|
தபர்ரஜின் ரமலான் சந்திப்பு
அன்புச் சகோதரர்களே!
அல்ஹம்துலில்லாஹ், எங்களின் இந்த வருட
ரமலான் சந்திப்பு மிகவும்
சிறப்பாகவும் விமர்சையாகவும்
நடைபெற்றது, மாஷா-அல்லாஹ் 300 க்கும்
மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.
40க்கும் மேற்பட்ட சிறுவர்
சிறுமியர்கள் குரான் ஓதும் போட்டியில்
கலந்து கொண்டார்கள், "அண்ணல் நபி ஒரு
அழகிய முன்மாதிரி" என்ற தலைப்பில்
பேச்சுப்போட்டியும் நடைபெற்றது
அதிலும் சிறுவர், சிறுமிகள்
மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு திறம்பட
பேசினார்கள்.
எங்களின் புரவலர்கள் உதவிசெய்ததோடு
அல்லாமல் நிகழ்ச்சிக்கும் வந்திருந்து
எங்களை ஊக்குவித்துப் பேசினார்கள்.
Budget Rent A Car Regional Manager
சகோதரர் சலாஹுத்தீன் குரைஷி அவர்கள்
நிகழ்ச்சி தொடங்குமுன்பே வந்திருந்து
குர் ஆன் ஓதும் போட்டிக்கு
நடுவர்களில் ஒருவராகவும் இருந்ததோடு
குழந்தைகளை ஊக்குவித்தும்
பேசினார்கள். Uninet Marketing என்ற
நிறுவனத்தின் உரிமையாளர்களில்
சகோதரர். ஆரிப் மரைக்காயர், சகோதரர்.
முஹைதீன் கஸ்ஸாலி அவர்களும்
வந்திருந்து வாழ்த்திப்
பேசினார்கள்.Health Water Bottling
நிறுவனத்தின் மேலாளர் Dr. குரிஷித்
அவர்களின் பரிந்துரையின் பேரில் 600
பாட்டில் தண்ணீர் அனைவருக்கும் வழங்கி
நிகழ்ச்சியை இறுதிவரை இருந்து
கவுரவித்துத் தந்தார்கள்.
அறுசுவை உணவு வழங்கிய Lucky Group
சகோதரர் காதர் அவர்களும் நிகழ்ச்சிக்கு
வந்து கவுரவித்தார்கள். அதேபோல்
எங்களுக்கு புரவலர்களாக இருந்த Al-Manee
Trading நிறுவனத்தின் மேலதிகாரி
சகோதரர் அப்துல் ரப் அவர்களும், Nesma
Rawan Cargo உரிமையாளர் சகோதரர்
நஜ்முத்தீன் அவர்களும், ALMOISE
நிறுவனத்தின் உரிமையாளர் சகோதரர்
இஸ்மாயில் அவர்களும் வந்திருந்து
கவுரவித்ததோடு அல்லாமல்
நோன்பாளிகளுக்கு உணவு பரிமாறுவதில்
எங்களுக்கு ஒத்துழைப்பாக இருந்து
எங்களின் நன்றியையும் இறைவனின்
திருப்தியையும் பெற்றுக் கொண்டார்கள்.
எங்கள் புரவலர்களில் ஒருவரான Oasis
Car Service Centre நிறுவனத்தின்
மேலதிகாரி சகோதரர். இத்ரிஸ் அவர்கள்
உம்ரா சென்றுவிட்டதால் வரமுடியாமல்
போனாலும் தொலைபேசிமூலம் எங்களுக்கு
வாழ்த்து தெரிவித்தார்கள்.
IMO நிறுவனத்தின் மேலதிகாரி சகோதரர்
இப்றாஹிம் அவர்கள்
குழந்தைகளுக்குண்டான விளையாட்டு
நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து, பரிசுகள்
வழங்கி அழகாக நடத்திச் சென்றார்.
சகோதரர் சிக்கந்தர் அவர்கள்
அவருக்குத் துணையாக நின்று நிகழ்ச்சி
நடத்தி பரிசுகளும் வழங்கினார்
Minambur Foundation சார்பாகவும்
ஆதரவு அளித்தார் .
ரியாத் தமிழ் சங்கத்தின் தலைவர்
முனைவர், ரசீத் பாட்சா அவர்கள் எங்கள்
அமைப்பின் சேவையை பாராட்டிப் பேசினார்,
அதன் உபதலைவர்.சகோதரர். தாவூத்
அவர்களும், செயலாளர் சகோதரர்.
ஸஜ்ஜாவுதீன் அவர்களும், வந்திருந்து
எங்களை வாழ்த்திப் பேசினார்கள்.
சகோதரர் ஜலால்தீன் அவர்களும், மெளலவி
அப்துல் காதர் அவர்களும் அழகிய
முறையில் மார்க்கப் பிரசங்கம்
நடத்தினார்கள், எல்லாவற்றிற்கும்
முத்தாய்ப்பு வைத்தார்போல் சகோதரர்.
கோபகுமார் அவர்கள் பேசிய பேச்சு
அனைவரையும் வியப்பில்
ஆழ்த்தியது. 'என்ன ஒரு அழகிய பேச்சு!'
என்று கூறாதவர்கள் யாரும் இல்லை. மிக
அழகிய முறையில் பிரசங்கம் நடத்தினார்.
ஆங்கிலத்தியல் பேசிய பொழுதும்
அவர்களின் உணர்வுகளை புரிந்து
கொண்டவர்களாக மக்கள் அனைவரும் அவரின்
பேச்சை மிக உன்னிப்பாக பெரும்
ஆர்வத்துடன் கேட்டார்கள். தபர்ரஜ்
சார்பில் பாதிக்கப்பட்ட (ஷரீன்பானு)
குழந்தைக்கு இதுவரை 15000 ரியால் வரை
தபர்ரஜ் உதவியிருப்பதை ந்னிறபாராட்டி
பேசியதோடு அக்குழந்தையின் தந்தை
சகோதரர் ஜமால் அவர்களையும் அழைத்து
வந்து அனைவருக்கும் நன்றி
தெரிவித்தார்.
நேரமின்மை காரணமாக இஸ்லாமிய
வினாடி-வினா நிகழ்ச்சியை 20 நிமிடம்
தான் நடத்த முடிந்தது. சகோதரர் லக்கி
ஷாஜகானின் பேச்சும், மற்றும அவர்
ஏற்பாடு செய்திருந்த ஊமைவிளையாட்டும்
நடத்த இயலாமல் போனது. அது தவிர
மொத்தத்தில் நிகழ்ச்சி இறைவன்
உதவியால் மிகச்சிறப்பாக நடைந்தேறியது.
அல்ஹம்துலில்லாஹ்.
இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற் பெரும்
ஒத்துழைப்புத் தந்த புரவலர்களுக்கும்,
செயற்குழு உறுப்பினர்களுக்கும்,
உறுப்பினர்களும் எங்கள் அமைப்பின்
சார்பாக நன்றியை உரித்தாக்குகிறோம்.
எங்களின் அடுத்த சேவை எதிர்வரும்
புதன்கிழமை உறுப்பினர்களுடன் உம்ரா
ஏற்பாடு. மேலதிக விபரங்களுக்கு
0506972461 என்ற என்னுடைய
தொலைபேசியில் தொடர்வு கொள்ளவும்.
என்றும் அன்புடன்
இம்தியாஸ
தலைவர் தபர்ரஜ்
|