முதுவை ஹிதாயத் பக்கம்

புதிய செய்திகள்

மருந்துகளுக்கு வரி வாங்கினால் கடும் நடவடிக்கை:


அதிக விலை கொடுக்காமல் இருக்க மருந்து நிறுவனங்களின் பெயர்களைப் பாருங்க சர்க்கரை நோய், இதய நோய் உள்பட பல்வேறு நோய்களுக்காக மாதந்தோறும் மாத்திரைகளை வாங்கும் லட்சக்கணக்கான நோயாளிகளுக்கு உதவும் வகையில் மருந்துகளுக்கு உள்ளூர் வரிகளை உள்ளடக்கிய அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை மத்திய அரசு அறிவித்துள்ளது.


மத்திய அரசு-மருந்து உற்பத்தியாளர்களின் உடன்பாட்டின் அடிப்படையில் விலை குறைக்கப்பட்ட 886 மருந்துகளைக் கொண்ட முதல் பட்டியலை அண்மையில் மத்திய ரசாயனத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் வெளியிட்டார். அக்டோபர் 2-ம் தேதிக்குப் பிறகு தயாரிக்கப்பட்ட மருந்துகளுக்கு குறைக்கப்பட்ட புதிய விலைகள் பொருந்தும் என்றும் பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள மருந்துகளை நவ.2-ம் தேதி முதல் புதிய குறைக்கப்பட்ட விலையில் விற்பனை செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் பாஸ்வான் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.


லாபத்தைக் குறைத்துக் கொண்டு...: மருந்து உற்பத்தியாளர்கள் தங்களது லாபத்தை 15 சதவீ தமாகக் குறைத்துக் கொண்டு, இந்த விலை குறைப்பு உடன்பாட்டுக்கு ஒப்புக் கொண்டுள்ளனர். இதேபோன்று மொத்த சில்லறை விற்பனையாளர்களும் தங்களது லாபத்தை 35 சதவீதமாகக் குறைத்துக் கொள்ள ஒப்புதல் அளித்துள்ளனர். எனவே, "பழைய ஸ்டாக்' அல்லது "பழைய பேட்ச்' என்பதால் உள்ளூர் வரி சேர்க்கப்படுகிறது போன்ற கருத்துகளுக்கெல்லாம் இனி இடமே இல்லை.


மேலும் மருந்துகளின் குறைக்கப்பட்ட புதிய சில்லறை விற்பனை விலையை அமல்படுத்துவதற்கான கெடு தேதியும் (நவ.2) முடிவுக்கு வந்துவிட்டதை நுகர்வோர் மனத்தில் கொள்ள வேண்டும். விலையைக் குறைத்துள்ள 11 மருந்து நிறுவனங்கள்: வலி நிவாரண மாத்திரைகள், நோய்த் தொற்றை எதிர்க்கும் ஆன்டிபயாட்டிக் மருந்துகள், தோல் நோயைக் குணப்படுத்தும் மருந்துகள், சளியைக் குணப்படுத்தும் சிரப்புகள், இதய - சர்க்கரை நோயாளிகளுக்கான
மருந்துகள் ஆகியவற்றைத் தயாரிக்கும் 11 மருந்து நிறுவனங்களின் பெயர்கள் மத்திய அரசின் விலை குறைப்புப்
பட்டியலில் இடம்பெற்றுள்ளன. (மருந்து நிறுவனங்களின் பெயர் பெட்டிச் செய்தியில் கொடுக்கப்பட்டுள்ளது.)
 

மாத்திரைகளை வாங்கும்போது பேக்கின் பின்புறம் மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்டியலில் உள்ள மருந்து நிறுவனத்தின் பெயர் இருக்கும் நிலையில், அதில் குறிப்பிட்டுள்ள அதிக பட்ச சில்லறை விற்பனை விலையை மட்டும் நுகர்வோர் கொடுத்தால் போதுமானது.

உதாரணமாக சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும்  "மெட்ஃபார்மின்', "குளுக்கோசமைன்', "புரோஜஸ்டிரோன்' ஆகிய மருந்துகளுக்கு பேக்கில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை மட்டும் கொடுத்தால் போதும்; இதேபோன்று கண் சொட்டு மருந்துகளாகிய "சிப்ரோஃபிளாக்ஸஸின்', "ஜென்ட்டா மைசின்', "லிக்னோகைன்' போன்றவற்றை வாங்கும்போது அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை மட்டும் கொடுத்தால் போதுமானது.
இதேபோன்று இரைப்பைகுடல் நோய் தொடர்புடைய "ரானிடிடின்', "டாம்ப்ரிடோன்', "ஓம்பிரஸைôல்', "அலுமினியம் ஹைட்ராக் ஸைடு', "மக்னீμயம் ஹைட்ராக்ஸைடு' மருந்துகளை வாங்கும்போது அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை
மட்டும் கொடுத்தால் போதும்.

மத்திய அரசின் மருந்து விலை குறைப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ள மருந்து நிறுவனங்களின் பெயர்கள்:-
Alembic Ltd., Cadila Healthcare, Wockhardt Ltd., Emcure Pharmaceuticals Ltd., Unichem Laboratories Ltd., Ranbaxy Laboratories Ltd., Lupin Ltd., Nicholas Piramal, Cipla Ltd.,Alkem Laboratories Ltd., Medley Pharmaceuticals Ltd ஆகிய 11 மருந்து நிறுவனங்கள் தங்களது 886 மருந்துகளின் விலையைக் குறைத்துள்ளன. இந்த நிறுவனங்களின் மருந்துகளுக்கு
அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை மட்டும் நுகர்வோர் கொடுத்தால் போதும். இதேபோன்று விலையை குறைக்க ஒப்புக் கொண்டுள்ள பிற மருந்து நிறுவனங்களின் இரண்டாவது பட்டியலையும் விரைவில் மத்திய அரசு வெளியிட உள்ளது.


இணைய தளத்தில்...: விலை குறைப்பை அறிவித்துள்ள மருந்து நிறுவனங்களின் பெயர், மருந்துகளின் பெயர்,
விலைக் குறைப்பு சதவீதம் ஆகியவற்றை www.chemicals.gov.in என்ற இணைய தளத்தில் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.


மருந்துகளின் விலை குறித்து உதவி பெற "0124-39898080' என்ற 24 மணி நேர நுகர்வோர் சேவை தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தலாம்.

மருத்துவமனைகளின் மருந்துக் கடைகளே...: மருந்துகளின் விலை குறைப்பை மத்திய அரசு அறிவித்துள்ள
போதிலும் மருத்துவமனைகளுடன் இணைந்த மருந்துக் கடைகளில் கம்ப்யூட்டர் புரோகிராம் அடிப்படையில் பில்
போடப்படுவதால் வரியுடன் சேர்த்து மருந்துகள் தற்போதும் விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது மெட்ராஸ் ஐ (கண் வலி) காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளதால் கண்ணுக்கான சொட்டு மருந்து வரியுடன் சேர்த்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.


எச்சரிக்கை: இவ்வாறு வரியைக் கூடுதலாகச் சேர்த்து மருந்துகளை விற்பனை செய்வது தவறு; தொடர்ந்து தவறு செய்வோர் மீது அத்தியாவசிய பொருள்கள் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய அரசு அறிவித்துள்ள விலை குறைப்புப் பட்டியல் மருந்துகளை அதிகபட்ச சில்லறை விற்பனை விலையைவிட அதிகமாக
யாராவது விற்பனை செய்தால் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மருந்துக் கட்டுப் பாட்டுத்துறை இயக்குரகத்தில் (தொ.பே. எண் 24321830) புகார் செய்யலாம்' என்றார் தமிழக அரசின் மருந்துக் கட்டுப்பாட்டுத்துறை இயக்குநர் நா. செல்வராசு. ஜே. ரங்கராஜன்

புலவர் அப்துல் ரஹ்மான்

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் பிரேதக் கிடங்கு வாசல். அந்த வாசலுக்கு அருகிலிருக்கும் ஒரு மர நிழலில், சவக்கிடங்கின் உள்ளே செல்வதற்கு எந்நேரமும் தயார் என்பது போல ஓர் உயிர் போராடிக் கொண்டிருக்கிறது. வயது எழுபதைத் தாண்டும். குழி விழுந்த கண்கள். சுருங்கிப் போன தேகம். அசைய முடியுமா, முடியாதா என்கிற நிலையில் அந்த உருவம் படுத்துக்கிடக்கிறது. அருகில் சில புத்தகத்தாள்கள். கூடவே ஒரு பை. அதில் ஏராளமான காகிதங்கள். சற்று நேரத்திற்கெல்லாம் அவரைச் சுற்றி நாய்களின் கூட்டம். ‘ஐயோ பாவம்!’ என்கிறது ஒரு தரப்பு. ‘கிழம்’ குடித்துவிட்டுக் கிடக்குது பாரு’ என்கிறது இன்னொரு தரப்பு. இதற்கிடையே போலீஸ் என்று கூறிக்கொண்டு இரண்டு பேர் தலையை நீட்டுகிறார்கள்.


கந்தல் துணிபோலக் கிடந்த அந்தப் பழுத்த கிழத்தின் உடலை அலட்சியமாகத் தூக்கி மீன்பாடி வண்டியில் போடுகிறார்கள். அந்த வண்டி சரசரவென நகர்கிறது. பழைய மருத்துவமனையிலிருந்து புதிய மருத்துவமனைக்குத்தான் எடுத்துச் செல்கிறார்களோ என்று யோசிக்கும்போதே, அது ராயப்பேட்டை மேம்பாலத்தின் தூண்களுக்கு அருகில் நின்றுவிட்டது.


தூக்கிச் சென்றவர்கள் சுற்றும்முற்றும் பார்த்தார்கள். கடைசியில் மீன்பாடியில் இருந்தவரைத் தூக்கிக் கீழே கிடத்திவிட்டுக் காணாமல் போனார்கள். இவ்வளவையும் படம் பிடித்துக் கொண்டிருந்தது ஜெயா டி.வி. தொலைக்காட்சி. போதாது?
காலில் அடிபட்டு நீண்டநாட்களாக ஆறாத புண்μக்கு வைத்தியம் பார்க்க வேண்டி அந்தப் பெரியவர் மருத்துவமனையில் சேர்ந்திருக்கிறார். பெரியவர் கையில் காசு இல்லை. அதனால் உதவாக் கட்டை, ஒரு பிரயோஜனமும் இல்லை என்று முடிவெடுத்து, அவரை வெளியே தூக்கிப் போட்டு விட்டார்கள் என்று, சவக்கிடங்கின் வாசல் அருகே துடித்துக் கொண்டு கிடந்த அவரைப் பற்றி ஜெயா டி.வி. செய்தி வெளியிட்ட பிறகுதான் சுதாரித்துக் கொண்டது மருத்துவமனை நிர்வாகம்.


அந்தப் பெரியவர் யாரோ ஒருவர் அல்ல. புலவர் அப்துல் ரகுமான். கவிஞர். கட்டுரையாளர். தி.மு.க.வின் இளமைக்காலத் தொண்டர். அக்கட்சிக்காக மேடை தோறும் இடியாய் முழக்கம் செய்தவர். அதனாலேயே கலைஞரால் ‘புலவர் இடிமுரசார்’ என்று பட்டம் பெற்றவர்! இப்படித்தான் ஜெயா டி.வி. செய்தி சொன்னது. எனவே, புலவர் இடிமுரசு பற்றிய பின்னணி என்ன என்பது குறித்த விசாரணையில் நாம் இறங்கினோம். அவர், ராயப்பேட்டை பழைய மருத்துவமனையின் ‘பி’ ப்ளாக்கில் இருப்பதாக நீண்ட முயற்சிக்குப் பிறகு உறுதியானது. அவரைச் சந்தித்தோம். ‘‘முப்பத்தேழு வருடங்களுக்கு மேல் இருக்கும். இந்த ராயப்பேட்டை பகுதியிலேயேதான் வாழ்ந்து வந்தேன். அந்தக் காலத்து எஸ்.எஸ்.எல்.சி. பிறகு அரசியல் களத்தோடு எம்.ஏ., பி.எட் முடித்திருக்கேன். எனக்கு மூன்று பையன்கள். ஒரு மகள். மூத்தமகன் துபாயில் இருக்கான். கேபிள் கம்பெனியில் வேலை. இரண்டாவது மகனும் சவூதிக்குச் சென்றான். சென்ற இடத்தில் வேலை இல்லை. நேற்றுத்தான் (மூன்றாம் தேதி) சென்னைக்கு வந்திருக்கான். ‘போன இடத்தில் வேலை இல்லை. வந்த இடத்தில் கடன் தொல்லை!’’ என்று டைமிங்காகப் பேசியவர் தலையணைக்கு அடியில் இருந்த ஒரு கடிதத்தைத் தேடி எடுத்தார். ‘பைந்தமிழ் மன்றம்’ சார்பாக அவருக்கு வந்த அழைப்புக் கடிதம். ‘‘தமிழ் குறித்தும், கவிதை குறித்தும் பட்டிமன்றம். பேசச் சென்றால் ஐநூறு ரூபாய் கொடுப்பார்கள். கடந்த பதினைந்து
வருஷமா இப்படித்தான் வருமானம்’’ என்றவர், சிறிது நேரம் கண்மூடிக் கிடந்தார்.


பிறகு, ‘‘மூன்றாவது பையனைப் பற்றிச் சொல்லலையே. அவன் ஒரு டைலரா, கடையில இருக்கான். அடுத்ததுதான் பொண்μ. ஆவடியில் கட்டிக் கொடுத்தேன். நல்ல மருமகன் வாய்ச்சான். எந்தக் குறையுமில்ல. அப்படியே மகள் வீட்டோட என் மனைவி மெகபூபீயும் தங்கிட்டா. என்னால அங்க இருக்க முடியலை. என் வாசமும், சுவாசமும் இந்த ராயப்பேட்டைதான். மற்றபடி அதிக நேரம் எங்காவது ஒரு ப்ளாட்பாரம்தான். ஏதாவது எழுதிக் கொண்டிருப்பேன். யாருக்காவது அதை அனுப்பி வைப்பேன். கடைசியாக அப்படி ஒரு நிகழ்ச்சி. தேவநேயப்பாவாணர் அரங்கில் நடந்தது. போய் கலந்து கொண்டு திரும்பினேன். இரவு பதினொன்றரை மணி இருக்கும். நடந்து வந்துகிட்டிருக்கும்போது, ஒரு லாரிக்காரன் அடிச்சுட்டுப் போயிட்டான். வலது கால் பாதத்துக்கு மேல வலுவான காயம். யாரோ சில நல்லவங்க இந்த ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் கொண்டு வந்து சேர்த்தாங்க. பிறகு, அப்பப்போ வந்து காயத்துக்குக் கட்டுப் போட்டுக்கிட்டுப் போவேன்.


ஒவ்வொரு முறையும் பத்து இருபதுன்னு மாமூல் கொடுக்கμம். இல்லைனா ஏதோ ஒரு மருந்தைத் தடவி சும்மா பேருக்கு ஒரு கட்டுப்போடுவாங்க. துட்டு இல்லைனா சமயத்துல திட்டுவாங்க. அதையும் வாங்கிக் கட்டிக்கிட்டதுண்டு. என்ன செய்வது?’’ என்றவரிடம், ‘உங்களை மருத்துவமனையில் சேர்த்திருந்ததாகவும் அப்படி இருக்கும்போதே ‘துட்டு இல்லாத பார்ட்டி’ என்று தூக்கிச் சவக்கிடங்கு அருகே போட்டுவிட்டதாகவும் சொல்கிறார்களே. உண்மையா? என்ன நடந்தது? என்றோம்.
‘‘அப்படி இல்லைப்பா. அது தவறான தகவல். நான் பெட்டில் சேரவில்லை. பணம் இல்லையே என்று என்னைத் தூக்கி வெளியில் போடவும் இல்லை. அடிக்கடி வருவது போல்தான் கட்டுப்போட வந்தேன். அவுங்களும் வழக்கம் போல துட்டுக்கேட்டு அலைக்கழிச்சாங்க. அப்படியே மரத்தடியில படுத்துட்டேன். என்ன நடந்துச்சுன்னே தெரியல. யாரோ வந்தாங்க. இங்க இருக்கக் கூடாதுன்னு மீன்பாடி வண்டியில ஏத்திக்கிட்டுபோய் பாலத்துக்கிட்ட போட்டுட்டாங்க.
பிறகுதான் அம்மாவுக்கு (முன்னாள் முதல்வர்) போன் போடச் சொன்னேன். என் கூட இருந்தவங்கதான் எங்கேயோ பேசினாங்க. ஜெயா டி.வி. வந்துச்சு. அப்புறம்தான் ஆஸ்பத்திரியிலிருந்து வந்து என்னைத் தூக்கிட்டு வந்து இங்கே வச்சு வைத்தியம் பார்க்குறாங்க. நல்லாத்தான் செய்யுறாங்க. முன்னாடியே இப்படிக் கவனிச்சிருந்தா என் காலு கெட்டிருக்காதே!’’ என்றார் ஆதங்கத்துடன். தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தவரிடம் தி.மு.க., கலைஞர் தொடர்பு, ‘இடிமுரசு’ பட்டம் சூட்டியது பற்றியெல்லாம் கேட்டோம்.


‘‘என்னுடைய இளமைக் காலம் மட்டுமல்ல. இப்போதும் நான் தி.மு.க. தான். எங்கெல்லாம் தி.மு.க. கூட்டம் நடக்குமோ அங்கெல்லாம் என் பேச்சு கட்டாயம் இருக்கும். இந்தி எதிர்ப்புப் போராட்டக் கூட்டங்களில் என் பேச்சை ‘இடிமுழக்கம்’னுதான் சொல்வாங்க. அப்படி நெருப்பு மாதிரி பேசுவேன். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலைஞரோடு சிறைவாசமும் இருந்தேன். கலைஞருக்கு மட்டுமல்ல. பெரியார், அண்ணா, ‘விடுதலை’ வீரமணி அய்யா
போன்றவர்களிடமும் பரிச்சயம் உண்டு. தவிர, தமிழறிஞர்கள், சான்றோர்கள் என நிறையத் தொடர்புகள் உண்டு. ஆனால் இப்போதய என் நிலைமையில் அவர்களைச் சென்று சந்தித்து ‘நான் இப்படி இருக்கின்றேன்’ என்று பேசவே கூச்சம். அதனாலேயே தவிர்த்துவிட்டேன். ஆனால் என்னிடம் ஒரு திட்டம் இருந்தது. அதை என் நண்பர் ஒருவர் செய்கிறார்.

இதுவரையிலான எனது கட்டுரை, கவிதைகள் சுமார் முப்பதாயிரத்திற்கும் மேல் இருக்கும். அவற்றில் ஒரு பகுதியைத் தொகுத்துப் புத்தகமாகக் கொண்டு வரμம். அந்தப் புத்தகத்திற்கு கலைஞர்தான் முன்னுரை. அப்படி ஒரு சந்தர்ப்பத்தோடு அவரைச் சந்திக்கμம் என்று இருந்தேன். அந்த முயற்சி இன்னும் இருக்கு!’’ என்ற போது அவர் கண்கள் கலங்கின. ‘உங்களை கலைஞருக்கு நன்றாகத் தெரியுமா?’ என்று கேட்டதுதான் தாமதம்... ‘‘தமிழறிந்த கோமான். அவர் அப்படித் தெரியாதது போல் நடந்து கொள்ள மாட்டார். என்னைப் பார்த்தார் என்றால் தெரிந்து கொள்வார். எனது மேடைப் பேச்சை அவரால் மறக்க முடியாது. அது 1967_காலகட்டம். அண்ணா முதல்வர். இன்றைய தமிழக முதல்வர் கலைஞர் அப்போது பொதுப்பணித்துறை அமைச்சர். காங்கிரஸின் இன்றைய நட்புறவு முறை அப்போது இல்லை. எதிரும் புதிரும்தான். அந்த நேரத்தில் ராயப்பேட்டையோ, மந்தைவெளியோ... எங்கு என்று
சரியாக நினைவில்லை. கலைஞர் மேடையில் இருக்கிறார். நான் இடியாய் முழங்கிக் கொண்டிருந்தேன். கடைசியில் அவர் பேச வந்தபோது, என் பேச்சைப் புகழ்ந்து விட்டு, ‘இடிமுரசு’ என்று பட்டம் சூட்டினார். அதுவே எனது புனைபெயராகிப் போனது. எல்லோரும் என்னை ‘இடிமுரசு’ என்றுதான் அழைப்பார்கள். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். தி.மு.க.விலிருந்து பிரிந்தபோது கூட, தன்னுடன் வந்து விடும்படி அழைத்தார். அவருடன் நல்ல
பழக்கம். இருந்தாலும் போகவில்லை. இனம் இனத்தோடு என்பதைப் போல், தமிழாய்ந்த அறிஞரிடம் நான் ஒரு தமிழ்ப்புலவனாய் இருந்து விடுகிறேன் என்று கூறிவிட்டேன்.


கலைஞர் நல்லவர்தான். இன்னார் எனத் தெரிந்தால் உதவ முன்வருவார். தூக்கிப்பிடிப்பார். ஆனால் அவரைச் சுற்றியிருந்த இலக்கிய நண்பர்கள் தரப்பு திருட்டுப் பையன்களாக இருந்து விட்டதுதான் சோகம். என்னைப் போன்றோரை கலைஞரின் பார்வையிலிருந்தே மறைத்து விட்டார்கள்!’’ என்று தழுதழுத்தவர், ‘‘எப்படியோ, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மாவால் (டி.வி.யால்) நான் யார், எப்படி இருக்கின்றேன்’’ என்பதை வெளிச்சம் போட்டுள்ளார்கள். அதற்கு நன்றி சொல்லμம்!’’ என்றார்.
ஷிuஙு: ரூழூஸினீ ¬றீஸஜிலஷீறிஷீ

 
 

முந்தைய பகுதிகள்


தகவல் : முதுவை ஹிதாயத் ( எம் என் ஏ )

 Refer to your friends / Relatives

www.Chittarkottai.com