முதுவை ஹிதாயத் பக்கம்

புதிய செய்திகள்
India 12th richest nation in 2005: World Bank


July 08, 2006 21:46 IST
India has emerged as the 12th wealthiest nation in the world with its GDP touching $785.47 billion or Rs 35,34,615 crore in 2005, the World Bank said.
US was the wealthiest nation with GDP of $12.46 trillion, according to a list of 15 wealthiest countries prepared by the World Bank in terms of their gross domestic product.
The GDP figures have been adjusted to reflect purchasing power.
While India was way down compared to China, positioned fourth with $2.23 trillion of GDP, it was wealthier than Mexico, Russia and Australia.
The first nine countries had GDP of more than a trillion dollars.
The United States was followed by Japan with $4.51trillion and Germany $2.78 trillion.
Britain, France and Italy occupied fifth, sixth and seventh ranks with GDP of $2.19 trillion, $2.11 trillion and $1.72 trillion, respectively.
Next came Spain, Canada, Brazil and South Korea with their GDP estimated at $1.124 trillion, $1.115 trillion, $794.10 billion and $787.62 billion, respectively.
There was no African country among the 15 richest nations, while India was the only south Asian country in the list.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முதுகுளத்தூர் இஸ்லாமிய பயிற்சி மைய மாணாக்கர்கள் நூறு சதவீத தேர்ச்சி


ராமநாதபுரம் ஜில்லா முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் இஸ்லாமிய பயிற்சி மைய மாணாக்கர்கள் எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இப்பயிற்சி மையத்தில் பயின்ற ராவியத்துல் பசரியா 443 மதிப்பெண்களும், பஹ்மிதா பானு 436 மதிப்பெண்களும், ரிஸ்வானா பாத்திமா 413 மதிப்பெண்களும், இம்ரான் ஹுசைன் 405 மதிப்பெண்களும், அல் அமீன் 402 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

இப்பயிற்சி மையத்தில் வருடந்தோறும் சமுதாய மாணவ, மாணவியருக்கும் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு இலவச தனிப்பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் தீனியாத் வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. மாணாக்கர்களின் அறிவுத் திறனை அதிகரிக்க உதவிடும் வகையில் நூலகம் ஒன்றும் இம்மையத்தில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இப்பயிற்சி மையம் ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிந்து வரும் முதுகுளத்தூரைச் சேர்ந்தவர்களால் நடத்தப்பட்டு வருகிறது.
 

மனித உயிர் மீது விளையாடிய அரக்கர்களை வன்மையாக கண்டிக்கிறோம்

மனித உயிர் மீது விளையாடிய அரக்கர்களை வன்மையாக கண்டிக்கிறோம்
மும்பையில் அப்பாவி மக்கள் மீது குண்டு வீசியவர்கள் மனித நேயமற்ற மன்னிக்க முடியாத காட்டு மிராண்டிகள்.

உலகத்தில் மிக மலிவான பொருள் மனித உயிர்தான் என்பதை மனித ரூபத்தில் நடமாடும் மாபாதகர்கள் மும்பையில் சாமான்ய மக்கள் அதிகமாக பிரயாணம் செய்யும் இரயிலில் அரங்கேற்றி உள்ளனர்.

உலகத்தில் எந்த நாடும், எந்த சமுதாயமும் வழங்காத உயர்ந்த மானுட மதிப்பீடுகளை மனித குலத்திற்கு வழங்கியவர்கள் இந்தியர்கள்.

வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்திய தேசத்தின் பலம். அந்த பலத்தை ஊனப்படுத்துபவர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்.
மானுடம் என்றே பார்ப்போம். திசை இல்லை, தேசம் இல்லை, எல்லை இல்லை, தொல்லை இல்லை, உயிர் எல்லாம் உறவு என்ற தத்துவத்தை மதம், மொழி, இனம், பிராந்தியம் கடந்து உலகத்திற்கே உவந்து அளித்த முன்னோர்கள் நம் இந்தியர்கள்.

மானுடம் எங்கே காயப்படுகிறதோ, அங்கே எவனுடைய இதயம் சலனப்படுகிறதோ அவன்தான் மனிதன். மற்றவர்கள் மரக்கட்டைகள்.

அப்பாவி மக்களின் உயிரைப் பறித்த கோழைத்தனமான செயலைச் செய்தவர்களை வன்மையாக கண்டிக்கிறோம். உயிர், உடமைகளை, உறவுகளை இழந்தவர்களுக்கு எங்கள் ஆழ்ந்த வருத்தத்தையும், அனுதாபத்தையும், இறைவேட்டலையும் காணிக்கையாக்குகிறோம்.

சட்டம் தன் கடமையைச் செய்யட்டும்.குற்றவாளிகளைத் தூக்குக் கயிற்றில் நிறுத்தட்டும்.உண்மைகள் வெளி வரட்டும்.

இவண்
இந்திய மக்கள் பேரவை
வளைகுடா நாடுகள்

சூரியனையே திருப்பிச் சுடும் பாலையில் உழைக்கும் இளைஞனே!! உன் சிந்தனைக்கு சில வரிகள்


அன்பார்ந்த சகோதரர்களே! இந்திய மக்கள் பேரவையின் வளைகுடா உறுப்பினர்களே! பேரவையின் பொறுப்பாளர்களே! அரசியல் ஆதிக்கத்தைப் பெறத் துடிக்கும் எங்கள் இதயத் துடிப்புகளே! மூச்சுக் காற்றைக் கூட சமுதாயத்தின் சுவாசக் காற்றாய் விடும் இளைஞர்களே! அனுதாபிகளே!
சொந்தம், பந்தம், உறவுகளை எல்லாம் துறந்து விட்டு, வியர்வைத் துளிகளை சிந்தி விட்டு மிக மிகக் குறைந்த சம்பளத்தை பெற்று சமுதாய உயர்வுக்கு கடமை உணர்வோடு அள்ளிக் கொடுத்தாய். கடந்த கால அமைப்புகளின் சமூகப் பொறுப்புணர்வு இல்லாமல் உன் ஏக்கங்கள் எல்லாம் கானல் நீராய் போய் விட்டதே என்று எரிச்சலில் எரி ஈட்டியைப் போன்று கேள்விகளை எழுப்பி இருக்கிறாய்.

கடல் தாண்டி உழைக்கும் எங்கள் காசைக் கறக்கவா? இந்திய மக்கள் பேரவை? நாங்கள் ஏமாறுவதற்கு தயாராக இல்லை என்று எழுதி இருக்கிறாய். சிலரோ உங்கள் செயல் திட்டம், நோக்கம், தொலைநோக்கு பார்வை, சமுதாய உணர்வு, BRAIN TRUST COMMITTEE யின் வெற்றிக்கான செயல் திட்டங்கள், இயக்கம் வேண்டாம் என ஒதுங்கிய எங்களை உங்கள் கடிதங்கள் எங்கள் இரத்தத்தை மீண்டும் உசுப்பி விட்டு இருக்கின்றன. கோழிகளுக்கு கோதுமையைத் தூவினால் சண்டை வந்து விடுகிறது, தேர்தல் கமிஷன் தேர்தலை அறிவித்தால் நம்மவர்களுக்கு சண்டை வந்து விடுகிறது, என்ற வார்த்தை சமுதாயத் தலைவர்களை அப்படியே படம் பிடித்துக் காட்டியுள்ளது. உங்களுக்கு உதவ வேண்டும் என்று மனம் உந்தித் தள்ளியது என்று சகோதரர்கள் எழுதி உள்ளார்கள்.

அருமைச் சகோதரர்களே! உங்கள் வியர்வைத் துளிகளின் பாலைவனக் காசுகள் எங்களுக்குத் தேவையில்லை. காசு சம்பாதிப்பது கடினம். செலவு செய்வது எளிது. அதை யாருக்கும் கொடுக்க வேண்டாம். நீங்கள் யாருக்காவது நன்மை செய்ய நாடினால் நேரடியாக சென்று தீர விசாரித்து உண்மை அறிந்து அவசியம்தானா? அதனால் நன்மை உண்டா? என ஆய்ந்து, தெளிந்து செய்யுங்கள். யாரையும் நம்பி கொடுக்காதே. நிஜத்திற்கும், நிழலுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விட்டது.

இந்திய மக்கள் பேரவை உங்களிடம் வேண்டுவது உங்கள் ஒத்துழைப்பு, ஆலோசனை, அரசியல் ரீதியாக வலிமை பெற சமூகத்தை கட்டமைக்க உங்கள் ஐக்கியம் மட்டுமே. உறங்கிக் கிடக்கும் இளைஞர்களே! சூரியன் மறைவது மீண்டும் எழுவதற்குத்தான். உறங்கியது போதும். பூமி பந்தைப் புரட்டிப் போட எழுங்கள், சிந்தியுங்கள் என்று இந்திய மக்கள் பேரவை அழைக்கிறது.
நாம் ஒன்றுபட்டால் வெற்றி நிச்சயம்.

இவண்அன்புடன்
இந்திய மக்கள் பேரவை
வளைகுடா நாடுகள்

முந்தைய பகுதி

தலைப்புப் பக்கம்


தகவல் : முதுவை ஹிதாயத் ( எம் என் ஏ )

 Refer to your friends / Relatives

www.Chittarkottai.com