிகாரிகளின் ஒப்புதலைப் பெற்றாக
வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
இதன் காரணமாக, வெளிநாடுகளில் வசிக்கும்
குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்டோரைப்
பார்க்கப் போனால் கூட எமிகிரேஷன் அதிகாரிகளின்
அனுமதியைப் பெற வேண்டிய நிலை இறுந்து வந்தது.
இதனால் விசிட் விசாவில் செல்லும் பலருக்கு
தேவையில்லாத அலைச்சல், கால விரையம் ஏற்பட்டு
வந்தது.
இதன் காரணமாகவே கடந்த அக்டோபர் மாதம் இந்த
நிபந்தனையை மத்திய அரசு ரத்து செய்தது.
இதுதான் இப்போது தொழிலாளர்களை சட்டவிரோதமாக
வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கும்
ஏஜென்டுகளுக்கு பெரும் உதவியாக மாறியுள்ளது.
இதுகுறித்து துபாயில் உள்ள இந்திய துணைத்
தூதரகத்தின் தொழிலாளர் நல ஆலோசனை அதிகாரி
பி.எஸ்.முபாரக் கூறுகையில், இந்த ஷரத்து
நீக்கம் நல்ல நோக்கத்தோடு வெளிநாடு
செல்வோருக்கு பேருதவியாக அமைந்துள்ளது. ஆனால்
இதை சிலர் தவறாகப் பயன்படுத்த
ஆரம்பித்துள்ளனர்.
எந்த சலுகைகளையும் தவறாகப் பயன்படுத்த சிலர்
இருப்பார்கள். அதேபோல இதிலும்
முறைகேட்டாளர்கள் கைவரிசை காட்ட
ஆரம்பித்துள்ளனர்.
வேலைக்கு ஆட்களை அனுப்பும் ஏஜென்டுகள், பல
அப்பாவிகளிடம் அதிக அளவில் பணத்தைப் பெற்றுக்
கொண்டு விசிட் விசாவுக்கு மத்திய அரசு
வழங்கியுள்ள சலுகையைப் பயன்படுத்திக் கொண்டு,
வேலை பார்க்க வெளிநாடுகளுக்கு அனுப்பி
வைக்கின்றனர்.
முதலில் அரபு நாடுகளுக்கு இவர்கள் அனுப்பி
வைக்கப்படுகின்றனர். பின்னார் ஈராக்குக்கு
இவர்கள் கொண்டு செல்லப்படுகின்றனர்.
இப்படி விசிட் விசாவில் வெளிநாடுகளுக்கு
குறிப்பாக அரபு நாடுகளுக்கு செல்லும் பல
அப்பாவிகள், அங்கு பெரும் அபாயங்களை சந்திக்க
நேரிடுகிறது. பெரும்பாலானவர்கள் கைது
செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
ஆந்திராவிலிருந்துதான் அதிக அளவிலான பேர்
இப்படி விசிட் விசாவில் வருகின்றனர்.
இப்படி திருட்டுத்தனமாக ஈராக்குக்கு
அனுப்பப்படும் இந்தியர்களின் எண்ணிக்கை
குறித்த உறுதியான தகவல் நம்மிடம் இல்லை. அதைக்
கணக்கிடவும் முடியாது. இருப்பினும்
ஆயிரக்கணக்கான பேர் இவ்வாறு அனுப்பப்படுவதாக
அனுமானிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
சமீபத்தில், ஆந்திராவைச் சேர்ந்த 2
தொழிலாளர்கள், இப்படி விசிட் விசா மூலம்
துபாய்க்கு அனுப்பப்பட்டனர். பின்னர் அந்த
விசாக் காலம் முடிவடைந்ததும், கிஷ் தீவுக்கு
அவர்கள் அனுப்பப்பட்டனர். அங்கு அவர்கள்
நிராதரவாக விடப்பட்டனர்.
இந்த நிலையில் அவர்களுக்கு இந்தியாவிலிருந்து
விசாவை பேக்ஸ் மூலம் அவர்களை அனுப்பிய
ஏஜென்டுகள் அனுப்பி வைத்தனர். நல்ல வேளை
தப்பித்தோடும் என்று நினைத்த அவர்கள், அந்த
விசா நகலோடு துபாய்க்கு வந்தபோது விமான
நிலையத்தில் போலீஸாரிடம் சிக்கிக் கைதாகினர்.
அவர்கள் வைத்திருந்த விசா நகர், போலியானது
என்பதால் இருவரும் இந்தியாவுக்கு நாடு
கடத்தப்பட்டனர். இந்தியத் தூதரகம்தான் அதற்கான
செலவுகளை ஏற்க வேண்டியதாகி விட்டது.
இதேபோல ஆந்திராவின் கரீம் நகர், நிஜாமாபாத்
மாவட்டங்களைச்சேர்ந்த 8 பேர் கொண்ட ஒரு
தொழிலாளர் குழு ஈராக்கில் நல்ல வேலை
கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்
காத்திருக்கிறது. ஷார்ஜாவில் அவர்களை அவர்களது
ஏஜென்ட் தங்க வைத்துள்ளார்.
இதுகுறித்து அந்தக் குழுவைச் சேர்ந்த துர்கா
பிரசாத் ரெட்டி, கணேஷ், பிரம்மய்யா, வெங்கல
சீனிவாசா, காஷி ராம் ஆகியோர் கூறுகையில்,
ஷார்ஜாவில் நாங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளோம்.
ஹைதராபாத்தைச் சேர்ந்த ஏஜென்டு ஒருவரிடம் தலா
ரூ. 1.80 லட்சம் பணம் கொடுத்து வந்துள்ளோம்.
எங்களது குடும்பங்கள் வறுமையில் வாடுகின்றன.
எனவே நல்ல சம்பளத்தில் வேலை பார்க்கவே இங்கு
வந்து காத்திருக்கிறோம் என்றனர்.
கணேஷுக்கு 19 வயதுதான் ஆகிறது. ஈராக்கில்
உயிரைப் பணயம் வைத்து வேலை பார்க்க அவர்
தயாராக இருக்கிறார். இவருக்கு வயதான
பெற்றோரும், 2 தங்கைகளும் உள்ளனராம். தனது
உயிர், வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்படாமல்
குடும்ப சூழ்நிலையை மனதில் கொண்டு வேலைக்காக
ஷார்ஜா வந்து காத்திருக்கிறார்.
இப்படி முறைகேடாக ஆட்களை வளைகுடா நாடுகளுக்கு
அனுப்பி பின்னர் அங்கிருந்து ஈராக்குக்கு
அனுப்பி வரும் ஏஜென்டுகள், குடியேற்றப் பிரிவு
அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து அனுமதி வாங்கி
அனுப்பி வருகின்றனராம்.
இதுதவிர அதிகாரிகளையும், விதிமுறைகளையும்
மீறுவதற்காக பல்வேறு உபாயங்களையும் இவர்கள்
பயன்படுத்துகின்றனர்.
தற்போது ஷார்ஜாவில் வந்து தங்கியுள்ள இந்த
எட்டு ஆந்திர இளைஞர்களும், முதலில்
ஹைதராபாத்திலிருந்து பெங்களூர் வந்துள்ளனர்.
பின்னர் அங்கிருந்து திருவனந்தபுரம் அழைத்துச்
செல்லப்பட்டனர். பிறகு கோவைக்கு கொண்டு
போகப்பட்டனர். அங்கிருந்து சென்னைக்கு வந்து
பிறகு துபாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தற்போது ஷார்ஜாவில் தங்கியுள்ள 9 பேரில்
ஒருவரின் விசா காலம் முடிந்து விட்டதாம். எனவே
அவர் தலைமறைவாகி விட்டார். மற்றவர்களும் விசா
காலம் முடியப் போவதால் ஒரு வாரத்திற்குள்
எஸ்கேப் ஆகி விடுவார்களாம்.
தற்போது இவர்களுக்கு பாதுகாப்பாகவும்,
ஆதரவாகவும் இருப்பது சமூக சேவகர் டாக்டர்
சசிகலா மற்றும் மல்லிகார்ஜூனா ஆகியோர்தான்.
இவர்களில் மல்லிகார்ஜூனாவே இப்படி மோசடியான
ஏஜென்டு மூலம் வந்து சிக்கியவர்தான். கடந்த
ஆண்டு அக்டோபர் மாதம் அவர் ஷார்ஜா விமான
நிலையத்தில் 6 நாட்கள் பரிதவித்தார். அவருக்கு
டாக்டர் சசிகலாதான் உதவி செய்து விசா கிடைக்க
உதவினார். தற்போது தன்னைப் போல ஏமாற்றப்பட்டு
பரிதவிப்போருக்கு சசிகலாவுடன் இணைந்து
மல்லிகார்ஜூனா உதவி வருகிறாராம்.
கை நிறைய பணம் என்ற கனவோடு, இப்படி இவர்கள்
வளைகுடா நாடுகளில் வந்து தவித்துக்
கொண்டிருக்கும் நிலை ஒருபக்கம். மறுபக்கமோ,
இந்தியாவில் நூற்றுக்கணக்கானோர்,
ஆயிரக்கணக்கானோர், வளைகுடா நாடுகளுக்கு
வருவதற்காக கடன்களை வாங்கியும், நகை,
நட்டுக்கள், நிலங்களை விற்றும் பணத்தைத்
திரட்டிக் கொண்டுதான் உள்ளனர். |
முந்தைய பகுதிகள்
|