முதுவை ஹிதாயத் பக்கம்

கடந்த வாரச் செய்திகள்
 

ஷார்ஜா சீமான் அமைப்பின் எட்டாம் ஆண்டு விழா


ஷார்ஜா சீமான் அமைப்பின் எட்டாம் ஆண்டு விழா 06.04.2006 வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

  • மாணவி சஹிமா முஹம்மது மொஹிதீன் திருமறை வசனம் ஓதினார்.
  • சமுதாயப் புரவலர் அல்ஹாஜ் எம் ஷாகுல் ஹமீது தலைமை தாங்கினார்.
  • சீமான் செயலாளர் காரை ஏ ஏ ரஹ்மான் வரவேற்புரை நிகழ்த்தினார்.
  • ஆவூர் மெளலவி ஏ முஹம்மது இஸ்மாயில் ஹஸனி சிறப்புரை நிகழ்த்தினார்.
  • சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் சே சாதிக் விழாப் பேருரை நிகழ்த்தினார்.
  • சீமான் ஆண்டு விழா சிறப்பு மலர் வெளியிடப்பட்டது.
  • 'தீன் இசை வேந்தர்' ஏ எஸ் தாஜிதீன் கீதம் பாடினார்.
  • சீமான் தலைவர் முஹம்மத் மாலிக் நன்றியுரை நிகழ்த்தினார்.
  • மெளலவி ஏ அன்வர் பாட்சா துஆ ஓதினார்.
  • ஆசியாநெட் வானொலி அறிவிப்பாளர் ஆசிப் மீரான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.


நிகழ்ச்சியில் ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் அல்ஹாஜ் அப்துல் கத்தீம், பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி, ஆடிட்டர் சடையன் அமானுல்லா, அய்மான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் காதர் பக்ஷ் ஹஸைன் சித்திக்கீ மற்றும் சமுதாயப் பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.

 

முந்தைய பகுதி

தலைப்புப் பக்கம்


தகவல் : முதுவை ஹிதாயத் ( எம் என் ஏ )

 Refer to your friends / Relatives

www.Chittarkottai.com