|
இளையான்குடி மேல்நிலை பள்ளியில்
முப்பெரும் விழா இளையான்குடி மேல்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா
நடந்தது. பள்ளி ஆட்சி குழு தலைவர் சிக்கந்தர் பாட்ஷா தலைமை வகித்தார். தாளாளர்
காதர் பாட்ஷா முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் ஜான் முகம்மது வரவேற்றார்.
முதுகலை தமிழ் ஆசிரியர் கமால்பாட்ஷா ஆண்டறிக்கை வாசித்தார். பிற்படுத்தப்பட்டோர்
நலத்துறை அலுவலர் தமிழ்கனல் பேசினார். மாநில அளவில் என்.எஸ்.எஸ்., சேவையில் சிறந்த
மாணவராக தேர்வு செய்யப்பட்ட முத்துக்குமார், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலிடம்
பெற்ற மாணவர் நிஜாமுதீன், பிளஸ் 2 பொதுத் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர் முசாபர்
அப்துல் ஆகியோருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. ஓய்வு பெற்ற ஆசியர்கள் மைதீன்
பக்கீர், அப்துல்சுபுகான் ஆகியோருக்கு பணிநிறைவு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
இளையான்குடி டவுன் பஞ்., தலைவர் நஜூமுதீன், ஜாகிர் உசேன் கல்லூரி முதல்வர்
செய்யதுஉசேன், ஐ.டி.ஐ., முதல்வர் அப்துல்கரீம், தாளாளர் முசாபர்அப்துல்ரக்மானி,
முதுகலை வணிகவியல் ஆசிரியர் சையதுஅலி, உதவி தலைமையாசிரியர் மகாதேவன், ஆசிரியர்
சாகுல்ஹமீது உட்பட பலர் பங்கேற்றனர். ஆசிரியர் கழக செயலாளர் சேக்உதுமான் நன்றி
கூறினார். |
|
தாய்ப்பால் உணவூட்டல் பயிலரங்கம் துவக்க விழா
கீழக்கரை: கீழக்கரை தாசீம்பீவி
அப்துல்காதர் பெண்கள் கல்லூரியின்
ஐ.க்யூ.ஏ.சி. ஊட்டச்சத்து துறை, இந்திய
தாய்ப்பால் ஊட்டல் முனைப்பு அமைப்பகம் இணைந்து
சென்னை யூசுப் சுலைகா தன்னார்வ தொண்டு நிறுவன
உதவியோடு தாய்ப்பால் உணவூட்டல் பற்றிய
பயிலரங்கம் நடத்துகிறது. இதன் துவக்கவிழா
கீழக்கரை பெண்கள் கல்லூரியில் நடந்தது.கல்லூரி
முதல் வர் சித்திசுமையா தலைமை வகித்தார்.
காரக்பூர் மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி
நிறுவன துறை தலைவர் டாக்டர் குஷ்வகா
துவக்கிவைத்தார்.இது தொடர்பாக தாசீம்பீவி
அப்துல்காதர் பெண்கள் கல்லூரி உணவு மற்றும்
ஊட்டச்சத்து துறை மாணவிகள், மதுரை கிரசென்ட்
நர்சிங் கல்லூரி மாணவிகள் 22 பேருக்கு பயிற்சி
அளிக்க உள்ளனர். கல்லூரி ஊட்டச்சத்து துறை
தலைவி ரசியாசுல்த்தானா , கீழக்கரை
யூசுப்சுலைகா மெடிக்கல் சென்டர் தலைமை
செவிலியர் தனலெட்சுமி, மதுரை கிரசென்ட்
நர்சிங் கல்லூரி பேராசிரியைகள் பயிற்சி
பெறஉள்ளனர். கீழக்கரை யூசுப்சுலைகா மெடிக்கல்
சென்டர் இயக்குனர் டாக்டர்செய்யது அப்துல்
காதர், சீதக்காதி அறக் கட்டளை
டிஜிஎம்சேக்தாவூதுகான் உட்பட ஏராளமானோர்
பங்கேற்றனர். பயிற்சிக்கான முழு செலவையும்
சென்னை யூசுப்சுலைகா தன்னார்வ தொண்டு நிறுவன
இயக்குனர்கள் மரியம் ஹபீபா, குர்ரத்ஜமீலா
பொறுப்பேற்றனர். |
|
இலவச மருத்துவ முகாம்
கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் ரோட்ராக்ட் சங்கம், மதுரை
அரவிந்த் கண் ஆஸ்பத்திரி இணைந்து இலவச கண் மருத் துவ முகாமை நடத்தியது.
பாலிடெக்னிக் முதல்வர் அலாவுதீன் துவக்கி வைத்தார். பாலிடெக்னிக் தாளாளர் கபீர்
சாகிபு முன்னிலை வகித்தார். ஏற்பாடுகளை ரோட்ராக்ட் சங்க ஆலோசகர் பாலசுப்ரமணியன்
செய்திருந்தார்.
|
|
தமிழ் இலக்கிய மன்ற விழா
கீழக்கரை: கீழக்கரை தாசீம்பீவி அப்துல்காதர் பெண்கள் கல்லூரியில் தமிழ் இலக்கிய
மன்ற விழா நடந்தது. கல்லூரி தமிழ்த்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி
முதல்வர் சித்தி சுமையா தலைமை வகித்தார். தமிழ் துறை தலைவர் நபீசாள்பீவி முன்னிலை
வகித்தார் தேவி வரவேற்றார். பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி முன்னாள்
முதல்வர் முகம்மது பாரூக் இலக்கியம் ஈந்த தமிழ் என்ற தலைப்பில் புதக்கவிதை சங்க
காலத்து கவிதைகள் குறித்து பேசினார். தமிழ் இலக்கிய மாணவி பாண்டீஸ்வரி நன்றி
கூறினார்.
|
|
ஷார்ஜாவில் அலிகர் முஸ்லிம் பல்கலை
முன்னாள் மாணவர் சங்க கூட்டம் ஷார்ஜாவில் அலிகர் முஸ்லிம்
பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்க கூட்டம் 06 மார்ச் வியாழன் மாலை நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சியில் அமீரகத்துக்கான இந்திய தூதர் திருமிகு தல்மிஷ் அஹ்மது, கன்சல்
ஜெனரல் திருமிகு வேணு ராஜாமணி, கல்வியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர்.
மேலும் விபரங்களுக்கு ஆமிர் 050 76 86 755 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். |
துபாயில் கனடாவில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது
குறித்த கருத்தரங்கு மார்ச் 6 மற்றும் 7 வியாழன் மற்றும்
வெள்ளி ஆகிய இரு தினங்கள் துபாய் ஷேக் சையித் சாலை கிரவுனி
பிளாசா ஹோட்டலில் நடைபெற உள்ளது. மேலும் விபரங்களுக்கு அலி
அப்துல்லா 050 787 43 16 / 04 263 4994 எனும் தொலைபேசி எண்ணில்
தொடர்பு கொள்ளலாம்.
|
|
பெண்கள் படித்தால் குடும்பம் பல்கலைகழகம் :
அமைச்சர் பொன்முடி
பெண்கள் படித்தால் குடும்பமே பல்கலை கழகமாகும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர்
பொன்முடி பேசினார். கீழக்கரை தாசீம்பீவி அப்துல்காதர் பெண்கள் கல்லூரி 17வது
பட்டமளிப்பு விழா ஹசன்அலி எம்.எல்.ஏ., தலைமையில் நடந்தது. சீதக்காதி அறக்கட்டளை
செயலாளர் காலித் ஏ.கே.புஹாரி வரவேற்றார். அமைச்சர் பொன் முடி பேசியதாவது:
கல்லூரிகளில் பெண்களின் விகிதம் அதிகரித்துள்ளது. விவசாய கல்லூரிகளில் மாணவர்களை
விட பெண்கள் அதிகமாக உள்ளனர். பெண்கள் படித்தால் குடும்பமே பல்கலை கழகமாகும்.
படிக்கிற போது சிந்தனை வளர்ச்சி பெறவேண்டும், மூடநம்பிக்கைகளுக்கு இடம் தரக்கூடாது.
தமிழக முதல்வர் கருணாநிதி 11 தொழிற்சாலைகள் அமைக்க ஒப்பந்தம் செய்துள்ளார்.
இதன்மூலம் அடுத்த மூன்றாண்டுகளில் 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
இவ்வாறு அமைச்சர் பொன்முடி பேசினார். கல்லூரி முதல்வர் சுமையா மாணவியர்களுக்கான
உறுதி மொழியை வாசித்தார். அமைச்சர் தங்கவேலன், பவானி எம்.பி., பெண்கள் கல்லூரி
இயக்குனர் ஷெரீப்பா அஜீஸ், நகராட்சி தலைவர் பஷீர் அகமது, மாவட்ட ஊராட்சி தலைவர்
ரவிசந்திர ராமவன்னி, சீதக்காதி டிரஸ்ட் பொது மேலாளர் ஜலால், துணை பொது மேலாளர்
ஷேக்தாவூகான் ஊராட்சி மன்ற தலைவர்கள் மகாவள்ளி(தில்லையேந்தல்) முருகேசன்(மாயாகுளம்)
லட்சுமி(ரெகுநாதபுரம்) உட்பட பலர் பங்கேற்றனர். பல்கலை கழக அளவில் முதல் ராங்க்
வாங்கிய முத்துமீனாட்சி, செய்யதா நஷீபா, அரிபாபேகம், நஜிராபானு உட்பட
தரப்பட்டியலில் இடம் பெற்ற 19 மாணவிகளுக்கு பதக்கங்கள் வழங்கப் பட்டன. அலுவலக
நிர்வாக அதிகாரி அஜீஸ்முகைதீன் ஏற்பாடுகளை செய்திருந்தார். |
|
வேலை வாய்ப்பு
கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு பிரிவு தொழில்
முனைவோர் மேம்பாட்டு மையம் மற்றும் ஐஎஸ்டிஇ ஸ்டூடண்ட்ஸ் சேப்டர் சார்பாக வேலை
வாய்ப்பு பயிற்சி முகாம் நடந்தது. பாலிடெக்னிக் முதல்வர் அலாவுதீன் தலைமை
வகித்தார். மாணவர் அமைப்பு செயலாளர் மரியதாஸ் வரவேற்றார். ஷேப் அகடாமி நிறுவனர்
சுதர்சன் கனடா இந்தியா கூட்டு பயிலக திட்ட தொடர் கல்வி மேலாளர் கமால் அப்துல்
நாசர், வேலை வாய்ப்பு அதிகாரி ஷேக்தாவூது ஆகியோர் பேசினர். |
துபாயில் அவ்னி எக்ஸ்பிரஸ் கூரியர் &
பார்சல் சேவை துவக்க விழா மார்ச் 7
வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியளவில்
துபாய் தேராவில் பெங்களூர் உணவகம்
அருகில் துவக்கப்பட உள்ளது.
அவ்னி எக்ஸ்பிரஸ் கூரியர் & பார்சல்
சேவையினை துபாய் ஆட்சியாளர்
குடும்பத்தினைச் சேர்ந்த ஷேக்
அப்துல்லா அலி அப்துல்லாஹ் அல் முல்லா
துவக்கி வைக்க உள்ளார்.
அவ்னி எக்ஸ்பிரஸ் திராவிட முன்னேற்றக்
கழக தலைமைக் கழக செயலாளர் துறைமுகம்
காஜா அவர்களது என்பது
குறிப்பிடத்தக்கது. சென்னையைத்
தலைமையிடமாகக் கொண்டு செயல்படும்
அவ்னி கூரியர் சேவை மலேசியா மற்றும்
தாய்லாந்தில் தனது அலுவலகத்தைக்
கொண்டுள்ளது. தற்பொழுது அமீரகத்திலும்
தனது சேவையைத் துவங்க உள்ளது.
துபாயில் இதன் தொடர்பு எண் : 04 -
2718844 தொலைநகல் : 04 273 60 30
|
பனாத்வாலா சாகிப் அவர்களின் நூல் வெளியீடு
அகில இந்திய முஸ்லிம் லீக் 1906-ம் ஆண்டு
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் உலகம் போற்றும்
இஸ்லாமிய அறிஞர்களால் தோற்றுவிக்கப்பட்டது.
இந்தியா சுதந்திரம் அடைந்தபின் 1948-ம் ஆண்டு
மார்ச் திங்கள் 10-ம் தேதி சென்னை ராஜாஜி
ஹாலில் (அன்றைய பாங்குயட் ஹால்) இந்திய
யூனியன் முஸ்லிம் லீக் துவங்கப்பட்டது. இதன்
முதல் தலைவராக கண்ணியத்திற்குரிய காயிதெ
மில்லத் எம். முஹம்மது இஸ்மாயில் சாகிப்
தேர்ந்தெடுக்கப்பட்டார்.இந்திய யூனியன்
முஸ்லிம் லீக் 60-வது ஆண்டு துவக்க நாள் எதிர்
வரும் 2008மார்ச் 10-ம் தேதி சென்னை கலைவாணர்
அரங்கில் சிறப்போடு நடைபெற இருக்கின்றது.
இந்நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம்
லீக் தேசிய தலைவர் முஜாஹிதெ மில்லத் குலாம்
மஹ்மூது பனாத்வாலா சாகிப் அவர்களின்
பாராளுமன்ற உரைகள் என்ற நூல் வெளியிடப்பட
இருக்கின்றது. இந்நிகழ்ச்சி தமிழ்நாடு மாநில
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்
பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி.
அவர்கள் தலைமையில் நடைபெறுகின்றது.
http://www.muslimleaguetn.com/hqreleases.asp?id=1 |