முதுவை ஹிதாயத் பக்கம்

புதிய செய்திகள்
நீடூர் வழக்கறிஞர் அல்ஹாஜ் ஏ.எம். சயீத் சாஹிப் வஃபாத்து

நீடூர் வழக்கறிஞர் அல்ஹாஜ் ஏ. எம். சயீத் சாஹிப் அவர்கள் 12.12.2007 புதன்கிழமை மாலை சுமார் 4 மணியளவில் மயிலாடுதுறையில் உள்ள தனது அலுவலகத்தில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த போது உயிர் பிரிந்தது. (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்)

நீடூர் சயீத் சாஹிப் அவர்களது மறைவுக்கு துபாய் ஈமான் அமைப்பு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.

நீடூர் சயீத் சாஹிப் அவர்கள் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக் கழகத்தின் தலைவர். மேலும் நீடூர் ஜே.எம்.ஹெச். அரபிக் கல்லூரியின் துணைத்தலைவர், முன்னாள் தலைவர், மயிலாடுதுறை பல்சமய உரையாடல் மைய தலைவர், நாகப்பட்டினம் மாவட்ட ஐக்கியப் பொருளாதாரப் பேரவை செயலாளர், மயிலாடுதுறை காதிரிய்யா பள்ளிவாசல் மேனேஜிங் டிரஸ்டி உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.

சென்னை வானொலி நிலையத்தின் முன்னாள் செய்தி வாசிப்பாளர்.

அன்னாரது ஜனாஸா நல்லடக்கம் 13.12.2007 வியாழக்கிழமை லுஹர் தொழுகையின் போது நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

நீடூர் சயீத் சாஹிப் புதல்வர் ராசல் கைமா தொடர்பு எண் : 050 795 20 41

அன்னாரது மறைவுக்கு துபாயில் 14.12.2007 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு லேண்ட் மார்க் ஹோட்டலில் www.niduronline.com சார்பில் நடைபெறும் கூட்டத்தில் இரங்கல் தெரிவித்து சமுதாயப் பிரமுகர்கள் உரை நிகழ்த்துவர்.
இதுபற்றிய விபரமறிய 050 2864252 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

கீழக்கரையில் கடற்படை தளம் அமைக்கத் திட்டம்

 
கீழக்கரை கடற்கரை பகுதியில் அன்னியர் ஊடுருவலை தடுக்க கடற்படை தளம் அமைக்க திட்டமிட்டுள்ளதாக சென்னையில் உள்ள தென்பிராந்திய தலைமை கப்பல் படை அதிகாரி பிலீப்வான் ஹால்டன் தொலைபேசியில் தெரிவித்தார்.

இலங்கையில் ராணுவத்திற்கும் போராளிகளுக்கும் தொடர்ந்து சண்டை நடந்து வரும் நிலையில் ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியில் இருந்து இலங்கைக்கு பல்வேறு விதமான போதை பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை கடத்தப்படுகின்றன.

இந்த நிலையில் இதைதடுக்க பாக்சலசந்தி கடற்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த ராமேசுவரத்தில் கடற்படை முகாம் மற்றும் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் 8 கடற்படை வீரர்கள் மற்றும் கடற்படை கப்பல், கேஸ் படகுகள், ரோந்து படகுகள் மூலம் தினசரி இந்திய கடல்பகுதியில் அன்னியர் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அன்னியர் யாரும் ஊடுருவாமல் இருக்க கீழக்கரை கடற்கரை பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு அங்கு 8 பேர் கொண்ட கடற்படை வீரர்கள் சிறிய முகாம் அமைத்து காண்காணிப்புப் பணியில் ஈடுபடுவார்கள் மேலும் கீழக்கரை கடல் பகுதியில் இருந்து தூத்துக்குடி கடல் பகுதி வரை தினமும் ரோந்துபணியில் கடற்படை வீரர்கள் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.

கீழக்கரை ஹமீதியா பள்ளி மாணவர் முதலிடம்

ராமநாதபுரத்தில் 49வது மண்டல விளையாட்டு போட்டி நடந்தது. இதில் கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் அகமது சுபியான் சூப்பர் சீனியர் பிரிவில் தட்டு எறிதல் போட்டியில் முதலிடம் பெற்றார். இதன் மூலம் அவர் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார். அதே பிரிவில் நீளம் தாண்டுதல் போட்டியில் பாசித் என்ற மாணவர் 2ம் இடம் பெற்றார்
அறிவியல் கண்காட்சி

கமுதி ரகுமானியா மெட்ரிக்.,பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. பள்ளி முதல்வர் சிக்கந்தர் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் ஆயிஷாபிவீ முன் னிலை வகித்தார். கண் காட்சியை ஏராளமானோர் கண்டு களித்தனர்.

ஹஜ் யாத்ரீகர்களுக்கு மெக்கா இமாம் வேண்டுகோள்

ஹஜ் யாத்திரைக்கு வருவோர், விபத்துகளைத் தவிர்க்க, விதிமுறைகளை சரியாகப் பின்பற்ற வேண்டும் என்று மெக்காவில் உள்ள பெரிய மசூதியின் இமாம் கேட்டுக் கொண்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை நடந்த பிரார்த்தனையில் உரையாற்றிய அவர் இவ்வாறு கூறினார். டிசம்பர் 18-ம் தேதி ஹஜ் நிகழ்ச்சி தொடங்குகிறது. அப்போது மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் யாத்ரீகர்கள் நடந்து கொள்ள வேண்டும். அவர்கள் மோதலில் ஈடுபடக் கூடாது. ஹஜ் புனித யாத்திரைக்குச் செல்வோரின் பாதையை தடுக்கக் கூடாது என்றார் அவர்.

பல்வேறு நாடுகளில் இருந்து 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் ஹஜ்ஜுக்கு சென்றுள்ளனர். இந்த ஆண்டு மொத்தம் 25 லட்சம் பேர் ஹஜ் செல்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை 60,429 இந்தியர்கள் ஹஜ் வந்துள்ளனர். அவர்களில் 51,122 பேர் மெக்காவிலும், 9293 பேர் மதினாவிலும் உள்ளனர் என்று அங்குள்ள இந்தியத் துணைத் தூதர் அசப் சயீத், பி.டி.ஐ. செய்தி நிறுவனத்தின் நிருபரிடம் கூறினார். இந்த ஆண்டு இந்தியாவிலிருந்து ஹஜ் சென்ற 1,57,000 இந்தியர்களில் 12 பேர் நூறு வயது ஆனவர்கள்.

இந்தியாவில் இருந்து செல்லும் ஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவ மெக்காவில் ஒரு அமைப்பு 1997-ல் இருந்து செயல்படுகிறது. 1997-ல் மினாவில் ஏற்பட்ட நெரிசலில் பலர் இறந்தனர். அதன்பிறகு இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்தியாவில் இருந்து ஹஜ் செல்வோர், அங்கு தங்கள் பணத்தையோ அல்லது உடைமைகளையோ தொலைத்து விட்டோல் அவர்களுக்கு இந்த அமைப்பு உதவுகிறது. இந்திய யாத்ரீகர் நல சங்கம் என்று இதற்கு பெயர்.

யாத்ரீகர்கள் ஹஜ் பயணத்தின்போது எப்படி நடந்து கொள்ள வேண்டும், அந்த நாட்டில் என்னென்ன விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை விளக்கும் விடியோவும் இந்தியாவில் இருந்து வருவோருக்கு காண்பிக்கப்படுவதாக இந்தியத் துணைத் தூதர் தெரிவித்தார்.

இந்தியாவில் இருந்து டாக்டர்களும் மத்திய அரசால் ஹஜ்ஜுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். சவூதியில் தங்கியிருக்கும்போது, தங்கள் உடல் நலத்தை இந்தியர்கள் எப்படி காத்துக் கொள்ள வேண்டும் என்று நமது டாக்டர்கள் அவர்களுக்கு விளக்குகின்றனர்.

இந்திய யாத்ரீகர் நலச் சங்கத்தின் மகளிர் பிரிவு, இந்தியத் துணைத் தூதர் சயீதின் மனைவி ஃபர்ஹா தலைமையில் செயல்படுகிறது. அங்குக் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை விளக்கும் துண்டு பிரசுரங்களை, தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, உருது, வங்காளம், குஜராத்தி, மராத்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இந்த அமைப்பு வழங்குகிறது.

இந்திய யாத்ரீகர்களுக்கு இந்த அமைப்பு இதுவரை ரூ.4.5 லட்சம் வழங்கி உதவியுள்ளது.

ஏர் இந்தியா விமான கட்டணம்  உயர்வு

ஏர் இந்தியா விமானக் கட்டணம் திங்கள்கிழமை (டிச.3) முதல் உயர்கிறது.

இதனால் பயணிகள் தற்போதுள்ள கட்டணத்துடன் ரூ. 300 கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும்.

விமான பெட்ரோல் (ஏடிஎஃப்) விலை உயர்ந்ததைத் தொடர்ந்து ஜெட் ஏர்வேஸ், கிங்ஃபிஷர் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் சனிக்கிழமை முதல் (டிச.1) கட்டணத்தை உயர்த்தின.

இதைத் தொடர்ந்து ஏர் இந்தியாவும் விமான கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளதாக ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் ஜிதேந்தர் பார்கவா தெரிவித்தார்.

அதிகமான வெளிநாட்டவர்களை வேலையில் சேர்க்க பஹ்ரைன் முடிவு

வளைகுடா நாடுகளில் ஒன்றான பஹ்ரைன் நாட்டில் வெளிநாட்டு தொழிலாளர்களை கூடுதலாக அனுமதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

இதனால் இந்திய தொழிலாளர்களுக்கு பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த நாட்டில் உள்ள கட்டுமான நிறுவனங்களின் வேலையில் 10 சதவீதம் பஹ்ரைன் நாட்டவர்களையே நியமிக்க வேண்டும் என்று அரசு நிபந்தனை விதித்துள்ளது. அடுத்த ஆண்டு ஜூலை முதல், 8 சதவீதம் மட்டும் உள்நாட்டவர்களை நியமிக்கலாம் என்று விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன. போல ஒவ்வொரு தொழிலிலும் இதுபோன்ற விதிகள் தளர்த்தப்பட்டு, அதிகமான வெளிநாட்டவர்களை பணியில் அமர்த்த வழி செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டிலிருந்து வரும் தொழிலாளர்களுக்கு விசா அனுமதி வழங்க கட்டணமாக 2 ஆண்டுக்கு ஒரு முறை ரூ.20,930 வசூலிக்கவும் அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அவர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் மாதம் ரூ.1046 அரசுக்கு செலுத்த வேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ளது. இதனால் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அந்நாட்டில் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்படும் என்று தொழிலதிபர்கள் கருத்து தெரிவித்தனர்.

புதுவையின் முதல் டிஜிபி ஏ.எஸ்.கான் பதவியேற்பு

 
புதுச்சேரி மாநிலத்தின் டிஜிபியாக ஏ.எஸ்.கான் பதவியேற்றார்.

புதுச்சேரி மாநில காவல்துறையின் தலைமை அதிகாரியாக இதுவரை ஐஜி இருந்தார். தற்போது டிஜிபி பதவியாக இது உயர்த்தப்பட்டுள்ளது.

இம் மாநிலத்தின் முதல் டிஜிபியாக மத்திய அரசு நியமித்துள்ள மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஏ.எஸ்.கான் புதுச்சேரி ஐஜி அலுவலகத்திற்கு வந்தார். போலீஸôரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்ற அவர், ஐஜி அலுவலக அறையில் டிஜிபியாக பதவியேற்றார்.

1977-ம் ஆண்டில் ஐபிஎஸ் அதிகாரியாகி பணிக்கு வந்த வந்த இவர், ஏற்கெனவே புதுச்சேரியில் 1989-ம் ஆண்டில் அதிரடிப்படை பிரிவின் எஸ்பியாக பணியாற்றினார். தில்லியில் ஐஜியாக பணியாற்றிய இவருக்கு மத்திய அரசு பதவி உயர்வு அளித்து டிஜிபியாக நியமித்துள்ளது.

முன்னதாக புதுச்சேரி வந்த இவரை டிஐஜி வாசுதேவராவ், சீனியர் எஸ்பி சாயா சர்மா மற்றும் பல்வேறு அதிகாரிகள் வரவேற்றனர்

ஈராக்கில் 14 வருடங்களுக்குப் பின்னர் திறக்கப்பட்ட விமானநிலையம்

ஈராக்கின் மொசுல் விமானநிலையம் 14 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது. முதல் விமானம் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளை பாக்தாத் விமானநிலையத்திற்கு அழைத்துச் சென்றது. அங்கிருந்து பிறிதொரு விமானத்தில் செளதி அரேபியா அழைத்துச்செல்லப்படுவர்.

1991 வளைகுடாப் போரைத் தொடர்ந்து 1993 ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவம் மொசுல் பகுதி வான்வெளியில் விமானங்கள் பறக்கத் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

துபாயில் குளிர்சாதன வசதியுடன் கூடிய பேருந்து நிறுத்தங்கள்

துபாயில் குளிர்சாதன வசதியுடன் கூடிய 971 பேருந்து நிறுத்தங்கள் நகரெங்கும் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் சுமார் 20 முதல் 30 பயணிகள் காத்திருக்கின்றனர். அலுவலக நேரங்களில் இது அதிகமாக உள்ளது.

கடந்த ஆண்டு 88 மில்லியனுக்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்தைப் பயன்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் குளிர்சாதன வசதியுடன் கூடிய நவீன பேருந்து நிலையங்களும் அமைக்கப்பட உள்ளன.

துபாய் - பெண்களை கடத்தி பாலியல் கொடுமை செய்வோர் கைது

துபாய் வளைகுடாவில் வணிகத்தில் உயர்ந்து வரும் உன்னத நகரம். இதன் காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தோர் இங்கு தினந்தோறும் வந்த வண்ணம் உள்ளனர்.

இத்தகைய சூழ்நிலையைப் பயன்படுத்தி கிழக்கு ஆசியா, சீனா, இந்தியா, பங்களாதேஷ், ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்களை வேலை வாங்கித் தருவதாக வாக்களித்து பாலியல் கொடுமைகளுக்கு சிலர் உள்ளாக்கி வருகின்றனர்.

இதனை அறிந்த துபாய் காவல்துறை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிரடி சோதனையில் இறங்கியது. இதன் காரணமாக 240 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதில் பெண்கள் மட்டுமல்லாது அங்கு சென்ற ஆண் வாடிக்கையாளர்களும் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் இதுபோன்ற பல சோதனைகள் ஆங்காங்கு நடைபெற்று இருந்தாலும் அவை ஊடகங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. இதனால் பொதுமக்களில் சிலர் காவல்துறை இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரை தண்டிப்பதில்லை எனும் மனோபாவம் ஏற்பட்டுள்ளதாக கருதுகின்றனர்.

இத்தகைய மனோபாவத்தைத் போக்கிடவும், இதுபோன்ற தவறுகளில் ஈடுபடுவோர் கடுமையாக தண்டிக்கப்படுவர் எனும் அறிவிப்பு இதன் மூலம் வெளியாகியுள்ளது.

கடந்த வருடம் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 4,300 பேர் தங்களது நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.

பெண்களைக் கடத்தி பாலியியல் தொழிலில் ஈடுபடுத்துவோர் குறைந்த பட்சம் ஐந்து ஆண்டு சிறை முதல் ஆயுள் தண்டனை வரை தண்டிக்கப்படுவர் என காவல்துறை எச்சரித்துள்ளது.

பொதுமக்கள் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோரை கீழ்க்கண்ட எண்களில் தகவல் தரலாம். தகவல் தருவோர் எவ்வித அச்சத்துக்கும் ஆளாகத் தேவையில்லை.

தொலைபேசி எண் : 800 4888
தொலைநகல் (Fax) : 04 209 7777
மின்னஞ்சல் : alameen@eim.ae

ஷார்ஜா உலக புத்தகக் கண்காட்சி 2007

ஷார்ஜா உலக புத்தகக் கண்காட்சி 2007 ( www.swbf.gov.ae ) கடந்த ஐந்தாம் தேதி துவக்கப்பட்டு எதிர்வரும் 14 ஆம் தேதி வரை ஷார்ஜா கண்காட்சி மையத்தில் நடைபெறும்.

இக்கண்காட்சியில் அமீரக அரசுத்துறை நிறுவனங்கள், வளைகுடாவைச் சேர்ந்த பல்வேறு நாடுகளின் புத்தக நிறுவனங்கள், அமெரிக்கா, இலண்டன், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இக் கண்காட்சியில் பங்கேற்றுள்ளன.

தொலைக்காட்சி வந்த பின்னர் வாசிக்கும் பழக்கம் குறைந்து விட்டது என்பதைப் பொய்ப்பிக்கும் வண்ணம் ஆயிரக்கணக்கான மக்கள் கண்காட்சியைப் பார்வையிட்ட வண்ணம் உள்ளனர்.

இந்தியாவைச் சேர்ந்த நேஷனல் புக் டிரஸ்ட் ( www.nbtindia.org.in ) , சில மலையாள புத்தக நிறுவனங்கள் உள்ளிட்டவை பங்கேற்றன.

கடந்த வருடம் இக்கண்காட்சியில் பங்கேற்ற சென்னையைச் சேர்ந்த இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (www.iftchennai.org) இவ்வருடம் பங்கேற்கவில்லை.

எனினும் தமிழகத்தில் பல்வேறு முன்னணி புத்தக நிறுவனங்கள் இருந்தாலும் வெளிநாட்டு புத்தக கண்காட்சியில் பங்கேற்க முன்வராததற்கு காரணம் செலவினை ஈடுகட்ட இயலாமையே. இதற்கு தமிழக அரசு உதவிட முன்வந்தால் பல்வேறு தமிழக புத்தக நிறுவனங்களும் அமீரகத்தில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியில் வாய்ப்பு கிடைக்கும்.

நடக்க இருக்கும் சர்வதேச புத்தகக் கண்காட்சிகள்

2008 மார்ச் 11 முதல் 16 வரை, அபுதாபி ( www.adbookfair.com )
2008 ஏப்ரல் 14 முதல் 16 வரை, இலண்டன் ( www.londonbookfair.co.uk )
2008 மே 2 முதல் 12 வரை, டெஹ்ரான், ஈரான் ( www.tibf.ir )

இந்தியாவில் துவங்க இருக்கும் குறைந்தபட்ச கட்டண விமான சேவை

ஸ்டார் ஏவியேஷன், துபாய் தமிழ் நிறுவனமான ஈடிஏ அஸ்கான் இந்தியாவில் விரைவில் துவங்க இருக்கும் குறைந்தபட்ச கட்டண விமான சேவை. இந்நிறுவனமே குறைந்தபட்ச விமானசேவை துவக்க அனுமதி பெற்றுள்ள முதல் தனியார் நிறுவனம்.

இப்புதிய விமான சேவை மூன்று முதல் ஐந்து விமானங்களைக் கொண்டு தென்னிந்திய நகரங்களான சென்னை, பெங்களூர் அல்லது ஹைதராபாத் ஆகிய இடங்களை மையமாகக் கொண்டு செயல்படத்துவங்கும் என அதன் நிர்வாக இயக்குநர் சையத் எம் ஸலாஹ¤த்தீன் தெரிவித்தார்.

இச்சேவை ஆறு அல்லது ஒன்பது மாதங்களில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மதுரை, திருவனந்தபுரம், விசாகப்பட்டினம் மற்றும் கொச்சி ஆகிய தென்னிய்ந்திய நகரங்களை ஸ்டார் ஏவியேஷன் இணைக்கும் வண்ணம் தனது சேவையைத் துவங்கும்.

அபுதாபியில் ஐம்பது காவலர்களுக்கு மணவிழா

ஐக்கிய அரபு அமீரகத்தின் (United Arab Emirates) தலைநகரான அபுதாபியில் ஐம்பது காவல்துறையினர் திங்கள்கிழமை மாலை ஒரே மேடையில் திருமணம் செய்து கொண்டனர். அபுதாபி காவல்துறையின் பொன்விழாவினையட்டி இத்திருமண நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திருமண நிகழ்வின் போது ஏற்படும் செலவினங்களைக் குறைக்கும் விதமாக அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இத்தகைய மணவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

முந்தைய பகுதிகள்


தகவல் : முதுவை ஹிதாயத் ( எம் என் ஏ )

 Refer to your friends / Relatives

www.Chittarkottai.com