முதுவை ஹிதாயத் பக்கம்

புதிய செய்திகள்

தொழிற்கல்வியுடன் வேலை வாய்ப்பு * வெஸ்ட் ஆசியா நிறுவனம் ஏற்பாடு


கீழக்கரை : தொழிற்கல்வி பயிற்சி அளித்து மூன்று மாதங்களில் துபாய் செல்ல மாணவர்களுக்கு வாய்ப்பு அளிப்பதாக வெஸ்ட் ஆசியா நிறுவன இயக்குனர் அகமது ரிபாய் கூறினார்.

அவர் கூறியதாவது: 8ம் வகுப்பு முதல் பிளஸ்2 வரை தேர்ச்சி பெற்று மேற்கொண்டு கல்வி பயில வசதியில்லாத ஏழை மாணவர்களுக்கு எலக்ட்ஙுஷியன் பிளம்பர், ஏசிடக்ட் பேப்ரிகேட்டிங் எரெக்ஷன், மேசன், எலிவேட்டர் லிப்ட் போன்ற தொழில் கல்வி மூன்று மாதங்களில் அளிக்கப்படும். பின்பு பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சன்றிதழ் வழங்கி உடனடியாக நிறுவனம் மூலமாக துபாய் நாட்டு வேலை வாய்ப்புக்காக அனுப்பி வைக்கப்படுவர். மூன்று மாத பயிற்சிக்கு சலுகை கட்டணம் வசூல் செய்யப்படும். வெஸ்ட் ஆசியா நிறுவனத்தின் ஒரு அங்கமான ஸ்டார் ஹெச் ஆர் ட்ரெயினிங் சர்வீஸ்
பி)லிட் மூலமாக இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்வாறு அகமது ரிபாய் கூறினார்)

இதற்கான விளக்க கூட்டம் கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. வெஸ்ட் ஆசியா நிறுவன ராமநாதபுரம் கிளை நிர்வாகி அப்துல் களாம் கிராஅத் ஓத கூட்டம் துவங்கியது. ராமநாதபுரம் எம்.எல்.ஏ., ஹசன் அலி, கீழக்கரை நகராட்சி தலைவர் பஷீர் அகமது, வெஸ்ட் ஆசியா நிறுவன பொறியாளர் சோமசுந்தரம், இயக்குனர் அகமது ரிபாய் திட்டம் குறித்து விளக்கினர்.

கீழக்கரை ஜமாத் பிரமுகர்கள், அனைத்து சமூக அமைப்பைச் சேர்ந்தவர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்

கமுதியில் இளங்கவி இலக்கிய மன்றவிழா


கமுதி : கமுதி ரகுமானியா மெட்ரிக்.,மேல் நிலை பள்ளியில் இளங்கவி இலக்கிய மன்றம் விழா நடந்தது. பள்ளி தாளாளர் இஸ்மத் இனுதீன் பாட்சா தலைமை வகித்தார். பள்ளி செயலாளர் ஆயிஷாபீவி,முதல்வர் சிக்கந்தர் முன்னிலை வகித்தனர். மாணவர் மன்ற செயலாளர் மைதீன்கனி வரவேற்று,அறிக்கை வாசித்தார். முதல் வகுப்பு முதல் ஐந்தாம்
வகுப்பு மாணவர்கள் தேசிய பாடல்களை பாடினர். ஆறாம் வகுப்பு முதல் 11 ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கவிதை, கட்டுரைகளை வாசித்தனர். சிந்தனை பட்டிமன்றம் நடந்தது. ராபர்ட்ராஜதுரை,செல்வம்,சதாம்உசேன் சர்மிளா, சரஸ்வதி, மைதீன்கனி பேசினர். நடுவராக தமிழாசிரியர் முகம்மது மீரா செயல்பட்டார். மாணவர் மன்ற தலைவர் முரளிதரன் நன்றி கூறினார்.

வெளிநாட்டில் வேலை மோசடி : ஏமாறும் அப்பாவி இளைஞர்கள் - அதிகரிக்கும் ஏஜென்சிகள


.முதுகுளத்தூர் : வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக அப்பாவி இளைஞர்களை ஏமாற்றும் மோசடி கும்பல் எண்ணிக்கை முதுகுளத்தூர் பகுதியில் அதிகரித்துள்ளன. முதுகுளத்தூர், கடலாடி, கமுதி தாலுகாக்களில் விவசாய தொழில் நலிவடைந்துள்ளது. இப்பகுதியில் விவசாய தொழிலுக்கு மாற்றாக உப தொழில்கள் எதுவும் இல்லை. படித்த இளைஞர்களும், விவசாய தொழிலாளர்களும் வேலை வாய்ப்பு இல்லாமல் காலத்தை விரயம் செய்ய வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. வேலைவாய்ப்பு கிடைக்காத படித்த இளைஞர்கள் விவசாய தொழிலாளர்கள் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக தம்பட்டம் அடிக்கும் ஏஜென்சிகளில் குவிகின்றனர்.

இந்த சந்தர்பப்பத்தை பயன்படுத்திகொண்டு மியான்மர் (மலேசியா) மற்றும் சவுதி அரேபியா, குவைத் உள்ளிட்ட நாடுகளில் வேலைவாங்கி தருவதாக ஒரு நபருக்கு ரூ.85 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 20 ஆயிரம் வரை வசூலிக்கின்றனர். இதில் மலேசியாவுக்கு அனுப்பப்படுபவர்களில் பெரும்பாலோர் வேலை வாய்ப்புஇல்லாமல் நடுத்தெருவில்
விடப்படுகின்றனர். வெளிநாடு போக வாங்கிய கடனை எப்படி திருப்பி கட்டுவது என்ற அச்சம் அதிகரிக்கிறது. அயிரை மீனை பிடிக்க போய் வைர மோதிரத்தை இழந்த கதையாய் போலி ஏஜென்சிகளின் பித்தலாட்டத்தில் அப்பாவி இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை பறி கொடுக்கின்றனர். கை நிறைய சம்பாதிக்கும் கனவும் கலைகிறது.

விவசாய தொழிலால் நலிவடைந்துள்ள குடும்பங்களுக்கு வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக தம்பட்டம் அடிக்கும் போலி ஏஜென்சிகளாலும் பொருளாதாரசீரழிஏற்பட்டுள்ளதால் மக்கள் விரக்தி அடைந்துள்ளனர்.

விழிப்புணர்வு: வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக போஸ்டர் அடித்து முதுகுளத்தூர், கமுதி, கடலாடி, சாயல்குடியில் ஒட்டியுள்ள போலி ஏஜென்சிகளை மூட வேண்டும். போலி ஏஜென்சிகள் நடத்தும் திருட்டு கும்பலை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.

வெளிநாடு வேலை வாய்ப்பு தொடர்பான சரியான தகவல் மையங்களை தாலுகா தலைமை இடங்களில் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் .

 

முந்தைய பகுதிகள்


தகவல் : முதுவை ஹிதாயத் ( எம் என் ஏ )

 Refer to your friends / Relatives

www.Chittarkottai.com