செய்யது அம்மாள் கல்லூரியில் சுற்றுசூழல் கருத்தரங்கு
ராமநாதபுரம் செய்யது அம்மாள் இன்ஜினியரிங் கல்லூரியில்
சுற்றுசூழல் கருத்தரங்கு நடந்தது. காரைக்குடி சிக்ரி மின் வேதியியல்
ஆராய்ச்சி துறை இணை இயக்குனர் டாக்டர் ஜான் துவக்கி வைத்தார். கல்லூரி
முதல்வர் முகமது செரீப் தலைமை வகித்தார். மாணவர்களுக்காக சுற்றுச் சூழல்
பற்றிய கட்டுரை சமர்ப்பித்தல் போட்டி நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு
கல்லூரி செயலாளர் சின்னத்துரை சான்றிதழ் வழங்கினார். ஏற்பாடுகளை
கல்லூரி சுற்றுசூழல் பொறுப்பாளர் பார்கவி,
வேதியியல் துறை ஆசிரியையகள் கீதா மிஸ்ரா, ஜெயலட்சுமி
செய்திருந்தனர். |
உம்ரா
மற்றும் ஹஜ் விசா - மின்னனுவாக்கம் சவூதி
அரசாங்கம் அறிவிப்பு
இந்த வருடத்திலிருந்து உம்ரா மற்றும் ஹஜ்
விசாக்களை மின்னனுவாக்கம் (e-visa service)
செய்ய இருப்பதாக சவூதி அரசாங்கம் தெரிவித்து
உள்ளது. ஒவ்வொரு வருடமும் உம்ரா மற்றும் ஹஜ்
செய்வதற்காக பல நாடுகளிலிருந்து புனித
யாத்திரை செய்வதற்காக பல லட்சக்கணக்கான மக்கள்
சவூதிக்கு வருகை தருகிறார்கள். புனித
யாத்திரைக்கு வரும் பயணிகள்
பாதுகாப்பிற்காகவும், புனித யாத்திரை செல்ல
இருக்கும் பயணிகளுக்காகவும், அந்தந்த நாட்டில்
உள்ள தனியார் நிறுவனங்கள் அவர்களுக்காக
சேவைகள் பல வற்றினை திறம் பட செய்ய வேண்டும்,
புனித யாத்திரைக்கு வரும் பயணிகளை ஏமாற்ற
கூடாது, அவர்களிடம் அதிகப்படியான பணம் பெற
கூடாது என்ற பலவற்றினை கருத்தில் கொண்டு இந்த
வசதி வாய்ப்பினை சவூதி அரசானது செய்ய
இருக்கிறது.
அலி ஹசன் அல் நாஹீர் (ِAli Hassan Al Nagur -
Head of the transport Committee - Jeddah
Chamber of Commerce and Industry - JCCI)
அவர்கள் குறிப்பிடுகையில், இந்த மின்னனு சேவை
மூலமாக சவூதி அரேபியாவில், விசா
சம்மந்தமாகவும் மற்றும் அதன் தொடர்பாகவும்
ஏற்படும் ஒரு சில பிரச்சனைகளை தீர்க்க
முடியும். உம்ரா மற்றும் ஹஜ்ஜிற்கு வரும் சில
பயணிகள் தங்களின் விசா கால அவகாசம் முடிந்தும்
சவூதியினை விட்டு வெளியேறாமல், சில
நிறுவனங்களில் மறைமுகமாக பணி புரிகிறார்கள்
(Ilegal Jobers). ஆகையால் மின்னனுவாக்கம்
கொண்டு வரும் பட்சத்தில் இது போல் உள்ள
பிரச்சனைகளை இதன் மூலமாக தீர்க்கலாம்.
மேலும் அவர் குறிப்பிடுகையில், உம்ரா, ஹஜ்
விசாக்கள் என்று மட்டுமில்லை வேலைவாய்ப்பு
விசாவும் (Emlopyment Visa) மின்னனுவாக்கம்
செய்யப்பட உள்ளது, தற்போது சவூதி அரேபியாவின்
மக்கள் தொகை 27.6 மில்லியனாகும். இங்கு வேலை
செய்யும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 8
மில்லியானகும்.
விசா காலம் முடிந்தும் பணி செய்யும்
பணியாளர்களை பிடித்து அவர்களை, அவரவர்களின்
நாட்டிற்கு திரும்ப அனுப்பக்கூடிய வேலைகளை
திறம் பட அரசாங்கமானது செய்துக்கொண்டு
வருகிறது. இந்த பணிகளை செய்வற்கு வருடம்
ஒன்றிற்கு 420 மில்லியன் சவூதி ரியால்
செலவிடப்படுகிறது. அத்துடன் உம்ரா புனித
யாத்திரைக்கு வரும் பயணிகளின்
பாதுகாப்பிற்காகவும் மற்றும் வசதிக்காகவும்
ஒவ்வொரு வருடமும் 60 மில்லியன் சவூதி
ரியாலும், ஹஜ் பயணிகளின் பாதுகாப்பிற்காகவும்
அவர்களின் வசதிக்காகவும் ஒவ்வொரு வருடமும் 60
மில்லியன் சவூதி ரியாலும் செலவிடுகிறது சவூதி
அரசாங்கம்.
அத்துடன் 300 மில்லியன் சவூதி ரியாலானது வேலை
கொடுத்தவர்களை (Original Sponser) விட்டு
விட்டு அடுத்தவர்களிடம் பணி புரியும் நபர்களை
கண்காணித்து அவர்களை தாயக நாட்டிற்கு திரும்ப
அனுப்புவதற்காகவும் சவூதி அரசாங்கமானது
செய்கிறது.
மின்னனுவாக்கம் (e-visa service) சேவையினை,
சவூதி அரசாங்கம் திட்டமிட்டு திறம் பட
செய்யும் பட்சத்தில், போலி விசாக்களை
உருவாக்கி அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் பல
போலி ஏஜண்டுளை மிக எளிதாக கண்டு பிடித்து
தண்டனை வாங்கிக்கொடுக்கலாம்.
தகவல் - முத்துப்பேட்டை - அபூ ஆஃப்ரின்
|
கீழக்கரை கடற்கரையை ஒட்டி கடல்வாழ்
உயிரின கண்காட்சியகம்
ஐக்கிய அரபு அமீரகத்தின் வணிகத் தலைநகராம் துபாயை தலைமையிடமாகக் கொண்ட
பன்னாட்டு தொழில் நிறுவனமான இடிஏ அஸ்கான் குழுமத்தின் மேலாண்மை
இயக்குநர் அல்ஹாஜ் செய்யது எம் ஸலாஹுத்தீன் கீழக்கரையில் நிருபர்களிடம்
கூறியதாவது :
வள்ளல் சீதக்காதி, உமறுப்புலவர் உட்பட பல புலவர்கள் வாழ்ந்து மறைந்த ஊர்
கீழக்கரையாகும். போர்ச்சுகீசியர், பிரெஞ்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள்
மற்றும் வீரத்தளபதிகள் இவ்வூருக்கு வந்து சென்றுள்ளனர்.
இந்த ஊரின் வரலாற்றுச் சிறப்பை விளக்கும் வகையில் ஒலி, ஒளி காட்சி
பிரமாண்டமாக அமைக்கப்படும். பழமையை நினைவுபடுத்தும் அருங்காட்சியகம்,
கடல்வாழ் உயிரின கண்காட்சியகம், பழமையான கடல் பொருட்கள் இந்த
அருங்காட்சியகத்தில் வைக்கப்படும். கீழக்கரை கடற்கரையை ஒட்டி கடல்வாழ்
உயிரின கண்காட்சியகமும், அனைத்து மதத்தினரும் பயன்படுத்தும் வகையில்
பிரமாண்ட திருமண மண்டபமும் கட்டப்படும்.
பல கோடி மதிப்பீட்டிலான இந்த திட்டத்திற்கான அறிக்கை வெஸ்ட் ஆசியா
நிறுவனங்களின் இயக்குநர் அஹமது ரிபாயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. திட்ட
அறிக்கை, வரைபட பணிகள் நிறைவடைந்த பின்னர் வேலைகள் துவக்கப்படும்.
இதற்கான செலவை இடிஏ அஸ்கான் குழு நிறுவனங்கள், கீழக்கரை நலச் சங்கம்
உள்ளிட்டவை ஏற்கும் என்றார்.
தகவல் :கீழக்கரை ஹமீது யாசின், ஈமான் அமைப்பின் ஜமாஅத்
ஒருங்கிணைப்பாளர், துபாய் |
இளையான்குடி ஜாகிர்உசேன் கல்லூரி
ஆண்டு விழா
இளையான்குடி டாக்டர் ஜாகிர்உசேன் கல்லூரி ஆண்டுவிழா
கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் முகம்மதுசுபையர் தலைமையில் நடந்தது.
கல்லூரி செயலாளர் அப்துல்கரீம் வரவேற்றார். கல்லூரி முதல்வர்
செய்யதுஉசேன் ஆண்டறிக்கை வாசித்தார். 200607ம் கல்வியாண்டில் அழகப்பா
பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு சீதக்காதி
அறக்கட்டளை செயலாளர் ஹாலித் ஏ.புகாரி கேடயங்கள் வழங்கி பேசினார். பரிசு
பெற்ற மாணவ, மாணவிகளின் பெற்றோர் கவுரவிக்கப்பட்டனர். இக்கல்லூரியில்
இளம் பட்ட வகுப்பு அல்லது முதுகலை பட்டபடிப்பு பயிலும் மூன்று ஏழை
மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களது கல்விக்கான முழு செலவுகளையும்
சீதக்காதி அறக்கட்டளை ஏற்றுக்கொள் வதாக செயலாளர் அறிவித்தார். இரண்டாம்
ஆண்டு ஆங்கில பட்டப்படிப்பு பயிலும் மாற்றுதிறன் கொண்ட மாணவர் நாகநாதன்
என்பவருக்கு மூன்று சக்கர சைக்கிள் வாங்க நிதிஉதவி அளித்தார். கல்லூரி
துணை முதல்வர் நவ்சாத்அலி நன்றி |
இலவச செயற்கைகால்கள்
வழங்கும் விழா
இளையான்குடி நலக்கூட்டமைப்பு சார்பில் மாற்றுதிறன்
கொண்டோருக்கு ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள செயற்கை கால்கள் இலவசமாக வழங்கப்
பட்டது. இளையான்குடி சமுதாயகூடத்தில் நடந்த மனிதநேய விழாவிற்கு சமூகநல
கூட்டமைப்பின் ஒருங்கிணைப் பாளர் லியாகத்அலிகான் தலைமை வகித்தார்.
எல்.ஐ.சி., மண்டல மேலாளர் முசாபர்அப்துல் ரஹ்மான் வரவேற்றார்.
கூட்டமைப்பின் இணை செயலாளர் சாகுல்ஹமீதுசேட், தாசில்தார்
சுந்தரபாண்டியன், பேராசிரியர் ஆபிதீன், ஆயிரவைசிய சபை தலைவர் பாஸ்கரன்,
பேரூராட்சி தலைவர் நஜுமுதீன், மேலப்பள்ளிவாசல் டிரஸ்டி சத்தார், புதூர்
பெரியபள்ளிவாசல் டிரஸ்டி தவ்லத்கான், ஐ.என்.பி.டி., பள்ளிவாசல்
முகம்மதுசுபைர், கூட்டமைப்பு செயலாளர் கரீம்கனி பேசினர். கூட்டமைப்பு
சென்னை பொறுப்பாளர் ரபீக்ராஜா நன்றி கூறினார்.
|
அபுதாபியில் ஐக்கிய
முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் மார்க்க
அறிஞருக்கு வரவேற்பு நிகழ்ச்சி
அபுதாபியில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில்
முதுகுளத்தூர் முஸ்லிம் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாமும், இஸ்லாமிய
இலக்கிய கழக அயலகப் பிரதிநிதியுமான மௌலவி எஸ். அஹமத் பஷீர் சேட் ஆலிம்
மன்பயீ அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி ஏப்ரல் 4 வெள்ளிக்கிழமை
நடைபெற்றது.
இவ்வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைப்பாளர் ஹெச். இப்னு சிக்கந்தர்
தலைமை வகித்தார். துவக்கமாக எஸ். அமீனுதீன் இறைவசனங்களை ஓதினார். ஜெ.
சீனி முஹம்மது, எம். காஜா நஜூமுதீன், மற்றும் ஏ. சிக்கந்தர் ஹுசைன்
உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். எம். அஷ்ரப் அலி வரவேற்புரை
நிகழ்த்தினார்.
ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொதுச்செயலாளர் கே. முஹம்மது
ஹிதாயத்துல்லாஹ் ஜமாஅத் தாயகத்தில் மேற்கொண்டு வரும் இலவச கல்விச்
சேவைக்கு பெரிதும் ஒத்துழைப்பு நல்கி வரும் மௌலவி எஸ். அஹ்மத் பஷீர் சேட்
ஆலிம், தேசிய நல்லாசிரியர் எஸ். அப்துல் காதர், மௌலவி உமர் ஜஹ்பர், ஹெச்.ஏ.
அலாவுதீன் ஆசிரியர் உள்ளிட்டோரின் பணிகளை நினைவு கூர்ந்தார். மேலும்
எதிர் வரும் மே மாதம் சென்னை ஏ. ஜே. டிரஸ்டுடன் இணைந்து இலவச மருத்துவ
முகாம் ஒன்றும் நடத்தப்பட உள்ளது.
எம். சுல்தான் செய்யது இப்ராஹிம், முஹ்ம்மது இஸ்மாயில் உள்ளிட்டோர்
நினைவுப் பரிசுகளை வழங்கினர்.
மௌலவி எஸ். பஷீர் சேட் ஆலிம் தனது உரையில் அமீரகத்தில் பணிபுரிவதற்காக
வந்த்துள்ள ஜமாஅத்தினர் தாயகத்தில் ஆற்றி வரும் இலவச
கல்விச்சேவைக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும்
பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வி படிப்பதற்கும் உதவி வருவது
குறித்து பெரிதும் மகிழ்வு தெரிவித்தார்.
இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் சார்பில் முதல் மாநில மாநாடு எதிர்வரும் மே
18 அன்று திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் நடக்க இருப்பதையும்
தெரிவித்து அதிலும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகோள் விடுத்தார்.
ஏ.எஸ். பாட்சா நன்றி கூறினார். பொருளாளர் ஏ. அஹ்மது இம்தாதுல்லாஹ்,
செயற்குழு உறுப்பினர்கள் ஜஹாங்கீர், இஸ்மத்துல்லாஹ், பக்ருதீன் உள்ளிட்ட
பலர் கலந்து கொண்டனர். |
முந்தைய பகுதிகள்
|