|
சிறந்த மாணவன் விருது
இந்திய தொழில்நுட்பக் கழகம் கல்வி, தலைமைத்துவப்
பண்பு ஆகியவற்றில் சிறந்து விளங்கும் பாலிடெக்னிக்
மாணவர்களை தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் தேசிய
விருதை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு வல்லம்
பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு
மாணவர் எம் முஹம்மது சுஹைல் சிறந்த மாணவருக்காண
தேசிய விருதினைப் பெற்றுள்ளார். விருது பெற்ற
மாணவரை கல்லூரி முதல்வரும், ஆசிரியர்களும்
பாராட்டினர்.
நன்றி : நர்கிஸ் |
|
10ம் வகுப்பு மாணவிகளுக்கு இளம் விஞ்ஞானி விருது
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைபள்ளியில்10ம் வகுப்பு
படிக்கும் மாணவிகள் ஜனுல்பதவியா, ஜமிலத்துள்நஷிபா .இவர்கள் சென்னை சயின்ஸ் சிட்டி
நடத்திய ஆய்வு கட்டுரையில் கலந்து கொண்டனர்.
இதில் கார் டியூப், கண்ணாடி, அலுமினிய பாத்திரம் மூலம் எளிய முறையில் சமைக்கும்
சாதனத்தை கண்டுபிடித்தனர். இதை தொடர்ந்து இவர்களுக்கு இளம் விஞ்ஞானி விருதும், 3வது
பரிசும் வழங்கப்பட்டது. இவர் களை தலைமை ஆசிரியர் ஜான் பிரிட்டோ, ஆசிரியர் வெங்கேடசன்
ஆகியோர் பாராட்டினர். |
|
நீங்கள் இலக்கிய ஆர்வலரா
.........!
தமிழ் மொழிக்கும், ஷரீஅத் வழிக்கும் புதிய தடமாகப்
பயணிக்க விரும்புவோர் செம்மொழி இலக்கிய சீரவையில்
தங்களை இணைத்துக் கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு
இ பதுருத்தீன்
செம்மொழி இலக்கிய சீரவை
எண் 65/1131
வ உ சி நகர்
சென்னை 600 081
செல் : 94442 72269 |
|
துபாயிலிருந்து போன் செய்வதைவிட ஊரிலிருந்தே பேசுவதே கட்டணம் குறைவு
சமீபத்தில் இந்திய தொலைதொடர்புத்துறை தொலைபேசிக் கட்டணங்களைக் குறைத்து
விட்டதையடுத்து துபாயிலிருந்து போன் செய்வதைவிட ஊரிலிருந்து போன் செய்வதே சிறந்தது
என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதுள்ள கட்டணப்படி இந்தியாவிலிருந்து துபாய்க்கு போன் செய்தால் ஒரு
நிமிடத்திற்கு ரூ. 10 தான் கட்டணம். இதேபோல் துபாயிலிருந்து ஊருக்கு ( இந்தியா )
போன் செய்தால் ஒரு நிமிடக்கட்டணம் சாதாரண நேரத்தில் ரூ. 29 கட்டணம் குறைக்கப்பட்ட
நேரத்தில் ரூ. 23.
இதிலிருந்து இந்தியாவிலிருந்து துபாய்க்கு போன் செய்வதன் மூலம் பணத்தை
மிச்சப்படுத்தலாம் எனத் தெரியவருகிறது. இதனால் பெரும்பாலோர் ஊருக்கு போன் செய்வதை
தவிர்த்து ‘மிஸ் கால்’ ( missed call ) கொடுத்து வருகின்றனர்.
இதனை உணர்ந்து அமீரகத் தொலைதொடர்புத்துறை விரைவில் கட்டணக் குறைப்பை அறிவிக்கும் என
மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தகவல் : முதுவை ஹிதாயத்
|
துபாயில் இஸ்லாமிய சொற்பொழிவு
துபாய் லிட்டில் ஃபிளவர்
ஆங்கிலப் பள்ளியில் தென்னாப்பிர்க்க மார்க்க
அறிஞர் இப்ராஹிம் 15.03.2006 புதன்கிழமை மாலை
இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்த்தினார். இன்றைய
இஸ்லாமிய உலகம் சந்தித்து வரும் சவால்கள் குறித்து
விவரித்தார்.
பெண்களும் பங்கேற்கும் வகையில் இடவசதி
செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை
மஜித் செய்திருந்தார். ( 050 651 38 70 ) |