முதுவை ஹிதாயத் பக்கம்

புதிய செய்திகள்
ராமநாதபுரம் பள்ளி மண்டல அளவிலான போட்டிக்கு தேர்வு

ராமநாதபுரத்தில் நடந்த மாவட்ட விளையாட்டுப் போட்டியில் கொழும்பு ஆலிம் நினைவு உயர்நிலைப் பள்ளி மண்டல அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளது.

ராமநாதபுரத்தில் பள்ளிகளுக்கு இடையே மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெற்றன. இதில் ராமநாதபுரம் கொழும்பு ஆலிம் நினைவு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவன் மு.முகம்மது இப்ராஹிம் மண்டல அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளான்.

மாவட்டப் போட்டிகளில் ஆண்களுக்கான சீனியர் பிரிவில் 20 கி.மீ தூரம் வேகமாக சைக்கிள் ஓட்டும் போட்டியில் முதல் இடமும், தடகள போட்டியில் 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் முதல் இடமும் பிடித்து மண்டல அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.

இம் மாணவரை பள்ளித் தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் பாராட்டினர்.

இஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷா !

நூல்   : இஸ்லாமியப் பெரியார் தாவூத் ஷா
ஆசிரியர்  : முனைவர் அ அய்யூப்
பக்கங்கள் : 160
விலை  : ரூ 90
வெளியீடு : நவமணி பதிப்பகம்
44 எல்டாம்ஸ் சாலை
சென்னை 600 018 -    தொலைபேசி : 2434 0523

மறக்கப்பட்ட ஒரு மனிதரை நினைவுபடுத்தி இருக்கிறார் முனைவர் அ. அய்யூப்.

கம்பராமாயண சாயபு, இஸ்லாமிய இதழியலாளர்களின் முன்னோடி, தென்னாட்டு ஜின்னா, தாருல் இஸ்லாம் பத்திரிகையின் பிதாமகன், காதியானி தாவூத் ஷா, நாச்சியார்கோவில் தாவூத் ஷா என்று பல பெயர்களால் அழைக்கப்பட்ட பன்முகத் தோற்றம் கொண்டவர் இலக்கியவாதி அறிஞர் பா. தாவூத் ஷா.

அவரைப் பற்றி மிகவும் பிரையாசைப்பட்டு பல இடங்களில் அலைந்து, தேடித்தேடி, பல பேரிடம் விசாரித்து, விஷயங்களை அவரவரது நினைவுப் பதிவேடுகளிலிருந்து பெயர்த்து தந்திருக்கிறார் அய்யூப். ஓர் ஆய்வு நூலுக்கு தேடுவதைப் போல விஷயங்களைத் தேடி கோர்த்திருக்கும் நேர்த்தி சுவையானது.

நூலிலிருந்து சுவையான சில பகுதிகள்

உலகப் புகழ்பெற்ற கணித மேதை இராமனுஜரும், தாவூத் ஷாவும் ஒரே வகுப்புத் தோழர்கள், நெருங்கிய நண்பர்கள். அவர்களது நட்புக்குக் காரணமாக இருந்தது தாவூத் ஷாவிடமிருந்த தமிழறிவு. இராமானுஜருக்கு தமிழ்ப் பாடம் சரியாக வராது. தாவூத் ஷாவிற்கு கணிதப் பாடம் வராது. எனவே இருவரும் ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டனர்.

குர்ஆன் மொழிபெயர்ப்பு

குர் ஆன் முழுவதையும் பொருளுரையும் விரிவுரையும் சேர்த்து தமிழில் வெளியிட வேண்டும் என்பது தாவூத் ஷாவின் கனவு. தனது இறுதிக் காலத்துக்குள் திருக்குர் ஆன் முழுவதையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுவிட வேண்டும் என்ற ஆர்வம் அவரது நெஞ்சில் முள் போல் உறுத்திக்கொண்டிருந்தது. அவருக்கு 70 வயதானபோது தாருல் இஸ்லாமி' இதழை நிறுத்திவிட்டு முழுமையாக குர் ஆன் மொழிபெயர்ப்பில் இறங்கினார்.

அன்றைய உலமாக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். இதையும் மீறி அவர் அச்சேற்றினார்.

இது காதியானி மொழிபெயர்ப்பு, காபிர் மொழிபெயர்ப்பு, இதனை முஸ்லிம்கள் வாங்கக்கூடாது என்று அன்றைய உலமாக்கள் பிரச்சாரம் செய்தார்கள். இதனால் தொடர்ந்து தொகுதிகளை வெளியிட முட்டுக்கட்டை விழுந்தது. நான்காம் தொகுதிக்கு தைக்கா சுஐபு ஆலிம் அவருகள் 13,000 கொடுத்தார்கள்.

1967 இல் ஐந்தாம் தொகுதி வெளிவந்தது. இதற்குள் உலமாக்களின் தாக்குதல் அதிகமாயிற்று. தாவூத் ஷாவும் நோயில் படுத்துவிட்டார்.

சீர்திருத்தக் கருத்துக்கள்

பள்ளிவாசல்களில் குத்பா சொற்பொழிவுகள் தமிழில் நடத்தப்பட வேண்டும் என்றார் தாவூத் ஷா. தர்காக்களில் வணக்கம் கூடாது. முஸ்லிம்கள் மாந்திரீகத்ஹ்டில் மூழ்கக் கூடாது. வேப்பிலை அடிக்கக்கூடாது. கறுப்புக் கயிறு கட்டக்கூடாது. நாள், நட்சத்திரம் பார்க்கக் கூடாது. முஸ்லிம் பெண்களை படிக்க வைக்க வேண்டும்.

இதழியலாளர்

சமுதாயப் பணிக்கு ஓர் இதழ் தேவை என்று 1919 ஆம் ஆண்டு நாச்சியார்கோயிலில் தாருல் இஸ்லாம் பத்திரிகையைத் தொடங்கினார். 1923 இல் அந்த இதழ் சென்னைக்கு வந்தது. 1957 ஆம் ஆண்டு வரை 38 ஆண்டு காலம் அந்தப் பத்திரிகையை அவர் நடத்தி இருக்கிறார்.

இதழ் நடத்துவது என்பது நெருப்பு ஆற்றை நீந்திக் கடப்பது போல' என்று ஆதித்தனார் கூறுவார். 38 ஆண்டுகாலம் அவர் நெருப்பாற்றில் நீந்தினார்.

கலைஞரைக் கவர்ந்த தாருல் இஸ்லாம்

அந்தக் காலத்தில் நான் பள்ளியில் பயிலும் போது ஒரு கையிலே குடி அரசு ஏடு, இன்னொரு கையிலே தாருல் இஸ்லாம் என்கிற முஸ்லிம் லீக்கிற்காகப் பிரசாரம் செய்கிற நாளேடு. இவைதான் எங்கள் கைகளை அலங்கரிக்கும் என்கிறார் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி.

நன்றி :

நம்பிக்கை
மாத இதழ், மலேசியா
அக்டோபர் 2007

Tel : 603 5631 4802
Fax : 603 5632 8025
E mail : nambikkai@gmail.com

NAMBIKKAI
YPI Publication
29B JALAN PJS 10/24
Bandar Sri Subang
46000 Petaling Jaya
Selangor Darul Ehsan
Malaysia
இந்தியாவுக்கு சீரிய தலைமை தேவை: கலாம்


இந்தியாவுக்கு சீரிய தலைமை தேவை என முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் செவ்வாய்க்கிழமை கூறினார்.

கூட்டுச் சேர்ந்து உழைப்பதன் அவசியத்தை வலியுறுத்திய கலாம், நாட்டின் சீரான வளர்ச்சிக்கு பொதுவான பிரச்னைகளில் அனைவரும் கூட்டாகப் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

"மாநிலங்கள் தங்களிடமிருக்கும் கட்டமைப்பு, அறிவாற்றல் போன்ற வளங்களை பிற மாநிலங்களுடன் பகிர்ந்துகொண்டால் ஏற்றத்தாழ்வுகளைக் களைய முடியும்.

இந்தியாவில் பல்வேறு மதங்கள், பல்வேறு மொழிகள், பல்வேறு கலாசாரங்களைக் கொண்ட 28 மாநிலங்கள் உள்ளன. ஆகவே, பிராந்திய அடிப்படையிலேயே ஒவ்வொரு பிரச்னைக்கும் தீர்வு காணவேண்டும்.

கூட்டுப் பொருளாதாரம் என்பது கிராமங்கள்-நகரங்கள் இடையேயான ஏற்றத்தாழ்வைக் குறைப்பதாக அமைவதுடன், சீரான வளர்ச்சியையும் தீவிரவாத அச்சுறுத்தல் இல்லாத செழுமையான வருங்காலத்தையும் தருவதாக இருக்கவேண்டும்.

நாட்டைப் பற்றிய தொலைநோக்கு, கடினமான தருணங்களில் சிறப்பாக முடிவெடுக்கும் திறன், புதிய பாதைகளை வகுத்து அவற்றில் பயணம் செய்யும் ஆற்றல், நிர்வாகத்தில் மேதைமை ஆகியவை கொண்ட சிறந்த தலைமையே இந்திய மக்களின் தற்போதைய தேவை' என்றார் கலாம்.

நன்றி: www.dinamani.com
நீடூர் அ.மு. சயீத் வாழ்க்கை வரலாறு

சிந்தனைச் சித்தர், தமிழ்மாமணி நீடூர் அ.மு. சயீத் அவர்களது வாழ்க்கை வரலாற்றை எழுதி வெளியிடும் முயற்சியினை நவமணி பதிப்பகத்தின் சார்பில் மயிலாடுதுறை நம்ம ஊரு செய்தி மாத இதழ் ஆசிரியர் முனைவர் அ. அய்யூப் மேற்கொண்டுள்ளார்.

அல்ஹாஜ் அ.மு. சியீத் நாடறிந்த எழுத்தாளர். தீந்தமிழ்ப் பேச்சாளர். திக்கெட்டும் புகழ் பரப்பும் வழக்கறிஞர்.

நீடூரில் 09.10.1933 இல் பிறந்த இவர் எழுபதைத் தாண்டிய இளைஞர். நெடுங்கால சமுதாய ஊழியர். நீடூர் நெய்வாசல் J.M.H. அரபிக் கல்லூரியின் தலைவர்.

சென்னை வானொலியில் செய்தி அறிவிப்பாளராகப் பணியாற்றியவர். சுழற்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர். மயிலாடுதுறை பல்சமய உரையாடல் மையத்தின் இஸ்லாமியப் பிரிவுத் தலைவர்.

இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகத்தின் தலைவரான இவர் உலகளாவிய நிலையில் பத்து மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தியவர்.

சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, ஹாங்காங், இலங்கை, தெற்கு வியட்நாம், சீனா, ஜப்பான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்தவர். ஹஜ் கடமையை ஆறு முறையை நிறைவேற்றிய பேறு பெற்றவர்.

தமிழ்மாமணி, சிந்தனைச் சித்தர், சிந்தனைச் செம்மல், பொன்மொழிச்செம்மல், போன்ற சிறப்புப் பட்டங்கள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

சிந்தனைக் களஞ்சியம், சிந்தனைத் துளிகள், இஸ்லாமியச் சட்டம், சிந்தனைச் செல்வம், புனித ஹஜ் உம்ரா பயணக் குறிப்புகள், பெருமானாரின் புனித ஹஜ் உள்ளிட்ட நூல்களை எழுதியவர்.

இவரது ஆக்கங்கள் மணிச்சுடர், மணிவிளக்கு, முஸ்லிம் முரசு, மனாருல் ஹ¤தா, மஞ்சரி, பிறை, சமரசம், மறுமலர்ச்சி உள்ளிட்ட பல்வேறு தமிழக, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் இதழ்களில் வெளிவந்துள்ளன.

இவருடைய அன்பர்கள், நண்பர்கள் அவரைப் பற்றிய செய்திகளை எழுதி அனுப்ப கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளின் படங்களையும் அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நவமணி பதிப்பகம்
எண் 44 எல்டாம்சு சாலை
தேனாம்பேட்டை
சென்னை 600 018

மக்கள் தேடும் புதிய பாரதம் நூல் வெளியீட்டு விழா

பேங்காக் தொழிலதிபர் கியாஸ் எழுதிய மக்கள் தேடும் புதிய பாரதம் எனும் நூலின் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற்றது.

ஜார்கண்டு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கற்பகவிநாயகம் வெளியிட கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.

விழாவில் உலகத் தமிழ் பண்பாட்டுக் கழக தலைவர் அ. இரபியுதீன், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஹஸன் அலி, கலைமாமணி உமர், இஸ்லாமிய இலக்கிய கழக பொதுச்செயலாளர் எஸ்.எம்.இதாயத்துல்லா, கிளியனூர் அஜீஸ், தக்கலை பஷீர், கவிஞர் சோதுகுடியான், முனைவர் அ. அய்யூப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நூல் பற்றி விபரமறிய :
THAILAND TAMIL KAZHAGAM
G.P.O. Box No. 2233
149/28 Soiputtaosoth
Bangkok  10500
Thailand
Tel/Fax : 622 234 4382
Mobile : 6681 9373733 / 6487323
E mail : thailandtamil@gmail.com
Website : www.thailandtamilkazhagam.com

மா.பொ.சி. குறித்த ஆராய்ச்சிக்கட்டுரை போட்டி


சென்னை, நவ. 3: சிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் தமிழ்த் தொண்டு குறித்து ஆராய்ச்சிக் கட்டுரைப் போட்டியை திருநெல்வேலித் தனித்தமிழ் இலக்கியக் கழகம் அறிவித்துள்ளது.

இது குறித்து இந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கை:

மாணவர்களின் இலக்கிய ஈடுபாட்டையும், ஆய்வு நோக்கையும் ஆழ்ந்த சிந்தனைத் திறனையும் வளர்க்கும் விதமாக 40 ஆண்டுகளாக ஆராய்ச்சிக் கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. முதல் பரிசாக 5 ஆயிரம் மதிப்புள்ள தங்கப் பதக்கமும், பரிசு பெற்ற மாணவர் படிக்கும் கல்லூரிக்கு ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள சுழற்கோப்பையும் வழங்கப்படும்.

தமிழகத்தின் 16 பல்கலைக்கழகங்களைச் சார்ந்த கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகள் பங்கேற்கலாம். ஆராய்ச்சிக் கட்டுரை 50 பக்கங்களிலிருந்து 60 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேற்கோள் நூல்பட்டியலை இறுதியில் குறிப்பிடப்பட வேண்டும். மேடைப்பேச்சு, இதழியல், நூலாக்கம், இயக்கப்பணி ஆகிய துறைகளில் பைந்தமிழுக்குத் தொண்டாற்றிய ம.பொ.சி. குறித்து விரிவாக ஆராய்ந்து எழுதப்பட்டிருக்க வேண்டும்.

ஆய்வுக்கட்டுரையை மாணவர் எழுதியதற்கான உறுதி மொழி, கல்லூரி முதல்வர் அல்லது தமிழ்ப் பேராசிரியரின் கடிதம் இணைக்கப்பட வேண்டும்.

ஆராய்ச்சிக் கட்டுரை வந்து சேரக் கடைசி நாள்: 2007 டிசம்பர் 31. கட்டுரைகள் அனுப்பவும், மேலும் தகவல்களுக்கும் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: முனைவர் பா. வளன் அரசு, தலைவர், தனித்தமிழ் இலக்கியக் கழகம், 3, நெல்லை நயினார் தெரு, பாளையங்கோட்டை, திருநெல்வேலி-627 002, தொலைபேசி: 0462-2579967.

 
 
 
 

முந்தைய பகுதிகள்


தகவல் : முதுவை ஹிதாயத் ( எம் என் ஏ )

 Refer to your friends / Relatives

www.Chittarkottai.com